(FAIR GAME)15++சிண்டி கிராப்போடு ஒரு துரத்தல் பயணம்...

திரைக்கதைகளில் துரத்தல் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் ஒரு மவுஸ் இருக்கத்தான் செய்கின்றது... அது போல படங்களில் பார்வையாளன் அவனும் சேர்ந்து பயணிக்கின்றான்.. கதாபாத்திரங்கள் தப்பினால் அல்லது இக்கட்டில் மாட்டிக்கொண்டால் இவனே மாட்டிக்கொள்வது போல் பில் செய்கின்றான்... அப்படி பீல் செய்த ஒரு படம்தான் இது...எந்த இடத்துக்கு போனாலும் இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு துரத்தும் வில்லன் கோஷ்ட்டியிடம் இருந்து தப்பிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல...
FAIR GAME படத்தின் கதை இதுதான்...

Max Kirkpatrick (William Baldwin) கொஞ்சம் மூளையுள்ள போலிஸ்காரன்...Kate McQueen (Cindy Crawford) ஒரு அழகு தேவதை ... அது முதல் குவாலிபிகேஷன்... அப்புறம் அந்த பொண்ணு ஒரு லாயர்....எல்லா அழகான பொண்ணுங்களும் குழந்தைங்க மேல பாசமா இருப்பாங்களே, அது போல இந்த பொண்ணும் பாசமா இருக்கு.... ஒரு நாள் காலையில ஜாக்கிங் போயிட்டு இருக்கும் போது துப்பாக்கி வெடிக்கிது.. அது இந்த பொண்ணு கையில பட்டுடிச்சி... நமக்கு எந்த எதிரி இருக்காங்க அப்படின்னு நினைச்சு , சரி ஒரு போலிஸ் கம்பிளைன்டாவது கொடுத்து வைப்போம்னு போலிஸ்டேசன் போய் ஒரு கம்பிளெயின்ட் கொடுக்க சொல்ல, அங்க டிடெக்டிவ் மேக்ஸ்சை மீட் பண்ணுது...

அவ ஸ்டைல் அவனுக்கு பிடிச்சு போச்சு, அவ அழகு அவனை தாக்குது,அவனை தலைகீழ திருப்பி போட்டு தாக்குது, அந்த பொண்ணுக்கு எதுவேன செய்யலாம் என்ற மன நிலைக்கு வரான்...ஆபிஸ் போயிட்டு வீட்டுக்கு போய் தன்னோட நாயிக்கு பால் வச்சிட்டு டீவி போட்டா? வீடே வெடிக்கிது... அப்ப அந்த பொண்ணுகிட்ட கேஸ் பைல் ஒன்னுல கையெழுத்து வாங்க வந்த மேக்ஸ், அந்த பொண்ணை காப்பாற்ற, அதுக்கப்புறம் ஒரே ஓட்டம்தான்.. எங்க போனாலும் வந்துடுவானுங்க... வில்லன் கோஷ்ட்டிங்க அது எப்படி சாத்தியம்னு நீங்களே படத்தை பார்த்து தெரிஞ்சிக்கிங்க...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இப்போது இருக்கும் தொழில் நுட்பங்களை ஆரம்பத்தில் காட்டியது இந்த படம்... இந்த படத்துல இருக்குற கம்யூட்டர் பார்க்கும் போது அது உங்களுக்கே தெரியும்...செல்போன் செங்கல் சைஸ்ல இருக்கும்....

சிண்டிகிராப்போர்ட்தான் இந்த படத்தோட முதுகு எலும்பு....ஜாங்கிங் டிரசோட போலி்ஸ் ஸ்டேசன் வந்து கம்ளெயி்ன்ட் கொடுக்கும் அழகே அழகு... என்னாட அப்போதைய ஹாலிவுட் கனவு கன்னி சிண்டிதான்...

டிடெக்டிவ் மேக்ஸ்சா நடிச்ச வில்லியம் பால்ட்வினுக்கு பொறக்கும் போதே ரொம்ப மச்சத்தோட மனுஷன் பிறந்துட்டார் போல இவரு சிலிவர்னு ஒரு படம் அதுல நம்ம ஷரன் ஸ்டோன் கூட என்னல்லாம் பண்ணணளுமோ அதையெல்லாம் செஞ்ச மனுசன்... இந்த படத்துல சிண்டி...

என்னதான் விறு விறுப்புன்னாலும் இந்த படத்தை விமர்சகர்கள் கிழிச்சி தொங்க விட்ட படம்....

இந்த படத்தோட இன்னொறு அம்சம் டாப்லெஸ்சா சின்டி கிராப்போர்டு நடிச்சி இருப்பாங்க....

இந்த படத்தை டைரக்ட் பண்ண Andrew Sipes ஒரு விஷயத்துல பாராட்டனும்.... கிளைமாக்சுக்கு மொத சீன்தான் அந்த டிரெயின் சீன்... சிண்டி டாப்லெஸ் சான்சே இல்லை...அதுவும் உதட்டுக்கு மேல இருக்குற அந்த மச்சம் இறைவனின் எக்ஸ்ட்ரா ஒர்க்... குகூளில் பேர் பேம்னு அடிச்சாலே அந்த டிரெயின் சீனான்னு கேட்குது...

இந்த படத்தை பார்த்துட்டு சார் ரம்பா சார்னு விவேக்கிட்ட பார்த்திபன் சொல்லுவாரே அது போல என் நண்பர்கள் வட்டத்துல சொல்லி இருக்கேன்..

சிண்டிக்காக அப்போதைய நிதி நிலைமைக்கு மூனு வாட்டி பார்க்கறது எங்க பாஷையில சூ.... கொழுப்பு.... இருந்தாலும் பைனான்ஸ் பிரச்சனையும் மீறி இந்த படத்தை பார்த்தேன்...

சிண்டிக்கு நடிக்க தெரியலைன்னு இந்த படத்துக்கு Razzie Award (மொக்க அவார்டு) மூனு இந்த படத்துக்கு கிடச்சது.... எல்லாம் பொறாமை....

டிரைன்ல இருவரும் காமத்தில் மூழ்கி இருக்கும் போது ஹெலிகாப்டரில் ஆட்கள் டிரெயின் மேற்கூரையில் இறங்குவது அந்த ஹெலிகாப்டர் சத்தம் கூடவா கேட்காது...? அவ்வளவு பிசி???

இதே பேர்ல நிறைய படம் வந்து இருக்கு....
இந்த படத்தை டைம்பாஸ் படங்கள் லிஸ்ட்ல என்னால வைக்க முடியாது... லாஜிக் பாக்கலைன்னா இந்த படம் நல்ல விறு விறுப்பு.... அதனால பார்க்க வேண்டிய படக்ள் லிஸ்ட்ல இதை வைக்கின்ளறேன்...

இந்த படத்தை பாண்டி ரத்னா தியேட்டரில் பார்த்தேன்...

ரொம்ப சிண்டி பத்தி எழுதிட்டேனா? அல்லது பெனாத்திட்டேனா?ஓ காட் மதிய சோறு கிடைக்காது... இட்ஸ் ஆல் ரைட் சிண்டிக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்...

படத்தின் டிரைலர்....



படக்குழுவினர் விபரம்...

Directed by Andrew Sipes
Produced by Joel Silver
Written by Novel:
Paula Gosling
Screenplay:
Charlie Fletcher
Starring William Baldwin
Cindy Crawford
Steven Berkoff
Christopher McDonald
Salma Hayek
Distributed by Warner Bros.
Release date(s) November 3, 1995
Running time 91 min.
Country USA
Budget $50,000,000 (estimated)[1]
Gross revenue $11,534,477[2]

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

7 comments:

  1. மிகவும் அருமை படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது உங்களின் விமர்சனம் . பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  2. ரொம்ப பீல் பண்ணி எளுதியிருக்கீங்க..

    ReplyDelete
  3. உங்க விமர்சனத்துக்காகவே பார்க்கணும் ஜாக்கி.... :))

    ReplyDelete
  4. அண்ணே.. அந்த பனியன் மாத்துற சீன மறந்துட்டீங்களே..:-)))

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner