AVAN IVAN-2011-அவன் இவன் திரைவிமர்சனம்.



பாலாவின் முந்தைய படங்களை பார்த்தவர்கள் இந்த படத்தில் என்ன புதுமை என்று கேட்க வாய்ப்பு இருக்கின்றது...
அதே விளிம்பு நிலை மனிதர்களின் கதை..தலைக்கு எண்ணெய் வைக்காத மனிதர்களின் கதைகளை இன்னும் எத்தனை காலத்துக்கு எடுத்துக்கொண்டு இருப்பார் என்று பிரபல தொலைகாட்சி திரைவிமர்சன பெண்மணி வருத்தப்படுவார்... ஆனால் அவர் வருத்தபடுவதில் கொஞ்சம் நியாயம் இல்லாமல் இல்லை...ஒரு இயக்குனர் பல தளங்களில் பயணிக்கவேண்டும்... எந்த எல்லைக்கோட்டுக்குள்ளும் சிக்கிக்கொள்ள கூடாது.. 


உதாரணத்துக்கு கிராமத்திய கதைகள்மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகம் ஆனாலும் டிக் டிக் டிக், சிவப்பு ரோஜாக்கள் என்ற அசத்திய பாரதிராஜாவையும் பல தளங்களில் பயணித்த பாலச்சந்தர் போண்றவர்களையும் உதாரணமாக சொல்லாம்... ஆனால் பாலாவின் குரு பாலுமகேந்திராவிடம் இது போல கேள்வி ஒரு முறை முன்வைக்கபட்டது... எப்போது பார்த்தாலும் இரண்டு பெண்டாட்டி கதைகள் மட்டுமே உங்கள் படைப்புகளில் அதிகம் இருக்கின்றதே என்று கேட்ட போது...அது போல 200 திரைபடங்களுக்கு மேல் இயக்க என்னிடத்தில் கதைகள் உண்டு என்று சொன்னார்.... அது போல விளிம்பு நிலைமனிதர்களின் கதையை சொல்ல  லட்சக்கணக்கான கதைகள் இருக்கின்றன... அதை பாலா செய்து வருகின்றார்....


இதுவரை 5 படங்கள்  இயக்கி இருக்கின்றார்....அதனால் அவரை அந்த வட்டத்துக்குள் அவரை அடைத்து விட முடியாது.... அப்படியே அவர் தொடர்ந்து இது போன்ற படங்கள் எடுத்தாலும் அது ஒரு படைப்பாளியின் சுதந்திரம்..இந்த படத்திலும் பாலாவின் கிளிஷே  நிறைய இருக்கின்றது என்று சிலர் சொல்லுகின்றனர்...உலக அளவில் சிறந்த இயக்குனர் என்று போற்றபடும் ஸ்பீல்பெர்க், ஒரு சில படங்களை தவிர எல்லா படங்களிலும்ம்  நினைத்து கூட பார்க்கமுடியாத, ஏதோ ஒன்று, அது என்ன?? என்ற விஷயத்தைதான் கதைகளனாக கையாண்டுக்கொண்டு இருக்கின்றார்....


கிளிஷே... என்பது ஒரு காட்சியை திரும்ப திரும்ப எடுப்பது என்று சொன்னாலும் அதே கிராமம், அதே மனிதர்கள்,என்று  திரும்ப திரும்ப கிளிஷேவாக எடுக்கின்றார் என்று சொன்னால் அப்புறம் எப்படித்தான் படம் எடுப்பது?? சோத்துக்கையால் சாப்பிடுகின்றோம் பீச்சாங்கையால் சூத்தை கழுவுகின்றோம்.... இதையும் கொஞ்சநாளில் கிளிஷே என்று சொல்லிவிடுவார்கள் போல....
 ==============
அவன் இவன் படத்தின் கதை என்ன?,


ஆனந் வைத்தியநாதன் (ஏர்டெல் சூப்பர் சிங்கரில் குரல் எக்ஸ்பப்ட்டாக வருவாரே அவரேதான்..)  அவருக்கு இரண்டு பொண்டாட்டிங்க...மூத்த சம்சாரம்அம்பிகா மகன் விஷால் மாறுகண் மற்றும் பெண்சாயல் கொண்டவன்.. காரணம்  நடிப்பு ஆசையும் அதிகம்.. இரண்டாவது பொண்டாட்டி பையன் ஆர்யா.... பரம்பரை பரம்பரையா திருட்டு நடத்தும் குடும்பத்தினர்... அந்த ஏரியாவே அப்படித்தான்.. ஊர்ல எந்த பொருள் காணம போனாலும் நேர அந்த குடியுருப்புக்குதான் போலிஸ் வரும்...அப்படி பட்ட நபர்களோடு தனது சொத்துக்களை எல்லாம் பறிகொடுத்த  ஹைனஸ் என்று அழைக்கபடும் (ஜிஎம் குமார்) ஜமீன்தார்....அவருக்கு வாரிசு இல்லை.. அதனால்  விஷால் ஆர்யாவை தன் பிள்ளைகள் போல் வளர்க்கின்றார்...இருவரும் திருட்டு தொழிலில் ஈடுபடுவதை அவர் அரவே விரும்பவில்லை..ஆனால் ஜமீன்தார் ஒரு நாள் படுகொலை செய்யபடுகின்றார்.. காரணம் என்ன தியேட்டரில் போய் பாருங்கள்..
 =================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இரண்டு ஹீரோக்கள் படம் என்றதும்  இந்த படத்தில்  யார் கொடுரமாக இறக்க  போகின்றார்கள் என்று யோசித்து போனேன் அப்படி ஏதும் நடக்கவில்லை..

பாலாவின் படங்களிலேயே... வெகு சீக்கரமாக திரை அரங்கை  காண வந்த படம் இது ஒன்றுதான்....

பாலா படங்களில் ஹீரோ பிம்பத்தை  முதலில் சுக்கு நூறாக நொறுக்கி விட்டுதான் கதை  சொல்ல ஆரம்பிப்பார்... இந்த படத்திலும் அது தொடர்கின்றது... இதை  ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை எடுக்கும் படங்களில் இந்த ஹீரோ இமேஜை கட்டுடைத்தாலே இன்னும் நல்ல படங்கள் வரும் என்ற உறுதியாக சொல்லலாம்....

விஷால் தனது பிலிமோகிராபியில் இந்த படத்தை தனது பெஸ்ட் என்று மார்தட்டிக்கொள்ளலாம்... என்னதான் படத்தை பற்றிய எதிர்மறைவிமர்சனங்களை காதில் வாங்கினாலும் விஷாலின் உடல்மொழிக்கு இந்த படத்தை  சினிமா ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்..பெண்சாயல் மற்றும் ஆண்சாயலுக்கு அவர் திடும் என்று மாற்றும் உடல்மொழிகள் அற்புதம்...

இதுவரை தமிழ் திரைஉலகில் குத்து டான்ஸ் என்றால் என்ன? என்ற கேட்கும் அரிச்சுவடிகளுக்கு ,முதல் காட்சியில் ஓத்தா இதுதான் குத்து என்று சொல்லி விஷால் போடும் அந்த ஆட்டம் அதகளம்... சான்சே  இல்லை... இந்த குத்தை யாரும் மிஸ் செய்யாதீர்கள்...
 ==========
வசனங்கள் பளிச்...

உட்கார எடத்துல சதையே இல்லை என்று பெண் போலிசிடம் சொல்வதும்..

ஆம்பளைங்க பேன்ட்ல ஜிப்  வச்சி இருப்பது நியாயம்... ஆனா பொம்பளைங்க பேன்ட்ல எதுக்கு ஜிப்...?? என்று விஷால்  தன் காதலி பொம்பளை போலிசிடம் உன் பேன்ட்டில் ஜிக் இருக்கா இல்லையா என்பதும்.. கல கல....

ஹைனஸ் நீ சொல்லு பீயக்ககூட தின்னறன்.. ஆனா வெட்டி விடுன்னு சொல்லாத.....

விஷால் அம்மா அம்பிகாவிடம் துணி துவைத்துக்கொண்டு இருக்கும் போது ஏன் அம்மா நீ புறா (பிரா) போடுவதில்லை என்று கேட்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு...

எல்லாவற்றையும் விட ஆர்யாவை பார்த்து அம்பிகா அவன் குஞ்சாமணியை பிடித்தே ஒன்னுக்கு அடிக்க தெரியாது.. அவனெல்லாம் திருடிட்டுவரான் என்று ரேக்குவதும்..அதே ஆர்யா எனக்கா என் குஞசாமணியை  எடுத்து ஒன்னுக்கு அடிக்க தெரியாது என்று கேள்வி கேட்கின்றார்....

விளிம்புநிலைமனிதர்களின் பேச்சை மிக சாதாரணமாய் இந்த படம் வசனங்கள் மூலம் பதிவு செய்கின்றது.... நன்றி எஸ்ரா...

இன்னும் ஒரு வாரத்து பல இன்டலெக்சுவல் கட்டுரைகள் இந்த படத்தை பற்றி ஆக்கரமிக்கும் என்பதில் சிறுதும் ஐயம் இல்லை..  


விஷால் எப்படியோ அதே போல ஜிஎம்குமார் அசத்தி இருக்கின்றார்.. நிர்வாணமாக நடித்து இருக்கின்றார்...


ஆர்யாவும் அவர் அம்மாவும் போடும் ஆட்டம் அசத்தல்..

விஷால் போலிஸ் நடத்தும் கெடாவெட்டுக்கு ஒரு டிரஸ் போட்டுக்கொண்டு புல்லட்டில் வரும் காட்சியை நான் ரொம்பவே ரசித்தேன்..

விஷாலுக்கும் ஆர்யாவுக்கு நடக்கும் காதல்கள் போகின்ற போக்கில் சொல்லிவிட்டு போகின்றார்... என்ன லாஜிக் என்று கேள்வி எழுப்புவது நிஜம்... இன்னும் நம் பார்வைகள் விசாலமாகவில்லை நமக்கு டிடேயிலாக சொல்ல வேண்டும்...

இந்த படத்தின் பெரிய மைனஸ் என்றால் ஒரு வில்லன் திடு திப் என்று வந்து நிற்பதுதான்.....

மாடுகளுக்கு இடையே விஷால் மற்றும்  ஆர்யா  ஆர்கேவோடு போடும்  சண்டையில் சாணியில் போட்டு பிராள்வது தமிழ்  நடிகர்கள் யோசிக்கும் இடம்...

பழைய படங்களின் சாயல் நிறைய இடங்களில் துருத்திக்கொண்டு இருப்பதை தவிர்க்க முடியவில்லை...அதை கிளிஷே என்று சொல்லுவார்கள்... ஆனால் என்னை பொறுத்தவரை சூர்யா வருவதை அப்பட்டமாக கிளிஷே என்பார்கள்...

ஆர்தர் வில்சன் கேமரா... பல இடங்களில் முக்கியமாக லோ ஆங்கில் காட்சிகளில் அசத்து கின்றது...
யுவனின் முதல் குத்து மீயூசிக்கை ரசிக்க முடிகின்றது...ஆனால் பல இடங்களில் அப்படி ஒன்றும் சிலாகிக்க முடியவில்லை...

விஷால் காதலி பெண்போலிஸ் கூட வரும் பொம்பளை போலிஸ் ஏனோ என் மனதில் நிற்கின்றார்..
அந்த குட்டிபையன் பல இடத்தில் சிரிக்கவைக்கின்றான்.. சில இடங்களில் ......

பாலா இன்னும் ஒரு வாரத்துக்கு தமிழ் வலையுலகை கவனித்து வாருங்கள்....உங்களுக்கே தலைசுற்றும்...
================
படக்குழுவினர் விபரம்
 Directed by     Bala
Produced by     Kalpathi S. Aghoram
Kalpathi S. Ganesh
Kalpathi S. Suresh
Written by     S. Ramakrishnan (dialogue)
Screenplay by     Bala
Story by     Bala
Starring     Vishal Krishna
Arya
Janani Iyer
Madhu Shalini
G. M. Kumar
Music by     Yuvan Shankar Raja
Cinematography     Arthur A. Wilson
Editing by     Suresh Urs
Studio     AGS Entertainment
Distributed by     AGS Entertainment
Release date(s)     June 17, 2011
Country     India
Language     Tamil
 =====================
படத்தின் டிரைலர்....



 ======================
தியேட்டர் டிஸ்கி....

இந்த படம் பெங்களூர்... தாவக்கரை லட்சுமியில் பார்த்தேன்... மேட்னிக்கு ஹவுஸ்புல் ஆனதை வைத்து பார்க்கும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை உணர முடிகின்றது...
 ===========


பைனல்கிக்....
இந்த படம் பாலாவின் வழக்கமான படம் போலவே இருக்கின்றது என்று ஒரு குற்றசாட்டும்... செமையாக இருக்கின்றது என்ற ஒரு ரிசல்ட்டும் நிலவுகின்றது.... என்னை  பொறுத்தவரை இந்த படம்  பார்த்தே தீரவேண்டியபடம் அல்ல... அதே வேளையில் படம் குப்பை என்று சொல்லிவிடமுடியாது.... இந்த படம் பார்க்கவேண்டியபடம்..... அவ்வளவுதான்..சிலரை மகிழ்விக்கலாம் சிலரை சங்கடபடுத்தலாம்... இது எனது பார்வை மட்டுமே.


 பிரியங்களுடன்
 ஜாக்கிசேகர்



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)


EVER YOURS...

19 comments:

  1. ரைட்டு,,, பார்க்க வேண்டிய படம்..

    ReplyDelete
  2. படம் பார்க்கும் எல்லாருமே நிறைய இடங்களில் கைதட்டி ரசிச்சு சிரிச்சாங்க
    இந்த மாதிரி responce தியேட்டர்ல பார்த்து ரொம்ப நாள் ஆச்சு
    சொல்ல போன படத்தில் கதை என்ற ஒன்று இல்லவே இல்லை
    இருந்தாலும் அந்த characterisation க்காக நாலு தடவைனாலும் படத்தை பார்க்கலாம் சார்

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம். படத்தை பாதிக்காத பாக்க தூண்டுகிற விமர்சனம். வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்.
    நாளைக்கு படத்த பாத்துடு வாரம்

    ReplyDelete
  4. என்ன ஜாக்கி உங்கள் விமர்சனம் உங்களை நிங்களே சமாதனப்படுத்திக்கொள்வது போல் இருக்கிறது. நேரடியாக இது ஒரு மொக்கை படம் என்று சொல்லி இருக்கலாம். வருடத்திற்கு ஒரு படம் எடுக்கும் clint eastwood பல கதைகளை எடுக்கும் போது ஒறே கதையை பாலா remake செய்திருக்கிறார். திரைகதையில் சொதப்பல், 1 கோடி மரம் என்ன ஆச்சு, போலிஸ் விட்டுட்டாங்கலா ஒன்னும் புரியல. விஷால் நடிப்பு மட்டும் ஒகே மொத்தத்தில் இது பிதாமகன் part II

    ReplyDelete
  5. boring ...movie.

    BALAA - better luck next time.

    ReplyDelete
  6. எஙக ஊர்ல பாலா & குரூப் சுமார் 25 நாள் தங்கி எடுத்த படம். அதில் வரும் கல் கட்டிடத்தில்தான் அனேக நாட்கள் சூட்டிங். பார்க்கணும்...

    ReplyDelete
  7. உங்க விமர்சனம் தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன். நன்றி.

    ReplyDelete
  8. படம் ஹிட்டாகும்னு நினைக்கிறேன்.ஆனாலும் சில சீன்கள் அவரின் முந்தைய படங்களை ஞாபகப்படுத்துவதை மறுக்க முடியாது.
    -அருண்-

    ReplyDelete
  9. //பாலா இன்னும் ஒரு வாரத்துக்கு தமிழ் வலையுலகை கவனித்து வாருங்கள்....உங்களுக்கே தலைசுற்றும்...//

    சூப்பர் ஜாக்கியண்ணே..

    ReplyDelete
  10. டைம் பாஸ் படம் ..சிரிக்க வேண்டிய காட்சிகள் நிறைய இருக்கின்றன.பாலா என்ற எதிர்பார்ப்பினை மூட்டை கட்டி சென்றால் போதும்..படம் நன்றாக இருக்கிறது .

    ReplyDelete
  11. பெருசு மறுபபடியும் ஆட்சி ல இருந்திருந்தா இந்த படத்தயும் உதய நிதி ரிலீஸ் பண்ணி இருப்பாரு. நல்ல வெளை அகொரம் தப்பிச்சுட்டாரு ..என்ன ஜாக்கி கரெக்ட்டா?

    ReplyDelete
  12. vimarsanam ok anal intha padatha yaravathu puthiyavargal eduthal eppadi irunthirukkum unga vimarsanam>/

    ReplyDelete
  13. எதை சொல்ல வேண்டுமோ அதை நாசுக்காக சுட்டி காட்டி படைப்பாளிக்கு மரியாதை செய்துள்ளிர்கள். பாலா கண்டிப்பாக தமிழ் சினிமா இன்னும் மலைக்க வைக்கும் திரைபடங்களை எதிர்காலத்தில் அளிப்பார்!!

    ReplyDelete
  14. Sooper thala..Cable maathiri sothapiduveengalonu nenchen..u rocks!!!

    ReplyDelete
  15. ஒரே மாவுல தோசை இப்ப இட்லி , மொத்ததுல அரச்ச மாவு. பாலா சார் தான் கதை சொல்றார் பட் படம் கதை சொல்லல. இது என்னோட வியு . தவறு என்றால் மன்னிக்க.

    ReplyDelete
  16. ஒரு திரைப்படம் அந்த 2 மணித்தியாலங்களும் ஒரு பார்வையாளனை மகிழ்விக்கவே... அந்த வகையில் படம் பார்க்க வருபவர்களுக்கு இது ஒரு மெகா விருந்து...
    சூப்பர் விமர்சனம்....
    தொடரட்டும்...........

    ReplyDelete
  17. வணக்கம் தோழரே. அதிகம் பார்வையிடும் தமிழ் வலைப்பூ நிறுவரின் பொறுப்பு உங்கள் தட்டச்சில் தெரிகிறது. எதார்த்தமான விமர்சனம்... நன்றி நண்பரே

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner