தாமதமாக சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/ புதன்02/06/2011

ஆல்பம்...


நான் முன்னாடியே சொன்னது போல பெட்ரோல் லிட்டருக்கு 75ரூபாய் என்று ஒரே அடியாக அறிவித்து விடலாம்...
கொய்யலா பிக்காலி பயபுள்ளைங்களாட்டம் வெள்ளாட்டு காட்டிகிட்டு....... அப்பயே மணிசங்கர் அய்யர் சவுதியில் இருந்து பாக்கிஸ்தான்  வழியா பைப் போட்டு பெட்ரோல் வர வச்சிக்கலாம் என்று சொன்னார்... நல்ல திட்டம்... பல பண முதலைங்க சம்பாதிக்க முடியாதுன்னு அந்த திட்டத்தை தடுத்தி நிறுத்தியது மட்டும் இல்லாம அவரை அந்த துறையை  விட்டே தூக்க வச்ச புண்ணியம் இப்போது ஆளும் காங்கிரசுக்குதான் இருக்கின்றது...
===========================

தொடர்ந்து இரண்டு நாட்களாக பெங்களூரில் செமையானமழை....பருவமழை வெகு சீக்கிரத்தில் ஆரம்பித்து விடும் என்பதால் மராமத்து பணிகளில் அவசரம் காண்பிக்கின்றது அரசு...ஆல்குடி செல்லும்  சாலையில் சாலை விரிவாக்கத்துக்கு பல மரங்களை நேற்று பரலோகத்துக்கு அனுப்பினார்கள்... பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது... நண்பர் குமார் வரச்சொன்னார் என்று நான் கும்ளே சர்க்கிளுக்கு பேருந்தில் போனேன்.... அதுக்கு நடந்தே போய்விடலாம்.. பீக் அவரில் அப்படி ஒரு டிராபிக்......

==============================

சுபயோக சுப தினத்தில் பச்சை சேலை கட்டிய பெண்கள் இலவச அரிசி வாங்க அம்மா திட்டத்தை தொடங்கி வைத்து விட்டார்..... நான் நாக்கு அறுத்துக்கொண்ட பெண்ணை ஊக்கு விக்கவில்லை என்று தன் தரப்பை சொல்லி இருக்கின்றார்.... காதில் போட்டு இருக்க தோடுக்கு கொடுத்த விளக்கம்தான்மெய்சிலிர்க்க வைத்தது.... தொண்டர்கள் வற்புறுத்தினார்கள்... அதனால் காதுக்கு தோடு போட்டேன் என்று சொல்லி இருக்கலாம்.... தோடு போடவிலை என்றால்  தீக்குளிப்பேன் என்று சொன்னதாலும் என் தொண்டர்கள் எனக்காக தீக்குளிக்க கூட தயங்கமாட்டார்கள் என்பதால் தோடு போட்டுக்கொண்டேன் என்று சொன்னார்.....இன்னும் சில நாட்களில் உணர்ச்சிவசப்பட்ட தொண்டன் பத்து லிட்டர் பெட்ரோல் வாங்க போவது உறுதி...அம்மா மூக்குத்திபோட்டுக்கொள்ள....

===================================
அரசு விழாக்கள் அடம்பரமாக இருக்க கூடாது என்று முதல்வர் ஜெ சொல்லி இருக்கின்றார்.... அது பின்பற்றபட்டால் மகிழ்ச்சியே...பல கிளிஷே விஷயங்களில் ஜெ முற்றிலும் மாறி இருக்கின்றார்... அவருக்கு வாழ்த்துகள்....

==============================
இந்தவாரசலனபடம்..

இந்த  வீடியோவில்  முதலில் இருக்கும் டயர் விளம்பரத்தில் சொல்லப்படுவது போலத்தான்...ரோட்டில் எந்த வாகனம் பழுதாகி நின்றாலும் பின்னால் வரும் வாகனத்துக்கு அறிவிக்கவேண்டும்.. ஆனால் ஆப்பு நமக்கு உறுதியானல் எதுவும் செய்யமுடியாது  என்பதைதான் அந்த விளம்பரம் நமக்கு சொல்லிக்கொடுக்கின்றது....


=====================
மிக்சர்........

நான் அப்படி என்ன எழுதிவிட்டேன் என்ற பதிவை நான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில்தான் எழுதினேன்...  நண்பர் எல்டெக் ஜெயவேல்.... ஜாக்கி இவ்வளவு ஓப்பனா எழுதனுமா என்றார்.... நான் அப்படித்தான் என்றேன்...பண விவகாரத்தில் நான்  பெற்ற அப்பாவினால் காயடிக்கபட்டேன்....காரணம் மனிதர்கள் அவ்விதம்தான்... அதிலிருந்து முற்றிலும் வேராக ரத்த சம்பந்தம் இல்லாத  ஒருவர் வெறும் எனது எழுத்துக்கும் எனது பிம்பத்துக்கும் மரியாதை கொடுத்து எனக்காகமெனக்கெடுவது என்பது என்னை பொறுத்தவரை பெரிய விஷயம்.... அவைகள் நெஞ்சை  நெகிழ வைப்பவைகள்தான்...இன்னும் சொல்லப்போனால் இதுக்கு முன் யாரும் என்னை சந்தித்தது இல்லை....இவ்வளவு ஏன்...பள்ளியல் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தின் போது ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பார்களே.... அதில் ஒரு மிட்டாயை எடுத்து காக்காய்  கடி கடித்துக்கொடுத்தாலும் நான் அதை எழுதுவேன்.... பதிவை படித்து உடன் போனில் பாராட்டிய விந்தைமனிதன்ராஜகோபால்,எல்டெக்ஜெயவேல்,கார்திகைபாண்டியன்,கவுசல்யா,அமெரிக்காவில் வசிக்கும் ஈரோட்டுகாரர் அமரபாரதி, ஜி சாட்டில் வாழ்த்திய மணிஜி,அகமது சுபைர்,டாக்டர் ரோகிணி போன்றவர்களுக்கு என் நன்றிகள்.

==============================================
வாழ்த்துகள்....
2/06/2011அன்று திருமணநாள் காணும் எனது நண்பர் அபிஅப்பாவுக்கு பதிவர்கள் சார்பிலும் எங்கள் குடும்பத்தினர் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
===================
இந்த வார சலனபடம்

காலையில் இருந்து இரவு செக்குமாடு போல் ஒரே இடத்தில் வேலை செய்ய வைக்கும்... துணிக்கடை வேலையில் தன் வேலையை சுவாரஸ்யபடுத்திக்கொண்ட இந்த பையனின் ஸ்டைல் என்னை கவர்ந்த ஒரு விஷயம்....ஐ லைக் வெரி மச் திஸ் விடியோ...===================
பிலாசபி பாண்டி..

பூக்கள் ரொம்ப மிருதுவானவை...கடுமையான கைகளால் பறிக்க வேண்டாம்...மனங்கள் இன்னும் மிருதுவானவை கடுமையான வார்த்தைகள் வேண்டாம்...

=============================
நான்வெஜ்18+

ஜோக்..,1
ஆபிஸ்ல இருந்து வந்து உடை களைந்த உடன்தான் புது ஷு வாங்கியது புருசனுக்கு ஞாபகம் வந்துச்சி...முழு நிர்வாணமாக நின்று கொண்டு புது ஷுவை அணிந்து மனைவியிடம்  எதாவது வித்யாசம் தெரிகின்றதா? என்று புருசன் கேட்டான்.. அதுக்கு பொண்டாட்டி சலித்த படி... ஷுவை பார்க்காமல் என்ன வித்யாசம்... உங்க லுல்லு எப்பவும் போல வெட்கப்ட்டு தரைபார்த்தபடி கடக்குது...என்றாள் டென்சனான புருசன்.. அடியேய் அது என் புது ஷு வை  பார்க்கறது உன் கண்ணுக்கு தெரியலையா என்றான்....அப்படியா சந்தோஷம் அப்ப நீ நாளைக்கு புது தொப்பி வாங்கு....

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..

 (FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...
 


=================

6 comments:

 1. துணிக்கடை வேலையை சுவாரஸ்யமாக்கிக் கொண்ட பையன் சீக்கிரம் உங்க வலைதளம், ஃபேஸ்புக், யூட்யூப் மூலம் சீக்கிரம் பிரபலமாகிவிடுவான்.

  ReplyDelete
 2. ந்ன்றி பொன்சந்தர்...

  ReplyDelete
 3. எதுக்கு அண்ணே புது தொப்பி ??????

  ReplyDelete
 4. சிங்கப்பூர் ல பிரபலமாகிவிடுவான்.

  http://singaporeseen.stomp.com.sg/stomp/sgseen/this_urban_jungle/648918/so_skillful_shop_assistant_doesnt_smile_but_he_sure_packs_items.html

  ReplyDelete
 5. நன்றி விஜய் நாணும் அந்த லிங்ககை பார்த்தேன்...நன்றி

  ReplyDelete
 6. I am visiting your site 5 times a week. Your writings are highly appreciated.

  I have one request... Is it possible I copy 'Philosophy Pandi' some times to my facebook status ?

  lovewarehouse.blogspot.com

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner