மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•2010)

ஆல்பம்.. 

இன்று சரியாக (இன்னும் சில மணி நேரங்களில்) மதியம் இரண்டு மணிக்கு விஜய்டிவியில் இந்தவார தமிழ்சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது அதில் நந்தலாலா படம் பற்றி நான் உட்பட சென்னை பதிவர்கள் பலர் கலந்து கொண்டு பேசி இருக்கின்றோம்.


மணிஜி,கேபிள்,கேஆர்பி செந்தில்,விந்தைமனிதன்,பலாபட்டறை சங்கர்,அகநாழிகைவாசு என எல்லோரும் பேசி இருக்கின்றோம் நானும் பேசி இருக்கின்றேன்... நிகழ்ச்சி 15 நிமிடம்தான் எவ்வளவு வரும் எது வரும் என்பது தெரியவில்லை... இன்று மதியம் 2லிருந்து 2,30வரை நிகழ்ச்சியை பார்க்கவும். நேரம் இருப்பின்.
==============
விக்கிலிக்ஸ் இணையம் இப்போதைக்கு அமெரிக்காவின் ஏழரை என்று சொல்லலாம். அது எவ்வளவோ செய்திகள் வெளியிட்டாலும் இலங்கையின் அமெரிக்க தூதர் ஈழத்தின் கடைசிகட்ட போரில் இலங்கை ரொம்பவும் மனிதாபிமானம் இல்லாமல் பொட்டைதனமாக நடந்து கொண்டதை மிக துல்லியமாக அறிக்கை  ஒன்று  சமர்பிக்க அந்த அறிக்கையும் இப்போது வெளியாகி இருக்கின்றது. அமெரிக்காவின் பேர் ஆட்டம் கண்டு வெகுநாளாகிவிட்டாலும் ஆதாரத்துடன் அந்த இணையம் வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி..
===============
மழை போட்டு தாக்கிகொண்டு இருக்கின்றது.. எங்கள் ஊர் கடலூர் பக்கம் மழை தொடர்ந்து பெய்ந்து பூமி குளிர்ந்த தண்ணி போக வழியில்லாமல் தண்ணி தேங்கி இருக்கின்றது. கடந்த பதினைந்து  நாட்களில் இரண்டு நாட்கள் மட்டுமே பள்ளி வைத்து இருக்கின்றார்கள் மற்ற நாட்களில் மழைக்காக விடுமுறை விட்டு இருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் தொடர்ந்து  பெய்து வரும் மழையை... சென்னை மெக மூட்டமாகத்தான் காணப்படுகின்றது.
=======================
மிக்சர்..
வாத்தியார் வேலையைவிட்டு வந்து இரண்டு வருடங்கள் ஆக போகின்றது.. இன்னும் அந்த வேலையை நேசிக்கின்றேன். மணிஜி சொன்னார்.. ஏவிஎம் வரமுடியுமா? வரேன் ஜி.. உங்க ஸ்டுட்ண்ட் எல்லாரும் வந்து இருக்காங்க...விஜய்டிவியில் இன்டன்ஷிப் செய்ய வந்து இருக்கின்றார்கள்...நிகழ்ச்சியை விட என் மாணவ மாணவிகளை சந்திக்க மிகுந்து ஆவல் கொண்டேன். நான் போகும் போது சிக்கு புக்கு படத்தினை பற்றி கலந்துரையாடல் போய் கொண்டு இருந்தது.. மணிஜிமகளிடம் நான் வந்து இருப்பதாக என் மாணவ மாணவிகளிடம் தெரிவிக்க சொன்னேன். அவர்கள் வந்தார்கள்... அதில் ஒரு மாணவி ஓப்பன் புளோரில் என்னை பார்த்து ஓடி வந்து கட்டி பிடித்து நீங்க என் செல்லம்சார் என்று சொல்லிவிட்டு என்னை விசாரித்தும்.....

என் மாணவர்கள் என்னை கைகுலுக்கிஅகமகிழ்ந்து வாழ்த்து சொல்லி என் வீட்டில் உள்ளவர்களை வரை விசாரித்தும் என்மேல் அவர்கள் வைத்து இருக்கும் ஒரு மரியாதை...வந்து இரண்டு வருடம் ஆகியிம் நான் கிளாசுக்கு போகும் போது இருக்கும் அதே மரியாதையை வெளிபடுத்தினார்கள். அது போதும்.. அன்று இரவு கல்லூரி வாழ்க்கை பற்றிய நினைவுகள். மனதிரையில் வெகுநேரம் ஓடிக்கொண்டு இருந்தது.
====================
மதுரை டூ தேனி இரண்டு தனியார் பேருந்துகளின் வேகத்தால் பல  உயிர்கள் நாசமாகி இருக்கின்றன.. அது பேலாதான் கடலூர் டூ பாண்டி தனியார் பேருந்துகள்.. பேய் வேகத்தில் செல்லும். இந்த போட்டியை யாராவது ஒரு நல்ல போக்குவரத்து ஆனையர் அந்த வேகத்தை குறைத்தால் நன்று...
=======================
தளத்தின் பேக்ரவுண்ட் நேற்று மாற்றினேன்.. படிக்க முடியவில்லை என்று நிறையபேர் கம்ளைன்ட் அதான் மாற்றிவிட்டேன்.. நன்றி மஸ்கட் விஜய் வேற ஒன்றும் பெரிய காரணம் இல்லை..
==============

இந்தவார சலனபடம்...





இந்தி எனக்கு எழுத படிக்க மட்டுமே தெரியும் ஆனால் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் இந்த இந்த மீயுசிக் வீடியோ எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்த காதலும் அந்த கேரளா லோக்கேஷனும்.. அந்த பெண் அவன் மீது இன்ஸ்பயர் ஆகும் இடத்துக்கான காட்சியாக ஒரு காகித கப்பலை சின்னபையனுக்காக குட்டையில் கோர்ட் சூட் எல்லாம் போட்டு இறங்கி எடுப்பது எல்லாம் கவிதை..
===========================
படித்ததில் பிடித்தது.
காலையில் வடபழனி சிவன் கோவில் பின்புறம்  உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு அப்பா இந்த குளிர் மழையிலும் தன் பெண் பிள்ளையை புறநகரில் உள்ள கல்லூரிக்கு  எதிர்கால என்ஜினியர் ஆக்க கல்லூர பேருந்து ஏற்ற வந்து இருந்தார்.. அந்த பெண் செம அழகாக திருத்தமாக இருந்தாள்.. என்ன குளிருக்கு காதில் வைத்து இருந்து பஞ்சு ஒரு 20 பர்சன்ட்  கெடுத்து கொண்டு இருந்தது.. மகளை பேருந்துமிதஸ் பண்ணாமல் சரியாக ஏற்ற வேண்டும் என்ற பதட்டத்தில் கிடைத்த பனியனை போட்டுக்கொண்டு முகத்தை கூட கழுவாமல் வந்து நின்று கொண்டு இருந்தார்... நான்கு நாள் சவரம் அவரை வெகு களைப்புக்கு ஆட்பட்டவர் போல காட்டியது..  கோழி குஞ்சை காக்கும் தாய் கோழி போல  அவர் நின்று கொண்டு இருந்தது ரசிக்கவைத்தது.. எனக்கு அந்த பெண்ணைவிட அந்த அப்பனின் பாசம் மிக அழகாக தெரிந்தது.
=============================

இந்தவார கடிதம்..

i am ram. i read ur post at ur blogspot date to date. i am very happy to read ur post.
    ur writing sense is very intresting. i want to speak with u.
  
     thank u sir
    by
    RAM
    TIRUPUR 





========================
மிக்க நன்றி ராம் தொடர்ந்து வசியுங்கள் உங்கள் நண்பர்களிடத்தில் இந்த தளத்தை அறிமுகபடுத்துங்கள்..
===================
பிலாசபி பாண்டி

சில்லரை சத்தம் போடும் ரூபாய் நோட்டு சத்தம் போடாது.. ரெண்டுமே நமக்கு தேவையானதுதான். அதனால எங்க சத்தம் போடனுமோ அங்க சத்தம் போடு எங்க சைலன்டா இருக்கனுமோ அங்க சைலன்டா இரு.. போதுமா?

====================================
இந்தவார நிழற்படம்..
இது நம்ம நந்தம்பாக்கம் கிட்ட எடுத்தது நம்ம கமேரா கைங்கர்யம்தான்.
=================
நான்வெஜ் 18+
ஜோக்..
மச்சி என் கேர்ள் பிரண்டுக்கு பர்த்டே வருது என்ன கிப்ட் கொடுக்கலாம்ன்னு நீயே சொல்லு??
அவ எப்படி மச்சி இருப்பா??
செம சூப்பரா இருப்பா...
அப்ப என் செல்போன் நம்பரை கொடு...
==============
ஜோக்,2
பேருந்து நிறைய கூட்டத்தோடு மூச்சு விட கூட கஷ்டபடும் அளவுக்கு  சென்று கொண்டு இருந்தது. ஒரு பெரிசு ரொம்ப நேரமாக ஒரு சின்ன பெண்ணின் பின் நின்று சிலுமிசம் செய்து கொண்டு இருந்தது. அந்த பெண்ணும் பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு திரும்பி பெருசு கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை பெரிசு பொறிகலங்கி நின்னுச்சி... அவ கோபமா சொன்னா...
ஏன்நாயே நீயே  நிக்க இடம் இல்லாம நிக்கற.. இதுல உன்தம்பியை வேற நிக்க வைக்க டிரை பண்ணறியா??
=================


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

21 comments:

  1. //இலங்கையின் அமெரிக்க தூதர் ஈழத்தின் கடைசிகட்ட போரில் இலங்கை ரொம்பவும் மனிதாபிமானம் இல்லாமல் பொட்டைதனமாக நடந்து கொண்டதை மிக துல்லியமாக அறிக்கை ஒன்று சமர்பிக்க//
    :-)
    background மாற்றியது நல்லா இருக்கு! :-)

    ReplyDelete
  2. //மச்சி என் கேர்ள் பிரண்டுக்கு பர்த்டே வருது என்ன கிப்ட் கொடுக்கலாம்ன்னு நீயே சொல்லு??
    அவ எப்படி மச்சி இருப்பா??
    செம சூப்பரா இருப்பா...
    அப்ப என் செல்போன் நம்பரை கொடு...//
    அட்டகாசம் போங்க.....
    எங்க இருந்து இதெல்லாம்..... :)

    ReplyDelete
  3. அருமைங்கோ... அதிலும் உங்களுக்கு படித்ததில் பிடித்ததே எனக்கும் அதிகம் பிடித்திருக்கிறது...

    ஜீ என் சொத்துக்கே ஆப்பு வச்சிட்டிங்களே...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.


    வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

    ReplyDelete
  4. வழக்கம்போலவே தகவல்கள் அருமை அண்ணே,

    எல்லாம்மே செம கலக்கல்...
    படித்ததில் பிடித்தது. அருமையான ரசனை...

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  5. //சினிமாவில் எதையாவது சாதிக்கலாம் என்று உழைத்துக்கொண்டு இருக்கின்றேன்.இப்போது உதவி ஒளிபதிவாளராக பணியாற்றிக்கொண்டு இருக்கின்றேன்.எதுவுமே இல்லையென்றால் பரவை முனியம்மாவுக்கு 60 வயதில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததை போல கிடைக்காமலா போய்விடும்? என்றுநப்பாசையுடன் பிரியங்களுடன் ஜாக்கிசேகர்..//

    நிச்சயமாக வாழ்க்கையே நம்பிக்கையில் அடிப்படையில்தானே ஓடிக்கொண்டிருக்கிறது
    உங்களது தன்னம்பிக்கை அருமை அண்ணே,
    ஒருநாள் நிச்சயம் நடக்கும் மனம் தளராமல் உழைத்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்

    “பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
    ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”

    ReplyDelete
  6. //ஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டுமே முடியும்//

    நண்பனே!

    தொடங்கும் முன் தயங்காதே!

    தொடங்கிய பின் நடுங்காதே!

    இடையில் நீ உறங்காதே!

    வேதனை கண்டு பதுங்காதே!

    சோதனை வரும் துவளாதே!

    சாதனை செய்வாய் கலங்காதே!

    ஒரு நாள் நிச்சயம் விடியும்!

    அது உன்னால் மட்டுமே முடியும்

    தன்னம்பிக்கைக்காக எனது ஒரு சின்ன கவிதை

    நேரமிருந்தால் நம்ம பக்கமும் உங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  7. விஜய் டி.வி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு வாழ்த்துகள். தளத்தின் பின்னனி இப்போதுதான் நன்றாக இருக்கிறது. கலக்குங்க அண்ணா.

    ReplyDelete
  8. சிறந்த ஆசிரியர் ஒருவரின் சேவையை கல்வி உலகம் தவற விட்டதற்கு உண்மையிலேயே வருந்துகிறேன் . புகழ் , அங்கீகாரம் என அனைத்தும் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்ற நிலையே இதற்கு காரணம் . வெளிநாடுகளில் இப்படி இல்லை

    ReplyDelete
  9. ஜாக்கி அண்ணே,

    வீடு வடிவமைப்பு விளம்பரம் பட கெஜட்டை மூவ் செய்து புள்ளி விபரம் கெஜட்டுக்கு முன்னாடி வைத்தீர்கள் என்று சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் இப்ப பார்ப்பதற்கு ஒழுங்கீனமாகத் தெரிகிறது தவறாக நினைக்க வேண்டாம் இது எனது கருத்து, உங்களுக்கும் சரியென்று பட்டால் செய்து விடுங்கள்

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  10. இதுவரை நாண் உங்கள் பிளாகில் வாசிப்பதோடு சரி கமெண்ட் போட்டதே இல்லை & ஃபாலோ பண்ணவும் இல்லை.. இன்றுதான் உங்களின் போலோவர் ஆக சேர்ந்துள்ளேன், கொம்மெண்டும் பதிவு செய்துள்ளேன்...

    உங்களின் எழுத்து நடை, சொல்லவந்த விஷயத்தை சொல்லும் விதம் அருமை.. எனக்கு பிடிக்கும்..

    எல்லாம் கலந்த கலவையாக உள்ளது உங்கள் பிளாக்..

    வாத்தியார் வேலையை வேண்டாம் என சொல்லிவிட்டு உங்களின் ஆழ்மண ஆசைக்கு மதிப்பளித்து பல பொருளாதார இடைஞ்சலுக்கும் இடையில் இத்தனை கடினமான சினிமா பக்கம் வந்துள்ளீர்கள், விரைவில் நீங்கள் விரும்பிய இடம் நீங்கள் நேசிக்கும் தொழிலில் கிடைக்க வாழ்துகிறேன் அண்ணா..

    keep rocking....

    ReplyDelete
  11. //நான்வெஜ் 18+
    ஜோக்..
    மச்சி என் கேர்ள் பிரண்டுக்கு பர்த்டே வருது என்ன கிப்ட் கொடுக்கலாம்ன்னு நீயே சொல்லு??
    அவ எப்படி மச்சி இருப்பா??
    செம சூப்பரா இருப்பா...
    அப்ப என் செல்போன் நம்பரை கொடு...//

    மிஸ்டர் ஜாக்கி சேகர். இந்த ஜோக்கை ஒரு பதிவா ஏற்கனவே கார்க்கி எழுதிட்டார். இதுல என்ன இருக்குன்னு 18+ போட்டிருக்கிங்க? வாழ்க்கைல ஏ ஜோக் படிச்சதே இல்லையோ?. இது காப்பியா இன்ஸ்பிரேஷனா? கீழ இருக்கும் லின்க் பாருங்க.

    http://www.karkibava.com/2010/11/blog-post_30.html

    ReplyDelete
  12. please change your body text colour from gray to black in blogger template designer.

    ReplyDelete
  13. Dear Mr. Jackie,
    Am happy that u participated in VIJAY TV program. Kindly upload the video also, bcoz we missed out... Please....

    Rgrds,
    Vijay
    Muscat.....

    ReplyDelete
  14. // இன்று மதியம் 2லிருந்து 2,30வரை நிகழ்ச்சியை பார்க்கவும். நேரம் இருப்பின் //
    ஐயோ... மிஸ் பண்ணிட்டேனே... காலையிலே dashboard பார்த்தேன்... ஆனால் வேலை இருந்ததால் ராத்திரி படித்துக்கொள்ளலாம் என்று போய்விட்டேன்... மறுஒளிபரப்பு இருக்கா...

    ReplyDelete
  15. // தளத்தின் பேக்ரவுண்ட் நேற்று மாற்றினேன்.. படிக்க முடியவில்லை என்று நிறையபேர் கம்ளைன்ட் அதான் மாற்றிவிட்டேன்.. //

    நானும் மாற்றுவது குறித்து யோசித்து வருகிறேன்... நிறைய குழப்பங்கள்... முதலில் பளபளப்பாக எதையாவது வைக்க எண்ணினேன்... இப்பொழுது உங்களையும் மற்ற சில பதிவர்களையும் பார்த்து சிம்பிளாக வைக்க முடிவு செய்திருக்கிறேன்... நீங்கள் இப்போது வைத்திருப்பது பிளாக்கர் டெம்ப்ளேட்டா அல்லது மூன்றாம் தரப்பு டெம்ப்ளேட்டா...?

    ReplyDelete
  16. பின்னுட்டம் இட்ட அத்தனை பேருக்கும் என் நன்றிகள்..

    விஜய் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக வில்லை.. ஒளிபரப்பினால் வலை ஏற்றுகின்றேன்..

    மாணவன் நீங்கள் சொன்னது போல் செய்து விட்டேன் மகிழ்ச்சிதானே....

    சஞ்சய்... எனக்கு எஸ்எம் எஸ்சில் வந்த ஜோக்கை எழுதினேன். யார் இந்த ஜோக்கை எழுதி இருக்கின்றார்ர் என்று நான் பார்க்க முடியாது.
    எனக்கு ஏ ஜோக் இதுக்கு முந்தி படித்தது இல்லை நன்றி

    மிக்க நன்றி ஆர்கே நண்பன்...

    பார்வையாளன் அதீத புகழ் சினிமாவில் இருப்பது மறுக்க முடியாது.. ஆனால் அதில் சேர அது மட்டும் காரணம் இல்லை.. என்னை பொறுத்தவரை ஒளியை எப்படி கட்டுபடுத்துவது எப்படி அதிகபடுத்துவது என்பதை கற்றுக்கொண்டு திறம்பம செய்லபட வேண்டும் என்பதே என் ஆசை.

    ReplyDelete
  17. Nice sir
    waited for Vijay Tv Show

    when they are telecasting

    ReplyDelete
  18. எப்பவும் போல் கலக்கல்.

    ReplyDelete
  19. என்ன அண்ணே டெம்ப்ளேட் மாத்திடீங்களா, இன்னும் கூட நல்லதாக தேர்வு செய்து இருக்கலாம். பரவாயில்லை முன்பை விட இது அழகாக உள்ளது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner