ஆல்பம்...
இலங்கைக்கு தீர்மானம் போட்ட காரணத்தால் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் முதல்வர் ஜெவுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் கூட்டினார்...
அதில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் போட்ட காரணத்தால் அவர் இனிமேல் புரட்சிதலைவி என்று அழைக்கலாம் என்று பகிங்கரமாக சொல்லி இருக்கின்றார்...அப்ப இப்பதான் புரட்சிசெய்து இருக்கின்றார் என்று சொல்லவருகின்றாரா? அப்ப இவ்வளவுநாள் அவர் புரட்சிதலைவி என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து இருக்கின்றார் என்பதாகதான் அந்த பேச்சு எடுத்துக்கொள்ளபடும்....எதுவுமே செய்யாமல் இருப்பதை விட எதையாவது செய்வது மேல் என்ற கொள்கைப்படி பார்த்தால் ஜெ போட்ட இந்த தீர்மாணத்தை தமிழக மக்கள் வரவேற்று இருக்கின்றார்கள்..=======================
ரஜினிக்கும் ஜெவுக்கும் நடந்த உரையாடலில் தமிழகத்தை காப்பாற்றி விட்டீர்கள் என்று ஜெவுக்கு வாழ்த்து தெரிவித்த போது ரஜினி சொல்லி இருக்கின்றார்....இது பர்சனலாக பேசிய பேச்சு.. அதை ஜெ வெளியிட்டு விட்டார் என்று ஒருசாரர் சொல்லுகின்றார்கள்... என்னை பொருத்தவரை இரண்டு திராவிடகட்சிகளும் அவரின் பேச்சை தங்கள் ஆதாயத்துக்கு பயண்படுத்திகொள்கின்றார்கள்..
=================
இன்றோடு கவர்னர் பர்னாலா பதவி முடிகின்றது...அடுத்த கவர்னர் யார் என்று தமிழக மக்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள்...
===============================
கர்நாடகாவில் தமிழ் நடிகர் பப்பு பெரிய அளவில் வேகவே வேகாது என்பது வேறு விஷயம்... ஒரு பேச்சுக்கு சொல்கின்றேன்...ரஜினி இங்கு பேசியது போல ,கர்நாடகாவில் அல்லது ஹைதரபாத்திலோ அல்லது திருவணந்தபுரத்திலோ, ரஜினி அல்லாத பிரபலமான தமிழ்நடிகர் ஒருவர் கர்நாடகாவை காப்பாற்றி விட்டீர்கள்,ஆந்திராவை காப்பாற்றிவிட்டீர்கள், கேரளாவை காப்பாற்றிவிட்டீர்கள் என்று சொல்லி இருந்தால் அவரின் நிலைமையை யோசித்து பார்க்கின்றேன்....ரஜினிராக்ஸ்...கர்நாடகாவில் தமிழ்பேசினால் பால் விலை இரண்டு ரூபாய் சேர்த்து சொல்லுகின்றார்கள்... என்ன செய்ய??
=================
ஒரு செய்தி கேட்டதும் சந்தோஷமாக இருந்தது....
இனி எனக்காக பிளக்ஸ் பேனர் எதுவும் கட்சிக்காரர்கள் வைக்க கூடாது என்று ஜெ சொன்னதாக இந்த செய்தி காதில் விழுந்தது..வாய் மொழி உத்தரவாக இருந்தாலும் பெரிய விஷயம் இது... முதல்வர் ஜெவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்..
==================
சமச்சீர் கல்வி கட்டண நிபுனர் குழுவில் பத்மசேஷாத்திரி ஓனர் மிசஸ் பார்தசாரதி பங்கேற்று இருக்கின்றார்... இதிலேயே அரசின் திட்டம் என்ன என்பது புரிந்து விட்டது... அவர் நடத்தும் பள்ளிகளில் பிரிகேஜிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வாங்குகின்றார்கள்..... இத்தனைக்கும் வாங்கிய பணத்துக்கு பில் கிடையாது.. எல்லாவிஷயங்களிலும் பிரமணர்களை வம்புக்கு இழுப்பதை நான் ஆதரிப்பது இல்லை... ஆனால் இதை சொல்லி வேண்டிய தேவை இருக்கின்றது... இதைதான் பிராமணர்கள் சதி என்று சொல்லுகின்றேன்... அப்படியே இந்த செய்தி வந்ததும்... ஒரு பிராமண பத்திரிக்கை ஸ்டாலின் நடத்தும் பள்ளியில் 25ஆயிரம் வாங்குகின்றார்கள் என்று செய்தி வெளியிடுகின்றார்கள்...மான்டசரி பள்ளியும் சிபிஎஸ்சி பள்ளியும் இதில் விதிவிலக்கு என்று சொல்லியும் அவர்கள் ஜாதி பாசத்தை நினைத்தால் செம காமெடியாக இருக்கின்றது..இவர்கள் பத்மாசேஷத்திரி வாங்கும் கட்டணத்தை சொல்ல முடியுமா?? முடியாது... அது செய்தியாக வருமா? வராது,...அதுவும் வந்தால் நடுநிலை என்று சொல்லுவேன்..
=======================
இந்தவாரசலனபடம்..
இந்த குதிரை அழகர்சாமி குதிரை அல்ல.. எஞ்சிலினா ஜுலி குதிரை...
==============
மிக்சர்
ஒரு சாக்லெட் விளம்பரம்... அந்த சாக்லெட் தின்னதும் தலை வெடித்து விடுகின்றது...அந்த விளம்பரம் வரும் போது சேனல் மாற்றிவிடுவேன்..
==========
===========================
வரும் ஞாயிறு 26 ஆம் தேதி அன்று சென்னையில் மெரினா கண்ணகி சிலை அருகில் மாலை 5 மணிக்கு ஈழத்தில் மரித்து போன நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்சி நடக்க இருக்கின்றது... அனைவரும் நிகழ்சியில் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..
================================
டைம்ஸ்ஆப் இந்தியாவில் இருந்து மெயில் அனுப்பி இருந்தார்கள்.. 48 மணிநேரத்தில் கிழித்து விட்டுதான் மறுவேளை என்று ஒரு பார்வேடு மெயில் அனுப்பி இருந்தார்கள்.. டைம்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து ஆனந்...என்பவர் பேசினார் .. நாங்கள் 48 மணிநேரத்தில் புடுங்கி கிழித்து விட்டுதான் மறுவேளை என்றார்... உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிக்க வேண்டும் என்றார்...ஜுன் பதினைந்தாம் தேதி அவர்கள் அனுப்பிய மெயில் உங்கள் பார்வைக்கு...
டைம்ஸ்ஆப் இந்தியாவில் இருந்து மெயில் அனுப்பி இருந்தார்கள்.. 48 மணிநேரத்தில் கிழித்து விட்டுதான் மறுவேளை என்று ஒரு பார்வேடு மெயில் அனுப்பி இருந்தார்கள்.. டைம்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து ஆனந்...என்பவர் பேசினார் .. நாங்கள் 48 மணிநேரத்தில் புடுங்கி கிழித்து விட்டுதான் மறுவேளை என்றார்... உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிக்க வேண்டும் என்றார்...ஜுன் பதினைந்தாம் தேதி அவர்கள் அனுப்பிய மெயில் உங்கள் பார்வைக்கு...
Dear Sir,
We have taken note of your complaint regarding the supply of TOI to your address.
We will resolve it within 48 hrs from the time of you receive this mail.
Assuring the best of our services at all times.
Regards,
CRM TEAM
044-24317979 / 80
===============ச்சே போங்கடா... இந்த பழம் புளிக்கும்.,.
===================
===================
இந்தவாரகடிதம்
Hi,
I am the regular reader of S&N . I never commented on your views. But sometimes voted.
I know, If someone say something against your view, you will say that you are not paying for my writings. But still, I would like to say what is samacheer kalvi as a parent.
1. My kid should be a competitor to kids from other states (of INDIA).
2. How many kids studied at Kerala are shining where samacheer kalvi is implemented. And how many Kerala kids are shining those who did not study at Kerala.
3. It is not that , samacheer kalvi is equalizing said to be that, the Pvt. Schools downgraded to government school standards, you may take the Govt. School standards to Pvt. Schools. or equalize them at one point where it is acceptable by all.
4. If at all, the text book is said to be the samacheer kalvi, is it that all other environments are equal where Govt. school kids are enjoying and Pvt. school kids are enjoying.
5. Mrs, Kanimozhi, doughter of Mr, Karaunanithi , who is keen on implementing Samachee Kalvi, can speak super english, when I studied from Govt. School cannot speak english.
6. All the parents are not commercial minded,
7. We need our kids to be in discipline, humble, obedient and also brilliant
8. IAS is not the only job, you earn money
9. None of the parent is willing to burden their own kid.
10. If you want to admit your kid in a School, Which one you will prefer, 1. St. Joseph's Cuddalore -1, 2. ARLM 3. Krishnasamy Met. Hr, Sec School. 4. Training School Cuddalore 5. St. Joseph's School Cuddalore - 2 6. Their mutty school ( I think u have a boy baby)
In your words, Last but not least, in a democratic country, I don't have money , I am drinking in a TASMAC, you have money , u are drinking in a Bangalore(Pengaluru) PUB
Thanks
Alex
1st STD-12th STD Raja Desingh Hr. Sec Govt. School Gingee
B.Sc., C S St. Joseph's College Cuddalore - 1
அன்பின் அலெக்ஸ்....
நீங்களே சொல்லிவிட்டீர்கள்...நான் பப்பில் குடிக்கின்றேன்.. என்று நான் குப்பத்தில் இருந்து வந்து பப்பில் குடிக்கின்றேன்..ஆனால் என்னோடு டாஸ்மாக்கில் ஒரு காலத்தில் குடித்த நண்பர்களின் குழந்தைக்காக பேசுகின்றேன்...... அப்படி பேசக்கூடாதா??
கேரளாவில் கல்வி அறிவு பெற்றவர்கள் 100 சதவீதம் அதனால்தான் சம்சீர் அங்கே அமுல்படுத்தபட்டது...அப்படி கேரளா குழந்தைகள் ஷைன் ஆகவில்லை என்று நீங்கள் சொன்ன புள்ளிவிபரம் மட்டும் மலையாளிகளுக்கு தெரிந்தால் உடனே ரோட்டில் இறங்கி இன்நேரம் போராடி இருப்பார்கள்..என்பதை நினைவில் கொள்ளுங்கள்....மலையாளிகள் போராட்டத்துக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்..
என்னை விட என் மனைவி நன்றாக படித்தவள்...ஆங்கிலம் அமேரிக்கா அக்சன்ட், யூரோப் அக்சன்ட் இரண்டிலும் மிக சரளமாக அழகாக பேசுவாள்...என் குழந்தை ஆங்கிலம் பேசும்... ஆனால் என் தங்கை குழந்தையும் ஆங்கிலம் பேச வேண்டும்.. அதுவும் ஆங்கிலத்தின் மீது பயம் இல்லாமல் அந்த மொழியை கற்க்க வேண்டும்.. அண்ணனின் குழந்தை ஆங்கிலம் பேசகின்றது என்பதற்காக மெட்ரிக்குலேஷனில் சேர்த்து எபிசிடி கூட சரியாக சொல்லத்தெரியாத குழந்தையை ஹலோ அவ் ஆர்யூ , வாட் ஆர்யூடூங் என்று சொல்ல வேண்டும் என்று படுத்தக்கூடாது அல்லவா? அதுவும் உடனே சொல்லவேண்டும் என்று அந்த குழந்தையை படுத்தக்கூடாது அல்லவா???அதுக்குதான் இந்த சம்ச்சீர்கல்வி வேண்டும் என்கின்றேன்.. சம்சீர்கல்வி ஸ்டேன்டர்டு சரியில்லை என்கின்றீர்கள்... அதைஇம்ளிமன்ட் பண்ணி செயல்படுத்துங்கள் என்பதே என் கோரிக்கை.... நான் ஒரு குழந்தை தத்தி எழுந்து நடக்கவேண்டும் என்று ஆசைபடுகின்றேன்.. நீங்கள் தத்திக்ககூட நடக்க விடாமல் ஓடவேண்டும் என்று ஆசைபடுகின்றீர்கள்...
ராஜா தேசிங்கு அரசு பள்ளியில் படித்த நீங்கள்...மெட்ரிக்குலேஷன் மாணவன் அளவுக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாடமுடியவில்லை என்று வருத்தபட்ட, உங்களால் கூட சமச்சீர்கல்வியை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் சார்ச்பார்க்கில் படித்த முதல்வருக்கு எங்கே புரிய போகின்றது......இது என் சமுகத்தின் பிறந்த தலைகாய்ந்த மாணவர்களின் சாபம்..தலைகாயய்ந்தவன் முட்டி மோதி தலையை படிய வாரிய பிறகும் அதை புரிந்து கொள்ள முடியாதது அதை விட சாபம்....
நன்றி அலக்ஸ்.....
==========================
பிலாசபி பாண்டி..
உண்மையான இதயம் தினமும் உன்னை பார்க்காது உன்னிடம் பேசாது..ஆனால் உன்னை பற்றிய சந்தோஷ நினைவுகளை நொடிக்கு நொடி நினைத்துக்கொண்டு இருக்கும்....
==========================
நான்வெஜ்18+
இரவு பத்து மணிக்கு மேல ஓடாத டிவியில நைட்டு சிலாட்டு எடுத்துகிட்ட மதபோதகர் ஒருத்தர் டிவியில பேசினார்.... நான் சொன்னதை காது கொடுத்து கேட்பார் இறைவன்.. அதனால் உங்கள் வியாதிகளை நான் குணப்டுத்துகின்றேன் என்று சொன்னார்... இறைவனை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்... உங்கள் செயல்படாத உறுப்பின் மேல் கைவைத்துக்கொள்ளுங்கள் நாள்பட்ட வியாதிகள் குணமாகும் என்று மதபோதகர் சொன்னார்.. மதபோதகர் இறைவனை துதிக்க ஆரம்பித்தார்.. மனைவி இறைவனை நினைத்துக்கொண்டாள்.. வயிற்றின் மேல் கை வைத்துக்கொண்டாள்..வயிற்றுவலி போக....
கணவன் இறைவனை வேண்டிக்கொண்டான்.. தன் லுல்லுவில் கை வைத்துக்கொண்டான்.. மனைவி கேட்டால் கடவுள் வியாதிகளை குணப்படுத்துவார்.. ஆனால் இறந்து போன உறுப்புகளை அல்ல... என்றாள்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
=========
பிடித்த பதிவு.
ReplyDeleteபிலாசபி பாண்டி மூலமாக பெங்களூர் அக்காவை சமாதான படுத்துவது போல் தெரிகிறது. எல்லாம் சிம்ரன் மச்சினிச்சி கனவில் பால் வந்து கொடுத்ததில் இருந்து ஆரம்பிகிறது. (கோவை சரளா கமெண்ட் சூப்பர் அப்பு )
ReplyDeleteஇந்த வார நான் வெஜ் ஜோக்குகளுக்கு கண்டனங்கள் வர வாய்ப்புள்ளது...சமச்சீர் கல்வித்திட்டத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் பொது பாடத்திட்டம் பற்றி மட்டுமே ! ! அனைவருக்கும் சமச்சீரான கல்வி அவசியமே ! ! சாத்தியப் படுத்துகிறாரா அம்மையார்... பார்ப்போம் ! ! !
ReplyDeleteசமச்சீர் கல்வி கட்டண நிபுனர் குழுவில் பத்மசேஷாத்திரி ஓனர் மிசஸ் பார்தசாரதி பங்கேற்று இருக்கின்றார்... இதிலேயே அரசின் திட்டம் என்ன என்பது புரிந்து விட்டது... அவர் நடத்தும் பள்ளிகளில் பிரிகேஜிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வாங்குகின்றார்கள்....//
ReplyDeleteஜாக்கி. பத்மா சேஷாத்ரி CBSE முறையைப் பின்பற்றும் பள்ளி. ஸ்டாலின் மகள் CBSE பள்ளிக்கு நீங்கள் சொல்லும் விதிவிலக்கு அவர்களுக்கு மட்டும் பொருந்தாதா?
ஜாக்கி, சமீபத்தில் நான் இணையத்தில் படித்ததிலேயே மொக்கையான மொன்னையான வாதம் உன்னோட சமச்சீர் கல்வி பற்றிய விமர்சனம்.
ReplyDeleteஎனக்கு சமச்சீர் கல்வி பத்தி பெரிசா தெரியாது - எனவே நான் அதுக்கு முழுசா ஆதரவோ இல்லை எதிர்ப்போ கிடையாது. அரசுப் பள்ளிகளில் மெட்ரிக் அளவுக்கு தரம் வருமென்றால் நான் அதற்கு ஆதரவே.
ஆனா நீ சொல்றது எல்லாம்..
திமுக கொண்டு வந்தது எனவே அது சரி
அதிமுக வேண்டாம் என்று சொல்வதால் அது நல்ல விசயமாத்தான் இருக்கணும்.
உன்னோட அக்கா பொண்ணு இங்கிலீஸ்ல பேசணும் எனவே சசீ கல்வி நல்லது.
ஆங்கிலத்தில் பேசச் சொல்லி வற்புறுத்தக் கூடாது எனவே ச சீ கல்வி நல்லது.
ஜெயலலிதா கான்வெண்ட்ல படிச்சதால அவருக்கு ச சீ கல்வி பத்தி ஒண்ணும் தெரியாது..
இப்படி எல்லாமே மொன்னையா இருக்கு ஜாக்கி..
சப்ஜெக்ட் மேட்டர்ல உனக்கு எவ்வளவு விஷய ஞானம் இருக்குன்னு சந்தேகமா இருக்கு.. இப்படியெல்லாம் மொக்கையா பேசி, போறப் போக்கில அடிச்சி விடாம..
சமச்சீர் கல்வினா என்ன, சாதக பாதகங்கள் என்னென்ன, அதிலுள்ள Features என்னென்ன, ஜெயலலிதா அதை வேண்டாமென சொல்வதற்கு சொல்லும் காரணங்கள் என்ன? அவை ஏன் தவறு,
43 வருடங்களாக பள்ளி(கள்) நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணி ஏன் ச சீ கல்வி பற்றிய குழுவில் இருக்கக் கூடாது??
என்றெல்லாம் ஒரு கட்டுரை எழுதி கடைசியில் உன் கருத்தை சொன்னா ஏத்துக்கலாம், இல்லைனா சும்மா போற போக்கில எல்லாரும் சொல்றாங்க நானும் சா& நா வில் சொல்லி ரவுடியாகிறலாமுன்னு எழுதறேன்னுதான் எடுத்துக்க முடியும்..
பி கு: உனக்கும் எனக்கும் ஏதாவது ஒரு விசயத்தில ஒத்த கருத்து இருக்கா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.
கர்நாடகாவில் தமிழ்பேசினால் பால் விலை இரண்டு ரூபாய் சேர்த்து சொல்லுகின்றார்கள்... என்ன செய்ய??...Ithu vungalukku nerntha oru kasappana anupavam. Anaal ellarume appadi iruppathillai. Namma chennai auto driverkal matra mozhi karan kalidam attayai poduvathu pola than.
ReplyDeleteசாண்ட்வெஜ் நான்வெஜ்ஜில் சமச்சீர் பற்றி பெரிய கட்டுரை எல்லாம் எழுத முடியாது.. சமச்சீர்கல்வியை கருணாநிதி எடுத்து வந்த திட்டம்னு நீ சொன்ன பார்.. அப்பவே உன் அறிவு பசியை நினைச்சி வியக்கின்றேன்... சமச்சீர் கல்வின்னா என்னன்னு தெரியமா எழுதலை மச்சி... கேரளாவுல இம்பிளிமென்ட் பண்ணி வெற்றிகரமா நடந்துகிட்டு இருக்கும் திட்டம் இது.என் மாமா பையன் ஹெட்மாஸ்டர்.. என் தங்கை அரசு பள்ளி ஆசிரியர்.. எனது மச்சான் அரசு பள்ளியில் ஆசிரியர்.. அதனால் அதை பத்தி தெரியாமல் எழுத நான் என்ன கடல்கடந்தா இருக்கேன்... அதனால் உன்னை விட எனக்கு தெரியும் மச்சி....
ReplyDelete@ sriram : Nobody is opposing Mrs.YGP's presence in USE committee , there are three members from private schools but there is no representation from govt. and govt. aided schools.
ReplyDeleteஅந்த தலை வெடிக்கும் விளம்பரம் ஒரு கொடூரம். என்னாலும் பார்க்க முடியாத விளம்பரம்.
ReplyDelete