சென்னையில் ஏன் சத்தியம் தியேட்ட்ர் சிறந்தது...
பத்து வருடத்துக்கு முன் ரிபான்விங்கிள்போல் யாராவது படுத்து தூங்கி இப்போது எழுந்து சத்தியம் தியேட்டர் போனால் அவன் மயக்கம் அடைந்து விழுந்து விடக்கூடும் எந்த இடத்திலும் பழமையை அந்த தியேட்டர் நிர்வாகம் கொஞ்சம் கூட
மிச்சம் வைக்கவில்லை, சம காலத்தில் எல்லா இடத்திலும் புதுமை புகுத்திய ஒரே தியேட்டர் சத்தியம் தியேட்டர்தான்...
முதலில் அடிப்படை வசதியான கழிவறை.
என் வீட்டில் கழிவறை கட்டியதும் நான் சாக்பீசால் என் வீட்டு டாய்லட் சுவற்றில் எழுதிய முதல் வாசகம், உங்கள் வீட்டு டாய்லட்டின் சுத்தத்தை வைத்தே வெளியார் உங்களை மதிப்பிடுவார்கள் ஆகவே டாய்லட்டை சுத்தமாக வைத்து இருங்கள் என்று எழுதி வைத்து இருந்தேன். என்னை பொறுத்தவரை டாய்லட் சுத்தத்துக்காகவே சத்தியம் தியேட்ட்ரில் படம் பார்க்கலாம். அதே போல் ஒவ்வோறு உச்சா போகும் இடத்தின் மேலேயும் ஒரு சின்ன டிவி வைத்து விளம்பரம் படுத்தும் ஒரே தியேட்டர் சத்தியம்தான்.
படம் பார்க்க வரும் எல்லோருமே மனிதர்கள் அவர்கள் ரோபோ அல்ல... என்பதை மற்ற தியேட்டர் நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
இரண்டாவதாக பார்க்கிங்
எனக்கு தெரிந்து சென்னையில் பெரிய ஏரியாவை வாங்கி பார்க்கிங் பர்ப்பசுக்காக வைத்து இருக்கும் ஒரே நிர்வாகம் சத்தியம் நிர்வாகம் மட்டுமே... கார் எடுத்துக்கொண்டு வந்து எங்கே எப்படி பார்க் செய்வது என்று விழி பிதுங்கி நிற்கத்தேவையில்லை. சென்னையில் முதன் முதலில் இரு சக்கர வாகனத்துக்கு பத்து ரூபாய் வசூலித்த முதல் தியேட்டர் சத்தியம் தியேட்டர்தான்.
முன்றாவதாக ஒளி ஒலி
ஆர்டி எக்ஸ் என்ற டிஜிட்டல் புரொஜெக்ஷன் மூலம் படங்கள் திரையிடுவது இந்தியாவிலே சத்யம் தியேட்டர்தான் முதலிடம். டிடிஎஸ் சவுண்டும் மிக அற்புதமாக இருக்கும். ஆங்கில படங்கள் சத்யத்தில் பார்பது என்பது அலாதி பிரியமான விஷயம் எனக்கு .
நன்காவது ஃபயுல் கார்டு
நீங்கள் 300 ரூபாய் கொடுத்து இந்த ஃபயுல் கார்டு வாங்க வேண்டும் அதில் 50ருபாய் ஒரு வருடக் கார்டு கட்டணமாக எடுத்துக்கொள்வார்கள். அதன் பிறகு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் அதன் பிறகு நீங்கள் போன் மூலமாகவும் நெட் மூலமாகவும் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்...
படம் ஓடிக்கொண்டு இருக்கும் போது பாப்கார்னும் கோக்கும் வேண்டும் என்றால் நீங்கள் முன்பே இந்த கார்டு மூலம் புக் செய்து விட்டால் சரியாக அந்த நேரத்துக்கு படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே டார்ச் லைட் அடித்து வந்து உங்கள் சீட்டில் டெலிவரி செய்வார்கள்.
இன்னும் சில சின்ன சின்ன விஷயங்கள்...
மேல் உள்ள தளங்களில் சின்ன பசங்களுக்காக பிளேஸ்டேஷன் வைத்து இருக்கின்றார்கள்.
முதல்தளத்தில இட்லி தோசை கிடைக்கும் வகையில் ரெஸ்ட்டாரண்ட் வைத்து இருக்கின்றார்கள்.
பத்து ரூபாய் டிக்கெட் சீட் தவிர அனைத்தையும் குஷன் சீட்டாக மாற்றி விட்டார்கள் இன்னமும் பத்து ரூபாய் டிக்கெட் கொடுக்கும் ஒரே தியேட்டர் சத்யம்தான்.
(மற்ற தியேட்டர்கள் அதை கொடுத்தாலும் அது முழுக்க பிளாக்கிள்தான் போகும்)
350 சீட் கெப்பாசிட்டி உள்ள தியேட்டரை பெரிய பெரிய குஷன் சீட் வைத்து 250 சீட்டாக குறைத்து விட்டார்கள் அதே போல் நன்றாக இடம் விட்டு சீட்களை அமைத்து இருக்கின்றார்கள் அதனை ஈடுகட்ட ரூபாய் பத்துக்கு பிறகு டிக்கெட் ரேட் ரூபாய் 100, 110,120 என்று ஏற்றி வைத்து இருக்கின்றார்கள்.
சுத்தம் சுத்தம் எங்கும் சுத்தம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் தியேட்டரில் எங்கும் ஒரு சாக்லேட் பேப்பர் கூட பார்க்க முடியாது. காபி வாங்கி வரும் போது கைதவறி காப்பி்கொட்டி ஈ மிக்கும் பேச்சக்கே இடம் இல்லை.
டிக்கெட் கிழித்து உள்ளே போகும் போது வெல்கம்சார் என்று எல்லோருக்கும் சொல்ல தவறுவது இல்லை.
பத்தேகாலுக்கு படம் என்று சொல்லி பத்து பத்துக்கு தியேட்டர் உள்ளே விட்டு, சீட் தேடி உட்காருவதற்க்குள் படம் போட்டு விடும் தியேட்டர்களுக்கு மத்தியில் பத்தேகால் படத்துக்கு பத்து 5க்கு உள்ளே வி்ட்டு மிகச்சரியாக பத்தேகாலுக்கு படம் போடும் ஒரே தியேட்டர் சத்யம்தான்.
ரூல்ஸ் என்பது எல்லோருக்கும் பொது என்பதை சத்யம் நிர்வாகம் செவ்வனே செய்து வருவதை பார்த்து இருக்கிறேன்.
எல்லா சிப்பந்திகளும் எல்லோரிடமும் மிக மரியாதையாய் நடந்து கொள்கிறார்கள் அந்த தியேட்டர் ரூல்ஸ் மீறப்படும் போதுதான் அவர்கள் கோபமாக பேசுகின்றார்கள். எங்கும் சிகெரெட் குடிக்க கூடாது என்பது ரூல் ஆனால், பாத் ரூமில் மறைந்து தம் அடித்தால் கோபம் வருமா? வராதா?
நான் இரண்டு கப் காபி வாங்கி வருகிறேன். ஸ்விங் டோர் என்பதால் சில பேர் போனதும் முடிக்கொள்கின்றது. நான் கதவை திறக்க யார் உதவியை நாடலாம் என்ற யோசித்து நடந்து வருவதற்க்குள் ஒரு சத்யம் கடைநிலை சிப்பந்தி ஓடி வந்து கதவை திறந்து விட்டான் பாருங்கள், அதுதான் சத்தியம். அந்த நிறுவனத்தை மிக நன்றாக நேசிப்பவனால்தான் அதை செய்ய முடியும். (அவனுடைய செயல்தான் இந்த பதிவை எழுத வைத்தது)
கிராமத்தில் டென்ட் கொட்டாயில் படம் பார்த்த நண்பன் சென்னை வந்தால் அவனுக்கு சென்னையை சுற்றி்க்காட்டும் போது அதில் சத்யம் தியேட்டரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்களை எவரும் ஈவ்டீசிங் செய்ய முடியாத படி எல்லா இடத்திலும் சத்தியம் ஆட்கள் இருக்கின்றார்கள்
ஓத்தா, உன் பருப்பை எடுத்துடுவேன் என்று கைலியை தூக்கி கட்டிக்கொண்டு போடும் தியேட்டர் சண்டையை நான் இந்த வளாகத்தில் பார்த்தது இல்லை.
முன்பெல்லாம் படம் ஒடிக்கொண்டு இருக்கும் போது இதே சத்தியத்தில் பின் சீட்டில் இருக்கும் ஒரு கபோதி பச்சக் என்று பான்பராக் எச்சிலை துப்பி வைக்கும் சில நேரங்களில் அதன் சாரல்கள் என் கால்களில் கூட பட்டு இருக்கின்றது. இப்போது அந்த கபோதிகளை சத்தியம் நிர்வாகம் இனம் கண்டு உள்ளே விடுவதே இல்லை.
படம் ஓடும் போது தடிக்கி விழாமல் நடந்து போகும் அளவுக்கு மெல்லிய விளக்கு வெளிச்சம் தியேட்டரின் படிக்கட்டு சீட்டுகளில் வைத்து இருப்பார்கள்.
அதே போல் புதிதாய் வரும் ரசிகனுக்கு எதாவது பிரச்சனை என்றால் அரங்கத்தின் எமெர்ஜென்சி வழியை கம்யுட்டர் கிராபிக்சில் காட்டி வழி எங்கு இருக்கின்றது என்பதை படம் ஆரம்பிக்கும் முன் ஷோவ் ரீலாக போடுகின்றார்கள்.
மக்கள் கூடும் எல்லா நிறுவனத்துக்கும் சமுக பொறுப்பு இருக்கின்றது அதனை நிர்வாகம் உணர்ந்து சத்தியம் தியேட்டரே தயாரித்த எயிட்ஸ் விழிப்புனர்வு விளம்பரபடங்களை படம் போடும் முன் போடுகின்றார்கள் முன்பு ஜனகனமன போட்டார்கள் இப்போது நிறுத்தி விட்டார்கள் ஏன் என்று தெரியவில்லை.
நான் சத்தியம் பக்கம் மூன்று மாதத்துக்கு ஒரு முறைதான் செல்லுவேன் நேற்று கூட நியுட்டன் முன்றாவது வீதி படம் மனைவியோடு பார்க்க சென்றேன். இரண்டு டிக்கெட் 240ரூபாய், பார்க்கிங் பத்து ரூபாய், இரண்டு காப்பி40 ருபாய், ஆக மொத்தம் 290ரூபாய் செலவு செய்து படம் பார்த்தேன்... ஒரு மாச சமையல் கேஸ் அமவுண்ட் கொடுத்து படம் பார்த்து விட்டு வந்ததாகவே என் மனம் சொல்லியது..
( நம்ம எல்லாம் மிடில்கிளாஸ் இல்லை?)
படம் சொல்லிக்கொள்ளும் படி இல்லை...நல்ல திரைக்கதை பட் எஸ்ஜே சூர்யா நடிப்பை பார்த்தால் சிரிப்புதான் வருகின்றது.
எல்லா பணக்கார வீட்டு பிள்ளைகளின் பாக்கெட் மணிதான் சத்யத்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகது அவ்வளவு இளைஞர்கள்...கூட ஒரு ஜீன்ஸ் டிசர்ட் அணிந்த பெண்ணுடன்...
இப்போது தியேட்டரின் சில மைனஸ்கள்...
தியேட்டர் புல்லும் ஏசி என்பதால் 7 ரூபாய் காப்பியை 20 ரூபாய்க்கு விப்பது ரொம்ப ஓவர்.
சமான்ய குடும்பம் சத்யத்தில் படம் பார்க்க ஒரு படத்துக்கு 750 ரூபாய் கொடுக்க வேண்டும்.
டிக்கெட் விலையேற்றத்தை நிர்வாகம் குறைக்க வேண்டும். பர்மா பஜாரில் ஒரு 5,1 டிவிடி 50 ரூபாய் என்பதை சத்யம் நிர்வாகம் உணர வேண்டும்
அவ்வளவுதான் இருப்பினும் இதே அளவுக்கு பணம் பெறும் தியேட்டர்கள் சத்தியம் அளவுக்கு சென்னை வாழ் ரசிகனுக்கு சேவை செய்ய வில்லை என்பதே உண்மை...
குறிப்பு/ எனக்கு கமலா தியேட்டரில் 40 ரூபாய் டிக்கெட்டில் படம் பார்க்கதான் ஆசை.( நம்ம பட்ஜெட் அப்படி) என் மனைவிக்கு சத்யம்தான் பிடிக்கும் காரணம் அந்த தியேட்டரில்தான் அவளால் முழுதிரையையும் பார்க்க முடியும். அதனால்தான் நம்ம சாய்ஸ சத்யம்.
அன்புடன் /ஜாக்கிசேகர்
Labels:
எனது பார்வை
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பதிவு. சத்யத்துக்கு இரண்டாவது கொ ப செ ரெடி.
ReplyDelete(முதல் : கேபிளார்)
நானும் மனதில் நினைத்த + (ப்ளஸ்) களையெல்லாம் எழுதியிருக்கிறீர்கள் :-)))
ReplyDeleteகவர்ச்சிப் படம் கிளிக் செய்தால் பெரிதாவது போல் போடக் கூடாதா?
ReplyDelete//எஸ்ஜே சூர்யா நடிப்பை பார்த்தால் சிரிப்புதான் வருகின்றது.//
ReplyDeleteஎங்கள் தலயை பத்தி தவறுதலாக எழுதியமைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்!
- அகில உலக ஸ் ஜே சூர்யா ரசிகர் மன்றம்
//தியேட்டர் புல்லும் ஏசி என்பதால் 7 ரூபாய் காப்பியை 20 ரூபாய்க்கு விப்பது ரொம்ப ஓவர்.//
ReplyDeleteஎன்னது 20?? இது ரொம்ப அநியாயமா இருக்கு:)
//சமான்ய குடும்பம் சத்யத்தில் படம் பார்க்க ஒரு படத்துக்கு 750 ரூபாய் கொடுக்க வேண்டும்.//
ReplyDeleteநாம் இருவர் நமக்கு ஒருவர்! அப்படின்னு இருந்தால் செலவு மிச்சம் ஆகுமோ? இல்ல...அரசாங்கம் சொல்லுதே.. அதான்...:)
//எல்லா பணக்கார வீட்டு பிள்ளைகளின் பாக்கெட் மணிதான் சத்யித்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகது அவ்வளவு இளைஞர்கள்...கூட ஒரு ஜீன்ஸ் டிசர்ட் அணிந்த பெண்ணுடன்.//
ReplyDeleteஆஹா... எப்படிங்க இப்படி யோசிச்சு எழுதுறீங்க. 'நச்' வரிகள்! ரசித்து படித்தேன்:)
//கிராமத்தில் டென்ட் கொட்டாயில் படம் பார்த்த நண்பன்//
ReplyDeleteஇன்னும் இருக்குதா???
பதிவே அந்த கடைசி குறிப்புக்காகத்தான்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஅவ்வ்வ்வ்...
என்னுடைய பேவரிட் தியேட்டர்.... எப்போதும் சென்னை வந்தால், சத்யத்தை மிஸ் செய்வதேயில்லை.... சில சமயங்களில் பாதி படம் மட்டும் பார்த்து விட்டு ஓடி ரயிலையோ, பஸ்ஸையோ பிடித்து இருக்கின்றேன்.... ஹிட் பாடல்களை படம் முடிந்தவுடன் ரிபீட் செய்வார்கள்....... பெஸ்ட் சவுண்டு சிஸ்டம், ஏசி, சுத்தம் இதுதான் சத்யம்...
ReplyDeleteஅதிக விலை என்பதை தவிர மீதி அனைத்துமே அந்த திரையரங்கில் எனக்கு பிடித்த விஷயமே
ReplyDeleteமுற்றிலும் உண்மை ஜாக்கி.. தியேட்டர்ல நல்லா இல்லைன்னா திட்டுற நாம, நல்ல விசயம் நடந்தா அவ்வளவு சீக்கிரம் பாராட்டுறது இல்லை. அந்த வகையில் நல்ல பதிவு இது.
ReplyDelete//
முன்பு ஜனகனமன போட்டார்கள் இப்போது நிறுத்தி விட்டார்கள் ஏன் என்று தெரியவில்லை
//
அதுக்கான மரியாதை கிடைக்காத இடத்தில அதை போடுறதுல பிரயோஜனம் இல்லைன்னு நெனச்சிருப்பாங்க..
உங்க கவர்ச்சி படம் ரொம்ப ஓவர் .......
ReplyDeleteஉங்க வீ ட்டு தொலை பேசி எண் என்ன ?
/*
ReplyDeleteமுரளிகண்ணன் said...
கவர்ச்சிப் படம் கிளிக் செய்தால் பெரிதாவது போல் போடக் கூடாதா?
*/
அய்யய்யோ.... மருத்துவர் மாத்ருபூதம் வேற "போய்ட்டாரே"...???
ஹலோ..மிஸ்டர் பதிவர்ஸ்....
குட்டு டச்சு, பேட் டச்சு எல்லாம் நடத்துறீங்க...
இங்கே நம்ம கண்ணனையும் கொஞ்சம் கண்டுக்கப்புடாதா???
(கண்ணன் அண்ணே... கோவிசுக்காதீய..... சரியா...)
//நல்ல பதிவு. சத்யத்துக்கு இரண்டாவது கொ ப செ ரெடி.
ReplyDelete(முதல் : கேபிளார்)
//
நான் தான் பர்ஸ்ட்..பர்ஸ்ட்..
சத்தியமா இது தியேட்டர் தாங்க !!!
ReplyDeletesir u should give respect to the theatre staff too. pls correct it. thanx
ReplyDelete>>> நையாண்டி நைனா said... <<
ReplyDelete:-))))))))))))))))))))))))))))
நமக்கு கூட்டம் ஆவாதுங்க அதனால நம்ம எப்பவுமே மாயாஜால் அதுவும் நடுராத்திரி காட்சிதான். எப்ப பார்த்தாலும் கும்பலா இருக்க்க சத்யம் போன கடுப்ப இருக்கு அவனவன் பொண்ணுங்களோட வரான் நம்ம அதுக்கு கடுபானும் எதுக்கு இதல்லாம்
ReplyDeleteநல்ல பதிவு. சத்யத்துக்கு இரண்டாவது கொ ப செ ரெடி.
ReplyDelete(முதல் : கேபிளார்)//
நன்றி முரளி நீங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை நன்றி
நானும் மனதில் நினைத்த + (ப்ளஸ்) களையெல்லாம் எழுதியிருக்கிறீர்கள் :-)))//
ReplyDeleteநன்றி கார்த்தி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
கவர்ச்சிப் படம் கிளிக் செய்தால் பெரிதாவது போல் போடக் கூடாதா?//
ReplyDeleteநல்ல கேள்வி இருக்கறதைதானே போட முடியும் உங்க வீட்டு அம்மாவோட நம்பரை செத்த தரேளா?
//எஸ்ஜே சூர்யா நடிப்பை பார்த்தால் சிரிப்புதான் வருகின்றது.//
ReplyDeleteஎங்கள் தலயை பத்தி தவறுதலாக எழுதியமைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்!
- அகில உலக ஸ் ஜே சூர்யா ரசிகர் மன்றம்//
மன்னிக்கவும் தமிழ் நன்றி
//தியேட்டர் புல்லும் ஏசி என்பதால் 7 ரூபாய் காப்பியை 20 ரூபாய்க்கு விப்பது ரொம்ப ஓவர்.//
ReplyDeleteஎன்னது 20?? இது ரொம்ப அநியாயமா இருக்கு:)//
ரொம்ப ரொம்ப அநியாயம் இந்த காப்பி மதல்ல 15 ரூபாக்கு வித்துச்சு..
//சமான்ய குடும்பம் சத்யத்தில் படம் பார்க்க ஒரு படத்துக்கு 750 ரூபாய் கொடுக்க வேண்டும்.//
ReplyDeleteநாம் இருவர் நமக்கு ஒருவர்! அப்படின்னு இருந்தால் செலவு மிச்சம் ஆகுமோ? இல்ல...அரசாங்கம் சொல்லுதே.. அதான்...:)//
உண்மைதான் சப்போஸ் எங்க குடும்பம் போல எட்டு பேர் இருந்தா என்ன செய்வது?
//எல்லா பணக்கார வீட்டு பிள்ளைகளின் பாக்கெட் மணிதான் சத்யித்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகது அவ்வளவு இளைஞர்கள்...கூட ஒரு ஜீன்ஸ் டிசர்ட் அணிந்த பெண்ணுடன்.//
ReplyDeleteஆஹா... எப்படிங்க இப்படி யோசிச்சு எழுதுறீங்க. 'நச்' வரிகள்! ரசித்து படித்தேன்:)///
நன்றி தமிழ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
//கிராமத்தில் டென்ட் கொட்டாயில் படம் பார்த்த நண்பன்//
ReplyDeleteஇன்னும் இருக்குதா???//
சென்னை ராமாபுரர்ததியே பாலாஜின்னு டென்ட் கொட்டா இன்னம் ஓடுது
பதிவே அந்த கடைசி குறிப்புக்காகத்தான்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஅவ்வ்வ்வ்...//
கண்டுபிடிச்சிட்டியே பூச்சி
என்னுடைய பேவரிட் தியேட்டர்.... எப்போதும் சென்னை வந்தால், சத்யத்தை மிஸ் செய்வதேயில்லை.... சில சமயங்களில் பாதி படம் மட்டும் பார்த்து விட்டு ஓடி ரயிலையோ, பஸ்ஸையோ பிடித்து இருக்கின்றேன்.... ஹிட் பாடல்களை படம் முடிந்தவுடன் ரிபீட் செய்வார்கள்....... பெஸ்ட் சவுண்டு சிஸ்டம், ஏசி, சுத்தம் இதுதான் சத்யம்...//
ReplyDeleteராஜன் நீங்கள் சொல்வது சரி
அதிக விலை என்பதை தவிர மீதி அனைத்துமே அந்த திரையரங்கில் எனக்கு பிடித்த விஷயமே//
ReplyDeleteசரியா சொன்னிங்க டாக்டர்
முற்றிலும் உண்மை ஜாக்கி.. தியேட்டர்ல நல்லா இல்லைன்னா திட்டுற நாம, நல்ல விசயம் நடந்தா அவ்வளவு சீக்கிரம் பாராட்டுறது இல்லை. அந்த வகையில் நல்ல பதிவு இது.
ReplyDelete//
நன்றி வெண்பூ எங்கே போய் வீட்டிர்கள் என் முதல் ரசிகன் நீங்கள்தான், நன்றி
உங்க கவர்ச்சி படம் ரொம்ப ஓவர் .......
ReplyDeleteஉங்க வீ ட்டு தொலை பேசி எண் என்ன ?//
ஏம்மா மலர் குடும்பத்தல கும்திமியடிக்கனும் முடிவு பண்ணிட்டியா?
ஹலோ..மிஸ்டர் பதிவர்ஸ்....
ReplyDeleteகுட்டு டச்சு, பேட் டச்சு எல்லாம் நடத்துறீங்க...
இங்கே நம்ம கண்ணனையும் கொஞ்சம் கண்டுக்கப்புடாதா???
(கண்ணன் அண்ணே... கோவிசுக்காதீய..... சரியா...)//
நீங்க சொல்லறதை சொல்லுங்க யாரு கோவிச்சுக்க போறா? நன்றி நைனா
/நல்ல பதிவு. சத்யத்துக்கு இரண்டாவது கொ ப செ ரெடி.
ReplyDelete(முதல் : கேபிளார்)
//
நான் தான் பர்ஸ்ட்..பர்ஸ்ட்..///
யோவ் நீதான் பர்ஸ்ட் யாரும் இல்லைன்னு சொல்லலை
sir u should give respect to the theatre staff too. pls correct it. thanx//
ReplyDeleteநன்றி தாஸ் சரி செய்கிறேன்
>>> நையாண்டி நைனா said... <<
ReplyDelete:-))))))))))))))))))))))))))))//
நன்றி யாத்ரீகன்
நமக்கு கூட்டம் ஆவாதுங்க அதனால நம்ம எப்பவுமே மாயாஜால் அதுவும் நடுராத்திரி காட்சிதான். எப்ப பார்த்தாலும் கும்பலா இருக்க்க சத்யம் போன கடுப்ப இருக்கு அவனவன் பொண்ணுங்களோட வரான் நம்ம அதுக்கு கடுபானும் எதுக்கு இதல்லாம்//
ReplyDeleteதலைவரே உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம்னு நினைக்கிறேன்...
நல்லா எழுதியிருக்கீங்க...சத்யம் தியேட்டர் என்னோட ஃபேவரிட்-டும் கூட!
ReplyDeleteபதிவு நன்றாக இருக்கிறது ஜாக்கிசேகர்
ReplyDeleteமதுரவாயல்
அண்ணே
ReplyDeleteநாளைக்கு ஐநாக்ஸ் பற்றி நான் எழுதறேன்
நல்லா எழுதியிருக்கீங்க...சத்யம் தியேட்டர் என்னோட ஃபேவரிட்-டும் கூட!-// நன்றி சந்தன முல்லை மிக்க நன்றி தங்கள் பதிலுரைக்கு
ReplyDeleteஅண்ணே
ReplyDeleteநாளைக்கு ஐநாக்ஸ் பற்றி நான் எழுதறேன்//
நன்றி பிஸ்கோத்து பயல் சிறப்பாக எழுத என் வாழ்த்துகள்
பதிவு நன்றாக இருக்கிறது ஜாக்கிசேகர்
ReplyDeleteமதுரவாயல்//
நன்றி வடிவேலன் நீங்கள் என் வீட்டு அருகில்தான் இருக்கின்றீர்கள்
//தலைவரே உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம்னு நினைக்கிறேன்...//
ReplyDeleteappadilaam illanga, kootam na konjam alargy athaan... jollya oru drive appuram relaxa oru padam athukku mayajaal super idam.
satyam la naanum padam paarppen ana kootathulayum, parkking kum, citykulla dirve pannarathukkum kaduppa irukkum.
thaalvu manappaanmai ithula ennganga vanthuchu?? enga savugariyama irukko anga pona athukku per thaalvu manappanmaiya?
thaalvu manappaanmai ithula ennganga vanthuchu?? enga savugariyama irukko anga pona athukku per thaalvu manappanmaiya?//
ReplyDeleteதலைவரே மன்னிக்கவும் அந்த வார்த்தையை பயன் படுத்தியமைக்கு உங்களுக்க ஒன்று தெரியுமா? என் ஊரில் என்னை தன்ஸ் என்றே கூப்பிடுவார்கள்
அருமையான பதிவு.
ReplyDeleteவிலை சற்றே அதிகம் என்றாலும், மாதம் ஒரு முறை சத்யம் செல்லாமல் இருப்பதில்லை.