சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)

ஆல்பம்.


பெட்ரோல் விலை லிட்டருக்கு 3ரூபாய் ஏறி இருக்கின்றது ஒரு பத்து வருடத்துக்கு முன்பு லிட்டர் 35ரூபாய் விற்ற போது பெட்ரோல் விலையேற்றங்கள் 30 காசு மற்றும் 75 காசுகளில் மட்டுமே விலையேற்றம் இருக்கும் ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை... ரூபாய்களில் விலை ஏறிக்கொண்டு இருக்கின்றது. முன்பு பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை காரணம் காட்டி நான்கு ரூபாய்க்கு விற்ற டீ 5ரூபாய்க்கு ஆனது. இப்போது  டீசல் விலை உயர்வை அறிவிக்கவில்லை அறிவித்து இருந்தால் சிங்கள் டீ ஆறுரூபாய் ஆகி இருக்கும்..


ஆனால்  வெகு சீக்கிரத்தில் டீசல் விலை இரண்டு ரூபாய்க்கு விலைஏற்றம் இருக்கும் என்று இப்போதே ஆருடம் சொல்கின்றார்கள்...ரேஷன் அரிசி ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கிடைக்க வைத்து ,பழையது சாப்பிடவாவது எங்களுக்கு படி அளக்கும் இறைவா உனக்கு என் நன்றி என்று அன்றாடம் காட்சிகள் சொல்லிக்கொள்ளலாம்...  ரேஷனில் போய் பாருங்கள் அந்த ஒரு ரூபாய் அரிசிக்கான மவுசை... மற்ற பொருட்கள் இப்படி விளையேறிக்கொண்டே இருந்தால் பழையதுதான் சாஸ்வதம்.

=======
கொழா மூலமாக அரபு தேசத்தில் இருந்து பெட்ரோல் எடுத்து வராலாம் என்று மணிசங்கர் ஐயர் ஒரு திட்டத்தை செயல்படுத்த முனைந்த போதே அவருடைய இலாக்காவை பறித்து அவரை அசிங்கபடுத்தியதுஇதே காங்கிரஸ் அரசு. காரணம் பின்னனியில் அமெரிக்கா எனும் ரவுடி நின்றுகொண்டு காய் நகர்த்திக்கொண்டு இருந்தான் என்பது வரலாறு...நாம் எண்ணெய் விஷயத்தில் தன்னிறைவு அடைந்து விட கூடாது என்று அமெரிக்கா ஆசைபட இப்போது அது வைக்கும் விலையை வைத்து நாமும் விலை ஏற்றும் கட்டாயத்தில் இருக்கின்றோம்...கொழ பெட்ரோல் சினாவும் பாகிஸ்தானும் வெகு சீக்கிரத்தில் அனுபவிப்பார்கள் என்று நினைக்கின்றேன்....
===================

நாடளுமன்றம் தொடர்ந்து முடங்கியதால் 140 கோடிக்கு மேல் அரசுக்கு நஷ்டம் என்று ஒரு கணக்கு தெரிவிக்கின்றது..ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடிக்கு இது தூசு என்று எதிர்கட்சிகள்  நினைத்து விட்டனவா? அல்லது எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்கமாட்டோமா? என்று ஆளும்கட்சி நினைக்கின்றனவா? என்று  தெரியவில்லை.
=============
தமிழக முதல்வர் இலங்கையில் தேசிய கீதம் பாட தடை விதித்தமைக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்.. அந்த தேசிய கீதத்தை உயிர் போடு பாட வேண்டிய பல்லாயிரக்கணக்கான மக்கள் நான்காம் கட்ட ஈழ போரின் போது கொடுரமாக குண்டு வீசி தாக்கபட்டு கொத்து கொத்தாக மடிந்த போதும் அதை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு இப்போது தேசியகீதத்தை தமிழில் பாட பட வேண்டும் என்று கண்டனம் சொல்வது காமெடியாக இருக்கின்றது. தமிழில் பாட வேண்டும் என்றாலும் உயிருடனும் பாட வாயும் இருக்க வேண்டும் அல்லவா??
=======================
மிக்சர்...
சென்னை நகரம் பெருத்து விட்டது..ஆனால் போக்குவரத்து போலிசார் பல இடங்களில் டூட்டி போட்டாலும் அவர்கள் வெயிலில் நிற்க்கவேண்டி இருக்கின்றது.. அதனால் சென்னையில் முக்கிய இடங்களில் புறநகர் பகுதிகளில் மேலே படத்தில் உள்ளது போலான நிழற்குடைகள் அறிமுகப்படுத்தபப்பட்டு இருக்கின்றன.
==================
சென்னை ஒரு வாரமாக சூரிய ஒளி இன்றி தவிக்கின்றது. வடிவேலு  உதை  வாங்கிவிட்டு ஸ்டைலாக சொல்வது போல குளிர் லைட்டாக இருக்கின்றது. காலை  ஒன்பது மணிவரை பெண்களுரூவை ஞாபகபடுத்தி தொலைக்கின்றன. இந்த சாப் லைட்டிங்கில் வேலைக்கு போகும் பெண்கள் திடிர் என்று அழகாக  மாறி இருக்கின்றார்கள்.
===============
(மாநகர பேருந்தின் டயரை ஒரு பள்ளம் பருப்பு எடுக்கும் காட்சி.)

சென்னையில் மழை விட்டாலும் பெரிய கொடுமை என்னவென்றால் சேதமான சாலைகள்தான்.. மெட்ரோ ரயில் பணிகள் வேறு நடு ரோட்டில் தையா தக்கா என்று அதன் பங்குக்கு குதிப்பதாலும் இருக்கும் குறுகிய சாலையும் மழையால் சேதம் அடைந்து விட்ட காரணத்தால் வாகன ஓட்டிகள் படும் துன்பம்  சொல்லிமாளவில்லை. உலகத்திலேயே நடு ரோட்டில் பேரிகாட் வைத்து பள்ளம் இருக்கின்றது என்று அறிவித்து விட்ட அதன் பிறகு அதனை பற்றி மறந்து விடும் ஒரே துறை நமது நெடுஞ்சாலை துறைதான்..
(பள்ளம் என்பதை அறிவித்து விட்டு சாலையில் பாதி ரோட்டை அடைத்த படி ரெஸ்ட் எடுக்கும் பேரிகாட்)

இந்த கொடுமை எல்லாம் ஏதோ ஒரு குக்கிராமத்தில் நடந்தால் கூட யாருக்கும் தெரியாது...ஒரு ஸ்கொயர்பிட் ஜந்தாயிரத்தில் இருந்து ஏழாயிரம் வரை விற்க்கும் சென்னை நகரில் போரூருக்கும் வளசரவாக்கத்துக்கும் இடையில் உள்ள சாலையில் எடுத்தது... இது எல்லாம் ஒரு சாம்பிள்தான்.. சென்னையிலேயே இப்படி என்றால் இன்னும் கிராமங்கள் நிலை கேட்கவே வேண்டாம்....

சரி இதெல்லாம் கூட பரவாயில்லை.. பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் சாலையில் பாதி இடங்களில் பள்ளம் பாதி இடங்களில் குறுகிய சாலை என்று வாகன ஓட்டிகள் தினறிக்கொண்டு இருக்க எங்க பங்குக்கு என்று நாங்களும் ஏதாவது செய்யனும் இல்லை என்பது போல் சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்.

(மேலுள்ள புகைபடங்கள் அத்தனையும்  வடபழனி போரூர் சாலையில் எடுக்கபட்டவை...)
=================================
 சாருவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்ராவின் பேச்சை இப்போதுதான் நான் முதன் முறையாக நேரில் கேட்கின்றேன்... வதை (டார்சர்) குறித்து  அவர் பேச ஆரம்பித்து போது அதனுள் பூந்து புறப்பட்டு, வெளுத்துகட்டி வெளிவந்த போது  நான் வாயில் ஈ போகாமல் அவரின் பேச்சை  கேட்டுக்கொண்டு இருந்தேன்.. அதற்கு எத்தனை அவர் படித்து இருக்கவேண்டும்? எவ்வளவு செய்திகள்? எவ்வளவு அனுபவ பாடங்கள்? எஸ்ரா உங்கள் வாசிப்புக்கு எங்கள் அனுபவத்துக்கும் எனது ராயல் சல்யூட்.
===============
இன்றில் இருந்து 8வது சென்னை உலகதிரைப்படவிழா தொடங்குகின்றது... நான் உட்லண்ட்ஸ்க்கு இன்று வருவேன்..நண்பர்களை அங்கு சந்திக்கலாம்..
==========
மீன்டும்  நம்ம ஏஆர்ரகுமான் பெயர் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கபட்டு இருக்கின்றது.. படத்தின் பெயர் ...127 ஹவர்ஸ்
இந்த படத்தையும் ஸ்லம்டாக் மில்லியனர் டெனிபாயல்தான் இயக்கி இருக்கின்றார்..திரும்பவும் கிடைத்து விட்டால் இரண்டாவது முறை விருது வாங்கும் தமிழன் என்று மார்தட்டி கொள்ளலாம்... நிச்சயம் அந்த படத்துக்கு கிடைக்கும் என்பது என் எண்ணம்.வாழ்த்துக்கள் ரகுமான்.
=========
விஜய் டிவி ஏர்டெல் சூப்பர்  சிங்கர் நிகழ்ச்சியில்  எஸ்பி  சைலஜா செய்யும் அளும்பு தாங்கவில்லை.. ஒருவன் எவ்வளவுதான் நன்றாக பாடினாலும் போட்டி என்று வந்து விட்டால் அதன் வரைமுறை எல்லோருக்கும் பொறுந்தும்...  நேற்று ஒரு போட்டியாளர் பாடும் முன் அவருடைய முந்தைய திறமைகளை வைத்து அவர் செலக்ட் என்று பாடும் முன் குறிப்பு எழுதுவது எந்த ஊர் நியாயம்... ???? அதை பார்த்தால் மற்ற போட்டியாளர் மனநிலை எப்படி இருக்கும்...நம்பகதன்மை வேண்டும்.. எல்லோருக்கும் சமமாக பாவிக்க வேண்டும். ஜட்ஜாக வந்து விட்டாலே கொம்பு முளைத்து விடுகின்றது என்ன செய்வது.. அதே போல அந்த இடத்தில் அதிகம் டாமினேட் செய்வதும் அவரே...
===========

 சலனபடம்.
 
சீட்டுக்கு பக்கத்தில் ஒரு முடை நாற்றம் அடிக்கும். மூட்டை பூச்சி இருக்கும், பேருந்து வாங்கிய போது கம்பெனிகாரன் போட்டு கொடுத்த சீட்டின் தலை பக்கம் இருக்கும் வெள்ளை துணியில் இருக்கும்,வெளக்கெண்ணை,வீவீடி கோக்நட் ஆயில்,பாராசூட் போன்ற இன்னபிற எண்ணெய் பிசுபிசுப்புகளுடன் இருக்கும் துணி, போதையில் எப்போதோ வாந்தி எடுத்து வைத்து காய்ந்து போன மிச்சம், சைட் சீட்டில் இருக்கும் போது  பான்பராக் எச்சில் துப்பிய எச்சங்கள், பின்சீட்டில் குழந்தை இருந்து வைத்த மூத்திரம் அப்படியே ஒரு வெள்ளபெருக்கை ஏற்படுத்தி நம் கால்களை நனையவைக்கும், வெற்றிலைபாக்கு ஏச்சில் துப்பலின் சாரல் நம் முகத்தில் பேசியல் செய்யும்...இப்படியாகதான் தமிழக அரசு பேருந்துகளில் நாம் அனுதினமும் பார்த்து இருப்போம் அல்லது பயணபட்டு இருப்போம்.


ஆனால் இப்போது லக்சுரியா என்று  ஒரு பேருந்து  சென்னை பெங்களூர் இடையே ஓடுகின்றது.. ஒரு ஆளுக்கு போக மட்டும் 1800ரூபாய்.. ஆனால் டிரைனில் 117ரூபாய்தான்... அதுவே ஏசியாக இருந்தால்380 ரூபாய் அவ்வளவுதான்.. பிளைட் சார்ஜ் 3000தான்.. ஆனால் ஒரு பேருந்துக்கு 1800 என்பது ஏற்புடையதா?? என்பதை கீழ் வரும் வீடியோவை பார்த்து விட்டு சொல்லுங்கள்.





========================


இந்தவார கடிதம்...

நண்பர் ஜாக்கி அவர்களுக்கு வணக்கம்.

என்னுடைய கருத்தினை கடிதம் போல் தங்கள் பதிவில் பதிவிட்டதற்கு என் நன்றிகள்.

இன்றைய மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் வழக்கம் போல் கலக்கல் .

மேலும் "சென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம்" சூப்பர் மற்றும் ஒரு பயனுள்ள பதிவு.


Lord of war (2005 ). பின்னணி இசையின் சுட்டி (youtube) இது. (கூகிள் தேடல்)

http://www.youtube.com/watch?v=௨௭ஏண்ட்கி௩௦

படம் எழுத்து போடும் பொழுது பார்க்க வில்லை & முடியும் பொழுதும் பார்க்க முடியவில்லை. எனவே தான் உரிமம் பற்றி தெரியவில்லை.

மற்றும், நான் சொல்லவந்ததும் அதுவல்ல. காப்பி என்று நான் குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.

ஒரு ஹாலிவூட் படத்தில் நம் தமிழ் படத்தின் பின்னணி இசை பயன் படுத்தப்பட்டது பெருமைக்குரிய விஷயம் .

நேரம் கிடைத்தால் பார்க்கவும்.

நன்றி.

ஆனந்த்
பமாகோ,மாலி
===========
அன்பின் மாலி  போன கடிதத்தில் என் தளம் ஒரு தகவல் களஞ்சியம் என்று கடித்த்தில் நீங்கள் சொன்னதை நண்பர் அதிஷா சாரு புத்தக வெளியிட்டின் போது  நக்கல் விட்டார்... அப்போது சொன்னேன்... அது நண்பர் மாலியின் கருத்து என்று..அவருடைமய பகிர்வு  என்று...அது போலதான் ரகுமான் காப்பி  இசை பற்றியும்.  அதற்கு நிறைய நண்பர்கள் பின்னுட்டத்தில் விளக்கினார்கள். அதை நீங்களும் புரிந்து கொண்டு பதில் கடிதம் அனுப்பியமைக்கு என்   நன்றிகள்.
======================
 பிலாசபி பாண்டி.  

நேரு  சொன்னார்.. சோம்பேறிதனமே மிகப்பெரிய எதிரி...

காந்தி சொன்னார்...உங்கள் எதிரிகளை நேசியுங்கள்...

இப்ப நீங்க சொல்லுங்க நான் என்ன செய்யறது??

இப்படிக்கு
பிலாசமி பாண்டி.
===============
நான்வெஜ் 18+

ஒரு பார்ட்டி அமெரிக்காவுல சிக்காக்கோ நகர்ல நடந்தது.. அது ஒரு கருப்பின ஆள்  பார்ட்டிக்கு  போகும் அவசரத்துல கீழ பேன்ட் போடாம போயிட்டான். அங்க இருக்கும் வெள்ளைக்கார பொண்ணுங்களை பார்த்ததும் அவன் டெம்டாயிட்டான் பார்ட்டி கலகட்டுச்சி அப்ப போதையில வந்த ஒரு பொண்ணு அவனை பார்த்து சொன்னா...

'ஹாய் ஜென்டில்மேன், Tieயை ஏன் கழுத்துல கட்டாம இடுப்புல கட்டி இருக்கீங்க...'.?????



=====================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 



24 comments:

  1. தமிழில் பாட வேண்டும் என்றாலும் உயிருடனும் பாட வாயும் இருக்க வேண்டும் அல்லவா??//

    உண்மை தான் பாஸ்...
    சுயநலவாத அரசியல்!

    ReplyDelete
  2. //தமிழில் பாட வேண்டும் என்றாலும் உயிருடனும் பாட வாயும் இருக்க வேண்டும் அல்லவா??//

    Tamilan sagum pothu thoongiya muthalvar ippa thesiyageetham niruthappattathum vizhiththuvittaro?

    ReplyDelete
  3. நல்ல வேளை அடிமைகளின் பாடலான "ஜன கன மண"-வை (இந்த பாடலின் அர்த்தம் புரிந்தவர்கள் நிச்சயமாக இதனை அடிமையின் பாடலாக தான் சொல்லுவார்கள்.) தமிழில் பாடச்சொல்ல வில்லை... அர்த்தம் பொதிந்த தாய் மண்ணை உயர்த்தி A.R. ரகுமான் பாடிய "வந்தே மாதரத்தை" தமிழில் பாடியும் சீண்டுவார் யாரும் இல்லை... இந்த லட்சணத்தில் அயல் நாடு என்று இந்திய அரசாங்கம் சொல்லும் ஒரு நாடு தன் தேசிய கீதத்தை தேசிய மொழியில் மட்டுமே பாட வேண்டும் என்று சொல்லுவதை மட்டும் எப்படி இவர் எதிர்க்கலாம்? (அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு உருப்படியா எதுவும் செய்யாமல் இப்படி ஒரு சப்பை விசயத்துக்கு மட்டும் பெருசா அறிக்கை குடுக்க அந்த தன்மான சிங்கத்துக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ?)

    ReplyDelete
  4. //ஆனால் இப்போது லக்சுரியா என்று ஒரு பேருந்து சென்னை பெங்களூர் இடையே ஓடுகின்றது..//



    இது வியாபார நிமித்தமாக சென்னை-பெங்களூரு நகரங்களுக்கிடையில் பயணிக்கும் பெரிய மனிதர்களுக்கானது... நாமெல்லாம் சும்மா ஒரு தடவை சுற்றுலா செல்வது போல இந்த பேருந்தில் பயணிக்கலாம்... ஒரு விமானத்தில் என்னென்ன சேவைகளை அனுபவிக்கலாமோ அது அத்தனையும் இந்த பேருந்து பயணத்தில் கிடைக்கும்... அத்துடன் விமான நிலையம் செல்ல ஒருமணி நேரம்; விமான நிலையத்தில் காத்திருக்கும் ஒரு மணி நேரம் சென்னைக்கோ பெங்களூருவுக்கோ வந்து சேர்ந்தவுடன் விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் வர மீண்டும் ஒரு மணி நேரம்; இதை எல்லாம் தவிர்க்க நிச்சயமாக இது உதவும்...


    //கொழா மூலமாக அரபு தேசத்தில் இருந்து பெட்ரோல் எடுத்து வராலாம்//



    இங்கே இருக்க மக்களுக்கு கொழா மூலமா தண்ணி விடவே இந்த அரசுக்கு வக்கில்லை... இவர்கள் கொழா மூலமாக எண்ணெய் எடுத்து வந்தால் இன்னும் எத்தனை லட்சம் கோடிகள் அடிப்பார்களோ??? ஆண்டவனுக்கே வெளிச்சம்...


    அப்புறம் அந்த tie காமெடி சூப்பர்...

    ReplyDelete
  5. கலக்கல் ஜாக்கிசார். கலந்து கட்டி தாக்கறீங்க....
    சுவாரசியம், அனுதாபம், கோபம், சிரிப்பு நு எல்லா ரசங்களும் ரசிக்க வைக்கிறது.
    ஏ.ஆர் ரஹ்மானின் 127 ஹவர்ஸ் பாடல்கள் நீங்கள் கேட்டீர்களா? (நிறைவு பாடல் Dido வுடன்) நன்றாக இருந்தது. எனினும் தமிழுக்கு ஒப்பிடும் பொழுது சுமாராக இருந்தது.
    கோல்டன் க்ளோப் மற்றும் கிராமி வாங்கும் தகுதி அவருக்கும் அந்த பாடல்களுக்கும் உண்டு. (சென்ற முறை கிராமி வாங்கும் பொழுது யாரும் கண்டுகொள்ளவேயில்லை.. உண்மையில் ஆஸ்கரை விடவும் கிராமி உயர்ந்த பரிசுதான்.. )

    நீங்கள் கொடுத்த யுட்யூப் சுட்டி வேலை செய்யவில்லை

    ReplyDelete
  6. //நாடளுமன்றம் தொடர்ந்து முடங்கியதால் 140 கோடிக்கு மேல் அரசுக்கு நஷ்டம் என்று ஒரு கணக்கு தெரிவிக்கின்றது..ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடிக்கு இது தூசு என்று எதிர்கட்சிகள் நினைத்து விட்டனவா?//
    கண்டிப்பாக தப்பே இல்லை. எவ்வளவு நாளானாலும் சரி. எதிர்கட்சிகள் விட்டு கொடுக்கவே கூடாது. நாடாளுமன்றம் நடத்தி என்ன கிழித்தார்கள் என்று தெரியாதா?

    ReplyDelete
  7. தமிழில் பாட வேண்டும் என்றாலும் உயிருடனும் பாட வாயும் இருக்க வேண்டும் அல்லவா??//


    ராசா பிரச்சனையை மறைக்க இந்த பிரச்சனை வழிகாட்டியுள்ளது

    ReplyDelete
  8. வழக்கம்போலவே அசத்தல்.....

    ReplyDelete
  9. The youtube URL seems to be corrupted. Here is the correct URL for the Lord of the War BGM.
    http://www.youtube.com/watch?v=1WDvqPOn6g4

    -Anand V

    ReplyDelete
  10. பாகிஸ்தானில் ஏற்கனவே பெட்ரோல் விலை கம்மிண்ணே.குழாய் பெட்ரோலும் வந்துடுச்சுன்னா..நம்ம ஆட்கள் வரியை 100% போடுறதைக் குறைச்சாலே போதும்.

    --செங்கோவி
    சாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை

    ReplyDelete
  11. நீங்களும் ரீடர்-இல் பதிவை முழுவதாக கொடுப்பதை நிறுத்திட்டா நாங்க என்ன பண்ணுவோம்...

    ஒரு போராட்டம் தான் ஆரம்பிக்கணும் போல...

    வழக்கம் போல சண்ட்விச் சூப்பர்...

    ReplyDelete
  12. lord of war படத்தில் பாம்பே tune use பண்ணினதுக்கு end tile la courtsy போட்டுஇருகாங்க.

    ReplyDelete
  13. ஜாக்கி, இந்தியா வேறு தமிழன் வேறு. இந்தியாவில இருக்கிற தமிழனையே இந்தியன்னு ஏத்துக்க மாட்டேங்கிறாங்க!!

    எங்கே ஒரு வீடியோவையும் காணோம்?

    ReplyDelete
  14. அந்த தேசிய கீதத்தை உயிர் போடு பாட வேண்டிய பல்லாயிரக்கணக்கான மக்கள் நான்காம் கட்ட ஈழ போரின் போது கொடுரமாக குண்டு வீசி தாக்கபட்டு கொத்து கொத்தாக மடிந்த போதும் அதை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு இப்போது தேசியகீதத்தை தமிழில் பாட பட வேண்டும் என்று கண்டனம் சொல்வது காமெடியாக இருக்கின்றது.

    100000000000000 % correct mr.jackie,

    Keep it up.

    Azeem Basha
    Jeddah -Saudi Arabia

    ReplyDelete
  15. பின்னுட்டத்தில் கருத்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.

    பிலிம் பெஸ்ட்டிவலுக்கு போகும் அவசரத்தில் போஸ்ட் செய்தகாரணத்தால் வீடியோ இணைப்பை பார்க்கவில்லை மன்னிக்கவும் இப்போது இணைக்கபட்டு விட்டது..

    நன்றி

    ReplyDelete
  16. இந்த பஸ்ஸில் பயணம் செய்தவர்களின் அனுபவம் சொல்லி கொள்ளும்படி இல்லை...!! விளம்பரத்திற்கும் நடைமுறைக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள்.

    ReplyDelete
  17. விளம்பரத்தை பார்த்தல்200 சேர்த்தி கொடுக்கலாம் போல தெரிகிறது
    வழக்கம் போல் அருமையான பதிவு ௦௦

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner