
தமிழில் பசங்க பிரச்சனைகளை சொன்ன படங்கள் மிக மிக குறைவு அப்படியே காட்டினாலும் கல்ப் அடிக்கும் போது தொட்டுக்கொள்ளும் பூண்டு உறுக்காய் போலவே குழந்தைகளை பற்றி தமிழ்சினிமாவில் காட்டி இருப்பார்கள் அதிலும், கிராமத்து, சிறு நகரத்து பசங்களின் வாழ்க்கையை தமிழ் சினிமாவில் அதிகமாக பதியப்படவில்லை. அந்த குறையை இந்த படம் போக்கி விட்டது எனலாம்.

வானம் பொய்த்து வேலைதேடி சென்னை வந்து ஆஸ்பெட்டாஸ் ஷீட்டு வேய்ந்த, அநியாய கொள்ளை அடிக்கும் வாடகைவீட்டில் கரண்டு போய் வியர்வை புழுக்கத்துக்கு நடுவில், பட்டிணப்போடி விசிறியால் விசிறிக்கொள்ளும் தென்மாவட்டத்து குடும்பத்தினர்களே, உங்கள் பள்ளி வாழ்க்கையை இரண்டு மணிநேரத்தில் (கடந்த காலத்தை) அசை போட வந்து இருக்கும் படம் பசங்க...
குழந்தைகள் உலகம் வேறானது, அவர்கள் வாழ்க்கை முறையும் வேறு. சிலேட்டு அழிக்க இரண்டு கோவஇலை அவசரத்துக்கு கொடுக்காமல் அ லைகழித்த கந்தகுமாரை பள்ளி விட்டதும் நான் மண்ணில் புரட்டி எடுத்தது ஞாபகம் வருகின்றது . ஆனால் இன்று அதை நினைக்கும் போது சிரிப்பாக இருகின்றது.
என் வகுப்பில் எல்லா கிளாசிலும் பெயிலான ஒரு தடிமாடு படித்து கொண்டு இருந்தது, அவனை இன்று நினைத்தாலும் எனக்கு வயிறு பற்றிக்கொண்டு வரும். எனென்றால் அவன் என்னைஒன்றாம் வகுப்பு படிக்கம் போது அப்படி அழ வைத்து வேடிக்கை பார்ப்பான். என் சிலேட்டில் (+) சிலுவை குறி இட்டு அதன் மேல் கை வைத்தால் அப்பாவும் அம்மாவும் இறந்து விடுவார்கள் என்று சொல்ல நான் கதறி அழுவேன் என்னை அந்த பிளஸ் குறியில் கை வைக்க இழுத்து கொண்டு செல்வான், நான் அழுது புரளுவேன், அது ஒரு கனா காலம். காலங்கள் உருண்டு ஓடி அவன் திருமணத்தை நான் தான் போட்டோ எடுத்துக்கொடுத்தேன். அவன் பெயர் உதயகுமார் கடலூர் திருப்பாதிரிபுலியூரில் உள்ள ராமகிருஷனா உதவிபெரும் நடுநிலை பள்ளியல் படித்தோம்.

பொதுவாக கிராமத்து பள்ளிகளில் காமெடி “குசு” விடுவதும் “ஒன்னுக்கு” அடிப்பதும்தான், நாங்கள் எல்லாம் பள்ளி்வி்ட்டு வரும் போது ஒரு பூண்டு செடியில் தொடர்ந்து ஒன்னுக்கு அடித்து அதை காய்ந்து போக வைப்போம். அவ்வளவு குருர எண்ணம். ,பெரும்பாலும் ஆண்பிள்ளைகளின் விளையாட்டு ஒன்னுக்கு அடிக்கும் இடத்தில்தான் உசுப்பி விடப்படும்.ராஜி இங்க நின்னுக்குனு அந்த சுவத்துல ஒன்னுக்கு அடிச்சான் எங்க நீ அடி பாப்போம்? என்று இங்குதான்
ஈகோ ஸ்டார்ட் ஆகும்,
பசங்க படத்தின் கதை இதுதான்.....
சிறு நகரத்தில் இருக்கும் பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படித்து விட்டு குடும்ப பொருளாதாரத்தினால் தமிழ் மீடியத்தில் அரசு பள்ளியில் படிக்க வரும் அன்பு எனும் மாணவனுக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்ப்பவரின் மகனான ஜீவாவுக்கு நடக்கும் சண்டைதான் பசங்க படத்தின் கதை இதில் இரண்டு குடும்பமும் எதிர் எதிரில் வசிக்க நடக்கும் சுவாரஸ்யங்கள்தான் படத்தின்கதை, ரொம்பவும் பசங்களை காட்டி ஓவர் டோசாக மாறி விடக்கூடாது என்பதற்க்காக அன்புவின் சித்தப்பாவும்,ஜீவாவின் அக்காவும் காதல் செய்ய, படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஜாலி ஜாலிதான் போங்கள்... கதை என்ற பெயரில் முழக்கதையும் சொல்வது எனது கம்பெனி பாலிசிக்கு எதிரானதால் நீங்கள் திரையில் குழுந்தைகளுடன் பார்த்து மகிழுங்கள்.

படத்தின் சிறப்புகள்.....
ரொம்ப நாளைக்கு பிறகு தபால் பெட்டி ட்ரவுசர்,விளையாட்டு சிறுவர் பாடல்கள்,அந்த வெள்ளந்தி சிறுவர்களின் குறுக்கு புத்தி என்று படம் நெடுக இயக்குநர் தன் முத்திரையை பதித்து இருக்கின்றார்.
படத்தின் திரைக்கதைக்கு வசனங்களுக்கு அவர்கள் கவலை படவே இல்லை,நாம் நினைவில் எப்போதும் இருக்கும் வசனங்கள் (உம்) ரன் படத்தில் வில்லன் பேசும் வசனம், அவன் வருவானாடா? போன்ற வசனங்களையும் சம காலத்தில் எல்லா தமிழ் படத்தில் வரும் வசனங்களையும் பசங்கள் பேசினால் என்ற இயக்குநரின் கற்பனை நன்றாகவே ஒத்துழைக்கின்றது.
குழந்தைகளின் எல்லா தவறுகளுக்கும் முதல் படி பெற்றோர்கள்தான் என்றும் அதற்க்கு குளக்கரையில் அந்த பிள்ளைகளின் தகப்பன்கள் பேசம் ஒரு லெக்சர் சூப்பர்.
பிள்ளைகளை கனவுகானுங்கள் என்ற அப்துல்கலாம் சொன்ன வார்த்தைக்கு சிறப்பாக திரைக்கதை கொடுத்த இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அதிலும் பெயருக்கு பின்னால் நீ என்னவாகப்போகிறாய் என்று சேர்த்துக்கொள்ளும் ஜடியாவும், பாராட்டும் ஐடியாவும், ரொம்ப சூப்பர்.
காதல் ஜோடிகளாக வரும் இருவர் நடிப்பும் மிகவும் அருமை...அந்த பெண் சரோஜா படத்தில் நடித்ததாம்.

ஜீவாவின் அப்பாவாக நடித்து இருக்கும் வகுப்பு ஆசிரியர் கேரக்டர் மெருகு ஏறிய நடிப்பை வெளிபடுத்தி இருக்கின்றார். முக்கியமாக பாடம் எடுத்து கொண்டு இருக்கும் போது ஹெட்மாஸ்டர் அழைப்பதாக குரல் வாய்ஸ் ஓவரில் வர மிக அழகாக தலையசைப்பார் பாருங்கள் அது ஒன்று போதும் . கல்லூரி படத்தில் ஆசிரியராக நடித்த உதவி இயக்குநர், அன்பு பையனின் அப்பா கேரக்டரை அசத்தலாக பண்ணி இருக்கின்றார் வாழ்த்துக்கள்
கற்றதுதமிழ் படத்தில் நடித்த பையனை தவிர எல்லோரும் புது முகங்கள் அதிலும் பிள்ளைகளை வைத்து வேலை வாங்குவது கொடுமையிலும் கொடுமை அந்த உழைப்புக்கு பலன் இருக்கின்றது.
கமல் படத்தை போல் சின்ன சின்ன ஜோக்குகள் படம் முழுக்க விரவி கிடைக்கின்றது. பார்த்து ரசிப்பதற்க்குள் அடுத்த ஜோக் வந்து விடுகின்றது.
கேமரா பிரேம் குமார் அறிமுகம்,பசங்க சைக்கிளில் டிரிபிள்ஸ் போகும் போது அன்புவை வீழ்த்துவதை பற்றி பேசிக்கொண்டு போவதை ஒரே ஷாட்டில் எடுத்து இருப்பார்கள், ஒரு கேமராமேனாகவும் ஒரு குறும்பட இயக்குநாராகவும் அதற்க்கு அவர்கள் எவ்வளவு மேனக்கெட்டு இருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகின்றது. ஹெட்ஸ் அப், பிரேம்குமார் இயக்குநர் பாண்டிராஜ்.
முகம் பார்த்து உருவம் பார்த்து முடிவு செய்யும் உலகம் இது. நானும் இந்த கேவலமான எண்ணவோட்டத்துக்கு விதிவிலக்கல்ல, அப்படி உருவம் பார்த்து எடை போட்டு இந்த சமுகம் கஜினி இயக்குநர் முருகதாஸை எப்படி ஒதுக்கியதோ, அது போல் இந்த படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் முதல் பார்வையில் ஒரு வெகுளித்தனமான தோற்றத்தோடே இருந்தார். அவர் எப்படி இப்படி ஒரு சினிமா கொடுக்கப்போகின்றார் என்று அவர் பேட்டி கொடுத்த விதத்தை பார்த்து நான் யோசித்து இருக்கிறேன். வித்தான விதை பாலைவணத்தில் கூட வளர்ந்து விடும் என்பதற்க்கு பசங்க படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் மிகச்சிறந்த உதாரணம்.
நல்ல படத்தை எடுக்க துணிந்த இயக்குநர் தயாரிப்பாளர் சசிக்குமாருக்கும் அந்த வாய்பை மிகச்சரியாக பயண்படுத்திய இயக்குநர் பாண்டிராஜ்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
Category: | |
Language: | |
Time Duration: | 02:20 Hours |
Year of Release: | |
Color: | Colored |
Director: | |
Studio: | |
Cast: | Jeeva, Anbu, Manonmani, Kuttymani, Mangalam, Pakkada |
தியேட்டரில் மஞ்சள் டாப்பும் சின்ன ஸ்கர்ட் போட்டு வந்த பெண்ணை பார்க்க என் மனைவி நீ எந்த ஜென்மத்திலும் திறுந்த போவதில்லை என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
காபி இரண்டு கையில் வாங்கி வந்த போது திறக்க யாரும் இல்லாத காரணத்தால் கதவில் இடித்து 40ரூபாய்க்கு வாங்கிய காபி என் மனைவி உட்கார்ந்த இடத்துக்கு வந்த பேது 37.50 காசு காபியாக மாறிப்போனது.
ஒன்னுக்கு இருக்கும் இடத்தில் ஒருவன் என்னை குறு குறுன்னு பார்த்தான்.பயத்தில் கழுத்து பக்கம் வியர்த்து வெளி வந்தேன்.
சன் காம்யிரர் குருப் படத்துக்கு வந்து அலட்டியது.
என் பக்கத்தில் வர்ஷா என்ற பெண் டிக்கெட் புக் செய்து படத்துக்கு வர வில்லை சோ மூன்று சீட் என் பக்கத்தில் காலியாக இருந்தது வீதியை நினைத்து நொந்தபடி...
பாத்தே தீர வேண்டிய படங்கள் வரிசையில் இன்னும் தமிழில் பல படங்கள் எழுத இருந்த நேரத்தில் இது முந்திக்கொண்டதிற்க்கு இந்த படத்தில் உள்ள சரக்குதான் காரணம்.
நண்பர்கள் படி்த்து ரசித்து விட்டு தமிழ் மணத்திலும், தமிலிஷ்லும் ஓட்டு போடுவது உங்கள் ஜனநாயக கடமை அல்லவா? மறக்காமல் ஓட்டுப்போட்டும், பின்னுட்டம் இட்டும், இன்னும் என்னை மென்மேலும் எழுத உற்சாகப்படுத்துவீர் என்ற நம்பிக்கையுடன்
அன்புடன்/ஜாக்கிசேகர்
படக்கதையை விட உங்க கதை சுவாரஸ்யமா இருக்கே!
ReplyDeleteஜாக்கி அண்ணே... சூப்பரண்ணே...
ReplyDeleteவால்பையன் நன்றி இன்னும் எழுதப்படாத சுவரஸ்யங்கள் நிறைய இருக்கின்றன.
ReplyDeleteநன்றி நகை கடை நைனா, அது என்ன நகைகடை???
ReplyDeleteஜாக்கி படத்தை எந்த தியேட்டரில் பார்தீர்கள்..??? அங்கு நடந்த ருசிகர சம்பவங்கள்..??? தனியாகவா..??? குடும்பத்துடனா..?? என்று எழுதாதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDeleteடிஸ்கியும் போடவில்லை..
நான் இன்னும் படம் பார்க்கலை.. பார்த்துட்டு எழுதுறேன்..
ReplyDeleteதமிழ்மணத்துல குத்திட்டேன்..
உங்கள் பள்ளிக்கால அனுபவங்களையும் சேர்த்து எழுதியது அழகு.. எனக்கும் படம் ரொம்பப பிடித்து இருந்தது...
ReplyDeleteநிஜமாவே அருமையான படம். உங்க பதிவும் பார்வையும் அதைவிட அருமை..
ReplyDeleteநல்லா இருக்கு உங்க விமர்சனம் :))
ReplyDeleteஅட உங்க விமர்சனம் நல்ல இருக்கே..
ReplyDeleteநல்ல விமர்சனம்!
ReplyDeleteஜாக்கி படத்தை எந்த தியேட்டரில் பார்தீர்கள்..??? அங்கு நடந்த ருசிகர சம்பவங்கள்..??? தனியாகவா..??? குடும்பத்துடனா..?? என்று எழுதாதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDeleteடிஸ்கியும் போடவில்லை..---//
படம் பார்த்தது சத்யம் காம்ளெக்ஸ்,மனைவியுடன்தான் படத்துக்கு போனேன்.
தியேட்டரில் மஞ்சள் டாப்பும் சின்ன ஸ்கர்ட் போட்டு வந்த பெண்ணை பார்க்க என் மனைவி நீ எந்த ஜென்மத்திலும் திறுந்த போவதில்லை என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
காபி இரண்டு கையில் வாங்கி வந்த போது திறக்க யாரும் இல்லாத காரணத்தால் கதவில் இடித்து 40ரூபாய்க்கு வாங்கிய காபி என் மனைவி உட்கார்ந்த இடத்துக்கு வந்த பேது 37.50 காசு காபியாக மாறிப்போனது.
ஒன்னுக்கு இருக்கும் இடத்தில் ஒருவன் என்னை குறு குறுன்னு பார்த்தான்.பயத்தில் கழுத்து பக்கம் வியர்த்து வெளி வந்தேன்.
சன் காம்யிரர் குருப் படத்துக்கு வந்து அலட்டியது.
என் பக்கத்தில் வர்ஷா என்ற பெண் டிக்கெட் புக் செய்து படத்துக்கு வர வில்லை சோ மூன்று சீட் என் பக்கத்தில் காலியாக இருந்தது வீதியை நினைத்து நொந்தபடி...
போதுமா? வண்ணத்து பூச்சி
டிஸ்கின்னு போட்டு Tit Bits: அப்படின்னு சேர்த்துட்டா பதிவும் இன்னும் களை கட்டும்.
ReplyDeleteசூப்பர்.
நான் இன்னும் படம் பார்க்கலை.. பார்த்துட்டு எழுதுறேன்..
ReplyDeleteதமிழ்மணத்துல குத்திட்டேன்.
உத நியுட்டன் படத்துக்கு இந்த படம் போயி இருக்கலாம்யா. படம் சூப்பர்
ஓட்டு போட்டதுக்கு நன்றி
உங்கள் பள்ளிக்கால அனுபவங்களையும் சேர்த்து எழுதியது அழகு.. எனக்கும் படம் ரொம்பப பிடித்து இருந்தது...//
ReplyDeleteநன்றி கார்திகை பாண்டியன் மிக்க நன்றி தங்களின் பாராட்டுக்கும்
நிஜமாவே அருமையான படம். உங்க பதிவும் பார்வையும் அதைவிட அருமை..//
ReplyDeleteநன்றி தீப்பெட்டி தாங்கள் கொடுத்து வரும் பேராதரவிற்க்கு
நல்லா இருக்கு உங்க விமர்சனம் :))//
ReplyDeleteநன்றி சுப்பு
அட உங்க விமர்சனம் நல்ல இருக்கே.//
ReplyDeleteநன்றி வெப் ஷாட்
நல்ல விமர்சனம்!//
ReplyDeleteநன்றி ஷென்ஷீ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
//என் பக்கத்தில் வர்ஷா என்ற பெண் டிக்கெட்
ReplyDeleteபுக் செய்து படத்துக்கு வர வில்லை//
எதலாம் நோட் பன்றாரு பாருங்கய்யா?
உங்களை நம்பித்தான் படம் பாக்க போறேண்ணே...
neenga ivlo sollurathaala naan kandippa theatre phioi thaan parkka poaraen......
ReplyDeleteவிமர்சனத்தை விட உங்க அனுபவம் சூப்பரா இருக்கு
ReplyDelete/*ஏம்மா ஐசு இந்த வெயில்ல எனக்கே மூச்சு முட்டுதே, பாவம் அந்த வாயில்லா ... */
ReplyDeleteஹூம்... பாருங்க என்னோட பரிதாப நிலைய, எனக்கு சப்போர்ட்டு பண்ணி பேசுறவரு என்னோட பேரை கூட சொல்ல தடை போட்டிருக்காங்க போலிருக்கு....
சொல்ல வந்ததை சொல்லிருங்க அண்ணே....
ஏம்மா ஐசு இந்த வெயில்ல எனக்கே மூச்சு முட்டுதே, பாவம் அந்த வாயில்லா... நையாண்டி நைனா, அவனை போட்டு இறுக்கி அனைச்சே நசுக்கி கொன்னுராதே என்று
நல்லாருக்கு உங்க விமர்சனம்! உங்க பள்ளி அனுபவங்களையும் படம் நினைவூட்டியதுதான் படத்தின் வெற்றி போல!! :-) உங்கள் தனிக்குறிப்புகள் சுவாரசியம் கூட்டுகிறது, இடுகைக்கு!
ReplyDeleteஉங்க கதைதாங்க டாப்பு ... ;-)
ReplyDeleteneenga ivlo sollurathaala naan kandippa theatre phioi thaan parkka poaraen......//
ReplyDeleteஇவன் கோபி கண்டிப்பா பாருங்க நான் படத்துக்கு நான் கேரண்டி
நன்றி கவிதை காதலன் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
ReplyDelete/
ReplyDeleteவால்பையன் said...
படக்கதையை விட உங்க கதை சுவாரஸ்யமா இருக்கே!
/
yessU
:)))
ஏம்மா ஐசு இந்த வெயில்ல எனக்கே மூச்சு முட்டுதே, பாவம் அந்த வாயில்லா... நையாண்டி நைனா, அவனை போட்டு இறுக்கி அனைச்சே நசுக்கி கொன்னுராதே என்று //
ReplyDeleteநைனா நான் நெனைச்சேன் நீங்க சொல்லி்ட்டிங்க நைனா நன்றி
உங்க கதைதாங்க டாப்பு ... ;-)//
ReplyDeleteநன்றி கடைக்குட்டி
நல்லாருக்கு உங்க விமர்சனம்! உங்க பள்ளி அனுபவங்களையும் படம் நினைவூட்டியதுதான் படத்தின் வெற்றி போல!! :-) உங்கள் தனிக்குறிப்புகள் சுவாரசியம் கூட்டுகிறது, இடுகைக்கு!//
ReplyDeleteநன்றி சந்தனமுல்லை தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும்
வால்பையன் said...
ReplyDeleteபடக்கதையை விட உங்க கதை சுவாரஸ்யமா இருக்கே!
/
yessU//
நன்றி சிவா
உங்கள் விமரிசனம் நன்று .உங்கள் கதையும் நன்றாக உள்ளது
ReplyDeleteமிக நல்ல பதிவு ஜாக்கி
ReplyDelete//முகம் பார்த்து உருவம் பார்த்து முடிவு செய்யும் உலகம் இது//
ReplyDeleteஇந்த வரிகளை ரசித்தேன்.