IN TO THE WILD-(2007)உலகசினிமா/அமெரிக்கா/மனிதர் மீதான நம்பிக்கையில் ஒரு பயணம்.



யுஜி அல்லது பிஜி படித்து வீட்டு நீங்கள் என்ன செய்வீர்கள்.. வேற என்ன செய்வாங்க நல்ல சாப்ட்வேர் கம்பெனியில் சேர்ந்து கைநிறைய சம்பாதிச்சி,
விக்கென்ட் பார்ட்டி அட்டென்ட் செய்த எதாவது ஒரு நல்ல பணக்கார பிகரா பார்த்து லவ் பண்ணி வாழ்க்கையில் செட்டில் ஆவேன் 

இப்படித்தான் நம்மில் பலரது வாழ்க்கை இருக்கின்றது.. ஆனால் இதில் இருந்து வேறுபட்டு சேலன்சிங்காக ஒரு வாழ்க்கை வாழ நாம் யாருமே முன் வருவதில்லை.. காரணம் என்ன??

வாழ்க்கை மீதான பயம்... ஒரே ஒருமுறை கிடைக்கும்  இந்தபூவுலக வாழ்க்கையில், நீங்கள் நான் உட்பட யாரும் ரிஸ்க் எடுக்க போவதில்லை.. ஒரு இருபது ஜென்மம் உங்களுக்கு இருக்கின்றது என்று கடவுள்  உத்ரவாதம் கொடுக்கும் பட்சத்தில் ஆசைபட்ட எல்லா வாழ்க்கையும் வாழ்ந்து பார்த்து விட ஆசை கொள்ளலாம்... காரணம் நமக்கு சாய்ஸ் இருக்கின்றது...

ஆனால் இருக்கும் ஒரு வாழ்க்கையை ரிஸ்க் எடுத்து வாழவும், தான் நினைத்ததை சாதிக்கும் வரை  பின்வாங்காமல், கடைசிவரை காம்பரமைஸ் செய்து கொள்ளாமல் அது உயிரே போனாலும் அதை பற்றி கவலைபடாமல்,  வாழும் தப்பி பிழைத்த சில விதைகள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றன... அப்படிப்ப்ட்ட ஒரு விதையை பற்றிய கதைதான் இது..


தலைவரே அடிச்ச குவாட்டரே எறங்கிடுச்சி.. நீ  இன்னதான் சொல்லவரே.. எனக்கு ஒன்னியும் புரியலை... எனக்கும் புரியறா போல சொல்லு தலைவா??

ஓகே....

இப்ப உங்க புள்ள சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் நல்ல மதிப்பெண் பெற்று கிராஜுவேஷன் வாங்கி வெளியே வந்ததும் நான் எவரெஸ்ட் சிகரம் ஏறி போய் இரண்டு வாரம் தங்கி வாழ்ந்து விட்டு வரவேண்டும் என்று சொல்கின்றான்.. உங்கள் 20 வயது பையன்.. 


அட அதுக்கு என்ன தம்பி பேஷா போயிட்டு வாயேன்.. என்று எதாவது ஒரு பிரபல பிளைட்டில் ஸ்ரீ நகருக்கு ஒரு சீட் புக் பண்ணி கொடுத்து, ஒரு இரண்டு லட்சம் கையில் பணம் கொடுத்து,20 லட்சம் அளவுக்கு செலவுக்குன்னு கிரேடிட் கார்டுல போட்டு குடுத்தா அதை எல்லாத்தையும் தூக்கி போட்டு விட்டு கையில் பத்து பைசா எடுத்துக்காம எவரெஸ்ட் சிகரத்து மேல ஏறுவது சாத்தியமா??


அப்படி ஒரு பையன் அமெரிக்காவுல 1990ல  ஜார்ஜியாவில் இருந்து இரண்டு வருடங்கள் கையில்  பத்து பைசா இல்லாமல் அலஸ்க்கா மலை சிகரத்தை அடையும் ஒருவனின் உண்மைகதைதான் இந்த படம்...

 ===============

 IN TO THE WILD-2007உலகசினிமா/அமெரிக்கா/ படத்தின் கதை என்ன??

நமது , சமுக வாழ்க்கை முறை, பணத்துக்காக எதையும் செய்யும் மனித சுயநலம்,குடும்ப உறவுகள், இவைகள் மேல் எந்த பற்றும் இல்லாமல் இலக்கில்லாமல் பயணப்பட்டு கிடைத்த இடத்தில் உண்டு மகிழ்ந்து  அந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு வர வேண்டும் என்று Christopher McCandless (Emile Hirsch) என்பவன் புறப்படுகின்றான்...

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் 1990ல் இருந்து கையில் அப்பா அம்மா கொடுத்த  பணத்தை டொனேஷன் கொடுத்து விட்டு, மீதம் இருந்த பணத்தை எறித்து விட்டு தன் பயணத்தை தொடங்கி 1992 ல் சரியா இரண்டு வருடங்கள் பயணித்து நார்த் அமெரிக்காவில்  இருக்கும் அலஸ்க்கா மலைக்கு வருகின்றான்... இந்த பைசா இல்லாத பயணத்தில் அவன் சந்தித்த மனிதர்கள் மற்றும்  வாழ்க்கை பாடங்கள்தாள் இந்த படம்...


 இந்த அறிவு முதிர்ச்சி ஒரு 45 வயதுக்கு மேல் கிரிஸ்க்கு வந்து இருந்தால் எந்த பிரச்சனையும்  இல்லை....22 வயதில் வந்தது பிரச்சனை... பிரச்சனை என்ற வார்த்தையே நமக்குதான் கிரிஸ்டோபருக்கு இல்லை...லிப்ட் மற்றும் கிடைத்த பொருளை உண்டு மகிழ்ந்து , கிடைத்த இடத்தில் வேலை செய்து பல காட்டு பயணம் மற்றும் திரில்லான காட்டாற்று பயணம்  எல்லாம் செய்து, அவன் அலாஸ்கா வந்து திரும்ப அவன் வீட்டுக்கு சென்றானா? என்பதே கதை.....
இந்த இரண்டு வருடத்தில் கிரிஸ்டோபரிடம் பணம் என்று ஒரு பைசா கூட அவனிடத்தில் இல்லை, சிகரெட் இல்லை, செல்போன் இல்லை., தான் யார் என்று சுயத்தை சொல்லும் ஐடி கார்டு போன்றவற்றையும் புதைத்து விட்டுதான் கிளம்புகின்றான்... காரணம்  அதை வைத்து தனது பெற்றோர் தேடினால் தன் பயணம் தடைபடும் என்பதால் பெயர் மாற்றிக்கொண்டு தன் சுயத்தை இழந்து அல்லது வேண்டும் என்றே, தொலைத்து விட்டு ஒரு புதியமனிதனாய் பயணிக்கின்றான்...


வழியில் அவனுக்கு ஒரு காதல்., ஒரு ஜிப்சி தம்பதிகளின் பழக்கம், ஒரு வயதான மனிதரிடம் ஏற்படும் சினேகம் என்று அவன் கடந்து அல்ஸ்காவுக்கு வந்தாலும் அவன் திரும்புவதில் ஏற்படும் சிக்கல்கள் நெஞ்சை கலங்க வைக்கும் அது என்ன...?? என்பதை படத்தில் பாருங்கள்..

===================================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

இந்த படம் முழுக்க முழுக்க உண்மை கதை... Christopher McCandless என்ற இளைஞனின் வாழ்வில் நடந்த உண்மை கதை இது.. அந்த இளைஞனின் பயண அனுபவங்களை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்து இருக்க, அந்த குறிப்பேட்டை Jon Krakauer என்ற எழுத்தாளர் இன் டூ த வேர்ல்டு என்று புததகமாக எழுத, அது சக்கை போடு போட...நம்ம சீன் பென் அதாம்பா ஐயம்சாம்ல் நடித்தாரே?? இன்னும் புரியலையா? விக்ரம் நடித்து வெளிவரும் தெயவ்மகன் படத்துக்கு மூலம் ஐயம் சாம்தான்... அந்த சீன் பெண் தயாரித்து இயக்கிய திரைப்படம்தான்...இன் டூ த வைல்டு

உலகத்தில் சிறந்த 500 படங்கள் பட்டியலில் 473வது இடத்தை இந்த படம் பெற்று இருக்கின்றது...

முதலில் இயக்குனர் சீன் பென், மற்றும் ஒளிப்பதிவாளர்     Eric Gautier மற்றும் நடிகர் Emile Hirsch மூவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்... இது போலான காவியத்தை செல்லுலாய்டில் பதிய வைத்து கொடுத்தமைக்கு..... யாரோ ஒருவனின் வாழ்க்கையின் வலி, வேதனை, சந்தோஷத்தை நாங்கள் அனுபவக்க  இந்த படம் காரணம்   அல்லவா??

கையில் பணம் இல்லாமல் ஒரு கோதுமை  விளைச்சல் நிலத்தில் வேலை செய்து, அதாவது வேலை தெரியவில்லை என்றாலும் அதனை கற்றுக்கொண்டு வேலை செய்து, கொஞ்சம் பணம் சேர்த்து தன் பயணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்கி பயணபடுவதும்... சிறப்பு...

உலகில் நம்மை போல மனிதர்கள் இருக்கும் போது எதுக்கு பயம் என்று வாழில் பயணப்படும் சக நண்பர்கள் அத்தனை பேரிடமும் நட்பு பாராட்டி, நேசித்து பயணபடும் கிரிஸ்டோபர் கேரக்டர் ஒரு அசத்தல் கேரக்டர்தான்.....

மனிதர்கள் குறைவாக வாழும் இடத்தையே அதிகம் தேர்ந்து எடுத்து பயணபடுவதும், பொதுவாக இயற்கை பயணிக்கும் வழியாக பயணிப்பதும் சிறப்பு..... இப்படி ஒரு வாழ்க்கையை நாடும் வாழ வேண்டும் என்ற ஆசையை உண்டு பண்ணுகின்றது..

காட்டாற்றில்  படகில் வரும் கிரிஸ்க்கு கிடைக்கும் புது ஜிப்சி தம்பதிகள்... அவனிடம் சினேகம் கொள்வதும், தன் காதலன் எதிரில்  காதலி  தன்  வெள்ளை பனியனை கழட்டி தனது மார்பகத்தை காட்டியபடி படகில் இருந்து இறங்குபவனுக்கு முத்தம் கொடுப்பதை அந்த ஊரில் மட்டுமே சகஜமாக காண முடியும்....ஆனால் உலகில் எல்லவற்றையும் நேசித்து எதன் மேலும் பற்று வைக்கவில்லை என்றால் அப்படி ஒரு மனிநிலைநிச்சயம் வரும் என்பது என் எண்ணம்....

இந்த படம் நான் லீனியர்  திரைக்கதையில் சொல்லி இருக்கின்றார்கள்.. முதலில் அவனிடம் நிறைய பொருட்களை காட்டி விட்டு, காசு இல்லாதவனிடம் இவைகள் எப்படி வந்தன என்று நாம் நினைக்கும் போது... இப்படி இப்படி மனிதர்களிடம் பழகி அவர்கள் அளித்த பொருட்கள் என்று காண்பிக்கும் அந்த காட்சிகள் சிறப்பானவை....

புத்தகங்கள் விற்கும் ஜிப்சி தம்பதிகள் கிரிஸ்மேல் வைக்கும் பாசமும்...அவர்கள்  காரவேனுக்கு எதிர்கேரவேனில் இருக்கும டீன் ஏஜ்  பெண்ணின்காதலும்... அந்த காதலையும் அவளின் கிரிஸ் மீதான காமத்தையும் அதனை கிரிஸ் மிக நாசூக்கா தவிர்ப்தையும் மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்.. அந்த காதல்  என்னில் நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது.. அந்த பெண் அவன் பிரிவுக்கு காட்டும் எக்ஸ் பிரஷன் சான்சேஇல்லை.. அந்த பெண்  மனதில் நிற்கின்றார்.

ஒரு மில்லட்ரி ரிட்டேயர்டு வயதானவரோடு ஏற்படும் நட்பும் அவர்  எவ்வளவோ எடுத்து சொல்லியும் அலஸ்கா போக ஒற்றைகாலில் கிரிஸ் நிற்க, மறுநாள் அவன் அலஸ்காவில் தங்க தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பதும் அவனை விடியலில் டிராப் செய்து விட்டு எனக்கு பேரனாக வந்து விடு என்று கண்ணீர் விட அலஸ்காவில் இருந்து நான் வந்ததும் அதை பற்றி பேசலாம்  என்பதும் அற்புதமான காட்சிகள்...

அந்த பெரியவரும் கிருஸ்ம், மலை உச்சியில் உட்கார்ந்து  அவனுக்கு அட்வைஸ் கொடுத்துக்கொண்டு இருப்பார்.. அப்போது மேக மூட்டத்துடன் டல் லைட்டில் உட்கார்ந்து இருப்பார்கள்..  கடவுளை நீ காதலித்தால் அது அவருக்கு தெரிந்தால் உனக்கு ஒளிகிடக்கும் என்று சொல்ல சன்லைட் மேகத்தில் இருந்து ஓப்பன் ஆக.. ஹோலி ஷிட் என்று அந்த லைட் ஓப்பனை கிரிஸ் சொல்ல நான் அந்த லாங்வேஜில் சொல்லிவில்லை என்று கிழவர் மிரண்டு, பின் சூழ்நிலை புரிந்து சிரிப்பது கவிதை..

அலஸ்காவில் ஒரு கைவிடபட்ட  சின்ன பேருந்தில் அவன் தங்குவதாக காட்சி... ஆனால் ஒரிஜினல் பேருந்தில் படபடிப்பு செய்ய இடையூறு இருந்த காரணத்தால் இரண்டு பஸ் செட் போட்டார்கள்..


கிரிஸ்  அந்த பஸ்சுக்கு போகும் போது சுற்றிலும் பனியில் இருப்பதும் சிலவாரங்களில் அந்த பனி கரைவதும் அங்கு பெரிய தாவரங்கள் இருப்பதும் அதுவரை பனியில் முழ்கி இருப்பதான காட்சி சிறப்பு...

சாப்பாட்டுக்கு அங்கு இருக்கும் காட்டு விலங்குகள்தான் அவனுக்கு ஆதாரம்..ஒரு முறை அம்மாவோடு இருக்கும் மாட்டை அவன் கொல்லாமல் விடுவது மனிதஈரத்தையும், பசி உயிர்  போகின்றது ஏதாவது விலங்கு இருந்தால் பரவாயில்லை என்று எந்த விலங்கும் கண்ணில் படாமல் இருப்பதை பார்த்து கத்தி கதறவதும் அழகு...


ஒரு காட்டெருமையை சாகடித்து விட்டு அதை சமைக்க முடியாமல் தவிப்பதும் அதனை அறுத்து  அந்த கரியை பதப்படுத்தினால் அதில் புழு போன்றவை வந்து விடுவதும், அதை  பார்த்து வெறுத்து போவதும் சிறப்பு....


சரி வீட்டுக்கு திரும்பலாம் என்று நினைக்கும் போது அந்த காற்று ஆற்று வெள்ளம் தடுப்பதும், கிரிஸ் உடல் மெலிவதை பெல்ட் மூலம் காட்சி படுத்தி இருப்பதும், பசியில் பிளாக் அண்டு ஒயிட் புத்தகத்தில் இருந்த படத்தை தாவரத்தை தின்று விட, அதே தாவரம் கலர் புத்தகத்தில் பாத்தால் அது விஷ செடி என்று தெரிந்து பதறுவதும்... உடல் மெலிந்து எழுந்து இருக்க கூட முடியாமல் வெளியே வந்து  நிற்கும்  போது ஒரு கரடி அப்படியே  கிரிஸ்ன்னு ஆண்குறி எதிரில் முகத்தை வைத்து ஒரு பெரிய மூச்சை விட்டு விட்டு அந்த இடத்தை  கடக்கும்  போது, ஏதோ நம்ம சமாச்சாரமே தப்பிச்சது போன்ற காட்சி அது..

இந்த வாழ்க்கை படம் கிரிஸ்க்கு கற்றுதந்தது என்னவென்றால் that true happiness can only be found when shared  என்று அந்த வாக்கியத்தை கிரிஸ் தன் குறிப்பேட்டில் அதுவும் அந்த கடைசி வார்த்தைகள் எழுதும் போதும் அது காட்சியாக்கப்பட்ட விதமும் மனதை கலங்கவைப்பவை..

பசியில் உதடு காய்ந்து ஓட்டை பேருந்தின் ஜன்னல் வழியாக மேகத்தை பார்க்க அப்படியே  கேமரா பின்னாடியே அந்தரத்துக்கு சுற்றியபடியே செல்லும் போது கடைசியாக ஒளிக்கும் அந்த மியூசிக் சான்சே இல்லை....


நாம் நிறைய சாதித்து விட்டோம் என்று சென்னை ஷுட்டிங்களில் தாம்தூம் என்று குதிக்கும் கொம்பு முளைத்த சில கேமராமேன்கள் நன்கு கவனிக்கவும், கொம்பு முளைத்த சில கேமரமேன்கள் இந்த படத்தை பார்க்க வேண்டுகின்றேன்..




கடைசியாக இது டெவலப் செய்யாத பிலிம் ரோலில் இருந்து பிரின்ட் போட்ட கிரிஸ் படம் இது என்று காட்டும் போது கண்கலங்குவது நிஜம்...

இந்த காவியத்தை  திரைக்கதை எழுதி இயக்கி தாயாரித்த Sean Pennக்கு கோடி கோடி நன்றிகள்..

எனக்கு தெரிந்து ஆங்கில அறிவை வைத்து , இந்த படத்தை இப்படி சிலாகிக்கின்றேன என்றால் மெத்த படித்தவர்களளுக்கு.. இந்தபடம் இன்னும் நெகிழ்ச்சியை கொடுக்கும்  என்று உறுதியாக சொல்லுகின்றேனன்..


===============================
இந்த படம் வாங்கி குவித்த விருதுகள்..இந்த விருதுகள் சொல்லும் இந்த படத்தின் தரத்தை....
 65th Golden Globe Awards[17]
        Best Original Song – Motion Picture ("Guaranteed")

    Gotham Awards
        Best Feature Film

    Mill Valley Film Festival
        Best Actor (Emile Hirsch)

    Palm Springs International Film Festival
        Director of the Year Award (Sean Penn)
        Rising Star Award Actor (Emile Hirsch)

  

    National Board of Review
        Breakthrough Performance – Male (Emile Hirsch)

    Rome Film Festival
        Jury Award (William Pohlad), (Art Linson), (Sean Penn)

    São Paulo International Film Festival
        Best Foreign Language Film (Sean Penn)

    Italian Online Movie Awards
        Best Motion Picture Of The Year
        Best Motion Picture soundtrack

[edit] Nominations

    80th Academy Awards[18]
        Best Supporting Actor (Hal Holbrook)
        Best Film Editing (Jay Cassidy)

    65th Golden Globe Awards[19]
        Best Original Score – Motion Picture (Michael Brook, Kaki King, Eddie Vedder)

    American Cinema Editors
        Best Edited Feature Film – Dramatic (Jay Cassidy)

    Broadcast Film Critics Association
        Best Film
        Best Actor (Emile Hirsch)
        Best Supporting Actor (Hal Holbrook)
        Best Supporting Actress (Catherine Keener)
        Best Director (Sean Penn)
        Best Writer (Sean Penn)
        Best Song ("Guaranteed")

    Chicago Film Critics Association Awards
        Best Picture
        Best Screenplay – Adapted (Sean Penn)
        Best Supporting Actor (Hal Holbrook)

    Directors Guild of America Awards
        Best Director – Film (Sean Penn)

    Cinema Audio Society
        Outstanding Achievement in Sound Mixing for Motion Pictures

  

    Costume Designers Guild Awards
        Excellence in Costume Design for Film – Contemporary

    Film Critics Circle of Australia Awards
        Best Foreign Film – English Language (Sean Penn)

    Grammy Awards
        Best Song Written for Motion Picture, Television or Other Visual Media ("Guaranteed")

    Gotham Awards
        Breakthrough Award (Emile Hirsch)

    Satellite Awards
        Best Original Song ("Rise")

    Screen Actors Guild Awards
        Outstanding Performance by a Cast in a Motion Picture
        Outstanding Performance by a Male Actor in a Leading Role (Emile Hirsch)
        Outstanding Performance by a Male Actor in a Supporting Role (Hal Holbrook)
        Outstanding Performance by a Female Actor in a Supporting Role (Catherine Keener)

    USC Scripter Award
        USC Scripter Award (Sean Penn) (screenwriter), (Jon Krakauer) (author)

    Writers Guild of America Awards
        Best Adapted Screenplay (Sean Penn)
=========
படக்குழுவினர் விபரம்
Directed by     Sean Penn
Produced by     Sean Penn
Art Linson
William Pohlad
Written by     Sean Penn
Based on     Into the Wild by
Jon Krakauer
Narrated by     Jena Malone
Sharon Olds
Carine McCandless
Starring     Emile Hirsch
Marcia Gay Harden
William Hurt
Jena Malone
Catherine Keener
Vince Vaughn
Kristen Stewart
Hal Holbrook
Music by     Michael Brook
Kaki King
Eddie Vedder
Canned Heat
Cinematography     Eric Gautier
Editing by     Jay Cassidy
Studio     Square One C.I.H.
Linson Film
River Road Entertainment[1]
Distributed by     Paramount Vantage
Release date(s)     September 21, 2007
Running time     148 minutes
Country     United States
Language     English
Budget     $15 million[2]
Gross revenue     $56,255,142
==============
படத்தின் டிரைலர்

==================
பைனல்கிக்..
இந்த படம் கண்டிப்பாக பார்த்தே பாத்தே பாத்தே பாத்தே பாத்தே பாத்தேதீரவேண்டியபடம்... அவசியம் பாருங்கள்...முதலில் இந்த படத்தின் போஸ்டர் பார்த்து விட்டு இதுவும் ஒரு மென்சோகபடம் என்று நினைத்து பல நாள் ஒதுக்கி வைத்து விட்டேன் நேற்று இரவு என்னதான் இதில் இருக்கின்றது என்று பார்த்து விடுவோம் என்று பார்க்கும் போது மனதில் தைத்த இந்த படம் படம் முடிந்து நான் தூங்க வேகு நேரம் ஆனாது... கிரிஸ் நினைவில் வந்து கொண்டே இருந்தான்.. ஆனால் படம் முடியும் போது ஓத்தா இன்னாமயித்துக்கு இப்படி தனியா வந்து அவஸ்தைபடனும் என்று எண்ணம் தோன்றினாலும் அந்த வித்யாசமான யோசிப்பும் செயல்பாடும்தான்.. கிரிஸ் என்றஅமேரிக்க ஜார்ஜியாவில் பிறந்தவனை பற்றி சென்னையில் உட்கார்ந்து அவன் வாழ்க்கை பற்றி சிலாகித்து அவனுக்காக வருத்தபட முடிகின்றது... ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு நான் எழுதிய படம் இது..

பீல்குட் மூவி எழுதி ரொம்ப நாள் ஆயிடுச்சி ஜாக்கி என்று வருத்தபட்ட நண்பர் பார்த்திக்கு இந்த விமர்சனம் சமர்பணம்.

இந்த படம் , சென்னை, அலிபாய்,மூவிஸ்நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது..9003184500
============

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...
 

=================

7 comments:

  1. Dear Jackie Sir,

    Wonderful review of the movie. You did a great JOB!!!

    Hero is too much dedicated to this movie. His body language and expressions were chanceless. The girl who loves Chris, is Kristen stewart. She is famous heroine in Twilight series.

    I have seen this movie before 6 months but still now I couldnot forget.

    Your comments are exactly correct.

    WELL DONE SIR

    Cheers
    Poornima M

    ReplyDelete
  2. Hi Jackie....exactly what I felt when I saw the movie. Keep it up.

    ReplyDelete
  3. //that true happiness can only be found when shared என்று அந்த வாக்கியத்தை கிரிஸ் தன் குறிப்பேட்டில் அதுவும் அந்த கடைசி வார்த்தைகள் எழுதும் போதும் அது காட்சியாக்கப்பட்ட விதமும் மனதை கலங்கவைப்பவை.//
    பகிர்ந்ததற்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஜாக்கி

    ReplyDelete
  4. சார் நான்கூட இந்த படத்தை ஒரு மாசத்துக்கு முன்னாடி பார்த்திருக்கேன்... படம் முடிஞ்சி ஒரு அரைமனிநேரமாவது கிரிஸ் என் கன்ன விட்டு போகல... இருந்தாலும் உங்க பதிவை படிக்கும்போதுகூட அந்த படத்தோட பீல் மற்றும் கிரிஸ் தெரியுறான்..

    நீங்க ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல அருமையான விமர்சனம்....

    நன்றி
    ஜீவா

    ReplyDelete
  5. அன்புள்ள சேகர் அவர்களுக்கு,

    எனது பெயர்: மெல்வின். நான் உங்கள் ப்ளோக்கின் நீண்ட நாள் வாசகர். உங்களுடைய விமர்சனங்கள் எல்லாம் அருமை. நீங்கள் ஒரு நல்ல தரமான 100 சினிமா தலைப்புகளை தொகுத்து கொடுத்தல் மிக நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன். நன்றி உங்களின் பணிக்கு.

    உங்கள் வாசகர்,

    டே. மெல்வின் சார்லஸ் ராஜா

    ReplyDelete
  6. //ஆனால் படம் முடியும் போது ஓத்தா இன்னாமயித்துக்கு இப்படி தனியா வந்து அவஸ்தைபடனும் என்று எண்ணம்//

    எண்ணுக்கும் இதே எண்ணம் வந்தது .இந்த படம் பார்த்த பிறகு என்னடா வாழ்க்கை இது என்று நொந்து கொள்ளவதே இல்லை .நமக்கு எல்லாம் கிடைத்திருக்கிறது என்ற எண்ணமே இருந்தது
    எந்த பொருளையும்(குறிப்பாக தண்ணீரை) வீண் செய்வதே இல்லை

    ReplyDelete
  7. jackie sir,
    thro browsing i found ur site yesterday only.so nice,i dont have words to praise .i went to movies now shop and old ur name,he gave good respect and was ve helpful.
    Thank u,
    balaji

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner