ANTIBODIES-2005/சைக்கோ ஓவியன்...ஜெர்மன் திரைபடம்.


 இந்த பதிவு.........வயதுக்கு வந்தோருக்கான பதிவு.........

சட்டையெல்லாம் கிழிந்த படி எண்ணெய் பார்க்காத தலையோடு மக்கள் அதிகம்புழங்கும் சாலைகளில் அனுமார் மற்றும் ஏசு படங்கள் வரைந்து அதில் விழும் சில்லரை காசுகளை வைத்த வயிறு கழுவும் ஓவியர்களை நான் பார்த்து இருக்கின்றேன்.

என் சொந்த ஊர் கடலூர் அரசு பொதுமருத்துவமனை எதிரில் உள்ள பொது சுவர்களில் வெறும் கரித்துண்டு மற்றும்  இலை தழைகள் மட்டுமே பயண்படுத்தி மிக அழகான இயற்கை காட்சிகளை ஒரு ஓவியர் வரைவார்... 


ஆனால் வரைந்து ஒரு வாரத்துக்கு மட்டும் அந்த ஓவிய சுவர் எதிரில் பீடி புகைத்தபடி துண்டை விரித்து நின்று இருப்பார்...வரும் பணத்தை வைத்து வயிற்றை கழுவிக்கொள்வார்...கலெக்ஷன் குறைந்தஉடன் அந்த சுவர் ஓவியங்களை நாட்டுக்கு அற்பணித்துவிட்டு கிளிம்பி விடுவார்....சில வருடங்கள் கழித்து மீண்டும் வருவார் ஓவியங்களை வரைவார்.. துண்டு விரிப்பார்.. ஒரு வாரத்துக்கு பிறகு நாட்டுக்கு அற்ப்பணிப்பார் அவர் ஒரு நாடோடி ஓவியர் அவர் பெயர் எனக்கு தெரியாது... எனது பால்ய வயதில் அவரை பற்றிய விபரம் அறிந்துக்கொள்ள எனக்கு தெரியவில்லை.

ஓவியம் வரைய வண்ணங்கள் ஓகே.. கரித்துண்டு, இலை தழை ஓக்கே... ஆனால் 13  பசங்களை கொடுரமாக கொன்று அவர்களுடைய ரத்தத்தில் எந்த லூசாவது ஓவியத்தை வரையுமா? அப்படி ஒரு கொடுர சைக்கோ ஓவியனை  பற்றிய கதைதான் இந்த  ஜெர்மன் நாட்டு படம்...

===============
ANTIBODIES-2005/ஆண்டிபாடிஸ்/ ஜெர்மன் படத்தின் கதை என்ன??

13 சிறுவர்களை கொடுரமாக கொன்று அவர்கள் ரத்தத்தில் ஓவியம் வரையும் ஏங்கெல் என்பவனை போலிஸ் கைது செய்கின்றது... அவன் சிறுவர்களை மட்டுமே கொலை செய்பவன்...ஆனால் புறநகர் பகுதியில் இடுப்புக்கு கீழே சிதைக்கபட்ட நிலையில்  லுசி என்ற 12 வயது சிறுமி கொலையாகின்றாள்...

அந்த புறநகரின்  போலிஸ்கார்ர் மைக்கேல்.. அவரின் மகன் இறந்து போன சிறுமி லுசியின் நண்பன்....லுசியை யார் கொலை செய்து இருப்பார்கள் என்ற உண்மை தெரியாமல் இருக்கின்றது... மைக்கேல் இந்த கொடுர கொலைகாரனிடம் லூசியை நீ கொலை செய்தாயா? என்று கேட்கும் போது நான் சிறுவர்களை மட்டுமே கொல்லுவேன் என்று பாலிசி பேசுகின்றான்.. அப்படியானால் பண்ணிரண்டு வயது லூசியை கொன்றது யார் என்ற கேள்விக்கு விடையை வெண்திரையில் காணுங்கள்..
=================================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

இந்த படம் ஒரு கிரைம் திரில்லர் படம்...முடிவை யூகிப்பது கடினம்.. நல்ல பரபரப்பான திரைக்கதை...

ஹானிபால் லெக்சர் மற்றும் சைலன்ஸ் அப் தி லேம்ப் படங்களை போன்று  சில காட்சி அமைப்புகள் இருந்தாலும்... அந்த கிளைமாக்ஸ் அதகளம்தான்..

சந்தேகத்துக்கு  உரிய ஆட்கள் என்பதை கட்டம் கட்டி காட்டும் திரைக்கதை.. இவனா? இவனா? என்று பயணபடுவது நல்லயுக்தி....

 மைக்கேல் தன் மீதும் தன் மகன் மீதும் பழி வந்து விடும் என்ற கவலையில் இருக்கும் போது ஒரு கடைக்கார பெண்ணிடம்  முரட்டுதனமாக செக்ஸ் வைத்துக்கொள்வதும்... அந்த நேரத்து மனச்சோர்வில் இருந்து தப்பிப்பது என்பதாக  காட்சி இருந்தாலும், பாடி லாங்வேஜ்.. அந்த சின்ன பெண்ணை சிதைத்தவன்  இவனாக கூட இருப்பலாம் என்பதான  காட்சி அருமை..

மிக மெதுவாக நகரும் திரைக்கதையாக இருந்தாலும் அந்த கொலைக்காரன் யார் என்ற படபடப்பு குறையாமல் பார்த்துக்கொண்டது இந்த படத்தின் வெற்றி...

இந்த படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு இருக்கின்றது... 

அந்த சிறுமி கொலையை விவரிக்க விஷுவலாக அந்த காட்சியை சிறையபடுத்த அந்த கிரேன்ஷாட் சூப்பர்... 


இயக்குனர் Christian Alvart ரசனைகாரர் என்பதுகாட்சி கோர்வைகளில் தெரிகின்றது...

என்னதான் நடிப்பு என்றாலும் ஏங்கெல் பாத்திரத்தில் நடித்தவர் முழு நிர்வாணமாக போலிஸ் இடம் இருந்து தப்பிக்க தரையில் தவழும் காட்சியில் அவர் சமாச்சாரம் தரையில் படும் பாட்டை நினைத்தால் நமக்கு உடம்பு கூசுகின்றது... 

=======================
படக்குழுவினர் விபரம் 
Directed by     Christian Alvart
Produced by     Theo Baltz
Boris Schönfelder



Written by     Christian Alvart
Starring     Norman Reedus
Wotan Wilke Möhring
André Hennicke
Music by     Michl Britsch
Cinematography     Hagen Bogdanski
Editing by     Philipp Stahl
Studio     Medienkontor Movie GmbH
Kinowelt Filmroduktion GmbH
Distributed by     Kinowelt Filmverleih
Release date(s)     07 July 2005
Running time     127 minutes
Country     Germany
Language     German
Budget     €1,900,000

==========================
படத்தின் டிரைலர்...


========================



பைனல்கிக்...
ஒரு பரபரப்பான இன்வஸ்ட்டிகேட்டிங் திரைப்படம் பார்க்க இந்த படத்தை தாரளமாக பார்க்கலாம்..
இந்த படம் அவசியம்.. பார்க்கவேண்டியதிரைபடம்

இந்தபடம் சென்னை மூவீஸ்நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது..அலிபாய் செல்..9003184500

=========

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

5 comments:

  1. அந்த மான்க்ள் வரும் காட்சி மனதில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது இல்லையா ஜாக்கி?

    ReplyDelete
  2. http://www.torrentreactor.net/torrents/3413167/ANTIBODIES%2FGerman-Thriller%2FEnglish-Subs

    உங்களின் விமர்சனம் பார்க்க தூண்டுகின்றது.. மேலுள்ள Torrent லும் உள்ளது.. இதோ பதிவிறக்கி கொண்டிருக்கின்றேன். நன்றிகள் சார்

    ReplyDelete
  3. விரைவில் 1000 பதிவுகள் எட்டபோகும் ஜாக்கி அண்ணாச்சிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. your way of writing is catche... :-) Keep the same ever...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner