மனிதாபிமானம் கிலோ என்னவிலை என்று கேட்கும் சென்னை...........

 
ஒரு குறும்படம் எடுக்க  நினைத்துக்கொண்டு இருந்தேன்... ஆனால் அதுக்கு ஒரு புரோட்யூசர் தேவை  என்பதால் அந்த படம் கிடப்பில் கிடைக்கின்றது. கான்செப்ட் இதுதான்..கிராம் மற்றும் பெருநகரங்களில் விபத்தில்சிக்குபவர்களுக்கு எப்படி முதல் உதவி கிடைக்கின்றது? என்பதை விளக்கும் கான்செப்ட் அது...

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பலர் உதவி செய்வது இல்லை...அந்த இடத்தை கடந்து போவதிலும், நேரத்தை மிச்சம் செய்வதிலும் பலர் முனைப்பு காட்டிக்கொண்டு அந்த இடத்தை எளிதில் கடந்து விடுகின்றார்கள்.

நிறைய நெடுஞ்சாலை விபத்துகளில் நான் உதவி கிடைத்து விட்டதா என்று உறுதிபடுத்திக் கொண்டு அந்த இடத்தை கடந்து நான் பயணத்தை மேற்க்கொண்டு இருக்கின்றேன்...

பட் அப்படி நிறுத்தி உதவி ஏன் செய்வதில்லை என்று காரணம் கேட்டால்... எனக்கு ரத்த்த்தை பார்த்தால் தலை சுத்தும், நம்ம நேரம் மிச்சமாகும் என்று மொண்ணை காரணங்களை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்... ஆனால் நெடுஞ்சாலையில் பயணிக்கும் லாரிகாரர்கள்தான் நிறைய உதவி செய்கின்றார்கள்..சரி இதெல்லாம் பெரிய விபத்துகள்...

சென்னை பெருநகரங்களில் நடக்கும் பல விபத்துகளில் முக்க்கியமாக பீக் அவரில் பயணிக்கு போது எந்த இரு சக்கர வாகன ஓட்டியாவது  பிரேக் அடித்தோ அல்லது மணலில் சிக்கியோ விழுந்து விட்டால் அவருக்கு என்ன ஆயிற்று என்று கூட யாரும் வாகனத்தை நிறுத்தி பார்ப்பதில்லை...

ரோட்டில் திடிர் பள்ளம் பார்த்தால் வேகத்தை குறைக்காமல் விலகி போவோமே... அது போல விழுந்தவனை பற்றி கொஞ்சமும் கவலைபடாமல் விலகி செல்கின்றனர்.... இருசக்கர வாகனத்தில் இருந்து  ரோட்டில் அவன் மேல் வாகனம் விழுந்து கிடந்தாலும் யாரும் தூக்கிவிட வருவதில்லை....

முன்பு எல்லாம் இருசக்கர வாகன ஓட்டி விழுந்துவிட்டால் பின்னால் வருபவர்கள் வாகனத்தை நிறுத்தி... முதலில் வாகன ஓட்டியை தூக்கி சாலைக்கு ஓரமாக உட்காரவைத்து விட்டு, விழுந்த வாகனத்தை தூக்கி நிறுத்தி, வாகன ஓட்டியின் ரோட்டில் சிதறிகிடக்கும் பொருட்களை செகரித்து, அவரிடம் கொடுத்துவிட்டு, அவருக்கு தண்ணியோ, சோடாவோ வாங்கி கொடுத்து விட்டு, அவரால் பயணிக்க முடியவில்லை என்றார் வண்டியை ஓரத்தில் இருக்கும் ஏதாவது கடையில் பார்த்துக்க  சொல்லிவிட்டு, விபத்துக்குள்ளானவரை ஆட்டோவில் ஏற்ற அனுப்பி வைப்பது வரை எல்லா உதவிகளும் நடக்கும்....


ஆனால் இன்று அப்படி இல்லை... விழுந்து கிடப்பவனின் மேல் வண்டிகிடந்தாலும் அவன் கால் சைலென்சரில் மாட்டிக்கொண்டு கிடந்தாலும் தூக்கி விட ஆட்கள் மெத்தனம் காட்டுகின்றார்கள்...


எனது மாணவன் ஒருவன்  பல்சரில் ஓஎம்ஆர் ரோட்டில் பயணித்து காலேஜிக்கு வந்து கொண்டு இருந்தான்..அக்செஞ்சர்க்கு முன் இருக்கும் பெட்ரோல் பங்கில் டீசல் போட ஒரு தனியார் பேருந்து சிக்னல் செய்யாமல் வளைய, கண்ட்ரோல் பண்ணி இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டான்.. 

ஆனாலும் பேருந்து வளைய வளைய அவன் வாகனத்தில் ஏறி கிழே தள்ளுகின்றது.. ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து இருந்த பெண்கள் யாரும் பேருந்தில் இருக்கும் டிரைவரிடம் கத்தி எச்சரிக்கை செய்யவில்லையாம்... பேருந்து ஓட்டுனர் ரிவர்யூ மிர்ரர்ரில் பார்த்து வாகனத்தை நிறுத்தி இருக்கின்றார்... அதற்குள் வாகனத்தின் மேல் ஏறி மாணவனின் கால் மாட்டி கொண்டு ரத்தம் வர ஆரம்பித்து விட்டது...

விபத்து என்று தெரிந்ததும் பேருந்தில் வந்த ஊழியர்கள் அப்படியே இறங்கி போய் கொண்டு இருக்கின்ற்ர்களாம்...

ஜாக்கிசார் எந்த மூதேவியும் எனக்கு உதவி செய்யவில்லை என்று சொல்லி சொல்லி ஆத்து ஆத்து போனான்...

முன்பு எல்லாம் பெண்கள் விழுந்தால் ஓடிப்போய் தூக்குவார்கள்.. இப்போது அப்படி இல்லைவே இல்லை....இரண்டு தினங்களுக்கு முன்பு மாம்பலம் எஸ்ஆர்எம் மருத்துவமனை எதிரில் ஒரு கார்காரன், ஒரு ஸ்கூட்டி பெப்பில் வந்த பெண்ணை இடித்து விட்டான்... அந்த பெண் விழுந்துகிடக்கின்றாள்... வழி கிடைத்தால் போதும் என்று டைவர்ட் ஆகி வாகன ஓட்டிகள்  பறந்து செல்லுகின்றார்கள்...யாரும் விழுந்த பெண்ணுக்கு உதவி செய்யவில்லை... பக்கத்தில் இருந்த பழக்கடைக்கார்ர்தான் உதவி செய்தார்...

அதே போல பெசனட்நகர் பக்கம் ரோட்டில் விழுந்தால் உடனே உதவி கிடைக்காது.. நொச்சிக்குப்பத்து பக்கம் விழுந்தால் உடனே உதவி செய்வார்கள்.. என்று ஒரு பேச்சு இருந்த்து.. இபோது அங்கேயும் குறைவான உதவிகள்தான் கிடைக்கின்றது...

ஆயிரம்தான் ஆட்டோகாரர்கள் மீட்டர் போடாமல் கொள்ளை அடித்தாலும் சென்னையில் நடக்கும் விபத்துகளில் மனிதாபிமானம் உதவிகள் கிடைப்பது ஆட்டோகாரர்களினால்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது...


ஜாக்கி, ரோட்டில்  விழுந்த வாகன ஓட்டியை விட்டு விட்டு டைவர்ட் பண்ணி போறாங்கதான்..  ஆனா அதுல ஒரு சிலர் இறங்கி உதவி செய்யத்தான் செய்யறாங்க...

தலைவரே நானும் இல்லைன்னு சொல்லலை... உதவிகள் கிடைக்குது ஆனா லேட்டா கிடைக்குது..30 செகன்டில் கிடைத்த உதவி இரண்டு நிமிஷத்துக்கு மேல கழிச்சிதான் கிடைக்கிது... அது இன்னும் லேட்டா கிடைக்க கூடாதுன்னுதான் இந்த பதிவே....

தயவு செய்து சகமனிதனுக்கு உங்களால் முடிந்தவரை உதவுங்கள்... உங்களுக்கே பைல்சே வந்து இருந்தாலும் முன்னால்  செல்லும் இருசக்கரவாகனஓட்டி கிழே விழுந்து விட்டால் வாகனத்தை நிறுத்தி விழுந்தவரை தூக்கி விட உதவி  செய்யுங்கள்....

ஆனால் ஒரு சிலருக்கு உதவி செய்யாதீர்கள்..  பொதுமக்கள் பயணப்படும் நெரிசல் உள்ள சாலையில் பயணிக்கும் போது இருசக்கரவாகனத்தில் ரேஸ் விடும் பண்ணாடைகள் விழுந்து கிடந்தால் உதவியே செய்யாதீர்கள்.


இது போல உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை  பின்னுட்டத்தில் ஷேர் செய்துக்கொள்ளுங்கள்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...
 


==============

14 comments:

  1. விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தால் எந்தகேள்வியும் கேட்காமல் அட்மிட் செய்து முதலுதவி செய்ய சென்னையில் நிறைய மருத்துவமனைகள் இருக்கிறது. என்னுடய ஆக்ஸிடெண்ட் குறும்படத்தில் அதை சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete
  2. கேபிள் அது எல்லாம் ஓகே.. இப்ப விழுந்து கிடந்தவனை யாரும் தூக்கி விட யோசிக்கறாங்க அது தான் மேட்டர்..

    ReplyDelete
  3. விபத்து நடந்து அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் மருத்துவமனைக்கு கூட செல்பவர்களிடம் காவல்துறையோ, மருத்துவமனையிலோ கேள்விகள் ஏதும் கேட்கக்கூடாதுன்னு புதுசா சட்டமும் போட்டுருக்காங்க. அவசர உலகம் ஜாக்கி, பணத்தைத்தேடி மனத்தைத் தொலைக்கும் மெஷின்களாகி விட்டார்கள் பலர் ;(((

    அருமையான பதிவு!

    ReplyDelete
  4. Dear jackie. சமூகத்துக்கு அவசியமான விஷயங்களை நீங்கள் பதிவிடுவதை வரவேற்கிறேன். இந்த மாதிரி குறும்படங்கள் எடுக்கும்போது எல்லா சேனல்களும் இளவசமாக ஒளிபரப்ப அவர்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் எல்லோரையும் சென்ற அடையும். இத்துப்போன படங்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு 300 தடவை ட்ரைலர் போடுபவர்கள் இந்த மாதிரி விஷயங்களை மக்களிடம் கொண்டு சென்றால் பெரும் மாற்றம் வரும். உதாரணமாக தற்போது காட்டப்படும் No Smoking Ad.நுரையீரலை பிழிந்தால் தார் வருகிறது. இது மாதிரி விளம்பரங்களை பார்த்தால் மாற்றம் நிச்சயம் வரும்.
    என்னுடைய முதல் வோட்டு..

    ReplyDelete
  5. leaving someone behind for the reason he is a rash driver is not good. We are not following the one who is responsible for the accident, then why should we ignore the one who is in need. Not everyone who meets with an accident is a good person, he might be a bad person in the society, we can't pin point whether he is good to be saved or not just by their driving. The most people who bypasses the accident console themselves saying "he must be bad driver and was his mistake".

    ReplyDelete
  6. இது பெங்களூரில் நடந்த சம்பவம் ... இரவு சுமார் 10 மணி இருக்கும், நான் பனி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ஆட்டோ என்னை கடந்து வேகமாக சென்றது அப்போது எதிர் பாரவிதமாக நாய் ஒன்று சாலையின் நடுவே குறுக்கிட்டது. நாய் மீது மோதாமல் இருக்க அந்த ஆட்டோ ஓட்டுனர் வேகமாக பிரேக் போட்டார். ப்ரேக் பிடித்த வேகத்தில் ஆட்டோ தலை குப்புற வீழ்ந்து விட்டது. வாகன ஓட்டிகள் அனைவரும் விலகிச்செல்ல நான் மற்றும் இரு நபர்கள் சேந்து ஆட்டோவை தூக்கி நிறுத்தி விட்டு. அந்த ஓட்டுனரை சாலை ஓரமாக உட்கார வைத்தோம்.. தலையில் அடிபட்டு இருந்தது ஆனால் இரத்தம் வரவில்லை .. அவர் தண்ணீர் தண்ணீர்... என முனக , நான் அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டேன் (அவர்களும் இந்த சம்பவத்தை வீட்டில் இருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தனர்) அதற்கு ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து ஒரு மிகவும் நசுங்கி போன பழைய பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர்..... நிலைமையின் அவசரம் புரியாமல் தாமதமாக , தேடிப்பிடித்து ஒரு நசுங்கிய பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்த அவர்களின் மனிதாபிமானத்தை என்னவென்று சொல்வது.

    ReplyDelete
  7. neenga sonnathu 100% correct sir!!!! innoru sikkalum irukku!!! naama uthavi seiya ponalum sila peru athai yethukka thayakkam katranga!!!etho thirudittu poga vanthavanga mkathiri paakkaranga!!! nan oru thadava ithai face pannirkken!!!!eppo enna seiyarthunnu theriyave illa!!!!athuvum veliyoorlernthu chennaila valaikkaga vanthirukkum engalamathiri aatkalukku ithellam porukkave mattenguthu

    ReplyDelete
  8. >>ஆனால் ஒரு சிலருக்கு உதவி செய்யாதீர்கள்.. பொதுமக்கள் பயணப்படும் நெரிசல் உள்ள சாலையில் பயணிக்கும் போது இருசக்கரவாகனத்தில் ரேஸ் விடும் பண்ணாடைகள் விழுந்து கிடந்தால் உதவியே செய்யாதீர்கள்.

    Jackie, i am a regular reader of your blog.. just one thought. Dying person should not be judged for help.

    ReplyDelete
  9. நல்ல அருமையான பதிவு.....
    அனால் மனிதாபிமானம் சென்னையில் மட்டும் குறைந்துவிடவில்லை...
    இது மற்ற பெருநகரங்களுக்கும் கண்டிப்பாக பொருந்தும்.

    ReplyDelete
  10. நான் பெங்களூரில் பைக்கில் செல்லும் பொது ஒரு குழந்தை குறுக்கே வந்து விட்டது. அதை தடுக்க பிரேக் போட்டு வண்டியோடு கீழே விழுந்தேன். தூக்கிவிட யாரும் இல்லை. அந்த குழந்தையின் அம்மா ரொம்பவும் ஒழுங்காக குழந்தையை கூட்டி சென்று விட்டார். கடைசில் நானே எழ வேண்டி இருந்தது. காலில் நல்ல அடி. அதோடே வண்டி ஓட்டி வந்தேன். அதனால் சென்னை மட்டும் அல்ல நண்பா எல்லா இடங்களிலும் மனிதாபிமானம் குறைந்து வருகிறது. இத்தனைக்கும் அது ஒரு கிராம சாலை..
    @கேபிள் இங்கயும் உங்கள் குறும் பட விளம்பரமா?

    ReplyDelete
  11. அருமையான பதிவு.....
    இது சென்னைக்கு மட்டுமல்ல...
    இது மற்ற நகரங்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  12. நல்ல பதிவு ஜாக்கி.

    கொஞ்சம் இவர்களையும் பாருங்கள் : http://www.luckylookonline.com/2010/02/108.html

    நீங்கள் எடுக்கப் போகும் குறும்படத்துக்கு இவர்களும் உதவலாம்.

    ReplyDelete
  13. Nega soluriga. Anna yarum help panna payapaduranga. Village appadi iella.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner