(88 Minutes) 88 நிமிடத்தில் நீ இறப்பாய்....

88 நிமிடத்தில் நீ இறப்பாய் என்று உங்களுக்கு போன் வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்... கொலை மிரட்டல்கள் என்பது ஒரு மனிதனை சட்டென செயல் இழக்க வைக்கும் ரகம்...

சரிடா போன் பண்ணியதே பண்ணினானே அத்தோட அவ்ன் விட்டானா? இன்னும் 78 நிமிடம் இருக்கு ... இன்னும் 68 நிமிடம் இருக்குன்னு சொல்லி செல்போன்ல கிலி ஏற்படுத்திக்கிட்டே இருந்தா... அந்த மனுஷன் என்னதான் செய்வான் பாவம்...?

88 Minutes படத்தின் கதை இதுதான்....

அவன் ஒரு சைக்கோ அக்கா தங்கச்சி இரண்டு பேரும் ஒரு அப்பார்ட்மென்ட்ல இருக்காங்க. அதுல ஒருத்தி தூங்க போக, மற்றவ பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கும் போது அவன் உள்ள வர்ரான்.... அவ்ள் முகத்துல மயக்கம் மருந்தை வைத்து அழுத்தி அவளை தலைக்கிழா கட்டி தொங்க உட்டு, கொஞ்ச நேரத்துக்கு முன்ன நேரா பார்த்த எல்லா காட்சிகளையும் தலைக்கிழா பார்க்க வைக்கின்றான்... சரி அப்படியே எதாவது செய்ஞ்சிட்டு உயிரோடு உட்டுட்டு போவான் பார்த்தா ஒரு ஆப்பரேஷன் பண்ணற கத்தியை எடுத்து அவள் கால் கிட்ட வச்சி ஒரு இழுப்பு இழுக்க... ரத்தம் மெல்ல அவள் முகத்துல இறங்குது....மயக்கம் தெளிஞ்சு அந்த பொண்ணு எழுந்தா உயிர் போற வலி இருக்கும் நல்லவேளை செத்துட்டா.... படுக்கையில இருந்த இன்னொருத்தி அவகிட்ட இருந்து எந்த சத்தமும் இலலைன்னு எழுந்து வந்து பார்க்க வந்தா... அவளுக்கும் அதே கதி... மயக்கம் மருந்து கம்மியா கொடுக்க, அவ தொடைக்கிட்ட கத்தியல அறுக்கும் போது மயக்கம் தெளிஞ்சு... வீல்னு கத்த... அப்புறம் போலிஸ் வந்து அந்த சைக்கோவை பிடிச்சிகிட்ட போய் தண்டனை வாங்கி கொடுக்கும் போது சரியான எவிடென்ஸ் ஆதாரத்தை கொடுத்தது சைக்காரிஸ்ட் professor Jack Gramm (Al Pacino) அதனால அந்த சைக்கோ அவரை பார்த்து டிக்டாக் என்கின்றான்... மிகச்சரியா 9 வருஷம் கழிச்சி அந்த சைக்கோ கொலைகாரன் செய்தது போல சிட்டியில் கொலையும் நடக்குது அதே போல் புரபசர் ஜேக்குக்க கொலை மிரட்டலும் வருது...அதாவ இன்னும்88 நிமிடத்தில் இருந்து நீ மர்க்கேயா என்று?? டாக்டர் உயிர் தப்பினாரா? திடுக் திருப்பங்களுடன் வெண்திரையில்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

படத்தின் முதல் காட்சியில் இளவரசி டயான இறந்து போன பத்திரிக்கை செய்தியை பார்த்தபடி இரண்டு சகோதரிகள்...டயானாவை யார் கொன்று இருப்பார்கள் என்று கேட்க? தெரியலை ஆனால் டயானா அழகானவர் என்று சொல்லி பத்து நிமிடத்தில் அதே பெண்களுக்கு அந்த நிலமை வருவது, திரைக்கதையின் நல்ல துவக்கம்..

இந்த படத்தின் வகுப்பறை காட்சிகளை University of British Columbia ஷுட் செய்யபட்டது...

பல்கலைகழகத்தில் பாம் வைத்து விட்டார்கள் என்றதும் டாப் ஆங்கிலில் மாணவர்கள் கலைந்து செல்வதை எடுத்த இருப்பதும் கார் போகும் காட்சிகளை ஹெவிகாப்டரில் இருந்து எடுத்து இருக்கும் காட்சிகள் அழகு..

அல்பாசினோ இந்த படத்தில் பெரிதாய் என்னை கவரவில்லை என்பேன்.... இந்த படம் பார்க்கலாம் அவ்வளவுதான் அதனால் இந்த படம் டைம்பாஸ் படங்கள் லிஸ்ட்டில் சேர்க்கின்றேன்

படத்தின் டிரைலர்...




படக்குழுவினர் விபரம்...

Directed by Jon Avnet
Produced by Jon Avnet
Randall Emmett
Michael P. Flannigan
George Furla
Written by Gary Scott Thompson
Starring Al Pacino
Alicia Witt
Leelee Sobieski
Deborah Kara Unger
Amy Brenneman
Neal McDonough
Benjamin McKenzie
Music by Edward Shearmur
Distributed by TriStar Pictures (USA)
Warner Bros. (UK)
Release date(s) Israel
March 2, 2007
United States
April 18, 2008
Running time 111 min
Language English
Budget $30,000,000 [1]
Gross revenue $32,573,503 [2]


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

7 comments:

  1. ////
    அதனால் இந்த படம் டைம்பாஸ் படங்கள் லிஸ்ட்டில் சேர்க்கின்றேன்
    /////

    இதை... நான் ‘டைம் வேஸ்ட்’ படங்களில்தான் சேர்ப்பேன். :)

    அல் பசினோ, தன் கேரியரில் மறக்க வேண்டிய படங்களில் முதன்மையான படங்கறது என்னோட கருத்து! :)

    ReplyDelete
  2. நன்றி ஹாலிவுட்பாலா... நீங்க சொல்வது உண்மைதான்...

    ReplyDelete
  3. நானும் கமெண்ட் போட்டுட்டேன்... எப்படி ஜாக்கி நம்ம கமெண்ட்...?

    ReplyDelete
  4. அண்ணே நானும் இந்த படத்தை சமீபத்தில்
    தான் பார்த்தேன்... சுமார் தான்...

    ஆனா நான் ஒரு விஷயம் கவனித்தேன்
    al pacino reaction எல்லாமே உலக நாயகன்
    கமல் அவர்கள் காப்பி அடிதிரிக்கிறார்...
    இதை நான் எங்கு வேண்டுமானாலும்
    வந்து சொல்வேன்........

    ReplyDelete
  5. உண்மையில் மலைப்பா தான் இருக்கு ஜாக்கி, ஒவ்வொரு படமா கவனத்துடன் பாத்துட்டு பின்னாடி அவைகள் பத்தி எழுதி.......எப்டிதான் அந்த T V பொட்டி முன்னாடி குந்திகினு இத எல்லாத்தையும் பாப்பிங்களோ சாமி ....நம்மளால பத்து நிமிஷம் கூட உக்கார முடியாது பின்னாடி எரிச்ச கண்டு பூடும். ஆனாலும் வாழ்த்துக்கள். அம்மணி இன்னமும் வரல போல தோனுது. வந்த பின்னாடி அந்த கொண்டாடங்களுக்கு என ஒரு ஸ்பெஷல் பதிவு இருக்கும் என்பது தெரியுமே!!!!

    ReplyDelete
  6. unnidam mattum unmaiyaka irukkiren. kavithai. unkal manivi koduththu vaithavar. manathodu pesum vithai therikirathu unkalukku.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner