அன்பின் ஆசிப்மீரான் அண்ணாச்சிக்கு....



அன்பின் ஆசிப்மீரான் அண்ணாச்சிக்கு....

ஆசிப்மீரான் அண்ணாச்சிக்கு வணக்கம் வாழிய நலம்...


அமீரகம் எப்படி இருக்கின்றது...துபாயில் வெயில் ஆரம்பித்து விட்டதா?? சென்னையில் அவ்வப்போது மேகமூட்டமாக, வெயிலாகவும், சிலநேரங்களில் தூரலாகவும் சமச்சீர்கல்வியாக கண்ணாமுச்சி ஆடிக்கொண்டு இருக்கின்றது...

எனக்கு நன்றாக நினைவு இருக்கின்றது...2009ல் என்று  நினைக்கின்றேன்.மெரினா கடற்கரையில் பதிவர் சந்திப்பு... அப்போது நீங்கள் வந்தீர்கள்.... பழைய பதிவர்கள் புதியவர்கள் என்று பாரபட்சம் இல்லாமல் அண்ணாச்சி அண்ணாச்சி என்று கொண்டாடினார்கள்...

நான் பதிவுலகம் வந்த போது ,உங்கள் பதிவுகள் சிலதை   நான் வாசித்து இருக்கின்றேன்.. ஆனால் உங்களை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது... அப்போது  பக்கத்தில் இருந்த புருனோவிடம் கேட்டேன்.. அண்ணாச்சி  பதிவுலகத்துல ரொம்ப பழைய ஆள் என்றார்.... அதனால் விளைந்த நட்பு.. அமீரகத்தில் இருந்து வந்து இருப்பதால் கொண்டாடுகின்றார்கள்... என்று நினைத்து விட்டேன்...

என்னை தமிழ்மண நட்சத்திரமாக தேர்ந்து எடுக்கபட்ட போது நீங்கள் எனக்கு போட்ட பின்னுட்டம் இன்னும் என் நினைவில் இருக்கின்றது .. இது கீழே....



================

//என்னை விட இலக்கிய வாசனையோடு எழுதுபவர்கள் பார்த்து பொறாமை கொண்டுள்ளேன்//

இது வேணும்னா உண்மையா இருக்கலாம்.


//
பெரிய அளவிலான வசிகரிப்பான எழுத்து என்னுடையதில்லை என்பது எனக்கே நன்றாக தெரியும்... ///

ஆனா.. இது நிச்சயம் உண்மையில்லை. சொல்ல வருவதைச் சரளமாகச் சொல்ல முடிகிற உங்களது எழுத்து சுவையானதௌதான்


நட்சத்திர வாழ்த்துகள்!!
ஆசிப்மீரான்..
======================


அதன் பிறகு எனது 300 தொட்டபோது நான் பதிவு போட்டேன் அது அலட்டல் அல்ல.. என்னை நானே உற்சாபடுத்திக்கொள்ளும் வழி... என்னை நானே உற்சாகபடுத்திக்கொள்ளாமல் இந்த பூவுலகில் யார் இருக்க போகின்றார்கள்...  என்னை அப்படியே ரசிக்கும் போதுதான் நான் மற்றவரை ரசிக்க முடியும்...
அப்போது நீங்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தீர்கள்...
============


அன்பின் ஜாக்கிசேகர்

நலம்தானே? நான் யாருக்கும் தனியாக மடல் எழுதுவதில்லை
குறிப்பாக பதிவர்களுக்கு :-)

உங்கள் பதிவை இன்று வாசித்தேன்
நிறைவாகவும் நெகிழ்வாகவும் உணர்ந்தேன்
உடனே எழுத வேண்டும்போலத் தோன்றியது

ஒன்றரை வருடங்களுக்குள் 300 பதிவுகளென்பதும் அதைத்தொடர்ந்து
வாசிக்க ஏராளமான வாசகர்களைப் பெறுவதென்பதும் சாதாரண விசயமில்லைஐந்தாண்டுகளாகப் பதிவெழுதியும் 500ஐத் தொடமுடியாமல் நான் படும் பாடு
எனக்குத்தான் தெரியும் :-) என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்!!

உங்கள் பதிவுகளைத் தவறாமல் வாசிக்கிறேன் சமயங்களில் தாமதமாக சமய்ங்களில்
உடனே - கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து. பெரும்பாலும் பின்னுட்டமிடுவதில்லை
என்றாலும் நான் தொடர்ந்து வாசிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர்

சொல்வதைச் சுவாரஸ்யமாகவும் நேர்மையாகவும் வளைத்துக்கட்டாமலும் சொல்லும்
உங்களது பாணி எனக்கு வெகுவாகப் பிடித்திருக்கிறது அதுதான் உங்களது பலமென்று
நான் கருதுகிறேன். தொடர்ந்தும் இதே உற்சாகத்தோடு இயங்குங்கள்

உங்களது இன்னுமொரு பெரும்பலம் கூட்டு சேர்ந்து ஜல்லியடிக்காமல் உங்களை
மட்டும் நீங்கள் நம்பியிருப்பது. அது மிகப் பெரும் விசயம் அதற்காகவே உங்களை வெகுவாகப்
பாராட்டத் தோன்றுகிறது

ஓரிருமுறை சந்தித்திருக்கிறோம் அதிம பேசியது கூட இல்லையென்ற நிலையிலும் என்னையும்
உங்கள் நெருங்கிய நண்பராகச் சுட்டியிருப்பது நெகிழ்வாக இருக்கிறது. நன்றி சொல்லி உங்கள்
அன்பின் அளவை நான் குறைத்துக் கொள்ளப் போவதில்லை மாறாக இன்னமும் உங்களுக்கு உகந்த
நண்பனாக மாற முய்ற்சிக்கிறேன்

எல்லா வளங்களும் சூழட்டும்
வாழ்க வளமுடன் உஙக்ள் எண்ணமெல்லாம் ஏற்றம் பெற்று!!

தோழ்மையுடன்
ஆசிப் மீரான்

=============================
ஒரு காதலியின் கடிதம் போல இந்த கடிதத்தை நான் எத்தனை தடவை வாசித்து இருப்பேன் என்று எனக்கே தெரியாது....அன்று இரவு மிக நெகிழ்ச்சியாக ஒரு கடிதம் எழுதினேன்..

அதன் பிறகு சென்னை போர்ட் கிளப்பில் ஒரு நிகழ்சியில் நாம் சந்தித்தோம்... அப்போதுதான் பதிவுலகில் நீங்கள்  எப்படி பட்ட இடற்பாடுகளை எல்லாம் கடந்து வந்தீர்கள் என்று எனக்கு புரிந்தது.. நீங்கள், சிட்னி பாலாபிள்ளை, உங்கள் ஆசான் திரு போன்றவர்களால் நீங்கள் பதிவு எழுத வந்த கதையை அப்போதுதான் அறிந்து கொண்டேன்....

அங்கு பேச்சின் ஊடே என் பதினெட்டு பிளஸ்மேட்டரை பேசி போகிற போக்கில் நக்கல் விட்டீர்கள்..

ஆனால் அன்றுதான் உங்களை பற்றி  தெரிந்துக்கொண்டேன்.. நீங்கள் வலையுலகின்  ரொம்ப பழைய ஆள் என்று..2004 ஆம் வருடம் எழுத ஆரம்பித்த நீங்கள் இன்று வரை அடித்து ஆடிக்கொண்டு இருக்கின்றர்கள்.. சான்சே இல்லை....

அப்படி ஒரு பழைய பதிவரான நீங்கள் .அனுபவம் வாய்ந்த நீங்கள் என்னை பொருட்படுத்தி எனக்கு வரைந்த கடிதம் என்னுடைய  பொக்கிஷம் அண்ணாச்சி...

இவ்வளவு பெரிய ஆள்.. நம்மை உற்சாகபடுத்துகின்றாரே என்று நான் மகிழ்ந்தேன்... பெரிய மனது வேண்டும் ஆசீப்மீரான் அண்ணாச்சி... 

கடிதங்களை நாம் எல்லோருக்கு எழுதிவிட முடியாது... நம் மனதுக்கு நெருக்கமானவராக இருந்தால்தான் அது சாத்தியம்.. இன்று உலகம் எங்கும் தகவல் தொழில் நுட்பத்தால் சுருங்கிய நிலையில் கடிதம் எழுத உட்கார்ந்து நேரம் ஒதுக்குவதும் சாதரணம் இல்லை... அப்படி இருக்கும் போது... எனக்கு நீங்கள் நேரம் ஒதுக்கினீர்கள் பாருங்கள்... அதுதான்   பெரிய விஷயம்..

இன்று என் வளர்ச்சியில் பொறாமைபடும் பழைய பதிவர்களை பார்த்து இருக்கின்றேன்.. ஏனி மாடுன்னா நோனிமாடுன்னு  என்னை கேள்வி கேட்கின்றேன் என்று காயபடுத்தும், நான் இதுவரை சந்திக்காத ஒரு சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்..ஆனால் நேரில் சந்திக்காத போதும் என்மீது  பாசம் வைத்த பழம் பதிவர் நீங்கள்...

நெருக்கமான எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களுக்கு கடிதம் எழுதுவது என்பது ஒரு  சந்தோஷம்தான்...குசும்பனுக்கு எழுதிய கடிதம்  வரவேற்ப்பை பெற , நான் காசு பணம் செலவு செய்யாமல் எனக்கு பிடித்த ஒரு நபரை கடிதம் எழுதி மகிழ்விக்க முடியும்  என்று என் மனதில் தோன்றியகணமே.. நான் வரிசைபடுத்திய நபரில் நீங்கள் இருந்தீர்கள்... அனால் அதற்குள் ஒரு பஸ்சில் நியாப்படி ஜாக்கி முதலில் கடிதம் போட்ட எனக்குதான் ஜாக்கி முதலில் கடிதம் போட்டு இருக்க வேண்டும்.. என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு இருந்ததை பார்த்தேன்...

அப்போது நான் பதில்  சொல்லவில்லை... அதுக்கான பதில் இந்த கடிதம்தான்....

அதே போல் உங்கள் பண்புடன் பேட்டி படித்தேன் ரொம்ப அழகாக அற்புதமாக சின்ன தலைகனம் கூட இல்லாமல் வார்த்தைகளை கோர்த்து கொடுத்த அந்த பதில்கள்  அற்புதம்....


சொல்லுதிய..இருக்கியாளா போன்ற உங்கள் வட்டார வழக்கு இயல்பு தமிழுக்கு நான் ரசிகன்..

வாழ்த்துகள் அண்ணாச்சி....

உங்கள் குடும்பத்துக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு என் அன்பும் கனிவும்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....


(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...
 


===============================

11 comments:

  1. // பழைய பதிவர்கள் புதியவர்கள் என்று பாரபட்சம் இல்லாமல் அண்ணாச்சி அண்ணாச்சி என்று கொண்டாடினார்கள்...//

    அமீரகத்தில் நாங்க எல்லாம் தீபாவளி, பொங்கலையே அண்ணாச்சி அண்ணாச்சின்னுதான் கொண்டாடுகிறோம்.

    ReplyDelete
  2. நாளைய முதல்வர் ஆசிப் மீரான் அண்ணாச்சி வாழ்க....

    அண்ணாச்சி தொண்டர் படை
    சென்னை - வேளச்சேரி கிளை

    ReplyDelete
  3. வலைப்பதிவில் இத்தனை உறவுகளா? ஆச்சர்யம். நன்றி google

    ReplyDelete
  4. நல்ல பதிவு ஜாக்கி. நீங்களும் என்னைப்போலவே அண்ணாச்சி மீது அளவற்ற அன்பு வைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும்.

    ReplyDelete
  5. //ஆனால் அன்றுதான் உங்களை பற்றி தெரிந்துக்கொண்டேன்.. நீங்கள் வலையுலகின் ரொம்ப பழைய ஆள் என்று..2004 ஆம் வருடம் எழுத ஆரம்பித்த நீங்கள் இன்று வரை அடித்து ஆடிக்கொண்டு இருக்கின்றர்கள்.. சான்சே இல்லை....
    //

    அண்ணாச்சி எனக்குத் தெரிஞ்சு 2000க்கு முன்னாடிலேர்ந்தே இணையத்தில் இருக்கார் ஜாக்கி

    ReplyDelete
  6. // அண்ணாச்சி எனக்குத் தெரிஞ்சு 2000க்கு முன்னாடிலேர்ந்தே இணையத்தில் இருக்கார் ஜாக்

    //

    ஆமாம். மின்மடல் குழுமங்களில் அப்போ நாங்கள்லாம் ஆக்டிவ் :)

    ReplyDelete
  7. //அமீரகத்தில் நாங்க எல்லாம் தீபாவளி, பொங்கலையே அண்ணாச்சி அண்ணாச்சின்னுதான் கொண்டாடுகிறோம்.//

    குசும்ப்ஸ்.....:))))))

    ReplyDelete
  8. அண்ணாச்சி 1998-லிருந்தே தமிழ்.நெட் மின்மடலாடற்குழுவில் எழுதிவந்தவர்.அமீரக தமிழ் இணையம் என்ற அமைப்பினை துவங்கியவர்

    உங்களுக்கு தெரியுமா இல்லையா என்று தெரியாது.அண்ணாச்சியின் தந்தையார் பிரபல தமிழ் கிரிகெட் வர்ணையாளர் அப்துல் ஜப்பார்

    துபாயில் பல வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியவர்

    ReplyDelete
  9. So Sad...
    அண்ணாச்சிக்காக ஒரு பதிவென்பதெல்லாம் ராசா மச்....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner