ஒரே ஒரு ஆள் கொல்லப்பட்டான் அவ்வளவுதான் பஞ்சாப்பும் ஹரியாணாவும் எரிகின்றது...ஆனால்???

சிங்கள ராணுவத்தினர் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் தமிழர்கள் கொடுரமாக கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

மகிந்தா பதவி எற்ற நாளில் இருந்து இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் அவர்கள் தாயகத்திலேயே குண்டு வீசி கொல்லப்பட்டு இருக்கின்றார்கள்.

பத்து ஏக்கர் நிலப்பரப்புக்குள் 2 லட்சம் பேரை அகதியா அடிப்படை வசதி இல்லாமல் வெட்டவெளிச்சிறையில் இலங்கை அரசு அடைத்து வைத்து இருக்கின்றது.

போரில் இறந்து போனவர்களில் அதிகம் குழந்தைகள்தான் என்று யுனிசெப் கவலை தெரிவித்து உள்ளது.

தமிழர்கள் தாயகத்தில் சிங்கள ரவுடிகள் வலுக்கட்டாயமாக குடி அமர்த்துகிறது சிங்கள அரசு.

அகதிகள் திறந்தவெளியில் உடுப்பு மாற்ற பெண்களை வற்புறுத்தி அழகு பார்க்கின்றது சிங்கள ராணுவம்.


அழகான பெண்களின் கற்பு நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக காணமல் போகின்றது.

கர்பினி பெண்யையும் கயவர்கள் பாலியல் வன்புனர்ச்சிக்கு ஆளாக்குகின்றார்கள்.

தமிழ் நாட்டில் மட்டும் உயிருக்கு பயந்து உறைவிடத்தை விட்டு வந்தவர்களின் எண்ணிக்கை 73,433 பேர்


உலகம் எங்கும் பல லட்சக்கனக்காகனவர்கள் புலம் பெயர்ந்து தன் சமுக அடையாளத்தை இழந்து விட்டார்கள்.


இதையெல்லாம் தட்டி கேட்டவனை இறையான்மை என்ற பெயரில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இன்று ஆஸ்த்திரியாவில் இரண்டு சிங் கோஷ்டிகள் அடித்துக்கொண்டதில் ஒருவன் பலியானன். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் ஒரே ஒரு உயிர்பலிதான் நடந்து இருக்கின்றது.


ஆனால்பஞ்சாப் ,ஹரியான பற்றி எறிகின்றது.

நாம் தமிழர்கள் திரைகடல் ஓடியும் ஒருகாலத்தில் திரவியம் தேடியவர்கள்,இன்று எல்லா இடத்திலும் உதை வாங்கி கொண்டு இருக்கின்றோம், நாம் இழப்புகளை அதிகம் சந்தித்து விட்டு சொரனை அற்று இருக்கின்றோம், மாற்றான்தாய் மன நிலையில்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

49 comments:

  1. செருப்பால் அடித்த சீக்கிய இனம் தலைமைப் பதவிக்கு வந்துவிட்டது. நாங்கள் பிள்ளைகளுக்கு பதவி வாங்கவே போராடிக்கொண்டிருக்கிறோம்.... ஈழம் தான் இழவு வீடாய் கிடக்கிறதே.... அதனால் எங்கள் உணர்வுகளுக்கும் விடுப்பு விட்டுவிட்டோம்.....

    ReplyDelete
  2. தமிழனாய் பிறந்ததுக்கு வெட்கபடுகிறேன்.

    ReplyDelete
  3. அதுதான் தமிழ்நாடு ஸ்பெஷல். சன் டிவி, கலைஞர் டீவி பார்த்து பொழுது போக்குவோமே தவிர வேறொன்றறியோம்.

    ReplyDelete
  4. நியாயமான ஆதங்கம். வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  5. //நாம் தமிழர்கள் திரைகடல் ஓடியும் ஒருகாலத்தில் திரவியம் தேடியவர்கள்,இன்று எல்லா இடத்திலும் உதை வாங்கி கொண்டு இருக்கின்றோம், நாம் இழப்புகளை அதிகம் சந்தித்து விட்டு சொரனை அற்று இருக்கின்றோம், மாற்றான்தாய் மன நிலையில்...//

    அதிகம் படிச்ச மேதாவிகள் நம்ம ஊரில் இருப்பதால் தான் இந்த பிரச்சினையே:((((

    ReplyDelete
  6. அவர்களிடம் இருந்து கற்றுகொள்ள வேண்டியது..ஒற்றுமை.
    அதுதான் அவர்கள் மேல் பயத்தை வரவழைப்பது. ஆனால் இங்க பாருங்க, ஒரு பதிவர் பதிவிட்டால் இன்னொருத்தன் அவன் எழுதறது சரியில்ல, இது நொட்ட அது நொட்டன்னு சொல்லவோன்டியது. மொதல்ல நாம ஒற்றுமையா இருப்போமுண்ண..
    அப்படி இருந்தா, இந்த உலகத்தில எந்த ..யிரனாலும் நம்ம ஒன்னும் புடுங்கமுடியாது!

    ReplyDelete
  7. //ஆனால்பஞ்சாப் ,ஹரியான பற்றி எறிகின்றது.//

    தமிழ்நாடும் வன்முறையில் பற்றி எரிய வேண்டும் என்கிறீர்களா?

    மக்கள் இப்போது நாடுவது நிம்மதியான வாழ்க்கை! தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஈழத்துக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.

    ReplyDelete
  8. heat , சொரணையெல்லாம் நம்மளாண்ட ரொம்ப கொறச்சி தலைவரே...

    ஒன்னும் சொல்றதுக்கில்ல...

    நித்யன்

    ReplyDelete
  9. தேவையானது பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீண்டும் அவர்களது சொந்தக்காலில் நிற்கச் செய்வதேயில்லாமல் தமிழ் நாட்டையும் கொழுத்துவதில்லை...
    போதும் இனியாவது வன்னி மக்களை விட்டுவிடுங்கள் அவர்கள் பட்ட துன்பம் போது..இனிமேலும் அவர்கள் யாரையும் நம்பத் தயாராக இருக்க மாட்டார்கள்...

    ReplyDelete
  10. violence breeds violence
    thats all
    It cannot be appreciated
    sufferings of the people should be
    stopped .It can be mitigated by force to little extent but major part should be tackling the situation by adopting intelligent approach only.for permanant solution.

    ReplyDelete
  11. குசும்பன் said,

    //அதிகம் படிச்ச மேதாவிகள் நம்ம ஊரில் இருப்பதால் தான் இந்த பிரச்சினையே:((((//

    உண்மைதான் ....

    :((

    ReplyDelete
  12. //தமிழ்நாடும் வன்முறையில் பற்றி எரிய வேண்டும் என்கிறீர்களா?

    மக்கள் இப்போது நாடுவது நிம்மதியான வாழ்க்கை! தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஈழத்துக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.//

    பதிவின் சாரத்தை விட்டு விட்டு தும்பை விட்டு வாலைப் பிடிப்பது என்பது இதுதானுங்க.

    நிம்மதி என்பது என்ன?

    அனைத்தையும் இழந்த அடுத்தவன் எப்படி போனா என்ன நான் நல்லா போர்த்திப் படுத்துக் கொள்கிறேன் மனப்பான்மையா அல்லது எழுந்தோம்,வேலைக்குப் போனோம்,தொலைக்காட்சி பார்த்தோம்,உண்டோம் உறங்கினோம் முயங்கினோம் என்ற மனப்பான்மையா?

    ReplyDelete
  13. செருப்பால் அடித்த சீக்கிய இனம் தலைமைப் பதவிக்கு வந்துவிட்டது. நாங்கள் பிள்ளைகளுக்கு பதவி வாங்கவே போராடிக்கொண்டிருக்கிறோம்.... ஈழம் தான் இழவு வீடாய் கிடக்கிறதே.... அதனால் எங்கள் உணர்வுகளுக்கும் விடுப்பு விட்டுவிட்டோம்.....--

    நன்றி கதிர் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  14. அதுதான் தமிழ்நாடு ஸ்பெஷல். சன் டிவி, கலைஞர் டீவி பார்த்து பொழுது போக்குவோமே தவிர வேறொன்றறியோம்.//

    உண்மை தலைவா

    ReplyDelete
  15. நியாயமான ஆதங்கம். வழி மொழிகிறேன்.//

    நன்றி தராசு தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  16. அதிகம் படிச்ச மேதாவிகள் நம்ம ஊரில் இருப்பதால் தான் இந்த பிரச்சினையே:((((//

    நீங்கள் சொல்வது உண்மைதான் குசும்பன் நன்றி

    ReplyDelete
  17. அவர்களிடம் இருந்து கற்றுகொள்ள வேண்டியது..ஒற்றுமை. //
    உண்மைதான் கலை நம்மிடம் இல்லாதது அதுதான்

    ReplyDelete
  18. தமிழ்நாடும் வன்முறையில் பற்றி எரிய வேண்டும் என்கிறீர்களா?

    மக்கள் இப்போது நாடுவது நிம்மதியான வாழ்க்கை! தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஈழத்துக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.//

    லக்கி, பற்றி எறிய வேண்டும்என்று நான் எங்கும் சொல்ல வில்லை, நமக்குள் ஒற்றுமை இல்லை என்பதைதான் நான் குறிப்பிட்டு இருக்கி்றேன். குறைந்த பட்ச எதிர்பை,ஒரு கண்டன பேரணி, ஒரு அமைதி கூட்டம் என்று நம்மவர்கள் பதியவில்லை என்பதே உண்மை.

    உலகம் எங்கும் வெள்ளை பூக்கள் மலர வேண்டும் என்பதே எனது எண்ணமும்.

    ReplyDelete
  19. heat , சொரணையெல்லாம் நம்மளாண்ட ரொம்ப கொறச்சி தலைவரே...

    ஒன்னும் சொல்றதுக்கில்ல...

    நித்யன்//

    அது இந்தி எதிர்ப்பு போராட்த்தோடு போய் விட்டது.

    ReplyDelete
  20. violence breeds violence
    thats all
    It cannot be appreciated
    sufferings of the people should be
    stopped .It can be mitigated by force to little extent but major part should be tackling the situation by adopting intelligent approach only.for permanant solution.--//


    தலைவரே நானும் உங்க கருத்துக்கு உடன் படறேன் ஆனா பதிவின் சாரம்சம் நமக்குள்ள இருந்த ஒத்துமை எங்க??? என்பதே

    ReplyDelete
  21. தேவையானது பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீண்டும் அவர்களது சொந்தக்காலில் நிற்கச் செய்வதேயில்லாமல் தமிழ் நாட்டையும் கொழுத்துவதில்லை..-//

    நீங்கள் பதிவின் அடிப்படையை புரிந்து கொள்ளவில்லை, எட்டு பஸ் எட்டு ரயில் எறிய வேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லை ராசு உங்கள் கருத்துக்கு நன்றிகள்

    ReplyDelete
  22. குசும்பன் said,

    //அதிகம் படிச்ச மேதாவிகள் நம்ம ஊரில் இருப்பதால் தான் இந்த பிரச்சினையே:((((//

    உண்மைதான் ....

    நன்றி தீப்பெட்டி

    ReplyDelete
  23. //தமிழ்நாடும் வன்முறையில் பற்றி எரிய வேண்டும் என்கிறீர்களா?

    மக்கள் இப்போது நாடுவது நிம்மதியான வாழ்க்கை! தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஈழத்துக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.//

    பதிவின் சாரத்தை விட்டு விட்டு தும்பை விட்டு வாலைப் பிடிப்பது என்பது இதுதானுங்க.

    நன்றி ராஜ நடராஜன் எம்மை புரிந்து கொண்டதற்க்கு

    ReplyDelete
  24. நேற்றைய நமது வலையுறையாடலை தான் நினைவிற்கு வருகின்றது.
    கர்நாடகாவில் காவிரிப்பிரச்சனையென்றால் காவிரி எந்த திசையில் இருந்து எங்கு செல்கிறது என்று கூட தெரியாத மங்களூர்காரர்கள் கூட ஆர்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் இங்கு காவிரிப் பிரச்சனையில் நெல்லை மாவட்டத்துக்காரனும், காஞ்சி மாவட்டத்துக்காரனும் உதவிக்கு வருவானா?
    அப்படி வராமல் போவதால் தஞ்சாவூர்காரன் பாலாற்றுப்பிரச்சனையிலும் , முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும் எனக்கென்னான்னு இருப்பான்.
    இது தான் தமிழ்நாட்டோட ஒற்றுமை.
    உள்ளூர் தமிழன் பிரச்சனைக்கே ஒன்னா போராடாத நாமளா, ஈழத்தமிழர் பிரச்சனைக்கு போரடுவோம்?
    சாரி ஐ டோண்ட் நோ டமில்னு உங்க புள்ளைங்க சொன்னா கோவப்படாம பெருமைப் படுங்க. முடிஞ்சா கன்னடமும், ஹ்ந்தியும் கத்துக்கொடுங்க. அடுத்த தலைமுறையாச்சும் பொழைச்சுக்கட்டும்.

    ReplyDelete
  25. என்ன செய்வது ஜோ, நாம் சிலரால் பிரித்து ஆளப்ட்டு விட்டோம், உங்கள் கோபத்தை என்னால் உனர முடிகின்றது

    ReplyDelete
  26. தமிழனாய் இருந்து கடமை செய்ய தவறியதற்காய் மிகுந்த மனவருத்தப்படுகிறேன்

    ஒரு லட்சம் பேரா ? கற்பனையே பண்ண முடியவில்லை :-(

    ReplyDelete
  27. பிரச்சினையின் அடிப்படையே தெரியாமல் எழுதிய பதிவு.

    பஞ்சாபில் வன்முறை என்பது பஞ்சாபியருக்கு (அதாவது பஞ்சாபில் வசிக்கும் மக்களுக்கு) ஒரு பிரச்சினை என்பதினால் அல்ல. அங்கு நடப்பது ஒரு சாதி பிரச்சினை, சீக்கிய மதத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் , உயர்ந்த சாதி மக்களுக்கும் நடக்கும் ஒரு மோதல்.

    ஆஸ்திரிய நாட்டில் இருக்கும் ஒரு குருத்துவாராவில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பூசாரியை தாழ்த்தப்பட்ட இன மக்கள் மட்டுமல்லாமல் உயர்சாதியினரும் காலில் விழுந்து வணங்கியது கண்டு பொறுக்க முடியாமல் அந்த பூசாரியை கொன்று விட்டார்கள். இதனை எதிர்த்து தலித் சீக்கியர் அனைவரும் போராடுகிறார்கள்.

    இதனை வன்னியருக்கும் தலித்துக்கும் அல்லது தேவருக்கும் தலித்துக்கும் நடக்கும் மோதலாக மட்டுமே ஒப்பிட வேண்டும்.

    இது போல இதை விட அதிகமான அளவில் தென்தமிழ்நாட்டில் மோதல்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது.

    எனவே மொழியால் பகுக்கப்பட்ட இன அபிமானம் என்பது வேறு , சாதி உணர்வு என்பது வேறு. பஞ்சாபில் நடக்கும் மோதல்கள் பிந்திய வகை. அந்த கொலை நடந்ததிற்காக சீக்கிய சமுதாயம் வெட்கப்பட வேண்டும்.அங்கே வெளிப்பட்டு இருப்பது மிகக்கேவலமான ஜாதி வெறி.இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டை ஒப்பிட வேண்டுமானால் " சில மாதங்களுக்கு முன்னாள் சட்டக்கல்லூரி மாணவர் மோதலை ஒப்பிடலாம்"

    ReplyDelete
  28. தல,

    அவ்வளவு கவலைப்பட்டால் நீங்கள் நடுத்தெருவில் நின்று எரித்துகொள்ளலாமே?

    இதில் சம்பந்தப்பட விரும்பாதவர்கள் மீது உங்களது கருத்துக்களை திணித்து அவர்களுக்கு நெருப்பு வைக்கும் வேலையை விட்டுவிடலாமே?

    ReplyDelete
  29. பஞ்சாப் தீவிரவாத்தில் இருந்து விடுதலையாகி சுபிட்சமாக இருப்பது நண்பர் ஜாக்கிக்கு பிடிக்கவில்லை போலிருக்குது

    ReplyDelete
  30. தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காக உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து , மிகச்சுலபமாக செய்வதைக்கூட செய்யவில்லை என்ற ஆதங்கம் சரிதான். ஆனால் எடுத்துக்கொண்ட உதாரணம் கேவலமானது .ஆஸ்ட்ரியாவில் , தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த குருவை உயர்சாதியினர் கொன்றதால் வந்த இரு சாதியினருக்குள்ளும் வந்த மோதல். இது எந்தவிதத்திலும் சீக்கியர்க்கு பெருமை சேர்க்கக்கூடியதில்லை . சீக்கியர்க்குள்ளும் சாதிவித்தியாசம் உள்ளது எனத்தெரிந்ததுதான் இதனால் வந்த பயன்(?)

    ReplyDelete
  31. ஆஸ்திரியாவில் வாழும் சீக்கியர்களின் இருவேறு கோஸ்டிகளுக்கு(ஜாதி) இடையே ஏற்பட்ட பிரச்னை ஒரு கொலையின் மூலம் பஞ்சாப்பிலும் அவ்விரு கோஸ்டிகளுக்கு பகை பற்றிக்கொண்டு ஊரை எரிக்கின்றனர்....இதிலிருந்து தமிழன் என்ன கற்று கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.???????

    ReplyDelete
  32. ஜாக்கி பல பின்னோட்டம் சுடாய் உள்ளது அதனால் இந்த ஜோக்

    சிங் இஸ் கிங் ஆன இப்போ சிங் இஸ் சங்கு.

    "புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

    அதில்:அன்பிற்குரிய பில் கேட்ஸ்,சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

    1. கம்ப்யூட்டரில் ‘Start’ பட்டன் உள்ளது. ஆனால், ‘Stop’ பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

    2. ‘Run’ என்ற மெனு உள்ளது. எனது நண்பர் ‘Run’ ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ் பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு ‘Sit’ மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

    3. உங்க விண்டோஸில் நான் ‘Recycle bin’ஐ மட்டும்தான் பார்த்தேன். ‘Re-scooter bin’ இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில் ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

    4. ‘Find’ பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத் தொலைத்தபோது, ‘Find’ பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

    5. என்னுடைய பையன் ‘Microsoft word’ கற்றுக் கொண்டான். இப்போது ‘Microsoft sentence’ கற்றுக்கொள்ள விரும்புகிறான். அதை எப்போது வழங்குவீர்கள்?

    6. விண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோ ஒன்றை அதில் போடவும்.

    7. ‘Microsoft office’ உள்ளது. சரி, ‘Microsoft Home’ எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

    8. ‘My Network Places’ கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, ‘My Secret Places’ கொடுக்கவில்லை. அதை இனிமேலும் தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.

    9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் ‘Windows’ விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் ‘Gates’ உள்ளது ஏன்?

    இப்படிக்கு,
    சர்தார்ஜி"
    நன்றி நண்பர் ரமேஷ்
    (http://excellent-ramesh.blogspot.com/2009/04/blog-post_2494.html#comment-form)

    ReplyDelete
  33. //தமிழ்நாடும் வன்முறையில் பற்றி எரிய வேண்டும் என்கிறீர்களா?//

    அப்படி சொல்லவில்லை, ஆனால் கொஞ்சமாவது தமிழன்னு சொரணை வேண்டாம்?? இலங்கையில சிங்களவன் தமிழனை எப்படி கூப்பிடுவான் தெரியுமா?? "பீ தமிழன்"
    B or P அல்ல மலம். இவ்வளவு ஓர்மையா, வீரமா போராடுற ஈழத்தமிழருக்கே இப்படீன்னா, மற்ற நாடுகளில் உள்ள தமிழன்???

    ReplyDelete
  34. கோகுல்,அன்பு,செந்தில் உங்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது புண்ணியமில்லாத விஷயமாக கூட இருக்கட்டும்,அல்லது இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலாக கூட இருக்கட்டும்.பஞ்சாப் மற்றும்ஹரியான இந்திய ஊடகங்களில் கவனம் பெற்றனவா இல்லையா என்று சொல்லுங்கள், ஒரே ஒரு அமைதி பேரனி அல்லது இவ்வளவு படுகொலைக்கான எதிர்ப்பு, என்று எதுவுமே பதியப்படவில்லை என்பதுதான் எனமு வருத்தம், எவன் செத்தால் எனக்கென்ன என்ற மனநிலை மாறவேண்டும், என்பதே பதிவின் நோக்கம், அதை விடுத்து தமிழகம் பற்றி எறிவதோ , பஞ்சாப் பற்றி எறிவதோ நம் நோக்கம் அல்ல

    ReplyDelete
  35. குசும்பன் said...

    //நாம் தமிழர்கள் திரைகடல் ஓடியும் ஒருகாலத்தில் திரவியம் தேடியவர்கள்,இன்று எல்லா இடத்திலும் உதை வாங்கி கொண்டு இருக்கின்றோம், நாம் இழப்புகளை அதிகம் சந்தித்து விட்டு சொரனை அற்று இருக்கின்றோம், மாற்றான்தாய் மன நிலையில்...//

    அதிகம் படிச்ச மேதாவிகள் நம்ம ஊரில் இருப்பதால் தான் இந்த பிரச்சினையே:((((

    உண்மையான வார்த்தை

    ReplyDelete
  36. எனக்கென்னவோ நீஙக்ள் சீக்கிய பிரச்சனையையும், இலங்கை தமிழர் பிரச்சனையையும் குழப்பிவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது..
    ஏனென்றால் சீக்கிய பிரச்சனை ஆஸ்திரியாவில் இரண்டு சீக்கிய மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவினைகளூக்கிடையே நடந்த பிரச்சனை.. இங்கே பற்றி எரிவதும் இரு பிரிவினரிடையே தான். ஆனால் இலங்கை தமிழர் பிரச்சனை. அப்படியில்லை..தலைவரே..

    ReplyDelete
  37. தமிழன் செத்துக்கொண்டிருக்கிரான் என்றால் கவனிப்பாரில்லை. மீனவர்களை சிங்களவன் சுடுகிரான் என்றால் கேட்பாரில்லை.. குடும்பத்துக்கு அமைச்சு பதவி என்றால் எல்லோரும் போய் டில்லியில் தங்கிவிடுவார்கள்... இவங்களை எல்லாம் உயிரோடு விட்டு வைச்சது பிழை.... (என் வேதனை நன்பர்களே)

    ReplyDelete
  38. இலவச TV குடுக்கிறான் என்றால் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் மக்கள். என்ன கொடுமை... TV வாங்கி வைச்சு என்ன பண்ணப்போறியல் ஒரு வேலை கேளுங்கள் மக்களே? எங்கள் தமிழர் வாழ்வுக்கு சிறந்த அடிமையில்லாத வாழ்க்கை கேளுங்கள்....

    ReplyDelete
  39. வேலை வாங்கினால் எல்லாம் வீடு தேடி வரும். ஆனால் TV வாங்கினால் எல்லாம் வாடு தேடிவருமா? பிச்சைதான் எடுக்கனும்........

    ReplyDelete
  40. வணக்கம், என்னய்யா? எல்லாரும் வன்முறை கூடாது? பற்றி எரிய கூடாதுனு சொல்றீங்க...
    நம்ம வீட்டுல, நம்ம அக்கா, தங்கச்சிக்கி ஆபத்து வந்துச்சினா, ஒருந்தன் தப்பா நடந்துகிட்டா, பேச்சு வார்த்தை நடத்துவீங்களோ? அடிச்சு கொல்ல மாட்டீங்க?
    இதேதான், தமிழீழத்துல நடக்குது, பேரணி நடத்திட்டு, வெட்டியா பேசிட்டு, போய் தூங்கிடறது...
    ஆறு கோடி தமிழனும், கால் எடுத்து வைச்சா சிங்கள நாய் ஒன்னு கொலைக்குமா?
    வன்முறைய வன்முறையாளத்தான் வெல்லனும்...

    வலியவன்தான் வெற்றி பெறுவான்.

    தலைவருக்கு வலிமை சேருங்கள்...

    www.tamizhpadai.blogspot.com

    ReplyDelete
  41. //அவர்களிடம் இருந்து கற்றுகொள்ள வேண்டியது..ஒற்றுமை. // அட கடவுளே....! அவனுங்களே சாதி சண்டையில அடிச்சிட்டு இருக்கானுங்க... பிரச்சினை என்னன்னே தெரியாம பின்னூட்டம் போடறதுல நம்ம ஆளுங்கள மிஞ்ச முடியாதுப்பா..!!!

    ReplyDelete
  42. இரண்டு தினங்களுக்கு முன்பு சன் டிவியின் நகைச்சுவை சேனல் ஆதித்யா சேனலில் தெனாலி படத்தில் கமல் ஈழத்தில் சிறுவயதில் அவர் குடும்பத்தில் நடந்த கொடுமையான நிகழ்ச்சியை பற்றி ஜெயராமிடம் சொல்வது போல் ஒரு காட்சி..அதை பார்க்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும்!ஆனால் சன் டிவி குடும்பத்துக்கோ அது காமெடி சீனாம்!!இவர்கள் தமிழீழ மக்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம்! இது போல் நிகழ்ச்சிகளை காமெடி சானல்களில் ஒளிபரப்பாமலிருந்தால் சரி!!!!!!!!

    ReplyDelete
  43. "வன்முறைய வன்முறையாளத்தான் வெல்லனும்..."
    that is what happened to LTTE and EelaTamils who didn't stop ltte from being violent :)

    ReplyDelete
  44. tamizanaithavira matra enathirikellam thanmanam soodu soranai yellam athigam...
    manathirukku varutham than manamketta innathil piranthatharku...
    -PUTHUVAI PRABA-

    ReplyDelete
  45. தமிழ் மக்கள் நல்லவர்கள்
    ஆனால் அவர்களை வழி நடத்தும் தலைவர்கள் சுயநல பிசாசுகள்
    குறுகிய வட்டத்திற்குள் மக்களை கூண்டில் அடைத்து வைத்துவிட்டார்கள்
    சேவலையும், சேவலையும் கொலைவெறியோடு மோதவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியுறும் மனித மிருகங்கள் போல் மனிதர்களை மோதவிட்டு அதில் மடியும் உயிர்களை கண்டு இன்பங்காணும் கூட்டம்.
    மைய்ய அரசு ஆஸ்திரேலியாவில் சில இந்திய மாணவர்களை துன்புருத்தப்பட்டதற்கு பதறுகிறது
    பிரான்சே நாட்டில் 2 பயணிகளை விமான நிறுவனம் அவமானபடுத்தியதற்கு ஆங்கில ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றன,
    இலங்கையில் ஆயிரக்கணக்கில் உயிரோடு தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதற்கு அறிக்கை விட்டுகொண்டிருக்கிறது.அங்கே அவன் தடயங்களை அழித்துகொண்டிருக்கிறார்.
    ஆள்பவனோ தன் மகனுக்கு மந்திரி பதவி தேடி அலைந்து கொண்டிருக்கிறான்
    இங்குள்ள தமிழ் மக்கள் ஆட்டு மந்தைகள் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?
    கசாப்புக் கடையில் ஒரு ஆடு வெட்டப்படும்போது அருகில் நிற்கும் ஆடு புல்லைத் தின்றுகொண்டிருப்பதைப்போல்தான் இந்த செயலும்.
    தமிழ் மக்கள் என்று பெயரளவில் ஒரு இனம் இருப்பது அர்த்தமற்றது. தன்னை காப்பாற்றிக்கொள்ள திராணியற்ற இந்த இனம் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?
    தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டுவிட்டதாம்.
    ஆனால் தமிழன் செங்குருதிசொட்ட சொட்ட பிணமாக மிதந்துகொண்டிருக்கிறான்.

    ReplyDelete
  46. லக்கிலுக் அமைதியை விரும்புபவர்போலும்!
    மானமும் வேண்டாம், உரிமையும் வேண்டாம் அடிமை வாழ்க்கையே போதும் என்று இவர்போல் நினைப்பவர்கள் தமிழகத்தில் ஏராளம். இவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள். இவர்களைப்போன்று அன்று காந்தி நினைத்து இருந்தால் இந்தியா சுதந்திரம் அடைந்து இருக்காது. இன்று உலகின் பல நாடுகள் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டு இருக்கமுடியாது.

    ReplyDelete
  47. எப்போதும் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் சுதந்திர காற்றை அனுபவிப்பது கிடையாது.
    அதை பெரும்பாலும் போராட்டத்தில் பங்குபெறாத சுயநலவாதிகள் அனுபவிக்கிறார்கள்
    இதுதான் உலக நியதி போலும்.

    ReplyDelete
  48. தமிழனுக்கு சுரணை இருந்தா மெரினா பீச் ல இடம் கிடைக்காம இருக்க எதாவது செய்யணும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner