நீங்கள் வேலை செய்த நிறுவனத்தை எப்போதாவது நேசித்து இருக்கின்றீர்களா?

நான் நேசித்து இருக்கிறேன், நீங்கள் இதுவரை எந்த வேலையெல்லாம் செய்து இருக்கின்றீர்கள். சிலருக்கு படித்து முடித்து குடும்ப நண்பர் சிபாரிசில் ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போய் அந்த வேலையில் காலம் முழுவதும் உழல்வது ஒரு வகை...இன்னொன்று அரசாங்க வேலைக்கு போய் காலம் முழுவதும் உழல்வது ஒரு வகை. அல்லது அப்பா வாங்கி கொடுத்த அல்லது வைத்துக்கொடுத்த கடையில் மூளையை உபயோகித்து முன்னேறுவது ஒரு வகை.
அல்லது அப்பா வைத்து இருந்த தொழிலில் அளுங்காமல் குலுங்காமல் வந்து சீட்டில் உட்கார்ந்து முகேஷ் அம்பானி டைரக்டர் என்று போர்டு போட்டுக்கொள்வது ஒரு வகை.

படிப்பும் இல்லை, சொந்த பந்தங்கள் உதவ ஆள் இல்லை, கோபம் மூக்குமேல் வரும்,அப்பாவுடன் உள்ள பாசம் என்பது அக்னி நட்சத்திரம் கார்த்திக்,பிரபு போல் என்றால் எப்படி முன்னேறுவது...

ஒரு காலத்தில் நான் எப்படி முன்னேற போகிறேன் என்று யோசித்து மண்டை காய்ந்து இருக்கின்றேன். ஆனால் இந்த உலகில் தனிதன்மையாய் வாழ வேண்டும் பத்து பேர் இருக்கும் கூட்டத்தில் அதோ ஜாக்கி என்ற அடையாளப்பட வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது

நான் இதுவரை வேலை செய்த இடங்கள்...

1.நகை கடையில் கவுண்டர் சேல்ஸ்..
2.நகை டிசைன் வெட்ட வைர ஊசி செய்யும் வேலை.
3.வெல்டிங் கடையில் வெல்டர் வேலை
4. சித்தாள் வேலை
5.செருப்புக்கடையில் வேலை.
6.வீடியோ லைப்பேரரியில் வேலை
7.கடலூர் கமலம் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை.
8.ஒரு வருடம் கடலூரில் ஆட்டோ ஓட்டுநர்.
9.பறக்கும் ரயில் பாதையில் கம்பி பிட்டிங்வேலை
10. பறக்கும் ரயில் பைலிங் ஒர்க்.
11.சென்னை கடற்கரை காந்தி சிலை பின் உள்ள சாகர் ஓட்டலில் சர்வர் வேலை
12.எல்ஐசி எதிரில் செக்யூரிட்டி வேலை.
13.மவுன்ட் ரோடு நிர்மலாதக்ஷன் ஓட்டல் அருகில் பீடா கடையில் வேலை.
14,தேவி, அலங்கார் தீயேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் விற்க்கும் வேலை.
15.லூனா டிரைவராக ஒரு வருடம்.
16.மாருதி காருக்கு டிரைவராக...சைடில் வால் பேப்பர் ஒட்டுவது..
17. பாண்டி, கடலூர் பகுதிகளில் ஐந்து வீடியோக்கடையில் கேமரா மேனாக 4 வருடங்கள்..
18.சென்னை வடபழனி கிரீன் லேண்ட் வாட்டர் சர் வீஸ் கடையில் சில நாட்கள்.
19. சென்ளை சரவண வீடடியோ சென்டர் இரண்டு வருடங்கள்
20கேமராமேன் டீஎஸ் விநாயகம் கேமாராவில் கேமரா அசிஸ்டென்டாக ஒன்றரை வருடம்
21,சென்னை எஸ்எஸ் மீடியாவில் ஒரு வருடம்.
22.கேமராமேன் பால முரளியிடம் அசிஸ்டென்ட் கேமராமேனாக இரண்டு வருடங்கள்...
23.எப்டிடிவி எனும் நிறுவனத்தில் கேமரா மேனாக வேலை.
24. சைடில் திருமணத்துக்கு போட்டோ எடுப்பது ,
25பூக்கடையில் வேலை
25.நான் ஒரு குறும்பட இயக்குநர் முதல்படம் துளிர் மாநில அளவில் நடந்த போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. என்று இப்படியாக நம் கதை ஓடியது விடுபட்டவை நிறைய......
இப்படியாகத்தான் என் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது, எந்த இடத்திலும் மிக நீண்ட நாட்கள் நீடித்தது இல்லை.
காரணம் நான் செய்யும் வேலையை ரசித்து செய்வேன்,நான் வேலை செய்யும் நிறுவனத்தை நேசிக்க மாட்டேன் அது நம் வளர்ச்சியை தடை படுத்தும் என்ற எங்கோ படித்தஞாபகம். அப்படி இருந்த நான் நான்கு வருடம் ஒரு கல்லூரியை நேசித்த கதை இங்கே...

நான் ஜீசஸ் கால்சில் பிரிலான்சராக கேமரமேன் வேலை செய்த போது சென்னை இந்துஸ்தான் கல்லூரியில் (கேளம்பாக்கம்) எலக்ட்ரானிக் மீடியா வீஷுவல் கம்யுனி்கேஷன் பசங்களுக்கு கேமரா பற்றி பிராக்டிக்கல் வகுப்பு எடுக்க ரெகுலராக வர வேண்டும், வர முடியுமா என்றார்கள்? நான் வேலையில் சேர்ந்தேன்,

நான் கேமரா மேனாக இருந்ததால் நேற்று ஐதராபாத்தி்ல் இருந்தால் இன்று மதுரையில் இருப்பேன். அதற்க்கு அடுத்த நாள் பெங்களுர் என்ற ஊர் சுற்றி வாழ்க்கை வாழ்ந்தவனை காலை 9 மணி மாலை4 மணி என்ற வேலையில் முதலில் செட்டாக மிகவும் சிரமப்பட்டேன்.


பத்தாவது படித்து விட்டு,காலேஜ் வாழ்க்கையை பற்றி சினிமாவில் மட்டுமே ரசித்த எனக்கு காலேஜ் வாழ்க்கை மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது. எனக்கு அப்போதே எட்டாயிரம் சம்பளம் தந்தார்கள். இதற்க்கு முன் நான் செய்த வேலைகக்கும் கல்லூரி வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது.

இதுவரை கோத்தா கொம்மா என்று பேசி பழகிவிட்டு கல்லூரியில் சார் போட்டு ஆரம்பத்தில் பேச ரொம்ப சிரமமாக இருந்தது. என் இயற்பெயர் தனசேகரன்.

நான் இருப்பது தெரியாமல் தனசேகரன் சார் எங்கே என்று கேட்க, தனசேகரன் சார் மீடியா டிப்பார்ட்மென்டில் இருப்பதாக சொல்ல எனக்கு மயக்கமே வந்து விட்டது. என்னை சார் என்று அழைத்த போது காலடியில் பூமி நழுவவது போல் ஒரு பிரமை.

நான் வாத்தியாராக போய் கிளாஸ் எடுத்தது, மாணவர்கள் என் மேல் கொண்ட பாசம் , மாணவிகள் என்மேல்காட்டிய தனிப்பட்ட பாசங்கள், மதிக்கத்தக்க நபராகவும் கலகலகப்பான மனிதராக அந்த கல்லூரி வளாகத்தில அறியப்பட்டது, கம்யூட்டர் பற்றிய சிறிய அறிவு, கொஞ்சம் ஆங்கில அறிவு, என்னோடு பழகிய லெக்சரர்கள் என்று, நான் இந்துஸ்தான் கல்லூரியில் நிறைய கற்றக்கொண்டு இருக்கின்றேன்.நிறைய சோகங்கள், நிறைய மகிழ்ச்சிகள், நிறைய மாணவ மாணவர்களின் வெற்றி தோல்விக்ள், காதலில் விழுந்து எழுந்தவர்கள் என்ற அதை பற்றி எழுத ஒரு ஜென்மம் போதாது..

பத்தாவது படித்து விட்டு இந்த கல்லூரிக்கு வேலைக்கு போனேன். எல்லோரும் படித்தவர்கள் என்பதால் நான் மட்டும் பத்தாவது . அதாவது பத்தாவது படித்து விட்டு எப்படி பத்தாயிரம் சம்பளம் வாங்கலாம் என்ற மனக்கேள்வி என்னை சுற்றி சிலரிடம் இருக்க செய்தது.அதனால் நான் அஞ்சல் வழியில் பிஏ சோசியாலஜீ படித்தேன்,அதன் பிறகு இப்போது எம்ஏ மாஸ்கம்யுனிக்கேஷன் ஜெர்னலிசம் முதல் வருடம் பாஸ் செய்து இரண்டாம் வருட தேர்வு எழுத காத்து இருக்கின்றேன், நான் செகன்ட் இயர் பசங்களுக்கு டியுட்டராக வேறு இருந்தேன்.
கல்லூரி காலங்கள் வசந்தமானவை,பசங்களோடு பழகி என்னை இளமையானவனாக உற்சாகப்படுத்தியது. நான் பல விஷயங்களை என் மாணவ செல்வங்களிடம் இருந்து கற்றுக்கொண்டு இருக்கின்றேன், எனக்கு தெரிந்ததை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து இருக்கி்றேன். ஆட்டோ ஓட்டும் போது காதலித்த பெண்ணை பத்துவருடங்களுக்கு பிறகு வாத்தியாராக மாறி இந்த கல்லூரியில் வேலை செய்த போது தான் மணந்தேன். திருமணம் முடிந்து ஆறுமாதங்கள் ஆகின்றது.

என் மேல் பாசம் கொண்ட மனிதர்கள் எத்தனை எத்தனை பேர். ஒருவர் பேர் எழுதினாலும் மற்றவர் வருத்தப்டுவர் அதனால் தவிர்க்கின்றேன். எவ்வளவோ இடத்தில் வேலை செய்தாலும் இந்த கல்லூரி வேலையை என்னால் மறக்க முடியாது...

லாஸ்ட் பன்ச்.இன்றிலிருந்து மிகச்ரியாக 23 நாளுக்கு முன் கல்லூரிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை துண்டித்துக்கொண்டேன். என் வேலையை ராஜீனாமா செய்து விட்டேன் .காரணம் ரொம்ப தூரம். பஸ் பயணத்தில் பாதி நேரம் போய்விடுகின்றது. இப்போது எதாவது சேனலில் கேமரா மேன் வேலை தேடிக்கொண்டு இருக்கன்றேன்.

எல்லோரும் சொன்னார்கள் எப்போதும் எதாவது வேலை தேடிக்கொண்டுதான் அந்த வேலையை விட வேண்டும் என்று நான் மேலே எவ்வளவு வேலை செய்து இருக்கின்றேன் என்று உங்களுக்கு தெரியும். நான் எப்போதும் ஒரு வேலை தேடி அது கிடைத்ததும் செய்த வேலைவிட்டது இல்லை.
ஏன் என்றால் நான் செய்யும் வேலையை நேசிக்கின்றேன் நிறுவனத்தை அல்ல..

அன்புடன்/ஜாக்கிசேகர்


குறிப்பு)
உங்களுக்கு நான் எழுதியது பிடித்து இருந்தால் தமிழ்மணத்திலும் தமிளிஷ்லிம் ஓட்டு போடவும் பின்னுட்டம் இடவும் மறவாதீர்

43 comments:

 1. //நான் செய்யும் வேலையை நேசிக்கின்றேன் நிறுவனத்தை அல்ல..//

  இது அனைவருக்கும் பொருந்தும். நிறுவனத்தை நேசித்தால் முன்னேற்றம் என்பது குறைந்த அளவிலே இருக்கும்..

  நீங்கள் கூறுவது முற்றிலும் சரி

  ReplyDelete
 2. ஜாக்கி சார்,

  இந்த பதிவ படிச்சதுக்கு அப்புறம் உங்க மேல மரியாதை கூடீட்டே போகுதுங்க!!

  பூக்கடை, சித்தாள், ப்ளாக் டிக்கட் விக்கறதுனு இருந்த நீங்க, இந்த அளவிற்கு வந்திருக்கீங்கங்கறது ஒரு பெரிய விசயம்!!

  பத்தாவது தான் படிச்சிருக்கோம்னு நினைக்கறவங்களுக்கு எல்லம் நீங்க ஒரு எடுத்துக்காட்டு. என்ன பொருத்த வரை முயற்சி, விடாமுயற்சிக்கு இந்த பதிவை பரிந்துரை செய்யாலாம்னு இருக்கேன்!!

  இன்னிலிருந்து உங்களுக்கு இன்னோரு விசிறி!! ( நான் தாங்க அது)

  நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்துட்டுப் போங்க :)

  ReplyDelete
 3. /ஒருவர் பேர் எழுதினாலும் மற்றவர் வருத்தப்டுவர்/
  இதுலயே உங்க பக்குவம் புரியுது!

  /காதலித்த பெண்ணை பத்துவருடங்களுக்கு பிறகு மணந்தேன்/
  இதுலயே உங்க தன்நம்பிக்கை தெரியுது!

  //நான் இதுவரை வேலை செய்த இடங்கள்...1 - 25ல//
  இதுலயே உங்க விடாமுயற்சி தெரியுது!


  //எதாவது வேலை தேடிக்கொண்டுதான் அந்த வேலையை விட வேண்டும்//
  இதுலயே உங்க நல்ல எதிர்காலம் என் கண்னுக்கு தெரியுது!

  என் வாழ்கையை புரட்டி பார்த்த மாதிரி இருந்தது..
  நீங்க சொன்ன வேலையில பாதி வேலை நானும் செஞ்சிருக்கேன்!
  அத நான் சொன்னா ரிப்பீட்டாயிடும்!

  ReplyDelete
 4. தன்னம்பிகையின் மறு பெயர் ஜாக்கி. இது பழகியவர்க்ளுக்கு எப்போதே தெரியும். இப்போது அனைவருக்கும் தெரியும்.

  கடந்த இரண்டு வாரமா தொடர்ந்து பதிவா போட்டு தள்ள்ளும்போதே நினைத்தேன்.

  அன்றே சொன்னது.. நடந்து விட்டது போல என்று.

  புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. இது அனைவருக்கும் பொருந்தும். நிறுவனத்தை நேசித்தால் முன்னேற்றம் என்பது குறைந்த அளவிலே இருக்கும்..

  நீங்கள் கூறுவது முற்றிலும் சரி--//

  நன்றி கிரி தொடர்ந்து என் பதிவை வாசிப்பதற்க்கு

  ReplyDelete
 6. நன்றி செந்தில் மிக்க நன்றி கண்டிப்பாக வந்து படிக்கின்றேன்

  ReplyDelete
 7. /ஒருவர் பேர் எழுதினாலும் மற்றவர் வருத்தப்டுவர்/
  இதுலயே உங்க பக்குவம் புரியுது!

  /காதலித்த பெண்ணை பத்துவருடங்களுக்கு பிறகு மணந்தேன்/
  இதுலயே உங்க தன்நம்பிக்கை தெரியுது!

  //நான் இதுவரை வேலை செய்த இடங்கள்...1 - 25ல//
  இதுலயே உங்க விடாமுயற்சி தெரியுது!


  //எதாவது வேலை தேடிக்கொண்டுதான் அந்த வேலையை விட வேண்டும்//
  இதுலயே உங்க நல்ல எதிர்காலம் என் கண்னுக்கு தெரியுது!


  நன்றி கலை என்னை ரசித்து பின்னுட்டம் இட்டதற்க்கு

  ReplyDelete
 8. தன்னம்பிகையின் மறு பெயர் ஜாக்கி. இது பழகியவர்க்ளுக்கு எப்போதே தெரியும். இப்போது அனைவருக்கும் தெரியும்.

  கடந்த இரண்டு வாரமா தொடர்ந்து பதிவா போட்டு தள்ள்ளும்போதே நினைத்தேன்.

  அன்றே சொன்னது.. நடந்து விட்டது போல என்று.

  புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துகள்.//

  நன்றி வண்ணத்து பூச்சி தங்கள் தொடர் ஆதரவுக்கு என் நன்றிகள்

  ReplyDelete
 9. பதிவர் சந்திப்பின் போது நீங்கள் சொன்னதை நல்ல பதிவாகவும் தந்துவிட்டீர்கள். கடந்த காலம் பற்றிய துணிச்சலான,நேர்மையான வெளிப்பாடு.

  ஸ்ரீ....

  ReplyDelete
 10. துணிச்சலான முயற்சி.....ஜாக்கி வாழ்த்துகள்

  ReplyDelete
 11. பதிவு அருமை ஜாக்கயே, உங்கள் வாழ்க்கையை, மேடு பள்ளங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  சீக்கிரம் உங்கள் மனதிற்கு பிடித்த வேலை, நிறுவனம் இரண்டும் கிடைத்து மகிழ்வுடன் எப்போதும் இருக்க வாழ்கத்துக்கள்.

  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 12. உண்மையில் மனதிற்கு பிடித்த உயர் அதிகாரி கிடைப்பதுதான் அரிது.

  பெரும்பாலும் ஊழியர்கள் நிறுவனத்தை பிடிக்காமல் வேலை மாறுவது இல்லை, தன உயர் அதிகாரி பிடிக்காமல் தான் வேலை மாறுவதே.

  (people dont leave thei job or company, they leave their immediate Boss)

  உங்களுக்கும் அடுத்து கிடைக்க இருக்கும் வேளையில் நல்ல உயர் அதிகாரியும், நல்ல சக ஊழியர்களும் கிடைக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. பதிவர் சந்திப்பின் போது நீங்கள் சொன்னதை நல்ல பதிவாகவும் தந்துவிட்டீர்கள். கடந்த காலம் பற்றிய துணிச்சலான,நேர்மையான வெளிப்பாடு.

  நன்றி ஸ்ரீ. மிக்க நன்றி தங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு

  ReplyDelete
 14. :-)

  வாழ்த்துகள்!//

  நன்றி லக்கி உங்கள் தொடர் வாசிப்புக்கு

  ReplyDelete
 15. துணிச்சலான முயற்சி.....ஜாக்கி வாழ்த்துகள்//

  நன்றி கதிர் தங்கள் பாராட்டுக்கு

  ReplyDelete
 16. பதிவு அருமை ஜாக்கயே, உங்கள் வாழ்க்கையை, மேடு பள்ளங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  சீக்கிரம் உங்கள் மனதிற்கு பிடித்த வேலை, நிறுவனம் இரண்டும் கிடைத்து மகிழ்வுடன் எப்போதும் இருக்க வாழ்கத்துக்கள்.

  நன்றி குப்பன்_யாஹூ தங்கள் விரிவான பாராட்டுககு

  ReplyDelete
 17. பதிவு அருமை ஜாக்கயே, உங்கள் வாழ்க்கையை, மேடு பள்ளங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  சீக்கிரம் உங்கள் மனதிற்கு பிடித்த வேலை, நிறுவனம் இரண்டும் கிடைத்து மகிழ்வுடன் எப்போதும் இருக்க வாழ்கத்துக்கள்.//

  குப்பன் நீங்கள் சொன்ன காரணம் உண்மைதான், பல வருத்தங்கள் இருந்தாலும் அதை வெளியே சொல்ல முடியாது . இருப்பினும் எல்லாம் கத்துக் கொடுத்த கல்லூரி அது.

  ReplyDelete
 18. மொத்தத்திலே நீங்க ஒரு All rounder!!! ok va???

  ReplyDelete
 19. அண்ணாச்சி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. எல்லாதுறையிலும் கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க :)))

  ReplyDelete
 21. //ஒரு காலத்தில் நான் எப்படி முன்னேற போகிறேன் என்று யோசித்து மண்டை காய்ந்து இருக்கின்றேன். ஆனால் இந்த உலகில் தனித்ன்மையாய் வாழ வேண்டும் பத்து பேர் இருக்கும் கூட்டத்தில் அதோ ஜாக்கி என்ற அடையாளப்பட வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது
  //

  -:)


  பிடித்தவேலை விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. வணக்கம் ஜாக்கி
  தான் யாருன்னு மனம் புரிஞ்சுகிட்டா வாழ்கை பயணம் இனிமையானதுன்னு ஜென் துறவி தத்துவம்.

  வழக்கம் போல் இந்த பதிவும் சிறப்பாக இருந்தது.

  கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல வேலை அமைய இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 23. Hi,
  I really appreciate your confidence, more than that your frankness. Wish you the very best. Im sure the almighty will guide you to a brighter future>

  ReplyDelete
 24. மொத்தத்திலே நீங்க ஒரு All rounder!!! ok va???--//

  நன்றி அருனா தங்கள் பாராட்டுக்கு, அப்படி எல்லாம் ஆல்ரவுண்டர் என்று சொல்ல முடியாது. நான் எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் அவ்வளவே

  ReplyDelete
 25. எல்லாதுறையிலும் கலந்துகட்டி அடிச்சிருக்கீங்க :)))

  நன்றி மங்களுர் சிவா என்ன செய்றது வயித்து பொழப்பு...

  ReplyDelete
 26. பிடித்தவேலை விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்//

  நன்றி பித்தன் தங்கள் இதய பூர்வமான வாழ்த்துக்களுக்கு

  ReplyDelete
 27. வணக்கம் ஜாக்கி
  தான் யாருன்னு மனம் புரிஞ்சுகிட்டா வாழ்கை பயணம் இனிமையானதுன்னு ஜென் துறவி தத்துவம்.

  வழக்கம் போல் இந்த பதிவும் சிறப்பாக இருந்தது.//

  நன்றி சிவா தங்கள் தொடர் பின்னுட்டத்திற்க்கும், இதயம் கனிந்த வாழ்த்துக்கும்

  ReplyDelete
 28. Hi,
  I really appreciate your confidence, more than that your frankness. Wish you the very best. Im sure the almighty will guide you to a brighter future>//

  நன்றி அழகன் முகம் தெரியாத உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் என்னை மேலும் செம்மை படுததும்

  ReplyDelete
 29. சூப்பருங்க... எத்தனை வேலைகள்... நீங்க உண்மையிலேயே பெரிய ஆளுதான்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 30. அண்ணே என்னை பத்தி எழுதன மாதிரி இருக்கு

  ReplyDelete
 31. //மாணவிகள் என்மேல்காட்டிய தனிப்பட்ட பாசங்கள்//

  ம்.....!

  உங்கள சந்திக்கணும் சார்!

  ReplyDelete
 32. thanks saravana kumar and biskothupayal

  ReplyDelete
 33. Ungalin list partha piragu.... Nan mattum illai periya allunga ellarum appadi than nu purunjikittan

  ReplyDelete
 34. உங்களின் தன்னம்பிக்கையை வணங்குகிறேன்.

  பிடித்த பணி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
 35. உங்களின் பதிவை படித்தவுடன் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன. இன்று எனக்கு 58வயது. 1968 ல் காலில் செருப்புகூட இல்லாமல் வந்தது ஞாபகம் வருகின்றது.நானும் அந்தக்காலத்தில் கடையில் வேலை,லாட்டரி டிக்கட் விற்றது,ஓட்டல் சர்வர்,சாரயக்கடை, எல்.அய்.சி,தாலுகா அலுவலகத்தில் கிளார்க்(76 எமெர்ஜென்ஸியின்போது) பின்னர் நாடோடிமன்னன், மினிஸ்டார்,விசிறி,நாவலர் அவர்களின் மன்றம்,போன்ற, பத்திக்கைகளில் வேலை செய்தது.பின்னர் அரசு போக்குவரத்தில் நடத்துனர் பணி. அன்று முடிவு செய்தேன். நான் பட்ட துன்பங்களை என் பிள்ளைகள் படக்கூடாது என்று.இன்று எனது மகன்கள் இருவரும் கணீனி மென்பொருள் வல்லுநர்களாக உள்ளனர்.
  ந்ன்றி
  அன்புடன்
  மதி

  ReplyDelete
 36. என்ன சொல்வதென்றே தெரியலை ஜாக்கி.

  உங்கள் வாழ்க்கையும் அனுபவமும் தனித்துவமானது.

  தயங்காம அடிச்சி ஆடுங்க. நல்லா வாங்க.

  என்றென்றும் வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 37. arumai.. varthaigal illai..

  ReplyDelete
 38. பத்தாவது மட்டும் படித்தால் என்ன?! அனுபவ பாடம் நிறையவே படித்திருக்கிறீர்கள்.உங்கள் காதல் கதையையும் கொஞ்சம் எழுதலாமே.???

  ReplyDelete
 39. உங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner