சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /புதன்/08/06/2011

ஆல்பம்
பிளாஷ் செய்தி...கனிமொழிக்கும், கலைஞர் டிவி சரத்குமாருக்கும் டெல்லி உயர்நீதி மன்றம் ஜாமீன் மறுத்து இருக்கின்றது...
அரசியல் ஆளுமையால் ஆதாரங்களின் சாட்சியை களைத்துவிடுவார்கள் என்பதால் ஜாமீன் மறுக்கபட்டது என்று காரணம் சொல்லி இருக்கின்றது... இதில் கொடுமை என்னவென்றால் நிர்வாக இயக்குனர் சரத்தும் சேர்ந்து பந்தாடபடுவதுதான்.. எப்படியும் தனது நண்பர்களிடத்தில் கலைஞர் சொன்னதை சொல்லி வருத்தபட்டு இருப்பார்.... கூடா நட்பு கேடில் முடியும்...ஆனால் எனக்கு கூடா நட்பு திகாரில் முடிந்து இருக்கின்றதே என்று சொல்லி வருத்தபட வாய்ப்பு இருக்கின்றது...
===================
வழக்கம் போல இந்த முறை ஜெ மற்றும் ராமதாஸ் தேர்தல் முடிவு அறிவித்த உடன் எலெக்ட்ரானிக் வாக்கு எந்திரத்தை பற்றி வாய் திறக்கவில்லை... முக்கியமாக ஒருவேளை ஜெ தோற்று போய் இருந்தால் அந்த எல்க்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தின் மீது பெரிய சர்ச்சையை வைத்து இருப்பார்... இனி தமிழகத்தில் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தின் மீது சர்ச்சை வராது என்று நம்புவோமாக..
========
கட்டபஞ்சயாத்துக்கு எந்த அமைச்சரும் உடந்தையாக போலிஸ் நிலையம் போய் உட்கார வடாது என்று தனது அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெ உத்தவிட்டு இருப்பதற்கு பொதுமக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

===========
தன் வினை தன்னை சுடும் யாருக்கு பொருந்துகின்றதோ இல்லையோ மத்திய அமைச்சர் தயாநிதிமாறனுக்கு பொருந்தும்...ஸ்பெக்ட்ரம்மை ஊதி பெரிதாக்கியவர்கள் அவர்கள்தான்...ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? என்று தமிழக மக்களுக்கு கிளிப்பிள்ளைக்கு புரியவைப்பது போல புரிய வைத்தவர்கள்...இப்போது அதே விஷயத்தில் அவருக்கே பிடி இறுகுவதை அவர் நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார்...
============
மிக்சர்
நேற்று இரவு பொள்ளாச்சிக்கு கிளம்பிய கேபிஎன் பேருந்து காஞ்சிபுரத்துக்கு பக்கத்தில் முன்னால் சென்ற லாரி ரோட்டில் வழி கொடுத்து விட்டு பின்பு  அனைத்து ஓட்டியதால் பஸ்  பக்கத்தில் இருந்த பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து, டீசல் டேங் வெடித்து உடனே தீப்பற்றிக்கொண்டது..அது ஸ்லீப்பர் கோச் பேருந்து என்று நினைக்கின்றேன்... தூங்கி கொண்டு இருந்து இருப்பார்கள் போல...ஒருவரை தவிர யாராலும் தப்பிக்க முடியவில்லை..22 பேர் கருகி விட்டார்கள்.. இதே போல இதே சென்னை பெங்களுர் சாலையில் சுங்குவார் சத்திரம் அருகே ஜெ ஜெ அரசு ஏசி பேருந்து இதே போல விபத்துக்குளாகி 40 பேர் கருகினார்கள்.. (அப்போதும் ஜெ முதல்வராக இருந்தார்.... இது தகவலுக்காக மட்டுமே) கண் முன்னே தன்மனைவியை தீக்கு திண்ணகொடுத்து விட்டு ஒரே ஒருவர் மட்டும் தப்பித்து இருக்கின்றார்... இறந்து போன அத்தனை பேருக்கும் நம் அனைவரது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்வோம்........பயணிகள் பாதுகாப்பு குறித்து எந்த அரசும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.. ஒரு அரசு பேருந்து சென்னை டூ பெங்களூர் செல்ல எழ மணிநேரம் எடுத்துக்கொள்கின்றது ஆனால் தனியார் ஆம்னி பேருந்துகள்..5 மணிநேரத்தில் சென்று விடுகின்றன... வேகம் முக்கியம்  என்றாலும் விபத்தில் அவசர வழிகள் குறித்து எந்த தனியார் பேருந்துகளும் கவலை கொண்டதாக தெரியிவில்லை..
=======================
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை அவுத்து போட்டு ஆடுச்சாம்.. அது போல நானே வெலை தேடிக்கொண்டு இருக்கின்றேன்...ஆனா எனக்கு ரெஸ்யூம் அனுப்பிச்சு எனக்கு ஒரு வேலைபாருங்க என்றால் நான் என்ன செய்வது... நான் வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடுவது நண்பர்கள் அனுப்பும் வேலை வாய்ப்பு செய்தியை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கின்றேன்... அவ்வளவே நண்பர்களே மற்றபடி நான் வேலை வாங்கி கொடுக்கும் அளவுக்கு பெரிய அப்பாடக்கர் இல்லையென்பதை ரொம்ப கூச்சத்தோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.


========================
ஒரு நண்பர்  டி  என்ற பெயரில் தொடர்ந்து மெயில் அனுப்பி வருகின்றார்... அதாவது எனது பதிவை கூகுள் ரீடரில் படிக்க முடியவில்லை என்று...வருத்தபட்டு இருக்கின்றார்... எப்படி எல்லாம் செட் செய்யவேண்டும் என்று எனக்கு விரிவாய் பதில் அளித்தார்... அது போல சில நண்பர்கள் அனுப்புகின்றார்.. நான் எனது பதிவை எனது தளத்தில்  வந்து படிக்க மட்டுமே நான் செட் செய்து இருக்கின்றேன்....கூகுள் ரீடரில் படிக்க முடியாது....அது என்னோடு தொடர்பு கொள்ளும் விளம்பர நிறுவணங்களின்  வேண்டுகோளுக்காக செய்து இருக்கின்றேன்... அதனால்தான் அப்படி செட் செய்துவைத்து இருக்கின்றேன் என்பதை திரும்பவும்பவும் என் நண்பர்களுக்கு சொல்லிக்கொள்கின்றேன்..
===============================

தினமும் என் மொபைலுக்கு வரும் பல்க் மெசேஜ்யை குறைந்தது 25  வரை தினமும் டெலிட் செய்து கொண்டு இருக்கின்றேன்... நானே காய்ந்து கொண்டு இருக்கின்றேன்... சோழிங்கநல்லூரில் பிளாட் வேண்டுமா?? அயனவவரத்தில் பிளாட் வேண்டுமா? என்று அளப்பரை செய்து கொண்டு இருக்கின்றார்கள்...டேய் நீங்க மட்டும் என்  கையில கிடைச்சிங்க ஓத்தா  சட்னிதான்..

=========================
பிலாசபி பாண்டி
வெள்ளம் அதிகமா வந்தா மீன்கள்... கரையில் இருக்கும் எறும்புகளை தின்னும்.. அதே வெள்ளம் வடிந்து தண்ணீர் வற்றினால் மீன்களை எறும்புகன் தின்னும்... சோ சான்ஸ் எல்லாருக்கும் இந்த உலகம் கொடுக்கின்றது.. உங்கள் சான்ஸ் வரும் வரை  நீங்க வெயிட்டிங்ல இருக்க வேண்டும்....
=========================
இந்தவார கடிதம்.

அன்புள்ள ஜாக்கி சேகர் அவர்களுக்கு,

தினமும் உங்கள் ப்ளாக்-ஐ படித்து உடனே உங்களுக்கு மெயில் எழுத நினைப்பேன். ஆனாலும் எதோ ஒரு தயக்கம். 

உங்களது "அன்பின் தம்பி அப்துல்லாவுக்கு" பதிவு தயக்கத்தை போக்கிவிட்டது.  

நீங்கள் எழுதுவதை தெளிவாகவும், உங்களை பற்றிய விசயங்களை மறைக்காமலும் எழுதுகிறீர்கள். 
தேர்ந்த எழுத்தாளர்களை போல் சுவாரஸ்யமாக எழுத உங்களுக்கு இயல்பாகவே வருகிறது. 
உங்கள் ஊக்கத்தை பார்க்கும் போது, உங்கள் எழுத்தில் தெரியும் மிகச்சிறு குறைகளை சுட்டிக்காட்ட மனம் வரவில்லை. அவற்றை நீங்கள் பொருட்படுத்தவும் தேவையில்லை. ஒருவேளை அவைதான் உங்கள் எழுத்தின் சுவையோ?
நீங்கள் மென்மேலும் உயரங்களை அடைவீர்கள், அது, என் போன்ற உங்கள் வாசகர்களுக்கு மன நிறைவையும் மகிழ்வையும் கொடுக்கும். 
அன்புடன் 
கணேசன், திருச்சி.


அன்பின் கணேசன் உங்கள் கடிதம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.. ஒரு தன்னம்பிகையை கொடுத்தது என்றால் அது மிகையில்லை....மிக்க நன்றி கணேசன்
அன்புடன்
ஜாக்கி
=================================
நான்வெஜ்18+


ஜோக்..1
பொதுவா குசு வருவது என்பது மனிதனின் இயற்கை....ரோபோவுக்கு வேண்டுமானால் வராமல் இருக்கலாம்..பட் மனிதன் என்றால் வந்தே தீரூம்...
ஆனா நம்ம ஊரில் வந்தால் குசு உட்டவனே எவன்டா பாம் போட்டது என்று கேட்டு விட்டு பக்கத்தில் எவனாவது அம்மாஞ்சி இருந்தால் அவன் மீது பழி போட்டு விடுவார்கள்...

அமேரிக்கன் குசு விட்டால்... எக்ஸ்கியூஸ் மீ  என்பான்...
பிரிட்டிஷ்காரன்  குசு விட்டால் பார்டன்மீ  என்பான்
ஜப்பான்ககாரன் குசு விட்டால் பர்கிகூ மீ என்பான்...
நம்ம ஆள் குசு விட்டால் நாட் மீ என்பான்.....

==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

 

===========================

10 comments:

 1. யார் சொன்னது நீங்க பெரிய அப்பாடக்கர் தான்

  ReplyDelete
 2. //வெள்ளம் அதிகமா வந்தா மீன்கள்... கரையில் இருக்கும் எறும்புகளை தின்னும்.. அதே வெள்ளம் வடிந்து தண்ணீர் வற்றினால் மீன்களை எறும்புகன் தின்னும்... //

  அருமையான தத்துவம் அண்ணே

  ReplyDelete
 3. பேரூந்து விபத்தில் பலியான 22 பயணிகளுக்கும் எனது அஞ்சலிகள்..

  ReplyDelete
 4. பல விஷயங்களை தாங்கிய பதிவு..
  நன்றி தகவல்களுக்கு..

  ReplyDelete
 5. டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

  NOT ME......

  ReplyDelete
 6. புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........
  நாட் மீ

  ReplyDelete
 7. "ஹல்லோ.. சார். நான் அல்டிமேட் பேங்க்ல இருந்து பேசறேன். கம்மி இன்ட்ரஸ்ட்ல மூட்டை மூட்டையா லோன் தர்றோம். எப்ப வாங்கிக்க வர்றீங்க?"..... தண்ணி குடிக்கும்போது, பாத்ரூம் போகும்போது..இவங்க இம்சை தாங்கல ..என் சார்பா ரெண்டு தர்ம அடி சேத்து போடுங்க!!

  ReplyDelete
 8. கலக்கிடீங்க சேகர்

  ReplyDelete
 9. aaadu maadu pasu kusu..................

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner