சென்னைடூகடலூர் பேருந்து பயணம்/கடலூர் டூ சென்னை பைக் பயணம்..(பயண அனுபவம்/பாகம்1) 07/06/2011

 
என் மனைவியின் கசின் லக்ஷமன் கடலூரில் ஹீரோஹோண்டா ஷைன் புக் செய்து இருந்தான்..
சென்னையில் அந்த வாகன்ம் கிடைப்பதில்லை அதனால் கடலூரில் எங்கள் சொந்த ஊரில் புக் செய்து இருந்தான்.. ஷைனை சென்னை எடுத்துவர பார்சலில் போட்டால் எப்படியும் புது வண்டியில் மார்டன் ஆர்ட் வரைந்து விடுவார்கள் என்பதால், அந்த வாகனத்த கடலூரில் இருந்து எடுத்து வர என் உதவியை அவர்கள் அம்மா கோரி இருந்தார்கள்.. கசின்னுக்கு இப்போதுதான் கீர் வைத்த வண்டியை ஓட்ட கற்றுக்கொண்டு இருக்கின்றான்...

175 கிலோமீட்டர் சென்னை டூ கடலூர் இடையே நான் ஒரு 100 முறைக்கு மேல் பயணம் செய்து இருக்கின்றேன்.. அதக பட்சம் 4 மணிநேரம் எடுத்துக்கொள்வேன்...

 முக்கியமாக நானும் என் மனைவியும் காதலித்த காலங்களிலும் சரி... திருமணத்துக்கு பிறகும்சரி... பல முறை சென்னை கடலூர் பைக் பயணம் செய்து இருக்கின்றோம்...பைபாசில் 60 கீலோமீட்டர் மிதமான வேகத்தில் நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்தி தேனீர் அருந்தி செல்வதிலும் ரோட்டோர கடைகிளில் சிற்றுண்டி முடித்து செல்வதிலும் ஒரு அலாதியான  சந்தோஷம் இருக்கும்....

விடியலில் ஐந்தரை மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பினால் காலை எட்டு மணிக்கு திண்டிவனத்தை அடைந்து விடுவோம்.திண்டிவனத்தை தாண்டி பல ரோட்டோரகடைகள் இருந்தாலும் ராமதாஸ் பெட்ரோல் பங்க் முன் இருக்கும் ஏழை கடையில் டிபன் சாப்பிடுவதில் எங்களுக்கு நிரம்ப சந்தேஷம் உண்டு....என்னது கடை பேரே ஏழையா? ஆமாம்...காலையில் எட்டு மணிக்கு சூடான இட்லி,பூரி, வடை எல்லாம் இருக்கும்..முக்கியமாக மல்லாட்டை சட்னி, ஏழைகடையின் ருசியின் சிறப்பு... எப்படித்தான் பசியில் தின்று தீர்த்தாலும் 35 ரூபாய்க்கு மேல் இரண்டு பேர் சாப்பிட்டாலும் அதுக்கு மேல்  ஆகாது..
எங்கள் திருமணம் கடலூரில் நடந்தது... நான் அந்த எழைக்கடை ஓனருக்கு, பத்திரிக்கை வைத்தேன்... வரமுடிகின்றதோ இல்லையோ? உங்கள் ஆசி வேண்டும் என்றோம்... இப்போது போனாலும் ஐயா நலமா இருக்கிங்களா? என்று வாஞ்சையோடு விசாரிப்பார்... இப்போது அந்த பக்கம் போனேன் சாலை அகலபடுத்தலில் அந்த கடையே முற்றிலும் மாறிப்போய் விட்டது.. அதே போல் இப்போது நிறைய கடைகன் அவர் வைத்து இருப்பது போல அவர்கடைக்கு பக்கத்தில் பல கடைகள் புற்றிசல் போல பெருத்து விட்டது....

பொதுவாக இரு சக்கர வாகனத்தில் கடலூர் செல்ல முக்கியகாரணம் அங்கு போய் அவசரத்துக்கு எங்கும் இரு சக்ர வாகனம் இல்லாமல் போக முடியாது...அப்படியே வாகனம் எடுத்து செல்லாமல் போனால்..  சொந்தங்களிடம் வண்டி உடனே கிடைக்காது.. மாமா பேங்குக்கு போவார், இரண்டு மணிக்கு ஸ்கூலுக்கு போவனும், அதனால் அதுக்குள்  வண்டியை எடுத்துக்குனு வந்து விடு போன்ற கட்டுதிட்டங்கள் எனக்கு அறவே பிடிப்பதில்லை.. அதனால் வண்டியை ஊருக்கு எடுத்து சென்று விடுவது........ நான்கு மணிநேரம் பயணம்.. ஆனால் விழிப்பாய் ஓட்ட வேண்டும்.

மனைவியோடு போகும் போது சட்டென அரவிந்தர் ஆசிரமம், பஞ்சவடி, ஊரில் இருக்கும் திருவந்தபுரம் தேவநாதசாமி கோவில், பாண்டி பீச் போன்றவற்றை வண்டி இருந்தால் எளிதில் அந்த இடத்துக்கு போய்விடலாம் என்பதால்....ரொம்ப போர் அடித்தால் ஒரு சினிமா கூட பார்க்கலாம்... அப்படி சென்னைக்கு வரும் போது ரொம்ப வெயில் இருந்த காரணத்தால் சித்தரம் பேசுதடி படத்துக்கு போனோம் இந்த படத்தை பாண்டி பாலாஜியில் பார்த்தோம்..

ஆனால் இந்த பயணங்களில் நிறைய ரிஸ்க் மற்றும் விபத்துகளை நான் சந்தித்து இருக்கின்றேன்.. அது பிரிதொரு நாளில் சொல்கின்றேன்..

கடந்த ஏழாம் தேதி..கடலூரில் இருந்து அந்த ஷைன் வண்டியை எடுத்து வர காலையில் சென்னையில் இருந்து கிளம்பினேன்... நண்பர் ஒருவர் எல்என்டியில் வேலை செய்கின்றார் அவர்  ஆபிஸ் கிளம்ப, அவர் வண்டியில் தொற்றி, கொளப்பாக்கத்தில் ஏறி ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டம் அருகே இறங்கி கொண்டேன்..அங்கு இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறினேன்...நத்தம்பாக்கத்தில் இரண்டு பெண்கள் என் பக்கத்தில் உட்கார்ந்தார்கள்.. அவர்கள் அவசரத்தில் அடித்து விட்ட வந்த பர்ப்பியும் காலையிலே எனக்கு தலைவலியை உருவாக்க வெகுதீவிரமாக போராடியது... எப்போது இறங்குவோம் என்று இருந்தது...

ஜோதி தியேட்டர்  எதிரே இருக்கும் ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தில் நின்றேன்..170 வண்டலூர் பேருந்து வந்தது...  பெருங்களத்தூருக்கு டிக்கெட் எடுத்தேன்.. பேருந்தில்கனிசமான கூட்டம்..நான் நின்ற இடத்தல் இருந்து ஒரு நான்கு பேரை தாண்டி முன்னே ஒரு சுடிதார் அணிந்த பெண்ணின் அந்த பளிர் கழுத்தும், அதில் இருக்கும் சன்னமான ஹால்மார்க்கு செயினும் அந்த  பெண்ணின் முகத்தை பார்க்க வேண்டிய நிர்பந்தத்தை என்னுள் ஏற்படுத்தின.. காரணம் அது  மெல்ல திறந்தது கதவு அமலா போல, அந்த பெண்ணுக்கு கொக்கு கழுத்து... பேருந்து  தாம்பரம் வந்தது... எல்லோரும் இறங்க, அமலா எனக்கு நேர் எதிர் சீட்டுக்கு இரண்டு சீட்டு முன்னே போய் உட்கார்ந்தாள்.. நான் இப்போதும் முகம் பார்க்கவில்லை...முகம் பார்க்காமலே மோகன் போல இறங்கி விடுவோம் என்று நினைத்துக்கொண்டு இருந்த போது........அமலாவும் பெருங்களத்தூரில் இறங்கினார்...முகத்தையும் முழு உடம்பையும் பார்த்து விட்ட காரணத்தால் நான் அந்த பெண்ணைமெல்லதிறந்து கதவு அமலாவோடு ஒப்பிட முடியவில்லை.. அதனால் அந்த பெண்ணுக்கு கொக்கு என்று   பெயர் வைக்கலாம்..  கழுத்தில் அந்த பெண் தொங்க விட்ட ஐடியில் பெயர் பார்த்தேன்.. கேவில் ஆரம்பிக்கும் அந்த பெயரோடு அவளது அப்பாவின் பெரும் இணைத்து இருந்தது..

கடலூர் பேருந்து வந்தது ஸ்டேன்டிங் என்று  கண்டக்டர் சொன்னார்.. கோயம்பேட்டில் புறப்படும் பேருந்து பெருங்களத்தூரில் உட்கார சீட் கிடைக்கும் என்று நினைக்க நான் என்ன பைத்தியமா??? நான் ஏறினேன் பின் பக்கம்  நின்று கொண்டேன்..... கண்டக்டர் டிக்கெட் போட்டு முடித்ததும் பின்பக்க படியில் உட்கார்ந்து கொண்டேன். பொதுவாக அவசர பயணங்களில் பின்பக்க படியில் உட்கார்ந்து கொண்டு பயணித்து விடுவேன்.. நான்கு மணிநேரம்தானே பயணம்...


செங்கல்பட்டு பைபாசில் பாலத்துக்கு பக்கத்தில் சுவாமி ஜய்ப்பா என்று  ஒரு கோவில் பார்த்து திடுக்கிட்டு விட்டேன்.. ஐயப்பன் எப்போது வந்து இங்கே டேரா போட்டார்? என்று யோசித்து பயணம் செய்தேன்.. இத்தனை நாள் கவனித்து விட்டு இன்று மறந்து போய்விட்டேனா--? என்று தெரியவில்லை...


காலையில் எதும் சாப்பிடாமல் பேருந்தில் ஏறியதால் பசி உயிரை எடுத்தது... செங்கல்பட்டு முன்னால் இருக்கும் முதல் டோல்பூத்தில் பேருந்தையும், காரையும் விரட்டி  விரட்டி விற்பனை செய்யும் வியாபாரிகள்.. எங்கள் பேருந்தையும் விரட்டினார்கள்.. உட்கார்ந்து இருப்பவர்களை மிதித்து விட்டு உள்ளே செல்வது போல ஒருவன் ஏற, கண்டக்டர் கத்த அவன் இறங்கினான்.. வேறு ஒருவன்.. பத்துரூபாய்க்கு பலாச்சுளைகளை விற்றான்... அது பாலித்தீனில் சிறைபிடிக்கபட்டு  கன்னிதன்மையோடு இருந்தது..

பசியால் ஒரு பாக்கெட் வாங்கினேன், பலா பழங்களை பிதாமகனில் சூர்யாவும்,விக்ரமும் உறிப்பது போல் உறித்து தின்று தீர்த்தவர்கள் நாங்கள்...ஆனால் ஒரு போதும் காலை டிபனாக பலா பழத்தை நான் சாப்பிட்டதில்லை..இப்போது சாப்பிடுகின்றேன்..ஒரு பழத்தை எடுத்து சாப்பிட்டு விட்டு அந்த பலா கொட்டையை ரோட்டில் விசிறி எறிந்த போது, என் அம்மா கத்துவது எனக்கு நினைவுக்கு வந்தது... அது போல விசி எறியாமல் அந்த பலாக்கொட்டைகளை  அம்மா சேகரித்து காராக்குழப்பில் போட்டும், பலாக்கொட்டையை அடுப்பில் வாட்டியும் தின்ற சுவைகள் இன்னும் நினைவில் இருக்கின்றது... அடுத்த அடுத்த பலாச்சுளைகள் தின்று விட்டு கொட்டையை ரோட்டின் ஓரத்தில் ஒவ்வோரு முறை வீசி எறியும் போது அம்மா  கத்துவது பிளாஷ் கட்டில்  வந்தபடி இருந்தது...


ஏற்கனவே இளையாராஜாவின் 350 பாடல்களை என் கைபைசியில் சேமித்து வைத்துக்கொண்ட காரணத்தால் காதில் செவிட்டு மெஷின் வைத்துக்கொண்டு பாடலை கேட்டு முனு முனுத்துக்கொண்டு சென்றேன்..

திண்டிவனத்தில் சிலர் இறங்கி ஏறினார்கள்.. காலையில் வேலைக்கு செல்லும் பல ஆண்ட்டிகள் ஏறினார்கள்..ஒரு ஆண்ட்டி அவர் வயதில் ஐந்து வயது இளமையை குறைக்க ரொம்பவும் பிரயாத்தனம் பட்டு இருந்தது, அவரது சீரான புருவம் சொல்லியது... அந்த புருவத்தை திரட்டு போட்டு பியூட்டி பார்லரில் பிடுங்கும் போது, இந்த ஆண்ட்டி எப்படி வலியில் ரியாக்ஷன் முகத்தில் கொடுத்து இருப்பார் என்று நினைத்து பார்த்து சிரித்து விட்டேன். பின்னால் பெரிய அளவில் ஜாக்கெட்டை இறக்கி தைத்து இருந்தார்.. அந்த பகுதியில் தினசரி நாலுகாட்சிகள்.. என்று சிலைட் போட்டு விளம்பரம் செய்யலாம் எனும் அளவுக்கு இறக்கி இருந்தார்..

பாண்டி போனேன் கடலூர் டிக்கெட் வாங்கி இருந்தாலும் ஏன் பாண்டியில் இறங்கி ஒரு குவாட்டர் சாப்பிட்டு விட்டு இன்னும் உற்சாகமாக கடலூரில் போய் இறங்க கூடாது.. என்றே கேள்வியை அறவே தவிர்த்தேன் .. போய்உடனே கடலுரில்  இருந்து இரு சக்கரவாகனத்தில் கிளம்பவேண்டும் என்பதால் அந்த எண்ணத்தை, பிடித்த துண்டு சிகரேட்டை ஆஷ்ட்ரேயில் வைத்து நசுக்குவது போல நசுக்கிவிட்டேன்...

சொந்தமண்ணில் இறங்கினேன்..வீட்டில் பெராலிஸ் அட்டாக்கில் படுத்து இருக்கும் அப்பாவுக்கு சிலிர்த்தேதோ இல்லையோ எனக்கு சிலிர்த்து...அப்பாவை  போய் பார்த்தேன்..என் மகளை பற்றி விசாரித்தார்...500 காந்தியை அவர் கையில் திணித்தேன்.. நண்பர் லட்சுமிநாரயணனை சந்தித்தேன்.. நன்றாக சாப்பிட்டோம், ஒரு காலத்தில் ஊருக்கு  எல்லையில் இருந்த அய்யனாரிடம் போய் ஹலோ சொல்லி நலம் விசாரித்தோம்.. சில வாரங்களுக்கு முன் அய்யானருக்கு திருவிழாவின் போது நேர்ந்து விடப்பட்ட மண் குதிரைகள் உடைந்து கிடந்தன.. தங்கைகள் அனைவரையும் பார்த்தேன்.......விடைபெற்றேன். அவென்சர் அடுத்த பகுதியில்....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

 
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

11 comments:

  1. இதெல்லாம் படிக்கும் பொது எப்படா நம்மளும் இப்படி எல்லாம் போவம் எண்டு ஆவலா இருக்கு

    ReplyDelete
  2. ஹாய் ஜாக்கி,

    நீண்டதூர பைக் பயணங்களில் கவனிக்க வேண்டியவை பற்றி எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அனுபவங்கள் எங்களுக்குப் பாடமாக அமையும். உதாரணமாக சுமார் பதினைந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பங்க்சர் கடை இல்லாத, அதிக ஆள் நடமாட்டமில்லாத இடத்தில், டயர் பங்கசர் ஆனால் நீங்கள் எப்படி சமாளிக்க முயல்வீர்கள்? கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படை மெக்காநிசங்களாக நீங்கள் கருதுவது என்ன? அனைவரும் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம். நன்றிகள் பல. பொழுது போக்கையும் தாண்டி இப்படி பயனுள்ள பல விஷயங்களை எழுதுவதுதான் உங்கள் சிறப்பு நண்பரே.
    அன்புடன்
    செல்வா.

    ReplyDelete
  3. //பலாச்சுளைகளைத் தின்று விட்டு, கொட்டையை ரோட்டின் ஓரத்தில் ஒவ்வோரு முறை வீசி எறியும் போதும் அம்மா கத்துவது பிளாஷ் கட்டில் வந்தபடி இருந்தது...//

    //அந்த பகுதியில் 'தினசரி நாலுகாட்சிகள்' என்று சிலைடு போட்டு விளம்பரம் செய்யலாம் எனும் அளவுக்கு இறக்கி இருந்தார்..//

    //அந்த எண்ணத்தை, பிடித்த துண்டு சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் வைத்து நசுக்குவது போல நசுக்கிவிட்டேன்...//

    இவ்வளவு சிறப்பாக எழுதுகிறீர்கள்! ஆனால் இதே தளத்தில் முன்பு ஒரு சிறுகதை எழுதியிருந்தீர்கள், அதில் ஏன் இந்த எழுத்தோட்டம் இல்லை?

    ReplyDelete
  4. பின்னிப்பெடலெடுக்கும் நடை..//முகம் பார்க்காமலே மோகன் போல இறங்கி விடுவோம் // //பின்னால் பெரிய அளவில் ஜாக்கெட்டை இறக்கி தைத்து இருந்தார்.. அந்த பகுதியில் தினசரி நாலுகாட்சிகள்.. என்று சிலைட் போட்டு விளம்பரம் செய்யலாம் எனும் அளவுக்கு இறக்கி இருந்தார்..//
    லாஜிக் கொஸ்டின்..வண்டி வாங்கும் ஒவ்னர் கசின் எங்க? கூட வரலையா?
    நெக்ஸ்டு..ஸ்ட்ரைட் பஸ் புடிச்சு போக மாட்டீங்களா? பாத்ரூம் போறதுன்னா கூட 2 டவுன் பஸ், 3 மொபசல் பஸ், 1 லாரின்னு போவீங்களா :))

    ReplyDelete
  5. "முகத்தையும் முழு உடம்பையும் பார்த்து விட்ட காரணத்தால் "

    Sorry . . . Konjam Over . . .

    ReplyDelete
  6. பைக் பயணத்துக்கு காத்து இருக்கிறேன்.....
    கடலூரில் ஷைன் எவளோ நாளில் கிடைத்தது??
    அப்படியே unicorn கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க....

    ReplyDelete
  7. சார் நீங்க கடலூரா ... நானும்தான்

    ReplyDelete
  8. Sir, Please change the Hot hotter hottest photos very oftenly.. Its boring..

    ReplyDelete
  9. //கசின் லக்ஷமன் கடலூரில் ஹீரோஹோண்டா ஷைன் புக் செய்து//

    ஜாக்கி ஹீரோ ஹோன்டா அல்ல வெறும் ஹோன்டா ஷைன் மட்டுமே

    சும்மா தமாசு

    ReplyDelete
  10. ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு நல்ல பயண பதிவு, அப்புறம் முதல் லைனில் ஹீரோ ஹோண்ட ஷைன் இல்லை ஹோண்ட ஷைன்

    ReplyDelete
  11. Hallo, porrur to tole gate is the nearest bus stop for mapsul buses,why you are Roaming arround the world via Ramapuram,guindy, பெருங்களத்தூரி

    Regards,
    swamy school kumar

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner