சென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழுந்து அதிகாரிகளின் யோசனையும்...


உலகின் மிககொடுமையான பயணம் என்பது பீக் அவரில் சென்னை மாநகர பேருந்து பயணம்தான்.

சரி பேருந்தில் செல்வது கொடுமையா?

பேருந்தில் செல்வது கொடுமை என்று யார் சொன்னது.. சராசரியாக 45 பேர் பயணம் செய்யும் பேருந்தில் 100 பேருக்குமேல் தினசரி பயணித்தால் அது கொடுமைதானே.



தமிழகத்தில் ஒரு நாளைக்கு 165 லட்சம் பேர்  அரசு பேருந்துகளை பயண்படுத்துகின்றார்கள். நானும் ஒரு காலத்தில் பயண்படுத்தினேன் இப்போது எப்போதாவது பயணிக்கின்றேன்.



ஆண்களில் பலர்  படிக்கட்டில் தொங்கி பயணம் செய்து குறிப்பிட்ட இடத்தை அடைகின்றனர்.. ஆனால் அப்படி தொங்கி பயணிக்கும் ஆண்களின் புட்டங்களில் சட்டத்தை காப்பாற்றுகின்றேன். பேர்வழி என்று எதாவது ஒரு  டிராபிக் இண்ஸ்பெக்டர் அவர் மனைவி மேல் உள்ள கோபத்தில் அடித்த,  உதையை வாங்கி கொண்டு ,லத்தியில் உதைவாங்கிய புட்டத்தை ஆதரவாக தடவிகொடுக்க முடியாத சோகத்தில் பயணம் செய்யும் பல ஆண்கள் உண்டு.
( கம்பியை இரண்டு கையால் பிடித்து படிக்கட்டில் தொங்கி பயணிக்கு போது தடவி கொடுத்தால்  பரலோகம் போக வேண்டியதுதான்.)


இப்படி எல்லாம் பயணிக்கும் ஆண்கள் நிலைமையே  இப்படி என்றால் பெண்கள் நிலையை சொல்லவே வேண்டாம். வேலைக்கு போகும் பெண்கள்  மாநகர பேருந்தில் பயணிக்கும் நிலைமையை வெளியில் சொல்லமுடியாத பல இன்னல்களை கடந்தே சென்னை  மாநகர பேருந்துகளில் பயணிக்கின்றனர்..


மாநகர பேருந்தில் பீக் ஹவரில் பயணிக்கும் பல பெண்கள்  சக்கையாக ஜுஸ்பிழியபட்ட பிறகே சக்கையாகவே ஆபிசுக்கு செல்கின்றனர். இன்னும்  பார்க்க நன்றாக இருந்து விட்டால்  அந்த பெண் கதி அதோகதிதான்.






சென்னை மாநகர பேருந்தில் பெண்களின் இருக்கை  இடதுபுறம் மட்டுமே இருக்கும்... அதில் இரண்டு படிகள் வேறு நடுவில் குறுக்கிடுவதால் இருக்கை எண்ணிக்கை குறைவு.. அது மட்டும் அல்ல கண்டக்டருக்கு ஒரு இருக்கை வேறு.. பேருந்தில் கடைசியில் 5 பேர் கொண்ட  இருக்கை பெண்களுக்கு ஒதுக்கபட்டு இருக்கின்றது.


இருப்பினும் சில அதிகாரிகள் சோதனை முயற்சியாக 23சீ பேருந்தில் இடப்பக்கம் ஆண்கள் உட்காரவும் வலப்பக்க இருக்கையில் பெண்கள் உட்காரவும் அதாவது டிரைவருக்கு பின்புற இருக்கைகள் பெண்கள் உபயோகபடுத்தவும் கண்டக்டர் பக்க இருக்கை ஆண்கள் பயன்படுத்தவும் மாற்றி இருக்கின்றார்கள்..


(இந்த படத்தில் பாருங்கள் ஆண்கள் இடது பக்க இருக்கையில் அதாவது கண்டக்டர் பக்கம் உட்காருவதை அறிமுகபடுத்தி இருக்கின்றார்கள். பேருந்து 23சீ)



இதில் என்ன பிரச்சனை என்றால்பெண்கள்  பேருந்தில் ஏறி இடதுபக்கம் போய் சீட்டில் உட்கார்ந்து கொள்ள, எப்படியும் நிற்கும்  ஆண்களை கடந்தே செல்ல வேண்டும். நானும் நிறைய கவனித்து இருக்கின்றேன். பெண்கள் வருகின்றார்கள் எனறால் நகர கூடமாட்டார்கள். நெரிசல் உள்ள பேருந்தில் பேருந்து நிறுத்தம் வருவதற்குள் அந்த பெண் பிள்ளை இறங்குவதற்குள் படாதபாடு படுத்திவிட வாய்ப்பு இருக்கின்றது.. சிலர் கூட்டத்தை பயண்படுத்தி அந்த பெண்ணின் உடல் பாகங்களில் அத்துமீறவும் வாய்ப்பு இருக்கின்றது...


புடவைகட்டி போகும் பெண்கள் நிலைமை யோசித்து பாருங்கள்? இரண்டு பேர் புடவை தலைப்பை மிதித்தாலோ அல்லது  தரையில் புரளும் புடவையை தெரிந்தே தெரியாமல் மிதித்தலோ? பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்று அவசரத்தில் இறங்கும் பெண்ணுக்கு பதட்டத்தில் எதை பற்றியும் கவலைபடாமல் அவசரத்தில் இறங்க முற்படும் போது புடவை உருவபட்டு மிக அசிங்கமாக அந்த பெண்மணி பொது இடத்தில்  வேதனை பட நேரிடும்.


இருக்கை கம்மியாக இருந்தாலும் பேருந்தில் முன்பக்கம் ஏறினால் உடனே வலப்பக்கம் திரும்பினால் பெண்கள் உட்கார்ந்து இருப்பார்கள் எந்த பிரச்சனையும் இல்லை. அதே போல் பின்பக்கம் ஏறினால் இடது பக்கம் அல்லது வலது பக்கம் திரும்பிய உடனே பெண்கள் இருப்பார்கள். எந்த பிரச்சனையும் இல்லை.. படிக்கட்டு பக்கமே சீட் இருப்பதால் பேருந்து நிறுத்ததில் எந்த பதட்டமும் இல்லாமல் பெண்கள் சட்டென படி வழியாக வெளியே வரமுடியும்.






மேலுள்ள படத்தை கிளிக்கி பார்த்தால் ஒரு பள்ளிக்கூட பெண் பிள்ளை சிவப்புகலர் பேகுடன்  பின்பக்க படியில் ஏறி வலப்பக்கம் திரும்பியதும் பெண்கள் சீட்... உட்கார்ந்து இருப்பவர்களிடம் பேக் கொடுத்து விட்டு உடனே செட்டில் ஆகிவிடலாம். ஆனால் எதிர்புறம் இருக்கைக்கு இந்த பெண் நிற்கும் ஆண்களை கடந்து பெண்கள் பக்கம் போகும் முன் அந்த பெண் படாதபாடு பட்டுவிடுவாள்.





முதல் முறையாக கோவைக்கு நான் போன போது நான் முன்பக்கம் பேருந்தில் ஏறும் போது பின் பக்கம் போய் ஏற சொன்னார்கள். அங்கே முன் பக்கம் பெண்கள் பின்பக்கம் ஆண்கள் என்ற  கோட்பாடு.. அது போல சென்னையில் ஏற்பாடு செய்யலாம் என்று  பேச்சு இருக்கின்றது... அந்தபுரம் தனியாக, கொலு மண்டப்ம் தனியாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை... அது மட்டும் அல்ல ஆண்கள் முன்பக்கம் தொங்கி கூட போக முடியாது... முன்பக்கம் ஏறிவே விடமாட்டார்கள்.



அடுத்த தலைமுறை பெண்கள் எல்லா விஷயத்திலும் ஆண்களோடு பழக  வேண்டும்..  மாநகர  பேருந்தில் பழைய சீட்டிங் முறையே சிறந்தது. அப்படி பெண்கள் மேல் கரிசனம் இருந்தால்  லேடிஸ் ஸ்பெசல் பேருந்துகளை அதிகபடுத்துங்கள். ஆண்கள் பின்பக்கம்  மட்டும் ஏற வேண்டும் என்றால் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கிவிட்டு பின்பக்கம் மட்டும் ஏற வேண்டும் என்றால் பல ஆண்களால் சென்னை மநகர பேருந்தில் ஏறி பீக் ஹவரில் வேலைக்கு போக முடியாது...





கிடைக்கறது  எல்லாம் விட்டுபுட்டு கிழவைனை தூக்கி மடியில் வச்சிக்கிறதுன்னு ஊர்ல ஒரு பழமொழி இருக்கின்றது... அது போல இந்த வெள்ளோட்டம் அமைந்து இருக்கின்றது..


அதிகாரிகளே நல்லது செய்கின்றேன்  பேர்வழி என்று  பல பெண்கள் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். பேருந்து பயணத்தை மேலும் நரகமுள்ளதாக மாற்றவே இந்த திட்டம் இருக்கும் என்பது என் எண்ணம்.



(படங்கள் கிளிக்கி பார்க்கவும்.. புகைபடம்  நம்ம கைங்கர்யம் சாம்சங் மொபைல்)





பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

28 comments:

  1. நல்ல திட்டம் எல்லாம் வருகிறது வாழ்த்துக்கள்...

    2 பேருந்தை கூட்டினால் இன்னும் இலகுவாகத் தீர்க்கலாமல்லவா...??

    ReplyDelete
  2. //நானும் நிறைய கவனித்து இருக்கின்றேன். பெண்கள் வருகின்றார்கள் எனறால் நகர கூடமாட்டார்கள்//

    நானும் நிறைய கவனித்து இருக்கின்றேன்!

    ReplyDelete
  3. பெண்கள் இடது பக்கம் உட்கார்வதால்தான் ஆண்கள் அவர்களைக் கவர்வதற்காக படிகளில் தொங்கிச் செல்கிறார்கள் என்று நினைத்து மாற்றி இருக்கலாம்.எல்லா விதிகளும் நல்லவையா கெட்டவையா என்பது சோதனை முயற்சிக்கு அப்புறம்தான் தெரியவரும்.

    ReplyDelete
  4. [[[பெண்கள் இடது பக்கம் உட்கார்வதால்தான் ஆண்கள் அவர்களைக் கவர்வதற்காக படிகளில் தொங்கிச் செல்கிறார்கள் என்று நினைத்து மாற்றி இருக்கலாம்.]]]

    இருக்கலாம்..! நானும் ஆமோதிக்கிறேன்..!

    ReplyDelete
  5. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.


    உங்கள் யூகம் சரிதான்.. இது எனக்கும் தோன்றியது ஆனால் பீக்ஹவரில் பெண்களை கவர்நதாலும் கவரா விட்டாலும் உள்ளே இடம் கிடைப்பதில்லை என்பதே நிதர்சன உண்மை.

    அப்படியே நாலு பேர் தொங்கறான் என்பதற்கு 40 பெண்களை கஷ்டபடுத்துவது என்னலாபம்..

    பேருந்தில் அந்த பக்கம் பெண்கள் உட்கார்தால் மட்டும் படியில் ஆண்கள் தொங்காமல் போக போவதில்லை

    படியில் தொங்காமல் இருக்க வாயிற்கதவு கொண்ட பேருந்துகள்தான் அரசு போக்குவரத்துக்கு பயண்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  6. //புடவைகட்டி போகும் பெண்கள் நிலைமை யோசித்து பாருங்கள்? இரண்டு பேர் புடவை தலைப்பை மிதித்தாலோ அல்லது தரையில் புரளும் புடவையை தெரிந்தே தெரியாமல் மிதித்தலோ? பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்று அவசரத்தில் இறங்கும் பெண்ணுக்கு பதட்டத்தில் எதை பற்றியும் கவலைபடாமல் அவசரத்தில் இறங்க முற்படும் போது புடவை உருவபட்டு மிக அசிங்கமாக அந்த பெண்மணி பொது இடத்தில் வேதனை பட நேரிடும்.//---லூஸ் பிட்டிங் சல்வார் கம்மீஸ், ஸுடிதார் போன்றவற்றை பாவிக்கலாமே? அல்லது புருக்கா?

    //அந்தபுரம் தனியாக, கொலு மண்டப்ம் தனியாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை...
    ...அடுத்த தலைமுறை பெண்கள் எல்லா விஷயத்திலும் ஆண்களோடு பழக வேண்டும்..//

    is contradicting with...

    //லேடிஸ் ஸ்பெசல் பேருந்துகளை அதிகபடுத்துங்கள்//

    ((அது சரி...லேடிஸ் ஸ்பெசல் பேருந்துகள் பெண்ணடிமைத்தனத்தின் சின்னமாகவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவும் தெரியவில்லையா?))

    ReplyDelete
  7. // சரி பேருந்தில் செல்வது கொடுமையா? //
    உக்காந்துட்டு போனா குளுகுளுன்னு இருக்கும்...

    நின்னுட்டு போனா கொடூரமா இருக்கும்...

    ReplyDelete
  8. // புட்டங்களில் சட்டத்தை //

    என்ன ஒரு எதுகை நயம்... அதுசரி... புட்டம் என்றால் என்ன...?

    ReplyDelete
  9. அண்ணே... கடந்த பதிவில் டெம்ப்ளேட் பற்றிய கேள்வி ஒன்றை கேட்டிருந்தேன்... பதிலளிக்கவே இல்லையே...

    ReplyDelete
  10. எந்தப் பக்கம் இருக்கை வைத்தாலும் இடிக்கு ஒன்றும் குறைச்சல் இருக்காது . என்னைக் கேட்டால் இந்த ஒருபுறம் மறுபுறம் என்பதையே எடுத்துவிட்டு முன்பாதி பின்பாதி என்று வைக்கலாம் . எங்கள் ஊரிலும் இதே பழக்கம்தான் பெண்கள் எல்லோரும் முன்னாடியும் ஆண்கள் எல்லோரும் பின்னாடியும் ஏறுவர். எப்படியும் பெண்கள் பூட்போர்ட் அடிப்பதில்லை ஆண்களே இரண்டு வாசலிலும் தாராளமாய் அடிக்கலாம் அப்படியே எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருக்கியடித்துக் கொண்டு பின்னாடியும் நிற்கலாம் . தினம் தினம் சென்னை மாநகரப் பேருந்தில் பயணிப்பது கொடுமை . நீங்க நம்புறீங்களோ இல்லியோ பெண்களுக்குள் இது கண்டிப்பாய் பேசப் பட்டிருக்கும் ." ஒருத்தன் கைபடாமல் நாம் முழுசா போய் கணவனிடம் சேர மாட்டோம் " ஆமா அவ்வளவு நரக வேதனை இந்த பயணம் .நிறைய கொடுமைகள் வெளியில் சொல்ல முடியாது அதிலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டோர் கொடுக்கும் தொல்லைகள் அதிகம் .

    ஒரு தாத்தா சும்மா சும்மா மேலே விழுந்துட்டு இருந்தார் எனக்கு பொறுமை ரொம்ப கம்மி கொஞ்ச நேரம் பார்த்தேன் . ஏங்க டிரைவர் பிரேக் போடுறாரோ இல்லியோ உங்களுக்கு பிரேக் பிடிக்க மாட்டேங்குதே தள்ளி நில்லுங்க என்றேன் . அவ்ளோதான் ஆளு இரண்டடி தள்ளி போனார் இது சின்ன சாம்பிள் தான் இன்னும் நிறைய இருக்கு பக்கம் பக்கமாய் பேசலாம் . இங்கே வந்து கத்துகிட்ட ஒன்று நல்லா சண்டை போடுறேன் பேருந்தில் .

    ReplyDelete
  11. ஜாக்கி

    தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடப்புறம் தான் பெண்கள் அமரும் வழக்கம்

    பள்ளிக்கூடம் என்றாலும் சரி
    கல்லூரி என்றாலும் சரி

    இந்த் வழக்கம் தான் உள்ளது

    காரணம்

    நமது பெண்கள் சேலை கட்டும் முறை

    --

    இதற்கு மேலும் விளக்க வேண்டுமா

    ReplyDelete
  12. இந்த ட்ரையலை இவர்கள் இப்போதே நிறுத்துவது நல்லது. சரியான பதிவு..அந்த கூட்டத்தில் என்னண்ணே பழக முடியும்?..பிரிந்து அமர்வதுதானே நல்லது?
    --செங்கோவி

    ReplyDelete
  13. சென்னை மாநகரில் சில பேருந்துகள் இரண்டு பேருந்து ஒட்டியது போல் இருக்கும் அல்லவா... அது மாதிரி பேருந்துகளை அதிகமாக இயக்கி முன்னே இருக்கும் பேருந்து ஆண்களுக்கு, பின்னே அட்டாச் ஆகி இருக்கும் பேருந்து பெண்களுக்கும் ஒதுக்கினால் சிறந்ததாக இருக்கும் என்பது என் கருத்து... பின்னே அட்டாச் ஆகி இருப்பதை கொஞ்சம் சிறியதாக இருக்கும் பச்சத்தில் அது இப்போது இருப்பது படி பார்த்தால் 1.5 பஸ் வடிவில் இரக்கும். நான் கூறியது போல் பார்த்தால் 1முழு ஆண்களுக்கும் மிதம் பாதி பெண்களுக்கும் இருக்கும் என்பது என் யூகம்.. நடைமுறைக்கு எந்த அளவில் சாத்தியம் என்பது புரியவில்லை.. விளக்கவும்.. பதிலை எதிர்பார்த்து...
    -அன்புடன் கூர்மதியன்.

    ReplyDelete
  14. கோவை பேருந்து பாலின இருக்கை ஒதுக்கீட்டு முறை தங்களுக்கு, பிடிக்காமல் போனதன், காரணம் சரிவர விளக்கவில்லை! உங்களுக்கு பிடிக்காததால், அது சரியற்ற முறையோ?

    ReplyDelete
  15. ஓட்டு போட்டுட்டேன்...

    ReplyDelete
  16. anna
    plz check ths link
    http://www.youtube.com/watch?v=l83BI_dy_Sc&feature=player_embedded#at=135

    is this happened in your country?i think it is mor terrible than what srilankan forces did for tamils in srilanka

    ReplyDelete
  17. வாயிற்கதவு உள்ள பேருந்தில் கூட படிக்கட்டில் நிற்க வேண்டி கதவை உடைக்கும் கொடுமை நடக்கிறது ஜாக்கி! வேதனை தரும் விஷயம் இது!

    ReplyDelete
  18. எங்க ஊர் (திருவாரூர்) கலெக்டர் உமா சங்கர் யோசனை எல்லாத்தைவிடவும் சிறந்தது. பஸ்ஸுக்கு நடுவுல ஒரு கிரில்லு. பஸ்ஸுக்கு முன் பக்கம் பெண்கள் பின் பக்கம் ஆண்கள். கிர்ல்லு ஓரமா கண்டக்டர். பிரச்சனை தீர்ந்துது.

    (இப்பவும் கலெக்டர்னா, உமா சங்கர் தான் ஞாபகத்துக்கு வர்ரார்)

    ReplyDelete
  19. முற்றிலும் உண்மை
    வழித்தடதுக்கு 2 பேருந்து அதிகமாக‌
    அல்லது தகுந்த நேரதுக்கு ஓருமுறை பஸ் வந்தால் தான் சரிப்படும்

    சென்னையில் வந்தால் 3 பஸ் ஒன்றாக வரும்
    முதல் ஒன்று கூட்டமாக வரும் கடைசி ஒன்று காலியாக வரும்

    ReplyDelete
  20. பின்னுட்டத்தில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு என் நன்றிகள்.

    டாக்டர் நீங்க சொன்னது புரியுது.

    ஒரு தலைமுறை மாற்றம் இப்போது நிகழ்கின்றது அதில் நாம் வெற்றி பெற இன்னும் கொஞ்சம் நாட்கள் பிடிக்கும்-

    முன் பக்கம் பின்பக்கம் என்பதை கூட ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் இந்த முறையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதே சொல்லவே இந்த பதிவு.

    மதார் இதை விட கேவலம் எல்லாம் பேருந்தில் பார்த்து இருக்கின்றேன்... அதனால்தான்.. தம்பி கூர்மதியான் ஐடியா அருமை.

    ReplyDelete
  21. [[[பெண்கள் இடது பக்கம் உட்கார்வதால்தான் ஆண்கள் அவர்களைக் கவர்வதற்காக படிகளில் தொங்கிச் செல்கிறார்கள் என்று நினைத்து மாற்றி இருக்கலாம்.]]]

    இருக்கலாம்..! நானும் ஆமோதிக்கிறேன்..! ;


    experience ????

    ReplyDelete
  22. அருமையான அலசல், நிஜமாக பெண்கள் படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல, இதற்கென்றே வரும் பசங்களும் உண்டு.... மேலே சொன்ன யோசை மிக நன்றாக படுகிறது... பாதி ஆண்களுக்கும், பாதி பெங்களுக்கும் .....

    ReplyDelete
  23. """அது சரி...லேடிஸ் ஸ்பெசல் பேருந்துகள் பெண்ணடிமைத்தனத்தின் சின்னமாகவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவும் தெரியவில்லையா"""

    ஹேலோ UFO இதுல எங்கய்யா வந்தது பெண்ணடிமை?? தேவை இல்லாம நல்ல எண்ணத்திலும் இந்த மாதிரி பேசி குட்டையை குளப்பாதீர்கள்.. நாங்களும் அக்கா தங்கச்சி கூட பொறந்தவுங்க தான் அதனால்தான் இதை ஆமோதிக்கிறோம்...

    எல்லா சகோ, அம்மக்களும் படும் கஷ்டம் சொல்லி மாலாது, அதற்க்கு நிச்சயம் இதுபோல தீர்வு வேண்டும்.. குறந்த பட்சம் இதை படித்து ஒரு 4 பேர் இடிக்கமா போனலாவது சந்தோஷம்...

    ReplyDelete
  24. (படங்கள் கிளிக்கி பார்க்கவும்.. புகைபடம் நம்ம கைங்கர்யம் சாம்சங் மொபைல்)

    அண்ணே போட்டோ நல்ல இருக்கு.... அப்டியே சாம்சங் மாடல் நம்பெரும் சொல்லுங்க, பிடிச்சி இருந்தா, வாங்க முடிஞ்சா ட்ரை பன்றேன்..

    அப்புறம் போட்டோ எல்லாம் தெளிவா இருக்கு, பெரிய அளவிலும் இருக்கு....

    ReplyDelete
  25. Dear Mr.Jackie.
    உங்களுடைய blog தோற்றத்தில் சில மாற்றங்கள் தேவை. பலரும் அதிக நேரம் படிக்கும் layout கண்ணை உறுத்தாத நிறத்துடனும் divert ஆகாத design உம் வேண்டும். தேவையில்லாத பின்னணிகள் நீக்கப்பட வேண்டும் ( விமானம்). நான் ஒரு graphic designer என்ற முறையில் கவனித்தவைகள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் எனக்கு தெரிந்த விஷயங்களில் உதவ தயார்.
    அதிக பிரசங்கி என நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

    ReplyDelete
  26. திருச்சி ல லாம் பொண்ணுக லுக்கு டிரைவர் பின்னாடி தான் இருகை இருக்கும் , எப்படி வைச்சாலும் உறசனும் நெனைச்சி எருறவன் எப்படி இருந்தாலும் பண்ணுவன் அதுனால ஆண்ண்கள் தான் திருத்தனும் , போடோஸ் நல்லா இருக்கு. சைட் backround நல்லா இருக்கு

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner