அங்காடி தெரு துன்பியலின் உச்சம்...(பார்த்தே தீர வேண்டிய படம்)

செக்யூரிட்டி வேலைக்கு 1993 டிசம்பர் 31ம் தேதி பையை தூக்கி கொண்டு கடலூரில் இருந்து சென்னைக்கு கிளம்பிய போது இரண்டே நாட்களில் சென்னை பட்டணம் என் காலடியில் வந்து விழுந்து விடும் என்று தப்பு கணக்கு போட்டது என் தவறுதான்... பேசிய கூலியை கொடுக்காமல் கனவுகளோடு வந்த தென்மாவட்டத்து இளைஞர்களை வயிற்றில் அடித்தது இங்கு இருக்கும் செக்யூரிட்டி நிறுவனம்...

அவர்கள் முதலில் செய்தது வேலைக்கு வரும் இளைஞர்களின் சர்டிபிகேட்டை முதலில் வாங்கி வைத்துக்கொள்வார்கள்.... அதன் பிறகு அடிமைதான்... அது ஒரு பெரிய கதை அந்த வலி வேறு ஒரு சந்தர்பத்தில் பதிவிகின்றேன்.....ஒரே அறையில் 25 பேருக்கு மேல் படுத்து உறங்கும் கொடுமை...ஒரே டாய்லட்டில் 150 பேர் மேல் போய்விட்டு வருவதும்... அப்படி போய் போய் அடைத்துக்கொண்டு எல்லாம் மிதக்கும் போது, அதிலேயே 2க்கு சகித்துகொண்டு போய் விட்டு வரும் இளைஞர்கள்... பலரது குடும்ப சூழல் மற்றும் சென்னைக்கு வேலைக்கு போகின்றேன் என்று ஊரில் சொல்லி விட்டு வரும் பில்டப், அனைத்தையும் சகித்துக்கொள்ள வைத்துவிடும்..
எப்படி டாயலட் இருந்தாலும் டயத்துக்கு செக்யூரிட்டி வேலைக்கு போக எல்லாவற்றையும் சகித்துகொள்ளும் அவர்கள் சகிப்புதன்மையை என்னவென்று சொல்வது.... உள்ளே எட்டி பார்த்து விட்டு மெரினா கட்டண கழிவறைக்கு போனவன் நான்....
அதன் பிறகு கொடுத்த எனது சர்டிபிகேட்டை அவர்களிடம் இருந்து வாங்கி அவர்களை விட்டு நகவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..

முதலில் சென்னைக்கு வேலை என்றவுடன் எனை வசீகரித்த விஷயம்.. சென்னையின் பரபரப்பும், அழகு பெண்களும்தான்.... சென்னை எல்ஐசி எதிரில் உள்ள தாஸ்பிரகாஷ் (இப்போதுஅந்த ஓட்டல் இல்லை) ஓட்டலின் வாசலில் இறுக்கமான டீ சர்ட் ஜீன்ஸ்அணிந்து ஸ்டைலாக சிகரெட் பிடித்த பெண்களை பார்த்து மயங்கி போனேன்...எந்த இலக்கும் இல்லாமல், எதாவது வேலை செய்து, தங்க நல்ல இடமும், மூன்று வேலை சாப்பாடுமே அப்போது எனக்கு பிரதான இலக்காக இருந்தது....சென்னைக்கு போகும் முன் எப்படி பட்ட கனவுகளோடு மஞ்சள் பை தூக்கினேனோ அப்படி பட்ட கனவுகளை அங்காடி தெரு படத்தில் பாண்டி கேரக்டர் மூலம் கண்முன் நிறுத்திவிட்டார்....வசந்த பாலன்...பொதுவாக சென்னை ரங்கநாதன் தெருவுக்கு நான் பகலில் போவது அரிது... இரவு எட்டரைக்கு போய் ஜன சந்தடி குறைந்து ரயில் பிடிக்கும் அவசரத்தில் போகும் மக்களுக்கு எதிர் திசையில் நடந்து சாவகாசமாக பர்சேஸ் செய்ய போகும்பார்ட்டி நான்... ஆனால் என் மனைவிக்கு ஜனத்திரளில் நடந்து போய் பர்சேஸ் செய்ய ஆசை... இருப்பினும் இரவில்தான் அதிகம் போய்விட்டு வருவோம்... இப்போது கூட வீட்டின் கிரகபிரவேசத்திற்க்கு உறவினர்களுக்கு துணி எடுக்க இரவு நேரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் சென்றோம்... இரவு பத்தேகாலுக்கு கடை சாத்தும் நேரத்தில் எல்லா மாடியிலும், வாங்கிய துணிகளுக்கு தரைதளத்தில் பில் போடுமாறு ஸ்பிக்கரில் கர கர குரல் ஒலிக்க, தரை தளத்தில் நாங்கள் பில் போட்டுக்கொண்டு இருக்கும் போது... கடையில் வேலை செய்யும் பெண்கள் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் அந்த நேரத்தில், ஒரு 200க்கும் அதிகமான பெண்கள் ஒரே சீருடையில் பள்ளி சிறுமிகள் சுற்றுலா செல்வது போல் படிக்கட்டில் இருந்து தாளம் தப்பாமல் நடந்து போய் கொண்டு இருந்தனர்..


கூட்ஸ் ரயிலின் பெட்டிகள் கடக்கும் போது இப்போது முடிந்து விடும், இப்போது முடிந்து விடும், என்று நினைத்துக்கொண்டு ஆளில்லாத லெவல் கிராசிங்கில் நிற்க்கும் போது கூட்ஸ் பெட்டிகள் நம்மை வெறிப்பேற்றிய படி நம்மை கடந்து போய் கொண்டே இருக்கும் போது, ஒரு வெறுப்பு வருமே அது போல், அந்த பெண்கள் நடைவரிசை முடியாத ஒரு கூட்ஸ் ரயில் பெட்டிகள் போல் முடியாமல் போய்கொண்டே இருந்தது....

அந்த பெண்கள் நடக்கும் போது நடை சத்தம் கேட்டதே தவிர அவர்கள் பேச்சு குரலும் சிரிப்பும் சத்தமும் இல்லவே இல்லை...அப்படி ஒரு டிசிப்ளின் நடை...எனக்கு ஆச்சர்யம் இவர்கள் எல்லோரும் எந்த இடத்தில் படுத்து குளித்து, சாப்பிட்டு,கழிவறைக்கு போய்... ஏனெனில் இதே அனுபவம் எனக்கும் உண்டு என்ற காரணத்தால் அந்த பெண் பிள்ளைகளை பற்றி யோசித்து கொண்டே இருந்தேன்.... அப்படி யோசித்து கொண்டு இருந்த இரண்டு வாரத்தில், அவர்களின் மறு பக்கத்தை நார் நாராக கிழத்து தொங்க விட்ட படி ஒரு படம் வந்து இருக்கின்றது... அந்த படத்தின் பெயர் அங்காடி தெரு....

பொதுவாக ரங்கநாதன் தெருவில் உள்ள எந்த கடையிலும் கஸ்டமர் கேர் என்று ஒன்று இருக்கவே இருக்காது.. அவர்கள் அலட்சிய பதில் அளிக்கும் முறைக்கு,எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும்... முன்பு எல்லாம் அவர்கள் பேசும் அலட்சிய பேச்சுக்கு, எனக்கு அவர்கள் மேல் கோபம் வந்து இருக்கின்றது...ஆனால் அவர்களின் ஒரு சிலரின் வெள்ளை சிரிப்பும்,அறியாமை பேச்சுகளும் அவர்கள் மேல் ஏற்படும் கோபத்தை சட்டென குறைத்து விடும்...

இயக்குனர் சேரன் எழுதிய டூரிங் டாக்கிஸ் புத்தகத்தில் துணிக்கடையில் வேலை செய்வது என்பது உலக விஷயமே தெரியாமல் கிணற்றுதவளையாக காலை பத்து மணிக்கு உள்ளே போய் இரவு பத்து மணிக்கு வெளியே வரும் அடிமை வாழ்க்கை என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பார்.... அதை படித்ததில் இருந்து துணிக்கடையில் வேலை செய்யும் இளைஞர்களின் அலட்சிய பேச்சுகளையும், சிறு சோம்பேறிதனத்தையும் மன்னிப்பது என்பது என் வழக்கமாகிவிட்டது...
என் அப்பா கடலூரில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த செல்லமய்யர் சில்க்ஸ்,மற்றும் ஜெயஸ்ரீ சில்க்ஸ் போன்றவற்றில் 30 வருடம் துணிக்கடை குமாஸ்தாவாக வேலை செய்தவர் ... அதனால் எனக்கு துணிக்கடை பிரச்சனைகள் தெரியும்... களைத்து போட்டு துணி டிசைன் தேடும் ரங்கநாதன் தெருவில், ரேக்கில் இருந்த படியே துணிகளை செலக்ட் செய்யும் குடும்பம் என்னுடையதாகதான் இருக்கும்....
அங்காடி தெரு படத்தின் கதை இதுதான்....

ஜோதிலிங்கம்(மகேஷ் அறிமுகம்) கனி(கற்றது தமிழ் அஞ்சலி) இருவரும் ரங்கநாதன் தெருவில் உள்ள செந்தில் முருகன் துணிக்கடையில் வேலை செய்கின்றார்கள்...இருவர் குடும்பமும் மிகவும் ஏழ்மையானது... இருவர் சம்பளமும் மிக முக்கியமானது...ஆனால் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவில் இருவருக்கும் காதல் பூ பூக்கின்றது...கடையின் அண்ணாச்சிக்கு லாபம் மட்டுமே குறிக்கோள்..அவருக்கு அல்லக்கையாக வரும் கருங்காலி(இயக்குனர் வெங்கடேஷ்) அங்கு வேலை செய்யும் பெண்களையும் ஆண்களையும் மனதாபிமானம் இன்றி அடிமைகள் போல் நடத்துகின்றான்...கருங்கலி பார்வையில் இருவரும் சிக்க அவர்கள் இருவரும் என்னவானார்கள் என்பதை வரிவிலக்கு அளித்தும் கொள்ளை விலைக்கு டிக்கெட் விற்க்கும், தியேட்டரில் பார்க்கவும்.. அல்லதுபார்மாபஜார் குட்டி திரையில் இரண்டு மாதம் கழித்து தேடவும்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
நாம் ஒரு கடைக்கு போக நினைத்து நடக்கும் போதே வேறு ஒரு கடைக்கு நம்மை வழி நடத்தி் செல்லும் ஜனத்திரள் அதிகம் உள்ள தெருவில் படபிடிப்பு நடத்திய குழுவுக்கும், ஒளிபதிவாளர் ரிச்சர்டுக்கும் எனது முதல் பாராட்டு... இதில் கவனிக்க வேண்டிய மற்றும் பாராட்டும் அம்சம் யாரும் கேமராவை பார்க்காமல் நடப்பது....

விண்ணைதாண்டி வருவாய் படத்தை விட இதில் நிறைய கட் ஷாட்டுகள்... ஒரு விடியலில் இருந்து ரங்கநாதன் தெரு எப்படி பரபரப்பாக மாறுகின்றது என்பதை நிறைய கட் ஷாட்டுகள் மூலம் செல்லுலாய்டில் பதிந்து இருக்கின்றார்கள்...

ரங்கநாதன் தெரு கடையில் வேலை செய்யும் பிரச்சனைகளை அதே போல் ஒரு கடையில் பெயர் மாற்றி எடுத்து இருப்பதற்க்கு துணிச்சல் வேண்டும்.. துணிக்கடை செட் எதாவது போட்டு இருந்து இருந்தால், இந்த படம் நம் மனதில் இந்தளவுக்கு ஒட்டி இருக்காது..... இந்த படத்தின் பலமே அந்த துணிக்கடையின் ரியாலிட்டிதான்....ஆனால் சினேகா சிரிக்கும் அந்த ஹோர்டிங்குகள் ஒரு குறியீடாக வேறு ஒரு கடையை நினைவு படுத்தி தொலைக்கின்றன....
வேலை செய்பவர்களுக்கு இடையே நடக்கும் ராகிங் பிரச்சனை.... அதில் பூக்கும் காதல்... என்று படம் முழுவதும் இயல்பு மீறாத நிலை படம் எங்கும் வியாபித்து இருக்கின்றது....ஒருநிமிடம் லேட்டாக வந்தால் ஒரு ரூபாய் பிடித்தம் எனும் போதும்...4ம்கட்ட ஈழ போரில் குவியல் குவியலாக பினங்கள் கிடப்பது போல் ஒரே ஹாலில் 100 பேருக்கு மேல் உறங்குவதும், சாப்பாடு இடத்தில் இரண்டு சட்டை இல்லாத மாமிச மலைகளை போட்டு ஒரு அக்மார்க் மெஸ் நம் கண் முன் வந்து நிற்கின்றது...அவர்கள் அக்குளை சொறியாதது மட்டும்தான் பாக்கி....

படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அந்த முகங்களும் கொஞ்சமும் சினிமாதனம் இல்லாதவை...
படத்தின் நிறைய விஷயங்கள் மெனெக்கெட்டு செய்து இருக்கின்றார்கள்.... இங்கே படுப்பவர்கள் எல்லாம் கொலுத்து வேலை செய்து விட்டு படுப்பவர்கள்... அதனால் காலில் சிமெண்ட் பூசிக்கொண்டு படுப்பதில் நிறைய செய்திகளை சேகரித்து இருக்கின்றார்கள்...

ஒரு தொப்பை போலிஸ்காரர் ரங்கநாதன் தெருவில் காலையில் வந்து நிற்க்கும் போது பின்புலத்தில் சரவணாஸ்டோர் அண்ணாச்சி போட்டோ தலைக்கு பதில் இவர் தலை நிற்பது போல் அமைத்து, உண்மை உழைப்பு உயர்வு என்ற வாசகங்கள் அவர் தலை சுற்றி வருவது போல் காண்பித்து விட்டு அடுத்த காட்சியில் அவர் எல்லா கடைகளிலும் மாமுல் வாங்குவது போல் காட்டி இருப்பது செம நக்கல்....
மாத மாதம் ஒரு பேப்பரில் டிராபிக் போலிஸ், மாம்பலம் இன்ஸ்பெக்டர் ,மின்சார துறை, தொலைபேசி லைன்மேன், என்று எழுதி அவர்கள் துறை வாரியாக எவ்வளவு லஞ்சம் மாதா மாதம் எவ்வளவு பைசல் பண்ணி இருக்கின்றார்கள் என்பதை போகிற போக்கில் காட்டும் காட்சிகள் மெனெக்கெடலுக்கும் நல்ல உதாரணம்...

விளிம்புநிலை மனிதனின் காமமும் காதலும் படும் பாட்டை நினைக்கும் போது நம் கண்கள் கலங்குவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை...

ஒரு துணிக்கடையில் நாம் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும் பின்னனி இசை மற்றும் சிறப்பு சப்தம் பராட்டுக்குறியது....

சினேகா ஆடும் போது அண்ணாச்சி இப்படி இழுத்து போத்தி நடிச்சா எவ்னயா பார்ப்பான் என்று சொல்ல.... அடுத்த காட்சியில் முந்தி பறக்க வயிறும் தொப்புளும் தெரிய சினேகா நடப்பது இன்றைய விளம்பர உலக எதார்த்தம் காட்சிகளாய் நம் கண்முன்...நீங்களே அடுத்த படம் எடுக்கலாம் அண்ணாச்சி என்று சொல்லும் அந்த காட்சியும்,அதற்க்கு விளம்பர டைரக்டர் பதறுவதும் ஏ ஒன்.....

வசனங்கள் ஜெயமோகன்... இதுவரை ஜெயமோகனையும் சாருவையும் நான் வாசித்ததே இல்லை...ஆனால் ஜெயமோகன் வசனங்கள் படத்தின் பெரிய பலம்...

ஒரு பெரியவர், 30 வருஷங்களுக்கு முன்னே இதே ரங்கநாதன் தெருவில் மனுஷங்களை நம்பி கடை போட்டேன் எனக்கு எந்த கொறையும் இதுவரை இல்லை...

“விற்க்க தெரிஞ்சவனாலதான் வாழ்க்கை வாழ முடியும்...”

என் தங்கிச்சிதான் உன்னைய யாருன்னு கேட்டுச்சி?
நீ என்ன சொன்னே???
நான் சிரிச்சேன்.....

பாரு போட்டு பத்திரிக்கையில் கிழி கிழின்னு கிழிச்சி தொங்கவிட்டுட்டான்... இந்த இடத்துல கால் ஊன எனக்கு 25 வருஷம் ஆச்சி....

“உலகத்திலேயே குசுவுக்காக ஒரு காதல் தோத்திச்சின்னா அது உன்னோடுதுதான்”

இந்த இடத்துல பிச்சைகாரியை கூட விட்டு வைக்கமாட்டனுங்க... என்று மனிதர் பின்னி எடுத்து விட்டார்...

அஞ்சலி சூப்ரவைசரிடம் மாட்டிக்கொண்டு தலை கலைந்து வெளியே வரும் போது, லிங்கம் எப்படி தப்பினே? என்று திரும்ப திரும்ப கேட்க,
“ மாரை புடிச்சி கசக்கினான் நான் அமைதியா நின்னேன்” போதுமா என்ற கேட்டபடி விழியில் வழியும் நீரை துடைத்தபடி கஸ்டமர்களுக்கு துணி எடுத்து போட்டு காட்டும் அந்த இடத்துக்காக அஞ்லிக்காக தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யலாம்...
ஏன்டி ஒரு வாரமா லிங்கத்தை அலைய வைக்கிறே என்று நண்பி கேட்கும் போது, துணி துவைத்துக்கொண்டே அந்த அம்பிளை கிட்டாயவது ரோஷம் மானத்தோடு வாழறேன் என்று சொல்லும் அந்த காட்சி சான்சே இல்லை.. சட்டென விழியில் நீர் கோர்த்துக்கொண்ட இடம் அது....

ரங்கநாதன் தெருவில் வெவ்வேறு கேரக்டர்கள் அறிமுகம் ஆவது கிளைக்கதை என்றாலும், ரசிக்கும் படியாகவே இருக்கின்றது... அதிலும் அந்த கட்டணகழிப்பிட ஸ்டைல் பார்ட்டி....வேலை கேட்கும் போது, ஒரு பழக்கார பெண்மணி ஆப்பிள் பழம் தர அந்த பழ பிச்சை வேண்டாம் என்று தட்டிவிடும் அந்த காட்சி அற்புதம்...

புதுமுகம் மகேஷ் ஊரில் கிரிகெட் விளையாடும் காட்சியிலும்...கிராமத்து காதல் காட்சியிலும் நன்றாகவே நடித்து இருக்கின்றார்....

ஆல்பம் படம் இயக்கிய இயக்குனரா? என்று ஆச்சர்யபட்டு அதை வெயிலில் உடைத்த வசந்தபாலன், இப்போது அங்காடிதெரு படம் மூலம் பேர் சொல்லும் இயக்குனர் வரிசையில் இவரும்...

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை சாங் இசையருவி,சன்மியூசிக் போன்றவற்றில் போட்டு இனி தேயவிட போகின்றார்கள்...

விளம்பர ஷுட்டிங் முடிந்து கடையில் மாட்டிக்கொள்ளும் இருவரும் பாடலின் போது, குளோஸ் சர்க்கியூட் கேமரா இயங்குவதும்,சோத்துக்ககே வழியில்லாத கேரக்டர் சடங்கு செய்ய ஆசைப்படுவதுமாக சில சறுக்கல்கள் படத்தில் உண்டு....

அயங்கரன் நிறுவனத்துக்கு இந்த படம் நல்ல பெயர்.... பெரிய பட்ஜெட் இல்லாமல் இது போல் சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய எடுக்கலாம்...
அடுத்து நந்தலாலா....எதிர்பார்ப்போம்...

என்னதான் ரியாலிட்டி என்றாலும் கடைசிகாட்சிவரை சோகத்தை பிழிந்து இருக்க வேண்டாம். என்பது என் எண்ணம்...

இன்னும் நிறைய எழுதிக்கொண்டே போகலாம்.... உண்மை தமிழனோடு போட்டி போடும் எண்ணம் எனக்கு இல்லை என்பதால் இத்தோடு நிப்பாட்டிக்கிறேன்...
படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்...
Banner: Ayangaran International
Cast: Magesh, Anjali
Direction: Vasantha Balan
Music: G V Prakash Kumar, Vijay Antony

தியேட்டர் டிஸ்க்கி...

சென்னை கமலா தியேட்டர்லதான் இந்த படத்தை பாத்தேன் ...பச்சைகிளி முத்துச்சரம் படத்துக்கு அப்புறம் தியேட்டர் புதுப்பிச்ச பின்னாடி இப்பதான் முத முறையா போறேன்....போனதும் ஒரு அதிர்ச்சி...பைக் டோக்கன் 15ரூபாய்...2அரைமணிநேரம் வண்டி நிப்பாட்ட 15 ரூபாய்... சத்தியம், தேவி தியேட்டர்லேயே பைக் டோக்கன் 10 ரூபாய்தான்... இந்த டோக்கன் கொள்ளையை எல்லாம் எப்படி? யார் கேட்பாங்கன்னு தெரியலை?....அதன் வரைமுறை அதுவும் தெரியலை... 15 ரூபாய் என்பது சாதாரணம் இல்லை ...மூன்று நண்பர்கள் கிளாசில் பாதி நுரை படிந்த 3 டீயை 15ரூபாய்க்கு குடிக்கலாம்.... இப்படி எல்லாம் இருந்தால் தியேட்டருக்கு கூட்டம் வருவது கஷ்டம்தான்... அது தியேட்டரிலும் தெரிந்தது... பாதி இருக்கைகள் காலி...

படம் நல்லா இருக்கு என்று மக்கள் வாய் வழியாக சொல்லி தியேட்டருக்கு மக்கள் வருவது பெரிய விஷயம்... மல்டிபிளக்ஸ் என்று சொல்லி ஒரு டிக்கெட் 100 என்றால் எப்படி தியேட்டருக்கு கூட்டம் வரும்...
100ரூபாய் என்பது ஒரு மாதத்துக்கான கேபிள்கட்டணம்... அதை தமிழக தியேட்டர் நிர்வாகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்....

பழைய வீட்டு நினைப்பிலேயே லேட்டாக கிளம்ப புது வீடு 6 கிலோ மீட்டர் தள்ளி இருப்பது மறந்து போனதால் டைட்டில் கோவிந்தா கோவிந்தா.....

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

61 comments:

  1. ”தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து சென்னை வரும் ஒருவன்.” இதே கதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். (ஒரு சூராவளி கிளம்பியதே .. சிவ தாண்டவம் தொடங்கியதே ... என பின்னணி இசை சேர்க்கும்போது அது தமிழ்ப் படம்.)



    அங்காடித்தெரு அப்படி எடுக்கப்பட்டதில்லை. அதுதான் அந்தப் படத்தைப் பற்ரி நம்மை பேச வைக்கிறது. யாரும் தன் கனவுலகத்தில் காண விரும்பாத, ஆனால் நிகழ்கால யதார்த்ததைப் பதித்துள்ளது. அதற்காக இப்படம் நமது பாராட்டைப் பெறுகிறது.

    இன்னும் பெரு நகரங்களில் மட்டுமல்ல, பெரும்பாலான நகரங்களில் கொத்தடிமை வேலைமுறை இருந்துகொண்டேயிருக்கிறது. மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்தாலும் நிலைமை அதுதானே?

    தேவையுள்ளவரை
    உறிஞ்சுவார்கள் ...
    தேவை முடிந்ததும்
    குப்பையில் வீசுவார்கள் ..

    ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பீகாரில் இருந்து திருப்பூர் அழைத்துவரப்படுகிறார்கள். அதே போல தொழிலாளர்கள். தமிழகத்திலிருந்து சென்னைக்கும் பிற பகுதிகளுக்கும் இடம் பெயறுகிறார்கள். பெறும்பாலானோர் வாழ்க்கை இப்படித்தான்.


    உணர்விழந்து,
    உயிரிழந்து
    உழை பிணமாய்
    பிழைக்கிறார்கள்.

    வாழ்க்கை அவர்களை வறுமையில் வைத்திருக்கிறது. என்வே சுதந்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விற்று சுவாசிக்கிறார்கள் அவர்கள்.


    உண்டுகொழுத்த
    பணத்திமிரின் திசையில் பயணிக்க
    பயன்படுகிறது
    உழைப்பெனும்
    அச்சாணி

    காய்ந்த வயிறுகளுடன்
    கட்டாந்தரையில் படுத்தவுடன்
    அந்தத் தொழிலாளர்களுக்கு
    கனவிலே சொர்கம்


    உழைப்பை உறிஞ்சிக் குடிப்பவர்களுக்கோ அந்தக் கனவுகள் சொந்தம்.

    ஆனால், அந்த உழைப்பு இருக்கிறதே, அது மறுக்கமுடியாத நிஜம். மண்ணைக் குழைத்து பானை செய்த கைகளை வைத்து காற்றிலும் விதைப்போம், கதிர் அருப்போம். வானுயர்ந்த கட்டடங்களில் மட்டுமல்ல, கட்டாந்தரைக்கும் பொதுவானது வாழ்க்கை. இப்படிச்சொல்லி முடிகிறது அங்காடித்தெரு.

    அருமையான கதை. சொன்ன விதமோ, கவிதை. ஆனால் சொல்ல மறந்தது ஒன்றே ஒன்றுதான். வேண்டுமென்றே மறைத்தாக இல்லாவிடினும், வசந்தபாலன் சிந்திக்காமல் விட்டது, அல்லது அவரால் சிந்திக்க முடியாதது.

    இதோ கூட்டமாய்த் திரண்டிருக்கிறார்களே அந்த உழைப்பாளிகள். சாதாரண சுமைப்பணித் தொழிலாளர் முதல், கற்பனைகளை வடிவமைக்கும் பொறியாளர் வரை. அவர்கள் சாதாரணமானவர்களல்ல. மாபெரும் சாதனைகளை தமது கூட்டு சக்தியால் படைத்துக் காட்டியவர்கள். பணத்தை, செல்வச் செலிப்பை உருவாக்கிய மூலாதாரங்கள். உழைப்பாளர்கள்.


    அவர்கள்
    நெஞ்சுக்குள்
    ஒரு பொறி
    எப்போதும்
    எரிந்துகொண்டிருக்கிறது.


    நம்பிக்கையின்
    காற்று வீசும்போது
    பொறி நெருப்பாகிறது.


    ஒவ்வொரு நெஞ்சமாய்ப்
    பற்றி எரிகிறது.


    ஒட்டுண்ணிகள்,
    அதில் பொசுங்கிச்
    சாம்பலாவார்கள்


    அது சமைப்பதற்கான தீ...
    புதுயதோர் சமுதாயம்
    படைப்பதற்கான தீ...

    கடைசிவரை தொழிலாளர்கள் ஒன்றுபடுவதாய் அந்தப் படம் சொல்லவில்லை. யதார்த்ததில், படத்தின் மூலக் கருவான ரங்கநாதன் தெருவில் தொழிற்சங்கம் பலமானதொரு அமைப்பாக இல்லாவிட்டாலும். சங்கமாக தொழிலாளர்கள் இணையும்போதே கொடுமைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கிறது என்ற கருத்தை விதைத்திருக்கலாம். தீர்வுகளைச் சொல்லாமல், சமூகம் இப்படித்தான் என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றால், அது எல்லாமே மோசம் என்ற என்னத்தைத்தான் உருவாக்கும். அந்த விளைவை ஏற்படுத்த ஒரு படைப்பாளன் தேவையா?.

    பார்வையாளர்களுக்கு இருப்பதை எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல, அடுத்தது என்ன என்று சொல்லித்தருவதும் ஒரு படைப்பாளரின் பணி. சரிதானே?

    ReplyDelete
  2. ஓவ்வொரு காட்சியையும் அனுபவித்துப் பார்த்தது உங்கள் விமர்சனத்தில் தெரிகின்றது.

    பார்க்கிங் சார்ஜ் ரூ. 15 என்பது மிக மிக அதிகம்.

    ReplyDelete
  3. நன்றாக எழுதியிருக்கிறிர்கள் ஜாக்கி. நன்றி.

    ReplyDelete
  4. ungal karuthukal arumai.vazthukkal

    ReplyDelete
  5. படம் பார்க்கும் ஆவலை
    தூண்டி விட்டீர்கள்.

    ReplyDelete
  6. உ.த சரவணன் கூட சேராதே சேராதேன்னு சொன்னா கேக்குறியா??
    இப்போ பாரு ஒரு பதிவ scroll பண்ணுறதுக்கே அரை மணி ஆகுற மாதிரி எழுதியிருக்கே

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  7. அருமையான‌ விம‌ர்ச‌ன‌ம் கார்க்கி..
    ம‌ற்றும் Sindhan Rஉங்க‌ள் பின்னூட்ட‌மும் அருமை!!
    "பார்வையாளர்களுக்கு இருப்பதை எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல, அடுத்தது என்ன என்று சொல்லித்தருவதும் ஒரு படைப்பாளரின் பணி. சரிதானே?" க‌ருத்து மிக‌ச்ச‌ரியே..!!!

    ReplyDelete
  8. தீர்வுகளைச் சொல்லாமல், சமூகம் இப்படித்தான் என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றால், அது எல்லாமே மோசம் என்ற என்னத்தைத்தான் உருவாக்கும். அந்த விளைவை ஏற்படுத்த ஒரு படைப்பாளன் தேவையா?.

    பார்வையாளர்களுக்கு இருப்பதை எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல, அடுத்தது என்ன என்று சொல்லித்தருவதும் ஒரு படைப்பாளரின் பணி. சரிதானே---//

    நண்பன் சித்தனுக்கு ஒரு கதை என்பது எதுவரை இருக்க வேண்டும் என்பதை ஒரு படைபாளனின் உரிமை... எல்லோரும் குத்து பாட்டு எடுக்கும் போது அந்த ரங்கநாதன் தெரு விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளை வெளி சொன்னதே ஒரு பெரிய விஷயம்... நீங்கள் சொல்வதை பார்த்தால் கடைசியில் தொழிற்சங்கம் ஆரம்பித்து, என்று உங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் சினிமா எடுக்க முடியாது...இரண்டரை மணி நேரத்தில் ஒரு திரைக்கதையை காம்பரமைசோடு சொல்லுதல் என்பது பெரிய விஷயம்... அந்த விஷயத்தை வசந்தபாலன் குழு சிறப்பாகவே செய்து இருக்கின்றது...

    ReplyDelete
  9. ungal karuthukal arumai.vazthukkal==“\\

    நன்றி அக்கி வாழ்த்துக்கு

    ReplyDelete
  10. ஓவ்வொரு காட்சியையும் அனுபவித்துப் பார்த்தது உங்கள் விமர்சனத்தில் தெரிகின்றது.

    பார்க்கிங் சார்ஜ் ரூ. 15 என்பது மிக மிக அதிகம்.//
    ரொம்ப ராகவன் அநியாய கொள்ளை...

    ReplyDelete
  11. நன்றாக எழுதியிருக்கிறிர்கள் ஜாக்கி. நன்றி.//
    நன்றி இராமசாமி...

    ReplyDelete
  12. உ.த சரவணன் கூட சேராதே சேராதேன்னு சொன்னா கேக்குறியா??
    இப்போ பாரு ஒரு பதிவ scroll பண்ணுறதுக்கே அரை மணி ஆகுற மாதிரி எழுதியிருக்கே//

    பழக்க தோஷம்...,. என்ன செய்வது...

    ReplyDelete
  13. அருமையான‌ விம‌ர்ச‌ன‌ம் கார்க்கி..
    ம‌ற்றும் Sindhan Rஉங்க‌ள் பின்னூட்ட‌மும் அருமை!!
    "பார்வையாளர்களுக்கு இருப்பதை எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல, அடுத்தது என்ன என்று சொல்லித்தருவதும் ஒரு படைப்பாளரின் பணி. சரிதானே?" க‌ருத்து மிக‌ச்ச‌ரியே..!!!//


    நன்றி பாரதி என் பெயர் கார்க்கி இல்லை ஜாக்கி

    ReplyDelete
  14. //பார்க்கிங் சார்ஜ் ரூ. 15 //
    இவனுங்ககூட எல்லாம சண்டை போடமுடியாது என்பதால்தான் theatre பக்கமே போவதில்லை


    கொளப்பாக்கம் சிவன் கோயில் போனீர்களா?

    ReplyDelete
  15. ஜாக்கி,

    நேர்த்தியான விமர்சனம்..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. ஜாக்கி அண்ணே,
    சூப்பர் விமர்சனம்,
    உங்க சொந்த அனுப்பவத்தோடு ஆரம்பிச்சீங்க பாருங்க,அப்போவே நீங்க இந்த படத்தை எவ்வளவு புடிச்சி பாத்தீங்க்ன்னு தெரியுது.தியேட்டர் டிஸ்கி அருமை அண்ணே.
    ஃபார்மாலிட்டீஸ் டன்.

    அந்த பெண்கள் வேலையை முடித்து போவதையும்,அந்த அஞ்சலி அழும் சீனையும் சொன்னீங்களே அருமை.காட்சி படம் பாக்காமலேயே கண்ணில் நகருது,அருமை.

    ReplyDelete
  17. ஜாக்கி அண்ணே,
    சூப்பர் விமர்சனம்,
    உங்க சொந்த அனுப்பவத்தோடு ஆரம்பிச்சீங்க பாருங்க,அப்போவே நீங்க இந்த படத்தை எவ்வளவு புடிச்சி பாத்தீங்க்ன்னு தெரியுது.தியேட்டர் டிஸ்கி அருமை அண்ணே.
    ஃபார்மாலிட்டீஸ் டன்.

    அந்த பெண்கள் வேலையை முடித்து போவதையும்,அந்த அஞ்சலி அழும் சீனையும் சொன்னீங்களே அருமை.காட்சி படம் பாக்காமலேயே கண்ணில் நகருது,அருமை.

    ReplyDelete
  18. ஜாக்கி,

    நன்றாக எழுதியிருக்கிறிர்கள்

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. hai,
    Very good article keep it up.
    When i was in Hyderabad Mahesh Babu -Pokiri film was released. It was super hit. we wanted to see the film in the first week, i was thinking ticket will cost more than Rs 200, but we reserved the ticket in counter, Believe it or not Cost was Rs 50=(35+ 15(reservation charge). Parking Rs.5. Mostly the theaters in Hyderabad are big 70mm good interiors and air conditioned well. all you get for Rs.35 (Balcony Ticket)only in . So you can see almost all films run moderately. Unlike tamilnadu Pokiri was 100 days in 13 70mm theaters. But now in tamilnadu if film runs 30 days its super-hit film.....

    ReplyDelete
  20. அங்காடித் தெரு அருமையான படம், தங்களின் விமர்சனம் போலவே

    ReplyDelete
  21. படம் பார்க்கும் ஆவலை
    தூண்டி விட்டீர்கள்.

    ReplyDelete
  22. நன்றாக எழுதியிருக்கிறிர்கள் ஜாக்கி. நன்றி

    ReplyDelete
  23. Jackie Sekar

    Angadi Theru --Film Narrated by you in an excellent way...

    I agree to Sindhan's comment here.

    Samuthaaya kodumaikalai padaththil kaanpikka vendiyathu padaippaaliyin kadamai....Aanaal aththodu vittu vidaamal anthak kodumaikal nadakkaamal irukka nalla oru theervaiyum koduththaal makilven.

    athu thaan nam samuthaayam paarapatchaminri santhoshamaaka irukka vali.

    illavittaal ithu thaan vaalkkai enru naam inthiyarkal , aniyaayam seypavarai patri joke mattum adiththu vittu aniyaayangkaludan vaalkkaiyai vaalnthu kondu irukkirom.

    Let all of us Indians realize that
    every one work for prescribed hours every day and earn what it comes with honesty,,it may be big or small --never mind. let everyone enjoy life with family every day. let every one enjoy life with full content, without cheating another man's money or property or person.


    Hope every Film director shows remedy to make the atrocities stop.
    Information technology's boost in India,let it save my dear Indians from all atrocities.Wish all atrocities in India stop with the help of IT boost in India.Probably with new laws based on IT, which can provide fast judgement to wrong people.

    Raj.

    ReplyDelete
  24. அனுபவித்து ரசித்துள்ளீர்கள் என் போலவே.. :)



    ஆனால் துறை சார்ந்தவர் என்பதனால் இன்னும் ஆழமாக அலசி இருக்கிறீர்கள். ரசித்தேன். படம் போலவே உங்கள் பதிவையும்.



    உங்கள் அனுபவமும் மனத்தைக் கலக்கியது.

    ReplyDelete
  25. ம்ம்.
    படத்த பாத்துடுவோம் (தியேட்டர்லதான்)

    பார்க்கிங் கட்டணம் - ரொம்பவே கம்மியாதான் வாங்கறாங்க :(

    ReplyDelete
  26. உண்மை தமிழனோடு போட்டி போடும் எண்ணம் எனக்கு இல்லை //////

    அதானே. அவ்ளோ தில்லு இருக்கா..??

    ReplyDelete
  27. After seeing the film my wife cried for an hour, she was telling how come people are like this, vasantha balan has showed what the real world is .Hats off to him. Very good vimarsanam

    ReplyDelete
  28. ஜாக்கி
    உங்கள் விமர்சனம் மிகவும் அருமை.
    இதற்கு கைமாறாக இந்த திரைபடத்தை தியேட்டரில் கண்டிப்பாக பார்ப்பேன்.
    என்னளவில் அதுவே இந்த திரை படத்திற்கு நான் செலுத்தும் மரியாதை.
    நன்றி ஜாக்கி உங்கள் எழுத்து நடையை நான் ரசிக்கும் காரணம் அந்த
    வலியை எங்கள் மனதிலும் ஏற்றி விடுகிறீர்கள்.

    ReplyDelete
  29. வணக்கம் ஜாக்கி
    விமர்சனம் மிக அருமை அதை உங்கள் பன்ச்டன் படிக்கும் போது அதன் வலி தெரிகிறது.

    அந்த பெயர் சொல்ல கடையுடன் எனக்கு மூன்று வருடம் என் நிறுவனத்தின் சார்பாக அங்கு உள்ளவர்களுடன் தொடர்பு உண்டு அப்பொழுது அங்கு நடக்கும் பல கதைகள் சில காதுக்கு வரும் அனைத்தும் அநியாயத்தின் உச்சங்கள் பல முறை அந்த கடை ஊழியர்களின் நிலைகண்டு வருந்தி இருக்கிறேன்.
    இந்த அங்காடித்தெரு சிறு துளிதான் இன்னும் வெளிச்சத்துக்கு வராதது இன்னும் பல பல.

    ஜனங்களே இந்த சென்னை மாநாகரிலே பார்க்கிங் வண்டிகளுக்கு ஏ.சி போட்ட முதல் தியேட்டர் நம்முடையதுதான்.

    :-))

    ReplyDelete
  30. சென்னை நகரத்து உழைக்கும் மக்களின் வாழ்க்கையை உற்று நோக்க நிர்பந்திக்கும் வகையில் இந்த பதிவு எழுதியதற்காக பாராட்டுக்கள்.

    இது போல, நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை அறிமுகப்படுத்தும் பதிவுகளை உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அனுபவித்தவர் நீங்கள் என்பதால் எனது எதிர்பார்ப்பு அதிகமாகிறது.

    ReplyDelete
  31. This is a excellent family entertainment movie அப்படின்னு சொல்லி ஏமாத்தறவனுங்களை விட வலிகளையும் பிரச்சனகளையும் சொல்ல முதலில் தைரியம் தேவை. அது வசந்த பாலனுக்கு இருந்திருக்கிறது.

    ReplyDelete
  32. ம்ம் அருமையான விமர்சனம் ஜாக்கி
    படத்தைப் பற்றிய ஒரு முழுமையான பார்வையை முன் வைத்துள்ளீர்கள்

    ReplyDelete
  33. பெரிய துணிக்கடைகளில் நிகழும் அன்றாட நிகழ்வுகளை படம்பிடித்து அந்த ஈவு இரக்கமற்ற முதலாளிகளுக்கு சாவு மணிகட்டிய இயக்குனம் வசந்தபாலனுக்கு என் வாழ்த்துக்கள்.

    உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அருமையா சொன்னீர்கள். மனசு கொஞ்சம் கனத்தது.

    உங்களைப்போலவே சென்னை வரும் பலரது வாழ்க்கையில் இதுபோல பல சம்பவங்கள் இருக்கும். எங்கோ ஒளிந்து கிடக்கும் அந்த நிகழ்வுகளை புரட்டிபோட்ட உங்களுக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. உங்கள் அனுபவங்களுடன் கூடிய விமர்சனம் அருமை.

    விமர்சனம் செய்வதில் உங்கள் ட்ராக் தனி... சிறப்பாக இருக்கிறது.

    மனோ

    ReplyDelete
  35. //15ரூபாய்...2அரைமணிநேரம் வண்டி நிப்பாட்ட 15 ரூபாய்... சத்தியம், தேவி தியேட்டர்லேயே பைக் டோக்கன் 10 ரூபாய்தான்... இந்த டோக்கன் கொள்ளையை எல்லாம் எப்படி? யார் கேட்பாங்கன்னு தெரியலை?....//

    யாரும் கேட்க மாட்டாங்க. எல்லாரும் திருட்டு சி டிலயே படம் பாத்தா போதும்னு முடிவு பண்ணினா தானே இறங்கி வருவாங்க. என்னிடம் ஒருவர் கேட்டார். திருட்டு சி டியில் படம் பார்ப்பது தவறில்லையா. நான் சொன்னேன், அவன் குடும்ப லாபத்துக்கு அவன் தியேட்டர் நடத்துறான். நம்ம குடும்ப லாபத்துக்கு நாம சி டி ல பாக்குறோம். எனக்கு என் குடும்ப லாபம் தான் முக்கியம் என்றேன். சுயநலமாக இருந்தாலும் ரசிகர்களுக்காக வைக்கப்பட்ட தியேட்டர்கள் பணம் கொழிக்கப் பயன் படும் கார்ப்பரேட் தியேட்டர்களாக ஆக்கப்பட்ட பின்னர் அங்கே மனிதம் செத்துவிட்டது. ரசனைக்கு மதிப்பில்லை. பின்னர் ஏன் தியேட்டருக்கு போகவேண்டும். நாம் ரசிப்பதை நம் வசதிக்குத் தகுந்தாற்போல பார்ப்போமே!

    ReplyDelete
  36. Nalla vimarsanam..

    Nanum intha padathai parthen..
    Very good attempt..

    ReplyDelete
  37. "நன்றி பாரதி என் பெயர் கார்க்கி இல்லை ஜாக்கி"
    த‌வ‌றுக்கு மன்னித்துக் கொள்ளுங்க‌ள் ஜாக்கி :)

    ReplyDelete
  38. //பார்க்கிங் சார்ஜ் ரூ. 15 //
    இவனுங்ககூட எல்லாம சண்டை போடமுடியாது என்பதால்தான் theatre பக்கமே போவதில்லை


    கொளப்பாக்கம் சிவன் கோயில் போனீர்களா?------//

    இல்லை பாபு நாளைக்கு வெள்ளிக்கிழமை கண்டிப்பா போறேன்...

    ReplyDelete
  39. ஜாக்கி,

    நேர்த்தியான விமர்சனம்..

    வாழ்த்துக்கள்.//
    நன்றி காவேரி கனேஷ்

    ReplyDelete
  40. ஜாக்கி அண்ணே,
    சூப்பர் விமர்சனம்,
    உங்க சொந்த அனுப்பவத்தோடு ஆரம்பிச்சீங்க பாருங்க,அப்போவே நீங்க இந்த படத்தை எவ்வளவு புடிச்சி பாத்தீங்க்ன்னு தெரியுது.தியேட்டர் டிஸ்கி அருமை அண்ணே.
    ஃபார்மாலிட்டீஸ் டன்.//

    கார்த்தி அந்த கஷ்டங்களில் என்னை பார்த்தேன்...

    எனக்கு எப்போதும் எல்லாம் கொஙசம் தலைகணம் வந்தாலும் அந்த நாட்களை நினைத்து பார்க்கும் போது எல்லாம் சரியாகிவிடும்...

    ReplyDelete
  41. ஜாக்கி,

    நன்றாக எழுதியிருக்கிறிர்கள்

    வாழ்த்துக்கள்.//
    நன்றி குட்டி்

    ReplyDelete
  42. நன்றி இராஜபிரியன்

    நன்றி மகராஜா

    நன்றி வரதராஜுலு

    ReplyDelete
  43. அனுபவித்து ரசித்துள்ளீர்கள் என் போலவே.. :)



    ஆனால் துறை சார்ந்தவர் என்பதனால் இன்னும் ஆழமாக அலசி இருக்கிறீர்கள். ரசித்தேன். படம் போலவே உங்கள் பதிவையும்.
    //
    நன்றி லோஷன் என்னை பொறுத்தவரை ஒருபடத்தை 4 முறை பார்த்தால்தான் என்னால் முழுதாக ரசிக்க முடியும்..

    ReplyDelete
  44. hai,
    Very good article keep it up.
    When i was in Hyderabad Mahesh Babu -Pokiri film was released. It was super hit.//

    உண்மைதான் அருன் இன்னமும் ஆந்திராவில் சினிமாவை குடும்பத்துடன் கொண்டாட டிக்கெட் கட்டண குறைப்புதான் காரணம்..

    ReplyDelete
  45. உண்மை தமிழனோடு போட்டி போடும் எண்ணம் எனக்கு இல்லை //////

    அதானே. அவ்ளோ தில்லு இருக்கா..??///

    சத்தியமா இல்லை சூர்யா

    ReplyDelete
  46. திரு சி்என் ராஜ் நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளகூடியாது என்றாலும்.. ஒரு கதை இரண்டு மணிநேரத்தில் சொல்ல பட வேண்டும் அது ரொம்ப முக்கியம் அல்லவா?

    ReplyDelete
  47. ஜாக்கி
    உங்கள் விமர்சனம் மிகவும் அருமை.
    இதற்கு கைமாறாக இந்த திரைபடத்தை தியேட்டரில் கண்டிப்பாக பார்ப்பேன்.
    என்னளவில் அதுவே இந்த திரை படத்திற்கு நான் செலுத்தும் மரியாதை.
    நன்றி ஜாக்கி உங்கள் எழுத்து நடையை நான் ரசிக்கும் காரணம் அந்த
    வலியை எங்கள் மனதிலும் ஏற்றி விடுகிறீர்கள்.//
    நன்றி அன்பு அப்படி ஒரு எழுத்தாக என் எழுத்து இருந்தால் சந்தோஷமே...எல்லா புகழும் இறைவனுக்கே...

    ReplyDelete
  48. வணக்கம் ஜாக்கி
    விமர்சனம் மிக அருமை அதை உங்கள் பன்ச்டன் படிக்கும் போது அதன் வலி தெரிகிறது.//

    உண்மை சிவா இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் நிறைய இருக்கின்றது.. இதற்க்கே இஇப்படி எல்லாம் நடக்குமா ? என்று கேள்வி எழுப்புகின்றார்கள்...

    ReplyDelete
  49. இது போல, நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை அறிமுகப்படுத்தும் பதிவுகளை உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அனுபவித்தவர் நீங்கள் என்பதால் எனது எதிர்பார்ப்பு அதிகமாகிறது.//
    நிச்சயம் எழில்வளன்.. நிச்சயம் எழுதுவேன்...

    ReplyDelete
  50. This is a excellent family entertainment movie அப்படின்னு சொல்லி ஏமாத்தறவனுங்களை விட வலிகளையும் பிரச்சனகளையும் சொல்ல முதலில் தைரியம் தேவை. அது வசந்த பாலனுக்கு இருந்திருக்கிறது.// உண்மைதான் சூர்யா இந்த கதையை படமாக எடுக்க ஒப்பு கொண்ட அயங்கரனுக்கும் நம் நன்றிகள்...

    ReplyDelete
  51. ம்ம் அருமையான விமர்சனம் ஜாக்கி
    படத்தைப் பற்றிய ஒரு முழுமையான பார்வையை முன் வைத்துள்ளீர்கள்//
    நன்றி தர்ஷன்..

    ReplyDelete
  52. After seeing the film my wife cried for an hour, she was telling how come people are like this, vasantha balan has showed what the real world is .Hats off to him. Very good vimarsanam//
    நன்றி சுரேஷ் தியேட்டரில் பல பேர் கண்ணை கசக்கினார்கள்...

    ReplyDelete
  53. உங்களைப்போலவே சென்னை வரும் பலரது வாழ்க்கையில் இதுபோல பல சம்பவங்கள் இருக்கும். எங்கோ ஒளிந்து கிடக்கும் அந்த நிகழ்வுகளை புரட்டிபோட்ட உங்களுக்கும் என் வாழ்த்துகள்.//
    நன்றி கோலிபையன்..

    ReplyDelete
  54. உங்கள் அனுபவங்களுடன் கூடிய விமர்சனம் அருமை.

    விமர்சனம் செய்வதில் உங்கள் ட்ராக் தனி... சிறப்பாக இருக்கிறது.

    மனோ//
    நன்றி மனோ...

    ReplyDelete
  55. தியேட்டர்கள் பணம் கொழிக்கப் பயன் படும் கார்ப்பரேட் தியேட்டர்களாக ஆக்கப்பட்ட பின்னர் அங்கே மனிதம் செத்துவிட்டது. ரசனைக்கு மதிப்பில்லை. பின்னர் ஏன் தியேட்டருக்கு போகவேண்டும். நாம் ரசிப்பதை நம் வசதிக்குத் தகுந்தாற்போல பார்ப்போமே!//

    உண்மை ராம் இன்னம் கொஞ்சம் நாளில் அப்படிதான் மாற போகின்றது..

    ReplyDelete
  56. Nalla vimarsanam..

    Nanum intha padathai parthen..
    Very good attempt..//
    நன்றி மதன் இளங்கோ..

    ReplyDelete
  57. //சென்னை எல்ஐசி எதிரில் உள்ள தாஸ்பிரகாஷ் (இப்போதுஅந்த ஓட்டல் இல்லை)//

    தவறான் செய்தி. தாஸ்பிரகாஷ் இருந்தது அமைந்தகரை ரோடு. எல்ஐசி இருப்பது மெளண்ட்ரோடு. நானும் 93 களில் சென்னையில் இருந்தவந்தான்

    ReplyDelete
  58. விமர்சனம் அருமை, உங்கள் சொந்த கதையை ஒரு படம் எடுக்கலாம் போலிருக்கிறது.நன்றி.

    ReplyDelete
  59. //மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்தாலும் நிலைமை அதுதானே?//

    ஆம் உண்​மைதான்! நாம் இன்னம் ​கொத்தடி​மைகள் தான்.,, முன்பு ​வெள்​ளைக்காரனிடம் ​​தோட்டத்​தொழிளாலியால் சாகும்வ​ரை ​வே​லை​செய்​தோம் ​வெறுவழியில்லாமல்... அ​தெ​போல் இன்று அவனுக்காக இரவில் நாம்விளித்து உடலி​லைத்து ​வே​லை​செய்து​கொண்டிருக்கின்​றோம்...
    என்று ஒழியு​மோ நம் அடி​மைத்தனம்!

    ReplyDelete
  60. Dear Mr Sekar,

    The film review is as good and touching like the film reviewed. If I am right, the film has reached 60% tamil audiences (10% through theatres and 50% through CD's). After seeing such wonderful films, definetely the director deserves all our praises. If some net banking number given/published in the film ads, people(seen through CD's) will never bother to send amount equivelant to cinema ticket cost to the producer/director. This is another way of post-screen recognition and income for good film producers/directors. What is your comment on this idea?
    Regards
    Ravi

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner