சென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் (புகைபடங்களுடன்)

நம்மை பொறுத்தவரை மழை நின்று விட்டது.. குண்டு குழியான சாலைகள் ஏன் இன்னும் செப்பனிடபடவில்லை என்ற கேள்வி மட்டுமே நம் செசன்னைவாசிகள் பெரும்பாலோனோர் மனதில் தொங்கி நிற்கும் கேள்வி.



ஆனால் பல கிராமங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை... நமது சென்னைக்கு அருகே இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தினமும் 2000கன அடி நீர் ஏரியில் இருந்துதிறந்து விடபடுகின்றது.. இதனால் பல கிராமங்கள் போக்குவரத்து அடியோடு துண்டிக்கபட்டு இருக்கின்றது.



குன்றத்தூர் டூ ஸ்ரீபெரும்பத்தூர் சாலையில் போக்குவரத்து  நடைபெறவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி நீர் அடையாறு ஆற்றில் பயணபட்டு அது கடலில் கலக்கின்றது. எரித்தண்ணீர் பல கிராமங்களை துண்டித்து இருக்கின்றது...

சமீபத்தில் கூட கோவையில் டிரஸ் எடுத்துக்கொண்டு அம்பாசிட்டர் காரில் கோபி அருகே உள்ள தரைபாலத்தை ஒரு குடும்பம் கடந்த போது தனது மனைவி காரோடு அடித்து செல்லபட்டு குடும்பதலைவன் மட்டும் உயிர் தப்பினார் மனைவி மற்றும் பெண்பிள்ளை காரோடு அடித்து செல்லபட்டுஇறந்து விட்டனர்...

நம்ம பல்லாவரம் பொழிச்சலூரில் இருந்து கொளப்பாக்கம் வர ஒரு தரைபாலம் இருக்கின்றது..பல லாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த பாலத்தை பயண்படுத்தி வருகின்றனர்.

இந்த மழை நீரில் ஏரி நீரும் சேர்ந்து வந்தகாரணத்தால் அந்த தரைபாலம் மூழ்கி இருக்கும் என்பதால் நான் அது எப்படி இருக்கும்? என்பதை பார்க்க என் கேமராவுடன்  அந்த இடத்துக்கு போய் இருந்தேன் ...உயிரைபணயம் வைத்து பலர் அந்த தரைப்பாலத்தில் முட்டிக்கால் அளவு நீரில் கடக்கின்றனர்... அப்போது பார்த்து சில சுவையான காட்சிகள் உங்கள் கண் முன்

ஆற்று பாலத்தை முழ்கடித்து செல்லும் வெள்ளம்..காரையும் லாரியையும் கரை ஓரத்தில் கழுவுகின்றனர்.
==========================
ஒரு சைக்கிள் ஓட்டி எப்படியும் தரைபாலத்தை கடந்து விடலாம் என்று நினைத்து வந்தால் வெள்ளம் இழுக்க உதவிக்கு ஆள் வந்த காரணத்தால் அவரால் தப்பிக்க முடிந்தது.
===================


சைக்கிளுக்கு பிறகு  அதே வெள்ளத்தில் ஒரு டிப்பர் லாரி ரொம்ப தைரியமாகவும் அலட்சியமாகவும் கடந்து சென்றது. லாரியிர் உட்கார்ந்து இருப்பவர்கள் லாரி ஆற்றைக்கடப்பதை  பார்த்து விட்டு தங்களை அக்கறையில் விட சொல்லி கேட்க ,டிரைவர் ஒத்துக்கொள்ள லாரி மேல் பயணத்து வருவதை பார்க்கலாம்.
===========================


லாரியை பார்த்து விட்டு ஒரு ஆட்டோவும் வர முற்ச்சிக்கின்றது.. லாரி வரலாம் ஆனால் ஆட்டோ  போக முடியாது என்று நினைத்தேன் ஆனால்....

ஆட்டோ நடுவில் தரைபாலத்தில் இருக்கும் பள்ளத்தை அறியவில்லை அதனால் தன் இழுவை சக்தி குறைந்து நின்று விட்டது. நல்லவேளை ஆட்டோவுக்கு இரண்டு பக்கமும் வழி இருப்பதால தண்ணீர்  உள்ளே சென்று வெளியே ஓடி கவிழாமல் பார்த்துக்கொண்டது. இதுவே மெஜிக் ஆட்டோ போல வேறு ஒரு வாகனம் இருந்து இருந்தால் வெள்ள போர்சுக்கு இந்நேரம் கவிழ்ந்து இருக்கும்...ஆட்டோ டிரைவர் என்ன செய்வது என்று நினைத்தக்கொண்டு இருக்கும் போது உதவிக்கு ஒரு கை வருகின்றது..


..ஆட்டோ ஓட்டியதும் ஆட்டோ தள்ள ஆபத்தில் உதவியதும் ஐயப்ப சாமி.. மிக  நேராக தள்ள வில்லையென்றால் வெள்ளத்தில் ஆட்டோ அடித்துக்கொண்டு போய் இருக்கும்.



 பெண் பிள்ளை பள்ளி  போவதற்கு  கூட உடை நனைந்துதான் செல்ல வேண்டும். பள்ளி விட்டு வரும் போது கூட பராவாயில்லை.. ஆனால் பள்ளிக்கு போகும் போது எப்படியும் ஈர உடையுடன்தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். அந்த பெண் மிகுதியாய் பயப்ட்டாலும் அப்பா இருக்கும் தைரியம்...

மழை இப்போது குறைந்து இருப்பதால் இந்த தண்ணீரில் கடக்க முடிவதாகவும் ஏரியில் எப்போது தண்ணீர் திறந்து விட்டாலும் பள்ளிக்கு செல்வது கேள்விக்குறி என்பது மட்டும் அல்ல 15 கீலோமீட்டர் சுற்றி செல்லவேண்டும் என்றும் சொல்கின்றார்கள்.



 இந்த  சர்க்கஸ் பயணம் இதே இடத்தில் கெருகம்பாக்கம் எனும் இடத்தில் தினமும் நடக்கின்றது....


அரசு இப்போது மலர் ஆஸ்பத்திரி அருகில் டிராபிக் நெரிசலுக்கு இன்னோரு மேம்பாலம் கட்ட போகின்றதாம்....


இது போல தமிழகத்தில் கிராமத்துக்கு நகரத்துக்கு தொடர்பு அற்று போய் பெரிய வாழ்வாதார பிரச்சனைகளை மக்கள் சந்திக்கின்றார்கள்... இது போல இடங்களில்  மக்கள் தொகைக்கு எற்ப்ப பாலங்கள் அரசு கட்ட் வேண்டும்..


அப்படி இல்லையென்றால் தண்ணீர் அதிகம்  வருவது அறியாமல் இது போலக தரைபாலங்களை கடக்கும் போது உயிர்பலி ஆவது தவிர்க்க முடியாதது...


படங்களை கிளிக்கி பார்க்கவும்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள் 






13 comments:

  1. //இது போல தமிழகத்தில் கிராமத்துக்கு நகரத்துக்கு தொடர்பு அற்று போய் பெரிய வாழ்வாதார பிரச்சனைகளை மக்கள் சந்திக்கின்றார்கள்... இது போல இடங்களில் மக்கள் தொகைக்கு எற்ப்ப பாலங்கள் அரசு கட்ட் வேண்டும்..//
    Right!!

    ReplyDelete
  2. adventure payanam!!!! unga photo missing!!!

    ReplyDelete
  3. கொடுமை ஜாக்கி.
    வடபழனி முதல் குன்றத்தூர் வரை ரோடுகள் படுமோசம், சென்னை மாநகரில் வாழ்கிறோம் என்ற வெட்டி பேச்சு வேற நம்மிடம்.

    ReplyDelete
  4. //அப்படி இல்லையென்றால் தண்ணீர் அதிகம் வருவது அறியாமல் இது போலக தரைபாலங்களை கடக்கும் போது உயிர்பலி ஆவது தவிர்க்க முடியாதது...//

    வேதனையாகவும் கொடுமையாகவும் உள்ளது
    படங்களுடன் தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  5. Photos ellam nalla irukku..

    itha edukka neenga evvalo kastappatinga??

    keep rocking..

    ReplyDelete
  6. நீங்கள் ஒரு கமேராக் கலைஞர் அண்ணாச்சி. இதையெல்லாம் அரசு கவனத்திலெடுக்குமா?

    ReplyDelete
  7. வெள்ளத்தில் பாடசாலை செல்லும் சிறுமி :(

    இவ்வருடம் இங்கும் மழை அதிகம்.

    ReplyDelete
  8. உங்கள் தளத்தின் வாசகன் நான். உங்களின் எழுத்துக்கள் மிக அருமை. நானும் இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் ஆதரவு தேவை.

    ReplyDelete
  9. படங்கள் சொல்லும் அவலங்கள்..........

    ReplyDelete
  10. உண்மைதானுங்கோ

    ReplyDelete
  11. இப்படி ஒருசார்பான வளர்ச்சியை முன்னேற்றம் என்று அரசியல் வாதிகலும் சில அறிவு ஜீவிகளும் புளுகி வருகிறார்கள். சென்னைக்கு மிக அருகே இந்த கவலை என்றால் உள்ளே உள்ள ஊர்களில் மலைக்கிராமங்களில்...
    நல்ல பதிவு. நன்றிகள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner