அன்பின் தம்பி அப்துல்லாவுக்கு.....


அன்பின் தம்பி அப்துல்லாவுக்கு.....

வணக்கம் வாழிய நலம்....




இந்த கடிதத்தை அன்புள்ள தமிழ் பதிவுலகின் மல்லுவேட்டி மைனருக்கு,

என்றே ஆரம்பிக்க வேண்டும்....

நான் இந்த வலையுலகத்துக்கு வந்த போது என் பதிவுகளுக்கு புதுகை அப்துல்லா என்ற பெயிரில் நிறைய பின்னுட்டங்கள்.. யார் இவர் என்று பார்த்து இருக்கின்றேன்....


நேரில் சில முறைதான் சந்தித்து இருக்கின்றோம்....ஆனால் அப்போதும் என் எழுத்துகளை ரசிப்பது மட்டும் அல்லாமல் என்னை எப்போதும் உற்சாகபடுத்தும் நபர் நீங்கள்...


ஆனால் இதே வலையுலகில் என் எழுத்து பிழைகளை வைத்தும் என்னை பல வேறு விஷயங்களில் நக்கல் அடித்த போது, ஆமாய்யா..  எங்க அண்ணன் அப்படித்தான் எழுதுவார்... உங்களால் முடிஞ்சா படிங்க இல்லையா பொத்திகிட்டு போங்க என்று வேட்டியை மடித்து கட்டி நின்றவன் நீ...

போனவருடத்தில் வலையால்,  வலை நண்பர்களால் எனக்கு நிறைய நல்லவைகள் நடந்த போது பொறாமை இல்லாமல் போன் செய்து பாராட்டியவர் நீங்கள்...

வெகு நாட்களுக்கு  பிறகே நீங்கள் அரசியலில் இருக்கின்றிர்கள் என்பதே எனக்கு தெரியும்.... அவ்வளவு ஏன்.. இந்த தேர்தல் எலக்ஷன் ரிசல்ட்டின் போதுதான் நீங்கள் எங்கு வேலை செய்கின்றீர்கள் என்பேதே எனக்கு தெரியும்....

உங்களை நான் கவனித்த  போது... எந்த பிரச்சனையிலும் உங்கள் கோவத்தை அதிகம் வெளிபடுத்தியதே இல்லை..உங்களுக்கு இருக்கும் பின்புலத்துக்கு உங்கள் செல்வாக்கும் உங்கள் இடத்தில் நான் இருந்து இருந்தால் உங்கள் அளவுக்கு நான் நிதானத்தோடு நான் இருந்து இருப்பேனா என்பது தெரியாது.. உங்கள் நீதானத்துக்கு நான் ரசிகன்...
ராஜன்  கல்யாணத்தின் போது நீங்கள், நான், டோன்டு, லக்கி,பேசிகொண்டு இருக்கும் போது பல பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து உங்கள் கருத்தை என்னிடத்தில் சொல்லிவிட்டு ஜாக்கியன்னே நீங்க எந்த விஷயத்தையும் பெரிசா எடுத்துக்காம நீங்க பாட்டுக்கு போயிகிட்டே இருங்க... என்று அட்வைஸ் செய்தாய்....

அதன் பிறகு புத்தககண்காட்சியில் என்னை பார்த்த போது.. ஜாக்கி அண்ணே உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கனும் எந்த புத்தகத்தை வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றாய்... நான் என்ன பரிசு? எதுக்கு என்றேன்.?? எடுத்துக்கொள்ளுங்கள் பிறகு  சொல்கின்றேன் என்றாய்...பரிசு கொடுப்பவனே முடிவு செய்ய வேண்டும் என்றேன்...

  என்னை அழைத்துக்கொண்டு சில பதிப்பகங்கள் அலைந்து எம்ஆர்ராதாவின் சிறைச்சாலை அனுபவங்கள் புத்தகத்தையும்...தமிழமகன் எழுதிய வெட்டுபுலி புத்தகத்தை  பரிசளித்தாய்...

பரிசுக்கானகாரணத்தை கேட்டேன்.... அண்ணே இந்த பதிவுலகத்தில் பல வருடங்கள் இருந்து இருக்கின்றேன். பல பிரச்சனைகயில் சிக்கி இருக்கின்றேன்... நான் வந்த போது பதிவுலகில் வேற மெத்த படித்த ஒரு கூட்டம் இருந்தது...அவர்கள் நிரம்ப படித்தவர்கள்.. ஆனால் பத்தாவது படித்து விட்டு, எழுத்து பிழைகளோடு எழுதினாலும்,  வெளிப்படையாய் எழுதி இந்த இரண்டு வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கின்றீர்கள்..தமிழ் டைப் தெரியாமல், கம்யூட்டர் அறிவு இல்லாமல் இந்தளவு சாதிக்க முடிவது சாதாரணவிஷயம் இல்லை... என்று பாராட்டினாய்....

இது போல வெளிப்படையாய் யார் பாராட்டுவார்கள்... அந்த இரண்டு புத்தகங்ளோடு வீடு போய் என் மனைவியிடம் காட்டி அரைமணி நேரத்துக்கு அப்துல்லா புராணம்  பாடினேன்.... என் மனைவி கேட்டாள்..  அவர் எங்கு வேலை செய்கின்றார்... தெரியாது? எத்தனை குழந்தைகள் தெரியாது.. இதுதான் என் பதில்....


எம்ஆராதா புத்தகத்தை எடுத்து சில பத்திகள் படித்து விட்டு வயிறு குலுங்க குலுங்க சிரித்து விட்டு உனக்கு  போன் செய்தேன்.... நல்ல புததகம் தேர்ந்து எடுத்து கொடுத்த உனக்கு நன்றி கூறினேன்... நீ.. அண்ணே அந்த ஆளு உன்னைமாதிரியே ஒரு சேட்டக்காரன்னே என்று சொன்னாய் அதனால் தான் அந்த புத்தகம் வாங்கி பரிசளித்தேன் என்றாய்.....


சஞ்சய் திருமணம்...நான் மணடபத்துக்கு உள்ளே வந்ததும்....   இது ஜாக்கியண்ணே நான் சொல்லலை என்று உன் மனைவி குந்தைகளிடத்தில் என்னை அறிமுகபடுத்தி வைத்தாய்...உன் மகளை நான் ஒரு புகைபடம் என் கேமராவில் எடுத்துக்கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்... நான் மது அருந்தி இருந்த  காரணத்தால் நான் போட்டோ எடுக்கவில்லை... ஆனால் வேறு ஒரு நாளில் நிச்சயம் எடுத்துக்கொடுப்பேன்..


அதன்பிறகு எங்களுக்கு யாழினி பிறந்த பிறகு வாழ்த்து தெரிவித்து விட்டு ஒன்று சொன்னாய்... அண்ணே பொம்பளை புள்ளைங்க சொர்கம் அண்ணே.... அம்மாக்கள் நன்றாக பார்த்துக்கொள்ளுவார்கள்.. வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும்.. பெண் பிள்ளைகள் அப்பா என்று வந்து ஒட்டிக்கொள்ளும் அந்த மகிழ்ச்சிக்கு இந்த உலகில் ஈடு இணையே இல்லை என்றாய்...இரண்டு மாதத்துக்கு பிறகு  எங்கள் குழந்தை என்னிடத்தில் ஆ ஊஊ என்று பேசும் போது நீ சொன்னதின் அர்த்தம் உணர்கின்றேன்....

அப்துல்லா உன்னிடம் எனக்கு இன்னும் பிடித்த விஷயம் கள்ள மில்லா சிரிப்பு அது சிலருக்கே வாய்க்கும்.. சிலர்  சிரிக்கும் போது கண்ணும் நேர்ந்து சிரிக்கும்.. உன் கண்ணும் அப்படித்தான்...நீ சிரிக்கும் போது இப்போது சிரிப்பு முடிய போகின்றது என்று நினைக்கும் போது அதையும் மீறி அந்த சிரிப்பு கொஞ்சம் இழுத்தபடி சிரிக்கும் அந்த கேவல் சிரிப்புக்கு நான் ரசிகன்....

எங்கோ பிறந்தோம் ஆனால் இந்த பதிவுலகின் காரணமாய் நாம் நண்பர்களானோம்...இந்த பதிவுலகத்துக்கு நன்றி..

உன் குடும்பத்தினருக்கும்   என் அன்பும் கனிவும்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)



EVER YOURS... 



=====================

26 comments:

  1. ஜாக்கி நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு சந்தோசமா இருக்க ...

    ReplyDelete
  2. உணர்வெழுச்சித் தரும் பதிவு. நட்பை ஞாபகம் கொள்வதும், பாராட்டுவதும் அற்புதமான விஷயம். அப்துல்லாவின் வலையுலக வாதங்கள், தனிநபரைச்சார்ந்தில்லாமல் தன் நம்பும் கருத்து சார்ந்து, வலிமையாக, எந்த காயமும் இல்லாமல் இருப்பதை பலமுறை ரசித்துள்ளேன். நன்றி ஜாக்கி

    ReplyDelete
  3. ஜாக்கிண்ணா.. நன்றி..

    ReplyDelete
  4. நல்ல பதிவு ..! இந்த பதிவினை முன்னுதாரணமாக
    கொண்டுபல பதிவுகள் வர வேண்டும்..!


    // அண்ணே பொம்பளை புள்ளைங்க சொர்க்கம் அண்ணே.... அம்மாக்கள் நன்றாக பார்த்துக்கொள்ளுவார்கள்.. வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும்.. பெண் பிள்ளைகள் அப்பா என்று வந்து ஒட்டிக்கொள்ளும் அந்த மகிழ்ச்சிக்கு இந்த உலகில் ஈடு இணையே இல்லை///

    தவுசன் டைம் ரிபீட்டு..! ;;))

    ReplyDelete
  5. அண்ணே கலக்கிடிங்க ... உங்களோட மிக சிறந்த பதிவுல இதுவும் ஒன்னு ... அண்ணே நல்ல மனசு இருகவங்களுக்கு நல்லவங்க எல்லாம் பிரண்டா இருப்பாங்கன்னே ...

    ReplyDelete
  6. எந்த அண்ணனுக்கு வாழ்த்து சொல்லுவதுன்னு தெரியலையே...

    ReplyDelete
  7. அருமையான பதிவு ஜாக்கி. அப்துல்லா குறித்த பக்காவான போர்ட்ரெய்ட்.

    ReplyDelete
  8. \\என்னை அழைத்துக்கொண்டு சில பதிப்பகங்கள் அலைந்து எம்ஆர்ராதாவின் சிறைச்சாலை அனுபவங்கள் புத்தகத்தையும்...தமிழமகன் எழுதிய வெட்டுபுலி புத்தகத்தை பரிசளித்தாய்..//

    அடுத்த புத்தக கண்காட்சியில் அப்துல்லா அண்ணனை விட கூடாது...

    பதிவு எப்பயும் போல கலக்கல் ..

    ReplyDelete
  9. ஜாக்கியின் நட்பின் தருணங்கள்..

    இப்படி டைட்டில் போடுங்க ஜாக்கி..

    ஜாக்கி, நீங்கள், வெளிப்படையான, கள்ளங்கபடமில்லாத வார்த்தைகளில் கொள்ளை கொள்கிறாய்..

    வாழ்த்துக்கள் ஜாக்கி..

    சகோதரன் அப்துல்லாவிற்கு இன்னொரு , நட்பிற்கான புரிதல் தலைப்பாகை உங்களை தேடி வந்துள்ளது..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. நன்றி இராமசாமி நாடு முன்னேறன்னு சொல்லாம விட்டிங்களே...

    ReplyDelete
  11. ஜானகி நீங்க சொல்வது 100க்கு 100 உண்மை....

    ReplyDelete
  12. நன்றி சென்

    நன்றி அமுதன்

    நன்றி குசும்பா

    நன்றி லக்கி

    ReplyDelete
  13. அண்ணே கலக்கிடிங்க ... உங்களோட மிக சிறந்த பதிவுல இதுவும் ஒன்னு ... அண்ணே நல்ல மனசு இருகவங்களுக்கு நல்லவங்க எல்லாம் பிரண்டா இருப்பாங்கன்னே ...//

    நன்றி வெங்கி....

    ReplyDelete
  14. ரோமியோ எதுக்குடா உனக்கு இந்த பொறாமை..??

    ReplyDelete
  15. ஜாக்கி, நீங்கள், வெளிப்படையான, கள்ளங்கபடமில்லாத வார்த்தைகளில் கொள்ளை கொள்கிறாய்..//

    இந்த பின்னுட்டத்தை எப்படி கொஞ்சம் பீல் பண்ணி எழுதினிங்களோ .. அது போலத்தான்... மிக்க நன்றி..கணேஷ்

    ReplyDelete
  16. \\ஜாக்கி சேகர் said...
    ரோமியோ எதுக்குடா உனக்கு இந்த பொறாமை..??//


    என்ன பண்ண உங்களை மாதிரி எனக்கு எழுத தெரியல .. அதே போல அவர் மனசு போல எனக்கு இல்ல.

    ReplyDelete
  17. பதிவுலகின் வாசகனாக மூன்று வருட அனுபவம் இருந்தாலும், எழுத வந்து 5 மாதங்களே நிறைவுற்றிருக்கும் எனக்கு இது ஒரு நல்ல அனுபவ சிலபஸ். எழுதப்பட்டவர், எழுதியவர் இருவரின் பண்பாடும் எனக்கு நல்ல டிப்ஸ்.

    நன்றி ஜாக்கி.

    ReplyDelete
  18. என்ன பண்ண உங்களை மாதிரி எனக்கு எழுத தெரியல .. அதே போல அவர் மனசு போல எனக்கு இல்ல.///

    சச்சே பய புள்ள நெஞ்சை நக்கிடுச்சே..

    ReplyDelete
  19. 5 மாதங்களே நிறைவுற்றிருக்கும் எனக்கு இது ஒரு நல்ல அனுபவ சிலபஸ். எழுதப்பட்டவர், எழுதியவர் இருவரின் பண்பாடும் எனக்கு நல்ல டிப்ஸ்.


    நன்றி கொக்கரக்கோ..

    வெளிப்படையான பகிர்வுக்கு...

    ReplyDelete
  20. அண்ணே அண்ணே’ன்னு சொல்லிகிட்டு ஊரை ஏமாத்துற அந்த அண்ணனை நம்பி ஏமாந்திராதீங்க. அவரு எல்லாருக்குமே அண்ணன்

    ReplyDelete
  21. நானும் அப்துல்லா அவர்களை ஒரு தடவை பார்த்திருக்கிறேன். எனக்கும் ஒரு புத்தகம் அன்புப் பரிசா கொடுத்திருக்காங்க...

    ReplyDelete
  22. அப்துல்லாவை ப‌ற்றிய‌ உங்க‌ள் ப‌திவு உண்மை...அன்பை வெளிப்ப‌டுத்தும் உங்க‌ள் ப‌ண்புக்கு என் ச‌ல்யூட்..

    ReplyDelete
  23. உங்களின் பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன்.....என்னை மிக ஆச்சர்ய பட வைத்த பதிவர்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  24. A meaningful post on celebrating friendship. Keep up the good work, Jackie.

    ReplyDelete
  25. :)

    இந்த மாதிரி சின்னதா வந்துட்டு / படிச்சிட்டு போனதா அடிக்கடி கமென்ட் போடும் அப்துல்லா அண்ணனின் வாடிக்கைதான் இப்ப நான் பயன்படுத்துறது !

    :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner