hello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்குமேல் காதல் வருமா??



40 வயதுக்கு மேல் காதல் வருமா? வரும் என்று சொல்கின்றார்க்ள்.. ஆனால் அந்த காதல் என்பது தன் கணவனிடம் மனைவியிடம் வர வேண்டும் அல்லவா?? ஆனால் பலருக்கு அது போல் வந்து தொலைக்கமாட்டேன்கின்றது... அதுதான் பிரச்சனை..


தமிழ் சினிமாக்களில் ஆண் மட்டுமே 40 வயதுக்கு மேல் அடுத்த பெண்னோடு தொடர்பு வைத்து இருப்பதாக காட்டுவார்கள்.. பெண்கள் வீட்டில் மஞ்சள் பூசி குளித்து சாமி கும்பிட்டு கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்வதாக காட்டுவார்கள்.. ஆனால் தமிழகம் எப்போதோ மாறிவிட்டது.. அதை எந்த சினிமாவும் பதிவு செய்வது  இல்லை..அப்படியே பதிவு செய்தாலும் காமெடிக்காக பதிவு செய்யபடுகின்றன.



தமிழகத்தில் ஒளிபரப்பாகும் தொலைகாட்சி தொடர்கள் ஓரளவுக்கு பிரதிபலிக்கின்றன...அதுவும் ஆழ்மன பிரச்சனைகளை அலசுவதில்லை.. தமிழகத்தில் இப்படி நடக்கவில்லை என்று  நீங்கள் சொல்ல முடியாது.. காரணம் தமிழகத்தில் நடக்கும்  கள்ளகாதல்  கொலைகள் அவைகளை நிருபிக்கின்றன. உளவியில் ரீதியாக எந்த படமும் 40வயதை கடந்த பிறகு தம்பதிகளுக்குள் ஏற்படும் வெற்றிடத்தை அலசவில்லை.. ஆனால் இந்த ருமேனிய படம், ரொமான்டிக்காக முடிந்தவரை அலசுகின்றது....


hello how are you/  உலக சினிமா/ருமேனியா படத்தின் கதை என்ன??

ஹெல்மர்,கேப்ரியளா இருவரும் தம்பதிகள். ஹேல்மேர் இசையை சொல்லிக்கொடுப்பவர். அவரது மனைவி  டிரைகிளினர்ஸ் ஷாப் வைத்து இருக்கின்றார்.. இருவருக்கு விளாடிமீர் என்று மேல்நிலைவகுப்பு படிக்கும் பையன் இருக்கின்றான்.. அவனுக்கு பெண்களோடு உறவு வைத்து இருப்பதுதான் அவனது பொழுது போக்கு..

ஹெல்மர்  கேப்ரியளா இருவருக்கும் இடையே பல வருடங்களாக தாம்பத்திய உறவே நிகழவில்லை. எந்திரத்தனமாக வாழ்க்கையை இருவரும் வாழ்க்கின்றார்கள்.. தம்பதிகள் இருவரும் நெட் சாட்டில் புது நண்பர்களை பெறுகின்றார்கள்.. அதனால் அவர்கள் வாழ்வில் நிகழும் மாற்றங்கள் மீதிகதை...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

நெட்சாட்டில் தம்பதிகளுக்கு நண்பர்கள் கிடைத்ததும் அவர்கள் இயல்பு வாழ்க்கை மாறுவதை மிக அழகாக சொல்லி இருப்பார்கள்..

விடிய விடிய நெட்சாட்டில் உட்கார்ந்து விட்டு வரும் அம்மாவை வித்தியாசமாக மகன் பார்ப்பதும் அதை வைத்து பெரிய பையன் போல் அம்மாவை மிரட்ட ஒரு  அறை விட்டு விட்டு  அந்த அம்மா நகர்ந்து போவது அருமை...

எந்த வயதில் வந்தாலும் அதுக்கும்   பெயர் காதல்தான்.. ஆனால் சின்ன பசங்கள் போல காதலையோ அல்லது காதல் உணர்வுகளையோ வயதானவர்களால் வெளிகாட்டிக்கொள்ளமுடியாது.. இதுதான் வயதான காதலில் இருக்கும் பெரிய பிரச்சனை..


தம்பதி இருவருக்கும் நெட் பற்றியும் கம்யூட்டர் பற்றியும் தெரியாது.. இருவரும் காதலுக்காக கம்யூட்டர் கற்றுத்தேர்வது சிறப்பு...

நண்பர்கள் கிடைத்ததும் இருவரும் உடைகளில் மாற்றத்தையும் உற்சாகத்தையும் முகங்களில்  அழகாக பிரதிபலிக்கின்றார்கள்..


இருவரும் இயல்பு வாழ்க்கையில்  அனைத்து வேலைகள் செய்யும் போது சாட்டில் இவர் பேசிய வாசகங்கள் டைட்டிலில் சைடில் மென்மையாக வந்து மறைவது நல்ல முயற்சி..இயக்குனர் ரசனை வெளிபடுத்தும் காட்சிகள்..

விளாடிமீரோடு அவனது கேர்ள்பிரண்ட் வாய்புணர்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் போது அவனது அம்மா சட்டென அவர்கள் இருக்கும் அறையில் உள்ளே வர .. அறிவுஇல்லை .. வரும் போது கதவை தட்டிட்டு வரக்கூடாதா? என்று அம்மாவை கேட்கின்றான்...பையன்...

அம்மாவும் எதுவும் பேசாமல் போய் விடுகின்றார்கள்.. இதே காட்சி நமம ஊரில் நடந்து இருந்தால் ஒரு சின்ன கற்பனை... நம்ம ஊர் அம்மாவாக இருந்தால் தொடப்பக்கட்டை பிச்சிக்கற அளவுக்கு பையனை அடிச்சிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்..நமக்கு விழும் அடிகளை விட, எங்க அந்த சிரிக்கி முண்டை... ஒன்னும் தெரியாத என் புள்ளையை என்னத்த காட்டி மயக்கின நார நாயே என்பதாய் சொல்லி அந்த பெண்ணுக்கு விளக்குமாத்து பூஜை நடக்கும்...

இருவருக்கும் கிடைக்கும் சாட் நண்பர்களுடன் அவர்கள் எல்லை மீறி சாட்டில் பேசும் போது ஏதோ  ஒன்றுதடுப்பது தான் தாம்பத்தியத்துக்கு அழகு..

படத்தின் கிளைமாக்ஸ்க்கு முன் ஒரு சின்ன டுவிஸ்ட்....அதை சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும்..

கல்யாணமானவனோடு காதல் வந்தால் என்ன விளைவுகள் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை, கேப்ரியளாவிடம் வேலை செய்யும் பெண் மூலம் கேப்ரியளாவுக்கும் பார்வையாளனுக்கும் காமெடியாக புரிய வைத்து இருப்பது அழகு..

கிளைமாக்சில் ஹெல்மர் நடத்தும்  இசை நிகழ்ச்சியில்  இருக்கும் சந்தோஷமும் அந்த  இசை கோர்வையும் அற்புதம்...

ஆண் எப்போதும் காலில் மிதித்து விட்ட அசிங்கத்தை கழுவுவது போல் எதுவாக இருந்தாலும் கழுவிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுகின்றான்.. ஆனால் பெண் அப்படி அல்ல... அவளின் குற்ற  உணர்ச்சியில் இருந்து அவள் மீண்டு வர சில காலம் ஆகும் என்று இயக்குனர் சொல்லி இருப்பது அனுபவத்துக்கு  சான்று...



இந்த படம்  சென்னை எட்டாவது உலக திரைப்படவிழாவில் திரையிடபட்டது...  சென்னை பிலிம் சேம்பரில் ஸ்கீரின் செய்யபட்டது..


படத்தின் டிரைலர்....




படக்குழுவினர்விபரம்...

Camera , Radu Aldea; editor, Mihai Codleanu; music, Dragos Alexandru; production designer, Mihaela Ularu, Andreea Hillerin; art director, Gerard Malet; costume designer, Nicoleta Carnu, Delia Adroer; sound (Dolby Digital), Marius Leftarache, Florin Tabacaru; special effects, Liviu Lungiou, Adrian Serbanescu; line producer, Loris Curci. Reviewed at Cannes Film Festival (market), May 18, 2010. (Also in Transylvania Film Festival.) Running time: 106 MIN.


பைனல்கிக்...

மென்மையான காதல் கதை... பிரச்சனைகளை மிக கவிதையாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...இந்த படம் பார்க்கவேண்டியபடம்தான்..ஆனால் மீஸ் பண்ணாமல் பார்க்கலாம்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

18 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஜாக்கி!

    எப்படி இந்த மாதிரி படம் பார்க்கிறிர் ,cd அல்லது
    torrent

    நம்ம ஆளுங்கள் இந்த பட சீன்களை சுட்டுவிட்டர்களா இல்லையா ?

    ReplyDelete
  3. //ஆண் எப்போதும் காலில் மிதித்து விட்ட அசிங்கத்தை கழுவுவது போல் எதுவாக இருந்தாலும் கழுவிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுகின்றான்.. ஆனால் பெண் அப்படி அல்ல... அவளின் குற்ற உணர்ச்சியில் இருந்து அவள் மீண்டு வர சில காலம் ஆகும் என்று இயக்குனர் சொல்லி இருப்பது அனுபவத்துக்கு சான்று..//

    அண்ணே! இப்பவும் அப்படியா?
    எனக்கு என்னவோ உல்டாவாக இருப்பது போல தோன்றுகிறது..நடைமுறையில் பார்த்த அனுபவங்கள்!

    ReplyDelete
  4. பங்காளி...

    உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    பட விமர்ச்சனம் அருமை... வித்தியாசமான படம்..

    ReplyDelete
  5. புத்தாண்டு வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கு என் நன்றிகள்...

    ஜீ நீங்க சொல்லறது நியாயம்தான்.. அதில் மாற்றுக்கருத்து இல்லை...

    இது போலான படங்கள் உலகபடவிழாவில் பார்த்தேன்... அந்த படத்தை நனும் அண்ணன் உண்மைதமிழனும் நானும் பார்த்தோம்.

    ReplyDelete
  6. விமர்சன பகிர்வுக்கு நன்றி அண்ணே,

    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு எல்லா வளமும் கொடுக்க வாழ்த்துக்கள்.. :-)

    ReplyDelete
  7. உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. 40வயதில் வரும் காதல் அருமையானது .புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. புது வருட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜாக்கி :)

    ReplyDelete
  11. WISH YOU HAPPY NEW YEAR JACKI SIR AND FAMILY
    THANKS FOR REVIEW

    ReplyDelete
  12. புத்தாண்டு வாழ்த்துகள் ஜாக்கி சார்.

    ReplyDelete
  13. ஷோபனா நடிக்க ரேவதி இயக்கிய படம் கிட்டத்தட்ட இதுபோலத்தான் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner