Saturday, June 11, 2011

சென்னைடூகடலூர் பேருந்து பயணம்/கடலூர் டூ சென்னை பைக் பயணம்..(பயண அனுபவம்/பாகம்2)


போன பாகத்தில் உங்க கசீன் எங்க-? நீங்க பஸ்மாறித்தான் போவிங்களா?
போன்ற கேள்விகளோடு, ஏன் இந்த கட்டுரையில் இருக்கும் எழுத்து நடை இதுக்கு முன்  எழுதிய கதையில் இல்லை என்ற கேள்வியும் கேட்டு இருந்தார்கள்..

மனதில் உற்சாகம் முக்கியம்... எல்லா நாளும் உற்சாக நாளாக எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.. அன்றைக்கு என்ன மனநிலையில் எழுதினேனோ அதைதான் அந்த கதையும் பிரதிபலித்தது.. ரெண்டாவது எல்லா படைப்பும் அற்புதமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. அது நன்றாக இருந்தாலும் அவலட்சனமாக இருந்தாலும் அது எனது படைப்புதான்.. அதை  அந்த நிலையில் ரசிப்பதையே நான் விரும்புகின்றேன்......... நன்றி நண்பர்களே...

========


(எனது கசின் இரண்டு நாளைக்கு முன்னையே கடலூர் போய் ஷோரூம்ல் இருந்து  ஷைன் எடுத்து விட்டு எனக்காக  வெயிட் செய்து கொண்டு இருந்தான்.)
======
நான் இருப்பது  போரூர்கிட்ட நான் கோயம்பேடு போய் பைக்கை ஸ்டாண்டில் போட்டு விட்டு, கடலூர் பேருந்தில் ஏறி உட்கார்ந்து அது டிராபிக் எல்லாம், கடந்து மதுரவயல் பைபாஸ் வழியாக பெருங்களத்தூர் போவதற்குள் ,கிண்டி போய் பெருங்களத்துர் போனால் பயண நேரம் வெகுவாக மிச்சமாகும்..

அது மட்டும் அல்ல கோயம்பேட்டில் வண்டி போட்டு பேருந்தில் உட்கார்நது அது வெளிவருவதற்குள் ஒரு மாமாங்கம் அகும்.. அதே போல ஊரில் இருந்து வரும்  போது, இந்த டிராபிக்கில் கோயம்பேடு போவதற்குள் வயதாகிவிடும்.. கிண்டி இறங்குவதே என்னை பொறுத்தவரை சிறப்பு....அது மட்டும் இல்லை பஸ் மாறி போவது ஸ்டெயிட் பேருந்தில் சீட் பொதுவாக புல்லாக இருக்கும்... அதான்...


இப்போது  பெங்களுருக்கு போறிங்கன்னு வச்சிக்குங்க.... அவசரத்துல இரண்டு பீர் அடிச்சிட்டு போறிங்க...திடிர்னு உச்சா வவந்துடுச்சி.... சில கணடக்டர் நிறுத்துவாங்க.. சிலர் டீக்குடிக்க நிறுத்துவாங்க... சிலர் எங்கயும் நிறுத்தாம கிருஷ்ணகிரிகிட்டபோய் நிறுத்துவாங்க... சிலகண்டக்டருகிட்ட ஆம்பூர்லாம் தாண்டி போய் கொண்டு இருக்கும் போது உசசாவுக்கு வண்டி நிறுத்துங்கன்னு கேட்ட கூட தமிழக முதல்வர் போஸ்ட்ல இருப்பது போல, ஷோ கட்டுவாங்க.. அந்த பயணமே உச்சா சமாச்சரத்தை நினைச்சிகிட்டே பயணபடனும்.. எதுக்கு...??

முதலில்  வேலூர்... முனு மணிநேரம் பயணம் செய்து  இறங்கிட்டு, உச்சா எல்லாம் போயிட்டு, ஒரு டீ சாப்பிட்டு விட்டு, ஓசூர் அல்லது பெங்களுர் பேருந்து  ஏறினா சரியா இருக்கும்.....ஆனால் இதுவே குடும்பத்தோடு பயணிக்கும் போது இந்த மாதிரி பஸ் மாறி பயணிப்பது சரியாக வராது..

(யோவ் நட்ராஜ் ஒரு கேள்வி கேட்டாலும் கேட்ட .....அதை விளக்கி சொல்லறதுக்குள்ள தாவு துர்ந்து போயிடுச்சி...)
==========

சரியாக நாலுமணிக்கு வெய்யில் தாழ புது ஷைனில் படர்ந்தேன்..நம்ம சீடி100டில் எல்லாம் கீரும் கீழே இதில் அப்படியே ஆப்போசிட் மனதில் நிறுத்துக்கொண்டேன்.. பில்லியனில் என் கசின் உட்கார்ந்து கொண்டான்.  பாண்டி பார்டரை  டச் யெதேன்... ஒரு மாருதி எங்கள் பின்னால் ஹாரன் அடித்து  வழி கேட்டு ,விழி கேட்டு ஆம்பூலன்ஸ் போல விரைவாக சென்று கொண்டு இருந்தது...

என்னடா இந்த வண்டி இப்படி பறக்குதேன்னு பார்த்தேன் உள்ளார புல்லா காலேஜ்  பொம்பளை பசங்க உட்கார்ந்து இருந்தார்கள்... ஓட்டிய பையன் உதட்டுக்குமேல் மீசை வரலாமா? வேண்டாமா? என்று தமிழகத்து  சமச்சீர் கல்வி போல யோசித்துக்கொண்டு இருந்தது... அதனால் அந்த வண்டி இயல்புக்கு மேல் வேகத்தில் சென்று கொண்டு இருந்தது...

அந்த வாகனத்தை முன்னே அனுப்பி மெல்ல நாங்கள் பயணபட்டோம்..பொதுவாக புது வண்டி என்பதால் பொருமையாகதான் நிதானித்து பயணித்தோம்.., டிஸ்க் பிரேக் வேறு.. என்பதால்  இன்னும் நிதானித்தோம்  கன்னிக்கோயிலில் ஒரு பெரிய சாரயக்கடை கிராண்டு ஒயின்சுக்கும் விஜி ஒயின்சுக்கும் நடுவில் திறந்து இருந்தார்கள்..நல்ல வளர்ச்சிதான்.. எல்லா இடத்திலும் அதிஷ்டக்கார முதல்வர் ரங்கசாமி சிரித்துக்கொண்டு இருந்தார்...பின்ன மூனு மாசத்துல கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆவது சும்மாவா??


தவளக்குப்ப்த்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் டாங்க்கை புல் செய்தேன்... பாண்டியில் பெட்ரோல் லிட்டர்61ரூபாய் மட்டுமே.,..  அந்த ரேட்டை பார்க்க பார்க்க வயிறு எரிந்தது...

ரங்கசாமி ஆதரவாளர்கள்.. அரியாங்குப்பத்தில் பக்கத்தில் இருக்கும் பேக் வாட்டரில் தண்ணிக்கு நடுவில் தண்ணி அடித்து விட்டு அவரை வாழ்த்தி  பிளக்சை ஆற்றின் நடுவில் வைத்து தங்கள் விசுவாசத்தை காட்டி இருந்தார்கள். பேருந்தில் பயணிப்பபவர்களோ, அந்த  வழியாக பயணிப்போர் யாராக இருந்தாலும் அந்த பேனரை மிஸ் செய்ய முடியாது.. அதே போல வெகு நாட்களாக கிடப்பில்போடப்பட்ட அரியாங்குப்பம் என்டரன்ஸ் பாலம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.. சந்தோஷம்...

சரசரவென பயணம் செய்தோம்... வாழக்கம் போல,  கோரிமேடு எதிரில் என் அம்மா உயிர் பிரிந்து போன காச நோய் மருத்துவமைணையின் முகப்பில் வண்டியை நிறுத்தி சேவித்தேன்....என் பயணம் இனிதாய் அமைய வேண்டிக்கொண்டேன்... காவல் தெய்வமாய்  என்னோடு பயணிக்க கேட்டுக்குகொண்டேன்...அவள் ஆசி வழங்கிளாள்..


பாண்டிக்கு வரும் போது அனைத்து பேருந்துகளும் கிளியனூர் உள்ளே சென்றுதான் வருகின்றன...ஆனால் பைக்கில் போகும் போது பைபசில் பயணித்துக்கொண்டு இருநதோம்... மிக நேர்த்திய சாலைகள் போட்டு இருக்கின்றார்கள்...

அரோவில் போலிஸ் நிலயத்தை தாண்டி  ஒரு டோல் போட்டு இருக்கின்றார்கள்...திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டின் பைபாசில் எங்கள் ஷைன் வழுக்கி கொண்டு பயத்துக்கொண்டு  இருந்தது. சரி நாமே ஓட்டுகின்றோமே..கசினிடம் கொடுத்து கொஞ்ச நேரம் ஓட்டக்கொடுக்கலாம் என்று ஓட்டக்கொடுத்தேன்.. உங்களை போல எல்லாம் நான் விரைவாய் ஓட்டமாட்டேன் என்று ஜகா வாங்கினான்...

அவன் முன்னால் உட்கார நான்  எனது 85 கிலோ  வெயிட்டோடு  வண்டியின் பின்னால் ஆரோகனித்தேன்.
அவன் வண்டியை  ஓடினான்.. வேகம் எடுக்கும் போது ஜெயமாலினியை ஞாபகபடுத்தினான் அந்த அளவுக்கு இடுப்பை பதட்டத்தில்  ஆட்டினான்...
ஒரு அரைகிலோமீட்டர்தான் பயணித்து இருப்போம்.. சாலையில் இரண்டு பக்கமும் கூ.ட்டம்..பெரிய கூட்டம்... ஒரு இளம் பெண்மணி தலையில் ரத்தம் வழிந்த படி, சேலையெல்லாம் நனைந்த படி ஒரு இன்டிகா காரில் ஏறிக்கொண்டு இருந்தார்.. ஒரு ஆள் நொண்டிக்கொண்டு நடக்க, அவரை அங்கு இருந்த பொதுமக்கள் கைதாங்கலாக அந்த காரிலேயே எறிக்கொள்ள.. அந்த கார் வேகமாக கிளம்பி சென்றது...அந்த கார்கிளம்பி சென்றதும் பக்கத்தில் பார்த்தால் ஒரு  கார் தலைகுப்பற கவிழ்ந்து கிடத்தது........

 அந்த கவிழ்ந்த கிடந்த கார், ஜுவாலஜி லேபில் ஆபரேஷனுக்கு தயாராகும் தவளை போல தலைகிழாக கிடக்கும் நிலையை பார்த்த போது, அந்த காரில் பயணத்த அந்த இளம் தம்பதிகள் பிழைத்தது பெரிய விஷயம்தான்...கடவுளுக்கு நன்றி.. ஒரு நிமிடத்துக்கு முன் தான் அந்த விபத்து நடந்து இருக்கின்றது...

ஒரு நிமிடத்துக்கு முன் ஜாலியாக பாட்டு கேட்டபடி வந்து இருப்பார்கள்....அடுத்த சில நிமிடங்களில் அவர்களே எதிர்பார்க்காத ஒரு நிலையில்  அந்த தம்பதிகள்....

காரை போய் பார்த்தேன்  காரின் உடமைகள் பல இடங்கிளில் சிதறி கிடந்தது.. ஒரு இளைஞன் சிதறி கிடந்த உடைமைகளை எடுத்து வந்து காரின்  உள்ளே எறிந்து கொண்டு இருந்தான்.. காரின் உள்ளே மினி டீவிடி பிளேயர் இன்னும் நிறைய  டாக்குமென்டுகள மற்றும் லேப்டாப் எல்லா கிடந்தது.... காரை மாதவன், விஜய் , யேசுதாஸ் ஹிட்ஸ் டிவிடிகள் சிதறிகிடந்தன...

நான்  காரில் பயணித்த தம்பதிகள் இரண்டு பேருக்கும் உயிருக்கு எந்த ஆபத்தும்  இல்லையே? என்று கேட்டேன்... கைகளில் ரத்தம் காய்ந்து கொண்டு இருந்த ஒருவர்... அவர்தான்.. அந்த தம்பதிகள் காரில் இருந்து வெளியே வர உதவி இருக்கின்றார்..

காரில்பக்கவாட்டு ஜன்னல்கள் நசுங்கிவிட்டதால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.. அதனால் பின்னால் இருக்கும்  கண்ணாடியை உடைத்து அவரை  வெளியே வரச்செய்தோம்...பெண்மணிக்கு மட்டுத் தலையில் சின்னதாக ஏதோ குத்தி ரத்தம் வருகின்றது என்றார்.. காதில் இருந்து ரத்தம் வந்துச்சா? என்றேன்.. இல்லை.. இரண்டு பேருமே சுய நினைவோடு  அவுங்களே தான் காருக்கு வெளிய தவழ்ந்து வந்தாங்க என்றார்..இரண்டு பேரும் உயிருக்கு ஆபத்து இல்லையென்றால் அதுவே போதும்.. பணம் காசை எப்ப வேணா சம்பாதிச்சிக்கலாம் என்று சொல்லி விட்டு அவர்களுக்கு உதவி செய்த அவருக்கு நன்றி கூறினேன்....

 காரின் உள்ளே பக்கவாட்டு ஜன்னல்களில் ரத்தம் சிதறிகிடந்தது...
கொஞ்சம் தள்ளி ஒரு கும்பல், வேட்டையாடு விளையாடு ராகவன் கமல் போல, அந்த விபத்தின் சீன் ஆப் கிரைம் பற்றி விவாதித்துக்கொண்டு இருந்தார்கள்... நான் அந்த கூட்டத்தில் போய் பேசும் போது எனது கூலர்சை எடுத்து அணியலாம் என்று நினைத்தேன்... அது ரொம்ப ஓவராக இருக்கும் என்பதால் அதை செய்யவில்லை...

ஆனால் உட்கார்ந்து அந்த  காரின் தடத்தை பாத்தேன்...

 திண்டிவனத்தில் இருந்து பாண்டி நோக்கி வேகமாக வந்த கார் எப்படியும் 80ல் இருந்து 100ல் வந்து இருக்கும்....  நான்கு நரிக்குறவர்கள்.. ஒரே டிவிஎஸ்பிப்டியில் வந்து இருக்கின்றார்கள்... அதில் ஒரு பெண்ணும் இருந்து இருக்கின்றார்... எல்லோரும் செமை தண்ணி...அது டாஸ்மார்க்கோ அல்லது லோக்கல் சரக்கோ... சாலை ஓரத்தல் சென்று கொண்டு இருந்தவர்களில், யாரோ ஒருவர் சீண்டிய விளையாட்டுக்கு ஓரத்தில் சென்ற வண்டி தேசிய நெடுஞ்சாலையின் நடடுப்புறம் சென்று விட்டது.. இதனை பார்த்த கார் ஓட்டி  பிரேக் அடித்த படி லெப்டில் திருப்ப, திரும்பவும சாலை ஓரத்துக்கே  அவர்கள் தார் ரோட்டை விட்டு மண்ணுக்கு பக்கத்தில்  வரும் போது கார் முழு கட்டு பாட்டையும் இழந்து லைட்டாக  நரிக்குறவர்கள், டிவிஎஸ்பிப்டியில் தட்டி விட்டு, சின்ன பாலத்தில் மோதி அதுக்கு பக்கத்தில் இருக்கும் பெரிய நடுக்கல்லில் மோதி கார் கவிழ்ந்து இருக்கின்றது...

நரிக்குறவர்களின் டிவிஎஸ் பிப்டியின் புட்டிரேஸ்ட் அங்கே கிழே கிடந்தது.... இந்த பெரிய விபத்தை பார்த்த நரிக்குறவர்கள்...பாலத்துக்கு கீழே விழுந்து கிடந்தவர்கள்...  சட்டென சுதாரித்து அந்த டிவிஎஸ்பிப்டியோடு எஸ்ஸாகி இருக்கின்றார்கள்... அவர்களின் தவறு இரண்டு தம்பதிகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத படி ஆகிவிட்டது...

விபத்தான காரை படம் எடுத்தேன்... கசீன் கையில் இருந்து பைக் சாவியை அவன் கையில் இருந்து பிடிங்கி கொண்டேன்... நான் ஓட்ட ஆரம்பித்தேன்.. திண்டிவனத்துக்கு போகும் வழியில், ஏழை கடையில் டீ சாப்பிடலாம் என்று நினைத்தேன்... நேரம் இல்லை..... திண்டிவனம் அத்தை வீட்டுக்கு போய் நன்றாக ரிப்ரஷ் செய்து கொண்டு,  கொஞ்நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு, இரவு டிபன் முடித்து விட்டு, இரவு எட்டேகாலுக்கு திண்டிவனத்தில் இருந்து கிளம்பினோம் மேல்மருவத்தூரில் இறங்கி ஒரு பத்து ரூபாய்க்கு சூடம் கொளுத்தி விட்டு கிள்மபினோம்.. இது அப்பாவின் கட்டளை... எப்போதும் வண்டியில் கடலூர் வந்தாலும் போகும் போது இப்படி செய்ய சொல்லுவார்... அதே போல பெருங்களத்தூர் அருகே இரணியம்மன் கோவிலில் இரண்டு ரூபாய்க்கு கற்புரம் ஏற்றி விட்டு செல்லுவது எனது வழக்கம்..

எட்டேகாலுக்கு திண்டிவனம் பத்தேகாலுக்கு மாம்பலத்துக்கு வந்து விட்டோம்... தாம்பரத்திலும் , காசி தியேட்டர் அருகிலும்தான் கொஞ்சம் டிராபிக் இருந்தது.....

பத்தேகாலுக்கு என் கசின் வீட்டுக்கு வந்ததும் உடம்பு வலி...வீடாக இருந்து இருந்தால் ஒரு  கட்டிங்காவது போட்டு விட்டு, தூங்கி இருப்பேன்..இங்கு அது முடியாது என்பதால் கெய்சரில் வென்னீர் போட சொன்னேன்.. ஒரு குளியல் போட்டேன்.. வென்னீர் அவ்வளவு இதமாக உடம்பு ஏற்றுக்கொண்டது...


குளித்து விட்டு வெளியே வந்து தலையில் இருக்கும் நாலுமுடியை துவட்டிக்கொண்டு இருந்த போது... ஜாக்கி அண்ணா
காஞ்சிபுரத்துகிட்ட ஆம்னி பஸ் கவிழ்ந்து, டிசல் டேங்க் வெடித்து பேருந்து எரிந்து , 40 பேர் பலின்னு பிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டு இருந்தது.. ஒருவர் தவிர யாரும் பிழைக்கவில்லை என்று  சொன்ன போது, திண்டிவனம் பைபாஸ் கார் விபத்து எனக்கு ஞாபகம் வந்தது...இறந்தவர்களுக்கு மனதில் அஞ்சலி செலுத்தினேன்...

=================
 அதன் பிறகு உறவினர்களிடம் அரட்டை தொடர்ந்தது... சாப்பிட சொன்னார்கள் திண்டிவனத்தில் சாப்பிட்டு விட்டு வந்துவிட்டோம் என்று சொன்னேன். ஒரு காப்பி போட்டு கொடுத்தார்கள்..

படுத்த உடன் உடல் களைப்பில் உடனே தூக்கம் தழுவியது டீப் சீலிப்பில் இருக்கும் போது கனவில் சம்பந்தம் இல்லாமல் அதுக்குள்ள தூங்கிட்டிங்களா? என்றபடி நடிகை சிம்ரன் கையில் பால்கிளாஸ் வைத்துக்கொண்டு  நின்றுக்கொண்டு இருந்தார்....அவர் என் அருகில் வரும் போது சரியாக என் போனின் ரிங்டோன் அடித்தது நான் சிம்ரனிடம் ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு, எல்லா இடத்திலும் போனை தேடினேன்.

சட்டென தூக்கம் களைந்தால், போனில் என் மனைவி..என்னங்க ஊருக்கு வந்துட்டிங்களா?  எப்படியும் வீட்டுக்கு வந்து போன் பண்ணுவிங்கன்னு இங்க ஒருத்தி காத்துகிட்டு இருக்கேன்... என்று  பேச்சு நீள நான்  களைப்பிலும், இங்கு உன் அத்தையோடு அதிகம் பேசியதாலும் மறந்து விட்டேன்... என்று சொல்லி மன்னிப்பு கேட்டேன்...??குழந்தை என்ன செய்கின்றாள் என்று கேட்டேன்.... கால் உதறி உதைத்து, உதைத்து மேலே சுற்றும் பேனை பார்த்து பார்த்து சிரிக்கின்றாள் என்று சொன்னாள்... பேச்சு நீண்டு குட் நைட்டில் முடிந்தது...


அந்த பத்து நிமிட ஆழ்ந்த உறக்கத்தில் எதுக்கு சிம்ரன் பால் கிளாசோடு வந்து நிற்க்கவேண்டும்..  என்று யோசித்த படி விடை தெரியாமல் தூங்கி போனேன்....

உங்களுக்கு தெரியுமா?? சிம்ரன்+ பால் கிளாஸ் ஏன் என்று?????


குறிப்பு..
சின்னதாக எழுத உட்கார்ந்த இந்த பதிவு நீண்டு போனதுக்கு காரணம் பெங்களூர் யுவாதான்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
===


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS... 

 


================

11 comments:

 1. ஹ்ஹிஹி ம்ம் உங்க பாணியே தனி ஜாக்கி!!

  ReplyDelete
 2. SUPER JACKIE ANNA . NICE WRITTING .

  ReplyDelete
 3. தங்களின் எழுத்துநடை அபாரம் பாஸ்..

  ReplyDelete
 4. உங்களது நிகழ்வுகளை நல்லா அழகா எழுதியிருகீங்க..
  ஆன அந்த சிம்ரன் மேட்டர் எப்படி?..சிம்ரன் ரொம்ப புடிக்குமோ?

  ReplyDelete
 5. Jakie - Cuddalore bus via Guindy, Thambaram illaya??? eppo route maathinaanga...

  ReplyDelete
 6. டோராவின் பயணங்கள் மாதிரி ஜாக்கியின் (adventure) பயணங்கள். அசத்தல்.

  ReplyDelete
 7. தேங்க்ஸ் ஃபார் த எக்ஸ்ப்ளநேஷன் தல..உச்சா லாஜிக் மிக சரி. அதுக்கு பயந்தே இந்தியா வந்தா பஸ்ஸ அவாய்ட் செய்யறது..

  இந்த வாரம் சன் டிவியில் பிரியமானவளே ஒரு மதியம் போட்டான். அதில் சிம்ரன் முதலிரவில் விஜய்க்கு பால் எடுத்து வருவது போல்
  லெங்க்த்தி சீன் உண்டு. அதை பார்த்தீர்களோ ரீசண்டா?

  ஆமா, இந்த ஷைன் பெரிய அப்பாடக்கர் பைக்கா? அந்த கால splendor மாதிரி?

  ReplyDelete
 8. நாஸ்தியான பதிவு!

  கிரிடிட் (ஙே!) கொடுத்ததற்கு நன்றி! ஒரு லைன் ச்சாட்டிற்கு அதிகமது... வர வர உங்க பெருந்தன்மைக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டிற்கு.

  சிம்ரன் கைல பாலா? ஒருவேளை ஏழரைப்பாலோ?!!!

  ReplyDelete
 9. அதென்ன பெங்களூர் யுவா... பெண்களூர் யுவா-ன்னு போட்டிருந்தா கொஞ்சம் குஜாலா இருந்திருக்கும்ல. உங்க சிக்னெட்சரை மிஸ் பண்ணாதீங்கோள்.

  ReplyDelete
 10. இரண்டு பதிவுகளையும் ஒரு வரி விடாமல் வாசித்தேன் ஜாக்கி. செம ஃப்ளோ. சூபப்ர் லேங்குவேஜ்.

  ReplyDelete
 11. Dear Jackie sir,

  எல்லா படைப்பும் அற்புதமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. அது நன்றாக இருந்தாலும் அவலட்சனமாக இருந்தாலும் அது எனது படைப்புதான்.. அதை அந்த நிலையில் ரசிப்பதையே நான் விரும்புகின்றேன்.........

  Romba Unmaiyana varigal.....Always straight forward approach.

  Your writing style have very good continuity and flow. interesting post Sir.

  Keep Rocking!!!!

  Best regards
  Poornima.M

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner