இந்த படம் ஆர் ரேட்டிங்க படம்... கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கானது...
==========
யோவ் தரையில பொம்பளை போல காலால் கோலம் போடாதே.... என்ன விஷயம் சொல்லு...??
சார் ரொம்ப நாள் ஆயிடுச்சி சார்...
முதல்ல சார் போட்டு பேசறதை நிறுத்து.. இளையராஜா சார் , மணிரத்னம் சார்ன்னு சொன்னா கூட கோச்சிக்கிறாங்க...
இல்லை சார்....
யோவ் நான் சார்னு சொல்லாதேன்னு சொல்லறேன் இல்லை...ஜாக்கின்னு சொல்லு....
இல்லை ஜாக்கி, ஹெல்மட் போடாம போனாலோ அல்லது இன்சுரன்ஸ் கட்ட மறந்துட்டாலோ டிராபிக் போலிஸ்கிட்ட மாட்டிகிட்ட அத்தனை சார் போடறோம்....இளையராஜா, மணிரத்னம் எல்லாம் பெரிய லெஜன்ட், அதனாலதான்.... உங்களை வேனா நான் ஜாக்கின்னு சொல்லுறேன்...பட் எனக்கு எப்பவுமே இளையராஜா சார்தான்...மணிரத்னம்சார்தான்...
சரி விஷயத்தை சொல்லு.....
ஒரு டெரர் படம் பார்த்து.... அதுக்கு ஏன்யா தலையை சொறியறே....
இல்லை சார் வீட்ல ஒய்ப் இல்லை நல்ல சவுண்ட் வச்சி பயந்துகிட்டே பார்க்கறது போல ஒரு படம் சொல்லுங்க சார்...
அதான் வீட்ல மனைவி இல்லை தானே திரும்ப எதுக்கு பயந்துகிட்டே ஒரு படம் பார்க்கனும்னு ஆசைபடறே..???
தினமும் ஒய்புக்கு கிட்ட பயந்து பயந்து பழக்கமாயிடுச்சி அதனாலதான்...
சரி ஹஸ்க்ன்னு ஒரு படம் வந்து இருக்கு..... அதை போய் பாரு...
ஜாக்கி கதையை பத்தி ஒரு சின்ன இண்ட்ரோ பிளிஸ்
கீழ எழுதி இருக்கேன் ...படிச்சிக்கோய்யா.....
================
HUSK-2011 படத்தின் கதை என்ன???
ஒரு கார்... அதுல நாலு பேர் ஆண்கள் ஒருத்தி மட்டும் பெண்.. என ஜந்து பேர் விடுமுறை கழிக்க அதில் ஒரு சொளக்காட்டு வழியாக பயணபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. அப்போது ரத்தசகதியாக காக்கைகள் அவர்கள் பயணபட்ட காரின் வின் ஷில்ட்டில் விழுங்கின்றது..
அதனால் சின்ன விபத்து ஏற்படுகின்றது... பயணபட்ட கார் எடுக்க முடியாமல் போகின்றது... உதவிக்கு சுற்றி பார்த்தால் வந்த வழியை சுற்றியும் சொளக்காடும், சொளக்காட்டு பொம்மையும்தான் இருக்கின்றது..
அந்த பேரும் எப்படி தப்பித்தார்கள் என்பதை வெண்திரையில் பார்க்கவும்..
============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
ஒரு ஒற்றை ரோடு
ஒரு கார்
ஐந்து பேர்
சோலைக்காடு
சோலைக்காட்டு பொம்மை
தனி வீடு
பயமுறுத்தும் காற்று சத்தம்...திடிர் ஸ்பெஷல் எபெக்ட் சவுண்ட்கள்...
இவைகள்தான் மொத்தக்கதையும்....
இப்போதைக்கு டிவிடிகடையின் ஹாட் சேல்ஸ் டிவிடி........ இந்த படம்தான்....
இவ்வளவுதான் சுவாரஸ்யமா??
யோவ் டேரர் படத்துல திரில்லர் படத்துல சுவாரஸ்யம் சொன்ன படம் பார்க்கும் இன்ரஸ்ட்டே இருக்காது....
====================
படக்குழுவினர் விபரம்...
Directed by Brett Simmons
Produced by Stephanie Caleb
Limor Diamant
Moshe Diamant
Courtney Solomon
Written by Brett Simmons
Starring Devon Graye
C. J. Thomason
Wes Chatham
Tammin Sursok
Ben Easter
Produced by Stephanie Caleb
Limor Diamant
Moshe Diamant
Courtney Solomon
Written by Brett Simmons
Starring Devon Graye
C. J. Thomason
Wes Chatham
Tammin Sursok
Ben Easter
Music by Bobby Tahouri
Studio After Dark Films
Lionsgate
Release date(s) 2011
Country United States
Language English
படத்தின் டிரைலர்...
டிரைலர் பார்த்துட்டு படம் பார்க்க யோசிங்க...
===================
பைனல்கிக்
இந்த படம் டைம்பாஸ் படம்தான்...ஆனால் செமையாக பயப்பட வைக்கும் காட்சி அமைப்புகள்...தனியா பார்க்க எனக்கு ஒரு மாதிரியா இருந்திச்சு...
இந்த படம் சென்னை டைம்ஸ் நவ் டிவிடி கடையில் கிடைக்கின்றது...
அலிபாய்.. செல்...9003184500..
========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...
=================
உங்க விமர்சனம் நல்லா இருக்கு சார்........ :-)
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteஇந்த படத்தை பார்த்ததில் இருந்து யாராவது துணி தைக்கும் மெஷினில் உட்கார்ந்து இருந்தாலே இந்த படத்தின் காட்சிகள் தான் நினைவுக்கு வருகிறது. இந்த படத்தை ஹிந்தியில் எடுக்க முயற்சிகள் நடப்பதாக கேள்வி.
இந்த படம் டிவிடி வந்து ரெண்டு மூணு மாசம் இருக்குமே? இதுவா இப்போ ஹாட் சேல்ஸ்?
கிங் விஸ்வா
LITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்!
இவ்வாறான படங்கள் இருந்தால் தொடர்ந்து பகிரவும் .
ReplyDeleteசமீபத்தில் Hello Ghost மற்றும் welcome to Dangmagol என்று இரண்டு கொரியா திரைப்படங்களை பார்த்தேன் நன்றாக இருந்தது. அண்ணாத்தே நீங்க சொன்னீங்கன்னு நேத்து இந்த படத்த பார்த்தேன். நன்றாக இருந்தது ஆனா சில விஷயங்கள் புரியவில்லை. evil dead சிறுவயதில் பார்த்தது போல ஒரு உணர்வு இருந்தது. (ஆனா இப்போ evil dead பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது)
ReplyDeleteஇன்னும் நல்ல படங்களை எதிர்பார்க்கிறேன்
ஜாக்கி அண்ணே ...இந்த படம் கொஞ்சம் ஓ.கே ரகம் தான்...நீங்க REC பாருங்க, ரெண்டு பார்ட்...ஸ்பானிய மொழி படம்...அள்ளு கழன்றும்...அதுக்கு உங்க விமர்சனத்த எதிர் பார்க்கிறேன்.
ReplyDelete- சிவன்