(The International)நெத்தியில் புல்லட் வாங்கும் இத்தாலியன் பிரைம் மினிஸ்டர் கேன்டிடேட்....

சில விஷயங்களில் நாம் எதுவுமே செய்ய முடியாது.... சில அரசியல் விஷயங்களை ஆராயும் போது, நதி மூலம் ரிஷிமூலம் ஆராயக்கூடாது என்பார்கள்.. அப்படி ஆராய்தால் அது விடை கிடைக்காத தேடல் என்பது எளிதில் விளங்கி போகும்....

அப்படி நதிமூலம் ரிஷி மூலம் தேடிப்போகும் ஒருவனின் கதைதான் இண்டர் னேஷனல் படத்தின் கதை....

The International படத்தின் கதை இதுதான்....

Louis Salinger (Clive Owen) ஒரு இண்டர் போல் ஏஜென்ட்... சட்டத்தின் இருட்டரையில் ஆட்சி செய்யும் கூட்டம் ஒன்று IBBC என்ற வங்கியை தனது இல்லீகல் காரியத்துக்கு பல நாட்டு தாதாக்கள், அரசாங்கம் போன்றவை பயண் படுத்துகின்றன... அதை பற்றி ஆராய போன தனது நண்பனுக்கா ஹீரோ, ரோட்டின் இந்த பக்கத்தில் காத்து இருக்கும் போது... நடந்து வந்த நண்பன் சட்டென ரோட்டில் விழுந்து இறந்து விட்டுகின்றான்.... ஹீரோ அது இயற்கையான மரணம் அல்ல அது திட்டம் இட்ட கொலை என்பதை கண்டு பிடிக்கின்றான்.... அவன் அந்த விஷயத்தை கண்டு பிடித்ததில் இருந்து அவனுக்கு Eleanor Whitman (Naomi Watts)(Manhattan assistant district attorney)க்கும் சனி பிடிக்கிக்ன்றது... இருவரும் உண்மையை தேடி போகின்றனர்...

இதன் ஒரு பகுதியாக இத்தாலியின் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நபரை மிகச்சரியாக நெற்றிக்கு பக்கத்தில் ஒரு தோட்டா நலம் விசாரிக்க... பிரதமர் கனவு கலைக்கபட்டு பாதியிலேயே அல்பாயுசில் போய் விடுகின்றார்... இதன் பின்னனியில் பல நாடுகளின் ஆயுத கொள்முதல் பழம் பெருச்சாளிகள் , பல நாட்டு அரசாங்கம் இதில் சம்பந்த பட்டு இருப்பது உறுதி ஆகின்றது...., அந்த கொலையை நடத்தியவனை கண்டு பிடித்தால் இதன் பின்புலம் தெரியும் என்பதால் அந்த கொலைக்காரானை கண்டுபிடிக்க போராடு்கின்றார்கள்....

அதில் மிகப்பெரிய ஆயுத மார்க்கெட் சம்பந்த பட்ட விஷயங்களும், பல நாட்டு புள்ளிகளின் பங்களிப்பும் அதில் இருக்கு ரிஷி மூலத்தை எப்படி Louis Salinger,மற்றும் Eleanor Whitman இருவரும் எப்படி தேடிக்கண்டுபிடிக்கின்றார்கள் என்பது மீதி் கதை...


படத்தின் சுவாரஸ்யங்கள் சில....

படத்தின் டைட்டில் போடும் ஸ்டைலிலேயே நம்மை இந்த படத்தின் குழுவினரும் இயக்குனரும் நம்மை நிமிர்ந்து உட்கார செய்கின்றார்கள்....

முதல் காட்சியில் அந்த கொலை நடப்பதும்... அதற்க்கு ஒளிப்பதிவும் கேமரா இயக்கமும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன....

இந்ம படத்தின் ஈகிள் பாயின்ட் ஆப் வியுவ் எனப்படும் காட்சிகளில் மிகுந்த ரசனையோடு எடுக்கப்பட்ட காட்சிகள்... அதுவும் அந்த இத்தாலியின் உயரமான பில்டிங்கையும், இஸ்தான்பூல் நகரத்து காட்சியையும் எடுத்த விதத்தையும்... படம் முடிந்த பின்பும் நினைத்து பார்க்க வைக்கின்றார்கள்... அந்த காட்சிகளின் பின்புலத்தில் உள்ள உழைப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்து உள்ளன...

மிக முக்கியமாக இஸ்தான் புல் லொக்கேஷன்கள்... அருமை.. அதுவும் இஸ்தான்புல் பாலம் மிக அழகான காட்சி என்பேன்....

இந்த படம் பெர்லின் பிலிம் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டது....

காரில் வருபவன் இறக்க போகின்றான் என்பது பார்வையாளனுக்கு தெரியும் ...மலை பாதையில் வரும் அவன் தான் இறக்க போவதை கண்களில் இயக்குனர் வெளிபடுத்தி அந்த காரோடு லாங்ஷாட்டில் பயணப்படும் கேமரா.. கார் ஒரு குகையில் நழைந்து அடுத்த பக்கம் வராமல் இருக்கும் போதே அவன் இறந்த விட்டான் என்பதை சிம்பாலிக்கா காட்டி இருப்பார்கள்...

அதே போல் இத்தாலியில் பிரைம்மினிஸ்டர் வேட்பாளரை பார்க்க ஹீரோ ஹீரோயின் இருவரையும் ஒரு பெண் பிரிஸ்க்காக பின்புறம் கைகட்டி டக் டக் என்ற நடந்து செல்லும் அழகே அழகு...

படத்தின் பெரும் பலம் ஒளிப்பதிவாளர் Frank Griebe ஒளிப்பதிவாளருக்கு ஒரு பெரிய வாழ்த்து...

இந்த படத்தின் கதாநாயகியை(Naomi Watts) எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது...

படம் முழுவதும் ஒரு வித ஆஷ்கலரில் டோன் இருப்பது போல் ஷுட் செய்து இருப்பது... சிறப்பு...

அதே போல் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் நடக்கும் துப்பாக்கி சண்டையும் என்னதான் ஷீட்டிங் முடிந்து ஓட்டலுக்கு பண்ம் கொடுத்தாலும் அந்த பைவ் ஸ்டார் ஓட்டல் நாஸ்தியாகும் போது அந்த சண்டைகாட்சியை நன்றாக அமைத்து இருப்பார்கள்...

படத்தின் டிரைலர்...

படக்குழுவினர் விபரம்....
Directed by Tom Tykwer
Produced by Charles Roven
Richard Suckle
Lloyd Phillips
Written by Eric Singer
Starring Clive Owen
Naomi Watts
Armin Mueller-Stahl
Music by Tom Tykwer
Reinhold Heil
Johnny Klimek
Cinematography Frank Griebe
Editing by Mathilde Bonnefoy
Distributed by Columbia Pictures
Release date(s) February 13, 2009
Running time 118 min.
Country United States
Germany
United Kingdom
Language English
Italian
French
Budget $50,000,000
Gross revenue $59,987,620 (worldwide)
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.

15 comments:

  1. தல,நல்லாயிருக்கு, எனக்கும் பிடிச்சு போட்ச்சு தல.

    ReplyDelete
  2. /*இந்த படத்தின் கதாநாயகியை(Naomi Watts) எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது...*/

    அப்படி ஒரு போஸ் கொடுத்த பிறகும் பிடிக்காமே போனா... டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் கிட்டே போய் தான் அப்பாயின்மென்ட்டும் ஆயின்மென்ட்டும் வாங்கணும்.

    ReplyDelete
  3. நல்ல விறுவிறுப்பான படம்
    ஹீரோ சரியான் ஆக்‌ஷன் நடிகர்.
    இவரின் ஷூட் ஹிம் அப் மற்றும் டூப்ளீசிட்டி பாருங்கள்.

    நவோமி வாட்ஸ் எல்லோரின் மனம் கவர்ந்த நடிகையும் கூட.
    இவரின் 21 க்ராம்ஸ் பாருங்கள் புரியும்.
    இவர் எவ்வளவு துணிச்சல்காரர் என்று?
    ஒட்டுக்கள் போட்டாச்சு

    ReplyDelete
  4. நம்ம ஊரு படத்துல ரவுடிங்க, போரிகிங்க கதாபாத்திரம் எவ்ளோ முக்கியோமோ .......... வெளிநாட்டு படத்துல இண்டர் போல் ஏஜென்ட் போன்ற கதாபாத்திரம் ரொம்ப முக்கியாம் ...........

    அருமையான விமர்சனம்

    ReplyDelete
  5. Clive Owen படமா வேண்டாம்
    Shoot Em up பார்த்திருக்கீர்களா விஜய் படமே better என்று தோன்றும்
    அந்த படத்தில் பார்க்கக் கூடிய ஒரே விடயம் Monica bellucciதான்

    ReplyDelete
  6. தல,நல்லாயிருக்கு, எனக்கும் பிடிச்சு போட்ச்சு தல.//
    நன்றி ஜெர்ரி...

    ReplyDelete
  7. *இந்த படத்தின் கதாநாயகியை(Naomi Watts) எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது...*/

    அப்படி ஒரு போஸ் கொடுத்த பிறகும் பிடிக்காமே போனா... டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் கிட்டே போய் தான் அப்பாயின்மென்ட்டும் ஆயின்மென்ட்டும் வாங்கணும்.//

    உண்மைதான் நைனா...

    ReplyDelete
  8. நன்றி யோ வாய்ஸ்

    ReplyDelete
  9. நல்ல விறுவிறுப்பான படம்
    ஹீரோ சரியான் ஆக்‌ஷன் நடிகர்.
    இவரின் ஷூட் ஹிம் அப் மற்றும் டூப்ளீசிட்டி பாருங்கள்.

    நவோமி வாட்ஸ் எல்லோரின் மனம் கவர்ந்த நடிகையும் கூட.
    இவரின் 21 க்ராம்ஸ் பாருங்கள் புரியும்.
    இவர் எவ்வளவு துணிச்சல்காரர் என்று?
    ஒட்டுக்கள் போட்டாச்சு//
    உண்மைதான் கார்த்தி அந்த முத காட்சி சூப்பர்

    ReplyDelete
  10. நம்ம ஊரு படத்துல ரவுடிங்க, போரிகிங்க கதாபாத்திரம் எவ்ளோ முக்கியோமோ .......... வெளிநாட்டு படத்துல இண்டர் போல் ஏஜென்ட் போன்ற கதாபாத்திரம் ரொம்ப முக்கியாம் ...........

    அருமையான விமர்சனம்/
    நன்றி உலவு திரட்டி டீம்

    ReplyDelete
  11. Clive Owen படமா வேண்டாம்
    Shoot Em up பார்த்திருக்கீர்களா விஜய் படமே better என்று தோன்றும்
    அந்த படத்தில் பார்க்கக் கூடிய ஒரே விடயம் Monica bellucciதான்//

    உண்மைதான் தர்ஷன் அது நல்ல சீன்

    ReplyDelete
  12. nice review!//
    நன்றி சிவா

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner