மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•2010)

ஆல்பம்..
அவர்கள் அப்படித்தான் பேசி இருக்கவேண்டும். என்ன பேசி இருக்கவேண்டும்..?? மச்சி இதுதான் நல்ல நேரம்.. நாடளுமன்றம் முடங்கி 20 நாளைக்கு மேல ஆக போகுது..  சோ இந்த நேரத்துல பெட்ரோல் விலையேத்த சரியான நேரம் என்று ஆயில் கம்பெனிகள் அவசர கூட்டம் போட்டு சரக்கு அடித்தபடி இப்படித்தான் பேசி இருக்கவேண்டும்.



முன்ன எல்லாம் பெட்ரோல் விலை உயர்த்தனும்னா தலைய  சொறிஞ்சிகிட்டு , மோட்டுவளையை பார்த்து  உட்கார்ந்து கிட்டு இருக்கனும்.. ஒரு ரூபாய் ஏத்துனாலே வலது சாரியோ? இடதுசாரியோ? லபோ திபோன்னு குதிக்கும்... ஆனா 2 ரூபா ஏத்தி நாடளுமன்றம் கூச்சல் குழப்பம் எல்லாம் ஏற்பட்டு, நாள் முழுவதும் அவை தள்ளிவைக்கபட்டு எதிர்கட்சிகள் எற்படுத்திய குழப்பத்தினால் இரண்டுரூபாயில் இருந்து ஒருரூபாய் குறைக்கின்றோம் என்று ஒரு அறிவிப்பு வரும்.. ஆனால் இப்போது எடுத்ததுமே மூன்று ரூபாய்க்கு ஏற்றி இருக்கின்றார்கள்... இப்போது நாடளுமன்றத்தில் கேட்க நாதியும் இல்லை.. ஸ்பெக்ட்ராம் முடிவுக்கு வந்தாலும் நாம் அதற்குள் 3ரூபாய்க்கு பெட்ரோல் போட பழகி இருப்போம்....
==========
இப்படி ஒரு இக்கட்டு ஏற்படும் என்ற தனது தள்ளாத வயதில் கலைஞர் நினைத்துக்கூட பார்த்து இருக்கமாட்டார்... தலைக்கு தலை நாட்டாமையாக இருந்தகாரணத்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கின்றது. பல விஷயங்கள் கலைஞர் காதுக்கு போகாமலேயே காய் நகர்த்த பட்டு இருக்கின்றது.. பல விஷயங்கள் இரண்டாம் மட்ட நிலையில் பல  பேரங்கள் நிறைவு பெற்று இருக்கின்றன.. அதனால்தான் ஏசி போட்ட ஏலகிரிக்கு பயணமானார்..

=============
ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில் மனுஷனை கடித்து வைப்பது போல அங்கே இங்கே என ரெய்டு செய்து கொண்டு இருந்த சிபிஐ நேராக கனிமொழி வீட்டு வாசலுக்கு போனலும் ஆச்சர்யபட முடியாது போல..திமுக தலைவர் இந்த வயதில் இப்படி ஒரு விஷயத்துக்கு மண்டை உடைத்து யோசிப்போம் என்று கனவிலும் யோசித்து இருக்கமாட்டார்.
===============
லண்டனில் ஒருத்தன்  பாருக்கு போய் சரக்கு அடிச்சிட்டு திரும்பி வந்து பார்த்தா?  நிறுத்திட்டு போன காரை கானோமாம்... காரை பனி மூடி இருக்கின்றது அந்தளவுக்கு கடுமையான  பனி பொழிவு இருக்கின்றது... இப்பதான் டிவியில காட்டினாங்க...இப்படி வெளியில செமையா பனி மூடி இருக்கும் நாட்டில் சில காலம் வாழ வேண்டும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்கவேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை..
===============
சென்னையில் குளிர் இரவு 6 மணிக்கு தொடங்கிவிடுகின்றது.. விடியலில் மூடு பனி இருக்கின்றது. இன்னும் ஊட்டியில் அதிகமாக மூடு பனி இருப்பதால் நிறைய சாலை விபத்துகள் நடக்கின்றனவாம்... நேற்று மட்டும் ஊட்டியில் 5க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்து இருக்கின்றன..சென்னையில் காலையில் தண்ணியில் கை வைத்தாலே ஜில் என்று இருக்கின்றது... முகத்தை கூட கழுவிடலாம் ஆனா டாய்லட் போயிட்டு ...த்தை கழுவறது கொடுமையா இருக்கு.. இப்பதான் எனக்கு புரியுது.. இந்த குளிருக்கே இப்படி இருக்கே மைனஸ்ல போகும் போது வெள்ளைக்காரனுக்கு எப்படி இருக்கும்.. அதான்  பேப்பரை உபயோகபடுத்தி இருக்கான்...என் நண்பர் முதல் முறையாக ஊட்டி போய் இருந்தார்.. தங்கி இருந்த லாட்ஜில் காலையில் மட்டுமே பக்கெட்டில் வென்னீர் வைப்பது வழக்கம் தலைவருக்கு நைட்டு போட்ட சரக்குல வயித்தை கலக்க விடியலில் சொட்டர் போட்டுக்குனு கடும் குளிர்ல டாய்லட் போயிட்டார்..  எல்லாம் முடிச்சிட்டு பின்பக்கம் தண்ணியை ஊத்தி இருக்கார்.. ஊத்தனதுதான் தாமதம் நடுமண்டையில் நங்குன்னு கொட்டனது போல இருந்து இருக்கு...

எல்லாம் மறுத்து போச்சாம் எதை தொட்டோம், எதை கழுவுனோம்னு இன்னைக்கு வரைக்கு எனக்கு தெரியலை என்றும் அதன் பிறகு எத்தனை லட்சம் செலவு ஆனாலும் பரவாயில்லை எனக்கு தடையில்லாமல் சுடுதண்ணி  இருக்கும்  அறைக்கு மாற்றிக்கொண்டேன் என்று ஊட்டியில் கடும் குளிரின் போது அங்கு தங்கிய எனது நண்பர் இப்படித்தான் இன்று வரை சொல்லி வருகின்றார். இதுக்கு இப்படின்னா?? மைனஸ்லபோகும் ஜரோப்பிய தேசத்து மக்கள் பாவம்தான்.
===============
மிக்சர்..

முன்பெல்லாம் உலக திரைப்படவிழாவுக்கு முதல் ஆளாக போய் விடுவேன்.ஆனால் திருமணம் ஆகி இந்த இரண்டு வருடத்தில் முதல் ஆளாக போய் காலை காட்சியை முதலில் இருந்து பார்க்க மிக சிரமமாக இருக்கின்றது..எல்லா வேலையையும் முடித்து விட்டு கிளம்பும் போது ஒரு காபி சாப்பிட்டு விட்டு போங்கள் என்று மனைவி சொல்ல, நாக்கு சப்பு கொட்டி அதற்கு காத்து இருக்க.... நிமிடங்கள் கரைந்து போய் 20 கிலோ மீட்டர் சென்னை போக்குவரத்தில் பயணித்து பத்து மணிக்கு போடும் படத்துக்கு 11 மணிக்கு போய் சேருகின்றேன்..
=============
உலக படங்களில் எனக்கு தெரிந்து எந்த நாட்டின் சாலையும் நம்ம ஊர் சாலையை போல் ரொம்ப கேவலமானதாக இல்லை..சவுத் ஆப்பிரிக்கா படத்தில் மட்டுமே நம்ம ஊர் ரோடு போல் இருந்ததை பார்த்தேன்.
==========
சென்னையில் இப்போது மழை பேய்ந்தும் வெயில் அடித்தும் பனிப்பொழிவும் பொழிந்து கொண்டு இருக்கின்றது. சாலையில் மழையினால் ரோட்டுக்கு வந்த மணல்கள் வெயிலில் காய்ந்து தூசியாக பறந்து கொண்டு இருக்கின்றது...கனரகவாகனத்துக்கு பின்னால் பயணித்தால் ஒரு டன் மண்  தூசி உங்கள் மேல் படியும் அந்தளவுக்கு நகரம் பொல்யூட் ஆகி இருக்கின்றது.
========================
சிக்கு புக்குன்னு ஒரு படம் அந்த படத்துல நாயகன் 1980ம் வருஷம் ரயில்வேஸ்டேஷன்ல உட்கார்ந்து ரயில் ஏறுவதாக காட்சி.. அந்த காட்சியின் போது எப்படியும் கரி என்ஜீன்தானே வர வேண்டும் என்ன செய்ய போகின்றார்கள் என்று ஆர்வமானேன்... தூரத்தில் ரயில் தண்டவாளத்தில் ஒரு சினியரையோ  ஜுனியரையோ( லைட்டு)வைத்து விட்டு அதுக்கு முன் புகையை போட்டு கரி இன்ஜின் தூரத்தில் வருவது  போல செட் செய்து இருந்தார்கள். நல்ல ஜடியா.. ஆனால் அடுத்த ஷாட்டில் நாயகனுக்கும் மட்டும் லைட் வைத்து  எக்ஸ்போஸ் செய்தாலும் பின்பக்கம் டீசல் என்ஜின் நிற்பது தெரிகின்றது....
================
சலனபடம்..

சுவதேஷ் படத்தில  அந்த வேட்டிகட்டும் சீனுக்கு நான் அடிமை. நிறைய முறை பார்த்து இருக்கின்றேன்.. முக்கியமாக அந்த வேட்டி கட்ட ஆரம்பிக்கும் போது வரும் பின்னனி இசை அற்புதம்....ரகுமான் சான்சே இல்லை..

=========
பார்த்ததில் பிடித்தது. 
நைட்டு எங்கள் வீட்டு அருகில் ஒரு கிருஸ்மஸ்தாத்தா  பைக்கில் உட்கார்ந்து செல்போனில் சுவாரஸ்யமாக  பேசிக்கொண்டு   போனார். நிச்சயமாக கடவுளாக இருக்க சான்ஸ் குறைவு. அதுக்கு பின்னால் ஒரு பெண் செம கியூட்..குளிரை பற்றி கவலைபடாமல் சிலிவ்லெஸ் அணிந்து கையில் ஒரு பெரிய டிரம்ஸ் வைத்துக்கொண்டு வாசித்தார்..தாத்தாவை விட பார்வையாளர் அந்த பெண்ணுக்கு அதிகம் கிடைப்பார்கள்என்பது என் அனுமானம்.
================
வாழ்த்துக்கள்..



வாழ்த்துக்கள்.. யார் கிருஸ்மஸ்க்கு மறுநாள் பிரியாக இருந்தாலும் ஈரோட்டில் நடக்கும் வலைபதிவர்கள் சங்கமத்துக்கு செல்ல கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.

நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு



நிகழ்ச்சி சிறப்பாக நடக்க இந்த ஜாக்கியின் வாழ்த்துக்கள்.. அங்கு சில வேலைகள் இருக்கின்றது.. முடிந்தால் வருகின்றேன். மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக்கவும்..


======================
நன்றிகள்...

மதுரையில் இருந்து கார்த்திகைபாண்டியன் சென்னை ஐஐடிக்கு வர அப்படியே போகாமல் என்னை  பார்க்க உட்லண்ட்ஸ் தியேட்டர் வந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது..நேரில் பார்க்கும் போது the man next door என்பதுபோல பழகுவது கார்த்தியின் சிறப்பு... அதன் பிறகு அத்திரியும் வந்து கலந்து கொண்டார்.. எனது புதன் ஞாயிறு பதிவை தொடர்ந்து வாசிப்பதாக சொன்னார்...
நான் உத, சூர்யா,கார்த்தி ஆத்திரி தேனீர் அருந்தி விடை பெற்றோம்..

போனில் வாழ்த்தியும் படவிழாவில் சந்தித்தும் நட்பை பறிமாறிக்கொண்ட.. சுந்தர் அவர்களுக்கு என் நன்றிகள்.

படவிழாவில் என்னை சந்திக்க உட்லண்ட்ஸ் தியேட்டர் வந்த நண்பர்  அருனுக்கும் என்  நன்றிகள்.
=============

இந்தவார கடிதம்..


ஜாக்கி,
ரீட‌ரில் ம‌ட்டுமே நான் ப‌திவுக‌ளை ப‌டிக்கிறேன். பெரும்பாலான‌ ஐடி க‌ம்பெனிக‌ளில் ப்ளாக் த‌டைசெய்ய‌ப்ப‌ட்டிருப்ப‌தால் ரீட‌ரை ம‌ட்டுமே ந‌ம்பி என்னைப் போன்ற‌ ப‌ல‌ர் இருக்கிறோம்.
இப்போது உங்க‌ள் ப‌திவுக‌ள் முத‌ல் சில‌ வ‌ரிக‌ள் ம‌ட்டுமே ரீட‌ரில் வ‌ருமாறு செட்டிங்க்ஸ் மாற்றி இருக்கிறீர்க‌ள். இனிமேல் உங்க‌ள் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ உங்க‌ள் த‌ள‌த்திற்கு வ‌ந்தே ஆக‌ வேண்டும். ச‌ந்தேக‌ம் இல்லாம‌ல் உங்க‌ளுக்கு அதிக‌ ஹிட்ஸ் கிடைக்கும். ஆனால் என் போன்ற‌ ப‌ல‌ர் உங்க‌ள் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ இய‌லாம‌ல் போகும். இதை உங்க‌ளுக்கு தெரிய‌ப்ப‌டுத்த‌வே இந்த‌ மின்ன‌ஞ்ச‌ல்.
ந‌ன்றி.
வெண்பூ
==
அன்பின் வெண்பூ.. இந்த பிரச்சனை குறித்து பல நண்பர்கள் போன் மூலம் தகவல்களை தொடர்ந்து சொல்லி வருகின்றனர் நண்பர் அடலேறு இன்னும் சில பதிவர்களும் மற்றும் பல ஐடி நண்பர்களும் சொல்லி வருத்தபட்டார்கள்..நான் வலையுலகம் வந்து இந்த இரண்டு வருடங்கள் ஆகின்றன..மாதம் மாதம்  நெட் பில் கட்டவே நான் ரொம்பவும் சிரமபடுகின்றேன். ஒரு விளம்பரதாரருடன் பேசினேன் அவர் ரீடரில் படித்தால் தன் விளம்பரம் பலரிடம் போய் சேராது என்பதாலும்...  அதனால் தயவு செய்து அதனை நீக்கும் படி கேட்டுக்கொண்டார்...எனக்கு இந்த நேரத்தில்  ரூபாய் ஆயிரம் என்பது கூடஎனக்கு பெரிய விஷயம் என்பதால் இதனை தயவு கூர்ந்து மன்னிக்கவும்.அதனால் விளம்பரத்தின் காரணமாக சின்ன லிங்க் மட்டும் ரீடரில்  கொடுப்பது போல செய்து உள்ளேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். .. எனது பதிவை ரீடரில் படிக்காமல் வாரத்தில் ஒரு நாள் எனது தளத்துக்கு கூட வந்து படித்துக்கொள்ளலாம்... ஆனால் நான் நெட் இருந்தால்தான் தொடர்ந்து எழுத முடியும் அல்லவா? அதனால் அந்த சிறிய தொகை நான் பொருளாதார சூழலில் சிக்கி   நெட் இல்லாமல் எழுதுவது தடையாகிவிடக்கூடாது என்பதற்க்காக மட்டுமே..

எல்லோருக்கும் இந்த செய்தி சொல்லவேண்டும் என்பதால் வெண்பூ உங்கள் கடிதத்தை பயன்படுத்தி இருக்கின்றேன்...........

மிக்க நன்றி
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
===============
அன்பு ஜாக்கி சேகர்
தங்களின் சாரு விழா பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது,
பரவை முனியம்மா பற்றிய உந்துதல் தங்களைப்பற்றிய அறிமுகத்தில்
குறிப்பிட்டுள்ளது மிக நகைச்சுவை மற்றும் மென்மையானஒரு சோக வெளிப்பாடு.
தற்போது எந்த படங்களில் பணிபுரிகின்றீர்கள்?
அன்புடன்
தவநெறிச்செல்வன்
===========
அன்பின் தவநெறி செவ்லவன் உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.. தற்போது எந்தபடத்திலும் நான் பணிபுரியவில்லை.. அப்படியே பணி புரிந்தாலும் அந்த பணி முடியாமல் வெளியே சொல்வது இல்லை.. நான் சொல்லவந்த விஷயத்தை மிக தெளிவாக புரிந்து அந்த வரிகளை குறிப்பிட்டமைக்கு என் நன்றிகள்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
===================================================
ஜாக்கி சேகர் அவர்களுக்கு,

உங்களது தளத்தைப் பார்த்தேன் . அதுவும் இன்று தான் . உங்களது முகப்பு விளக்கத்தை படித்தேன் (பரவை முனியம்மாவுக்கு 60 வயதில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததை போல கிடைக்காமலா போய்விடும்?) இந்த வரிகள் சிலருக்கு நகைப்பை தரலாம் , இந்த வரிகளில் உங்களது நம்பிகையை , விடாமுயற்சியை  பார்க்கிறேன். என்னை கண்ணாடியில் பார்த்தது போல் உணர்கிறேன் . எனக்கு 25 ந்து வயது தான் ஆகிறது . என்னை பற்றி சொல்ல வேண்டுமென்றால்  (ஜாக்கி சேகர் அவர்களே உங்களது  முகப்பு விளக்கத்தை இன்னொரு முறை  படியுங்கள் என்பேன் ).

தங்களிடம் ஒரு நிழலை எதிர்பார்கிறேன். என்றோ வரும் மழை என்னையும் நினைக்காத இக்கணம் என்று.

தங்களின் அழைப்பை எதிபார்த்து ,
ரமேஷ் ....
=====
அன்பின் ரமேஷ் என்னோடு பயணித்தது போல இருந்தது  உங்கள் கடிதம்... நேரம் கிடைக்கும் போது போனில் அழையுங்கள்.. மகிழ்ச்சியடைவேன்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
===============================================
வணக்கம்.
என் பெயர் தெளசீப்.இலங்கையைச் சேர்ந்த அறிமுக வலைப்பதிவர்.உங்கள் வலைப்பூவில் தினம் பதிவுகளை எதிர்பார்ப்பவர்களுள் நானும் ஒருவன்.

உங்களுக்கு நான் இந்த மடலை எழுத கார‌ணம் சாருநிவேதாவினால் வெளியிடப்பட்ட 7 புத்தகங்களையும் இலங்கையில் இருந்து கொண்டு உங்கள் மூலமாக பெற்றுக்கொள்ளாலாம் என எண்ணியே!!.ஏனெனில் இலங்கைக்கு இந்த பதிப்புகள் வருவதற்கு காலதாமதம் ஆகும்.
உங்கள் பதிவைப் பார்த்தே இந்த புத்தகங்கள் நாடுகிறேன்.

உங்களால் முடியுமா அண்ணா!முடிந்தால் என் முகவரியிலிருந்து சகல தொடர்பு வசதிகளையும் இந்த மடலிலேயே சொல்லிவிடுகிறேன்.செலவு தொடர்பாக எனக்கு அறிவியுங்கள்.எப்படி அதனை உங்களுக்கு அடைய செய்வது என்பதையும் சொல்லிவிடுங்கள்,நான் அதன் படி செய்து விடுகிறேன்.

எனக்கு சாருநிவேதாவினால் வெளியிடப்பட்ட 7 புத்தகங்களில் 

1. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை

2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள் (தமியாக இருந்தால் மட்டும்)

3.மழையா பெய்கிறது - சர்ச்சைகள்

4.கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்

5.கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்

இவைகள் அனைத்துமே தமிழில் எழுதப்பட்டவையா என உறுதி செய்க.இந்த 5 புத்தகங்களையும் உங்களிடம் பெற்றுத்தருமாறு கேட்கிறேன்.

உங்கள் பதிலை எதிபார்த்திருக்கிறேன் அண்ணா..!!

என் வலைப்பதிவு- www.thou-seef.blogspot.com ( மாயனின் எண்ணங்கள் )
=======
அன்பின் தௌசிப்  தாமதமான என் மடலுக்கு எனது வருத்தங்கள்.. தொடர்ந்து 26வரை எனக்கு வேலை பளு மற்றும் உலகபடவிழாவில் கலந்து கொள்ளும் காரணத்தால் என்னால் உங்கள் மடலுக்கு உடன் பதில் போட முடியவில்லை..இந்த புத்தகங்கள்  எப்படி வாங்க வேண்டும் என்ற சாரு அன்லைனில் சொல்லி இருக்கின்றார் என்று எண்ணுகின்றேன். நான் விழாவுக்கு போனதோடு சரி.. அதன்விவரத்தை எழுதி இருக்கின்றேன்.. அவ்வளவே.. மிக்க நன்றி..
பிரியங்களுடன் 
ஜாக்கிசேகர்.
=====================================================

இந்தவார நிழற்படம்..

இந்த படம் நம்ம வீட்டுக்கு  பக்கத்துல எடுத்தது..
===============

பிலாசபிபாண்டி...

கடவுள் பக்தனின் தவத்தை மெச்சி எந்த வரம் வேண்டுமானாலும் கேள் என்றார்.. கடவுளே எனக்கு என் வீட்டுல இருந்து  சொர்கத்துக்கு ஒரு ரோடு போட்டு கொடுங்க என்றான்.. கடவுள் அதெல்லாம் முடியாது... கட்டிபடியாவது வேற எதாவது கேள் என்றார்.... கடவுளே இந்த உலகில் என்னை மட்டுமே உண்மையா நேசிக்கும் ஒரு பெண்  வேண்டும்... கடவுள் யோசிக்காமல் உடனே சொன்னார்...  உனக்கு சோர்கத்துக்கும் வீட்டுக்கும் தார் ரோடு வேண்டுமா? அல்லது சிமெண்ட்  ரோடு வேண்டுமா?  என்றார்...
=================


நான்வெஜ் 18+

ஜோக்..1
எமன்.. பெண்ணே நீ என்ன  குற்றம் செய்தாய்??
நான் திருமணத்துக்கு முன் ஒருவரோடு உறவு கொண்டேன்.. அப்படியா? நீ நரகத்துக்கு போ....அடுத்த பெண்ணிடம் நீ என்ன செய்தாய்? நான் திருமணத்துக்கு பிறகு உறவு கொண்டேன்.. அப்படியா நீ சொர்கத்துக்கு போ.. அடுத்த  பெண்ணிடம் நீ என்ன செய்தாய்?? நான் யாரிடமும் எதுவும் செய்யலை.... அப்படியா நீ என் ரூமுக்கு போ...

=============
ஜோக் 2
என்னதான் ஓடும்பாம்பை கையால பிடிக்கற திறமை பசங்களுக்கு இருந்தாலும், சிவனேன்னு தூங்கும் பாம்பை எழுப்பும் திறமை பெண்களுக்கு மட்டுமே இருக்கின்றது...
================


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

20 comments:

  1. சுடு சோறு எனக்கு தான்..!! கலக்கல் சாண்ட்விச் அண்ட் நான்வெஜ்..!!

    ReplyDelete
  2. சாண்ட்விச் இன்றைக்கு ரொம்ப நல்லாயிருக்கு. கடிதங்கள் அருமை.

    ReplyDelete
  3. //
    பனி மூடி இருக்கும் நாட்டில் சில காலம் வாழ வேண்டும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்கவேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை..
    //
    கொடுமையானது ஜாக்கி.............. .தினசரி கடமைகளுக்கு திணறவேண்டும்................

    ReplyDelete
  4. அண்ணே வீட்டுல பிரியா இருக்கீங்களா? ஒரு பேப்பர் விடாம படிப்பீங்க போல ..

    அப்புறம் ஒலக படமெல்லாம் பாத்துட்டு அத சீக்கிரமா எழுதுங்க ..

    ReplyDelete
  5. பின்னுட்டம் இட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  6. யோகேஷ் ஊட்டிக்கே தினறுகின்றோம் உண்மைதான்..

    ReplyDelete
  7. சீக்கிரம் உலக படங்கள் எழுதுகின்றேன்....பேப்பர் விஷயம் இதுல இரண்டு தவிர வேறு எதுன்னு சொல்லு

    ReplyDelete
  8. நண்பர் மதி சுதா எங்கிருக்கிறீர்கள்
    பதிவர் சந்திப்பில் நீங்கள் பிசியான நேரம் பார்த்து உங்கள் சோற்றுப் பானை களவாடப்பட்டிருக்கிறது

    ReplyDelete
  9. அருமை ஜாக்கி
    முதல் ஜோக் ஏலவே உங்கள் தளத்தில் படித்த ஞாபகம் இரண்டாவது இப்போதுதான்

    ReplyDelete
  10. நீ பெரிய கலா ரசிகன் தான் மச்சி .

    ReplyDelete
  11. செமையா பனி மூடி இருக்கும் நாட்டில் சில காலம் வாழ வேண்டும் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்கவேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை..
    எனக்கும் அந்த அசைஇருக்குது.பார்போம் எப்ப நிறைவேருதுன்னு .
    இந்த வாரம்அனைத்தும் அருமை .குறிப்பாக வேட்டி கட்டும் போதுவரும் மியூசிக், ஜோக் .
    வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  12. சூடான சாண்ட்வெஜ், கலக்கல் :)

    ReplyDelete
  13. லண்டன் பனிக்காலம் குறித்து ஆச்சரியப்பட்டிருக்கிறீர்கள்!உண்மையில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பின் ஐரோப்பிய நாடுகளை இந்த ஆண்டே மிக மோசமாக பனிக்காலம் தாக்கியிருக்கிறது!கால நிலை மாற்றமாக இருக்கலாம்!இன்றும் பனிப்பொழிவு கடுமையாகவே உள்ளது!நல்ல வேளை நீங்கள் தப்பித்தீர்கள்!

    ReplyDelete
  14. இன்னைக்கு நான்வெஜ் செம காரம்..ம்...ம்..

    -----செங்கோவி
    அதிரடிக்கார மச்சானும் அவசர மதுரை பயணமும்

    ReplyDelete
  15. Sir,

    Please visit South Korea...you will enjoy the snow fall in winter at -20 degree...one more thing, through out the year we are all using hot water only... since its available in every apartment...and you can get everywhere. water line is made like that.even though people are using Tissue, but we are very much acclimatized with water..

    btw, your blog is getting better and better...

    All the best..

    ReplyDelete
  16. நன்றி ஜாக்கி!

    அவசியம் சங்கமம் நிகழ்ச்சிக்கு வாங்க!

    உங்களை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  17. // காரை பனி மூடி இருக்கின்றது அந்தளவுக்கு கடுமையான பனி பொழிவு இருக்கின்றது... //
    இந்தியாவுல அந்த மாதிரி அப்நிப்போழிவு எல்லாம் வராதா...

    ReplyDelete
  18. // முகத்தை கூட கழுவிடலாம் ஆனா டாய்லட் போயிட்டு ...த்தை கழுவறது கொடுமையா இருக்கு.. //
    நிதர்சனம்... same feeling...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner