என் வீட்டு தோட்டத்தில் ஒரு மாமரம் இருக்கின்றது...அதுக்கு எழு கழுதை வயசாகின்றது என்று என்னால் சொல்ல முடியாது...
காரணம் என் வயதும் அதன் வயதும் ஒன்று என்று அம்மா சொல்லி இருக்கின்றாள்.....சேலத்தில் இருந்து அப்பா நான் வயிற்றில் இருக்கும் போது அம்மாவுக்கு மாம்பழம் வாங்கி கொடுத்த போது அதை சாப்பிட்டு விட்டு தோட்டத்தில் போட்டதும், நான் பிறந்த போது அதுவும் துளிர் விட்டு வளர்ந்ததாக அம்மா சொல்லி இருக்கின்றாள்...
சிறு வயதில் அதன் உயரத்தை என் உயரத்தை பக்கத்தில் நின்று உயர ஓப்பீடு செய்து கொண்டது உண்டு.. ஆனால் அந்த மாமரம் இன்று என்னை விட உயர்ந்து வளர்ந்து விட்டது.. பக்கத்து வீட்டு வேப்பமரத்து நிழலின் காரணமாக அதை முப்பத்திவருடத்திய மரம் என்று சொன்னால் யாரும் நம்ம மாட்டர்கள்... பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் அந்த மரத்தில் ஏறி நிறைய மாம்பழங்கள் பறித்து தின்று இருக்கின்றேன்.
ஆனால் காயாக ஒன்றை பறித்து வாயில் வைத்து விட முடியாது.. காரணம் அப்படி ஒரு புளிப்பு புளிக்கும்.. எங்கள் மரம் நீலம் மரத்து வகையை சார்ந்தது.. நீலம் மரத்து பழங்கள் அரிவாள்மனையில் அறிந்து சாப்பிடும் பழம் அல்ல... நன்றாக பழுத்த பழத்தை நன்றாக அதக்கி அதில் ஒரு சின்னதாக தோளை கடித்தால் புருட்டி உறிவது போல் உறிந்து விடலாம்... அது நல்ல சுவையை கொடுக்கும்.....
ஒரு கட்டத்துக்கு மேல் மாமரத்தில் பழத்த பல பழங்கள் அனில்கள் அதற்கு டிபனாக வைத்துக்கொண்டு இருக்கின்றன...பல மரங்களில் இருந்து ஒரு அனில் தாவி தாவி கிளைகளில் சர சரவென ஏறி ஒரு பழுக்க போகும் மாம்பழத்தை அதன் சின்ன வாயினால் கொறித்து கீழே சின்ன தோள்களை கீழே விழந்து கிடக்கும் அதனை பார்க்கும் போது ஒரு ஒழுங்கற்ற மார்டன் ஆர்ட் பிலிங் ஏற்படும்.....
என்னதான் வீட்டில் மாமரம் இருந்தாலும்.. அப்பா அல்லது ஆயா கடையில் இருந்து ஒட்டு மாம்பழம் வாங்கி வருவார்கள்.. அம்மா அதனை காலையில் பழைய சாதத்துக்கு தொட்டுக்க தருவார்கள்.. மதியம் சம்பார் சாதத்துக்கும் தொட்டுக்க ஒட்டு மாம்பழம்தான்..
ஆனால் எனக்கு மாம்பழத்தின் கொட்டைதான் வேண்டும் என்று அடித்துக்கொள்வேன்... காரணம் அந்தபகுதியில்தான் நிறைய சதை இருப்பதாகவும் மிகப்பெரிதாக இருப்பதாக ஒரு பிரம்மை... அது மட்டும் இல்ல அதனை கடித்து இழுத்து அந்த மாம்பழ கொட்டையை தரையில் வைத்து அடித்து உடைந்து அம்ன் உள் இருக்கும் பருப்பை தின்று அந்த துவர்ப்பை நீக்க ஒரு மிடறு தண்ணி குடித்தால் ஒரு இனிப்பு இனிக்கும் பாருங்க அதுக்கு ஈடுஇணையே இல்லை என்பேன்..
இப்போது பல வீடுகளில் மாம்பழம் தொட்டுக்கு கொடுப்பதே இல்லை.. அது எல்லாம் மறைந்து விட்டதோ என்று ஐயமாக இருக்கின்றது..
ஆனால் இன்று நகரத்தில் மாம்பழம் வாங்கவே பயமாக இருக்கின்றது மனித சுயநலத்தின் காரணமாக கார்பைட் கல் போட்டு பழுக்க வைத்த பழங்களை சென்னை மாநகராட்சி பறிமுதல் செய்யும் போது அதன் மீது ஆசையே போய்விட்டது..
நெய்வேலியில் மாமரம் இல்லாத வீடே இல்லை... 13 ம் வட்டத்தில் இருக்கும் என் அக்கா வீட்டில் மாமரத்தின் பழங்கள் பழுத்து பழுத்து கீழே கொட்டிக்கிடக்கும் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.. சில நேரத்தில் பன்னிகள் நிறைய தின்ன வேலிக்கு அந்த பக்கம் கொட்டி விடுவார்கள்..
சென்னையில் இன்னு கான்கிரிட் காடுகளாக ஐடி பார்க்குகளாக் சென்னை ஓஎம்ஆர் சாலையில் இருக்கும் கட்டிடங்களின் கீதே மாமரத்தின் வேர்கள் இன்னமும்இல்லாமல் இல்லை...
இன்னமும் ஓஎம்ஆரில் புது ஏஜிஎஸ் தியேட்டருக்கு பக்கத்ததில் இன்னமும் ஒரு மாந்தோப்பு இருக்கின்றது.. எப்போது மாம்பழ சீசனில் ஒரு சாக்கு கொட்டகையில் அந்த மாம்பழத்தின் பழங்கள் ஒரு கிழவி இன்னும் விற்றுக்கொண்டு இருக்கின்றார்..
மாதா ஊட்டாத சோறை ஒரு மாம்பழம் ஊட்டி விடும் தமிழர்கள் ரைமிங்காக ஒரு பழ மொழி சொல்லி இருக்கின்றார்கள்.. இன்று கார்பைட் கற்கள் அந்த பழமொழியை குத்திகொலை செய்துவிட்டன....
ஒட்டு மாம்பழ கொட்டையை இன்றளவும் வீதிகளில் பார்க்கும் போது பழைய சோத்துக்கு மாம்பழ கொட்டையை அம்மா அரிவாள் மனையில் அரியும் போதே.. அம்மா எனக்கு மாங்கொட்டை வேண்டும் என்று தங்கைகளோடு சண்டை போட்டது நினைவுக்கு வருகின்றது.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...

==============
நினைவலைகளின் நீளங்கள்....
ReplyDeleteமாமரத்து நினைவுகளின் வாசம் தங்கள் கட்டுரையில் மணக்கிறது...
மாரம் தங்களைவிட உயரலாம் அதை நம்மிட்ம் நல்ல குணங்கள் இருந்தால் நாமும் உயர்வோம்...
மாமரத்தின் வயது முப்பத்தியில் ஆரம்பிக்கிறது. உன்மையை வெளியில் சொல்ல மாட்டீர்களோ...
//////
ReplyDeleteசென்னையில் இன்னம் கான்கிரிட் காடுகளாக ஐடி பார்க்குகளாக் சென்னை ஓஎம்ஆர் சாலையில் இருக்கும் கட்டிடங்களின் கீழே மாமரத்தின் வேர்கள் இன்னமும்இல்லாமல் இல்லை.../////////
மரங்களை கொன்று மனிதன் வளர்ப்பது வீடுகளைத்தானே...
சரியான ஞாபகச்சிந்தனை..
மாம்பழ நினைவுகள் ரொம்ப சுவையை கூட்டுகிறது
ReplyDeleteகட்டுரையில் சின்ன சின்ன சின்னப்பருவத்து ஞாபங்க்ள துளிர்த்து ஒவ்வொருவரின் மழலை நாட்களை கண்டிப்பாக ஞாபகம் படுத்தும்...
ReplyDeleteதங்களின் நினைத்துப்பார்த்து பகிர்ந்த இந்த நினைவால் நானும் மழலை வரை சென்று திரும்பியிருக்கிறேன்..
நல்ல பதிவு. உங்கள் பதிவை படித்ததும், சிறு வயதில் சிலேட்டில் மாம்பழம் படம் வரைய, மு வரைந்து அதிலிருந்து மாம்பழம் வரைந்ததும், கிளிமூக்கு , பஞ்சவர்ணம் ஆகிய மாம்பழ வகைகளும், அதிகம் மாம்பழம் தின்று வயிற்றுபோக்கால் அவதிபட்ட நிகழ்வுகளும் ஞாபகம் வருகின்றன.
ReplyDeleteகற்கள் வைத்துப் பிஞ்சைப் பழுக்க வைக்கிறார்கள். நானும் பிஞ்சிலே பழுத்தவன் தான் (!!!!) நீங்களும் அப்படியே என்று நினைக்கிறேன் (சும்மா தமாஸ்!!!).
ReplyDeleteரணகளத்திலும் குதூகலம் போல் மாம்பழம் பற்றிய பழைய நினைவுகளை அசைபோட்டபடி புதியதாக ஒரு மாம்பழம் கூட வாங்காமல் மக்கள் இருந்தால், யாராவது கல் வைத்துப் பழுக்க வைத்த மாம்பழங்களை வாங்குவார்களா?