கொல்லூர் முகாம்பிகையும் கூடஜாதிரி ஆபத்தான மலைபயணமும்.
போன மாதம் என் மனைவியின் நண்பி திருமணம் கேரளாவில் உள்ள கன்னூரில் நடை பெற்றது. அங்கேயிருந்து எனது மாமியாரின் நெடுநாள் ஆசையை பூர்த்தி செய்ய கொல்லூர் முகாம்பிகை கோவிலுக்கு பயணப்பட்டோம்.
கொல்லூர் மூகாம்பிகை கோவில் எம்ஜியார் ஆட்சிகாலத்தில் ரொம்பவும் பிரபலம்.
நான் போனதில்லை இப்போதுதான் முதன் முறையாக சென்றேன்.
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ஆண்களை அரை நிர்வாணப்படுத்திய பிறகே அம்பாளை சேவிக்கவைத்தார்கள், கூட்டடத்தில் ஒரு பதினாறு வயசு பெண் என் பின் பக்கம் வந்து என் வெற்று முதுகை உரசியது. அம்பாளை மழுமனதோடு தரிசனம் செய்ய முடியுமா என்ற பயம் வந்தது.நல்ல வேளை அந்த பெண்ணின் அப்பா எனக்கு முன்னால் வந்து நின்றுநான் முழு ஈடுப்பாட்டுடன் கவனம் சிதறாமல் சாமி கும்பிட வழி செய்தார்.
கொல்லூர் மூகாம்பிகை கோவிலை விட பக்கத்தில் மலை மேல் இருக்கும் கூடஜாதிரி மலை மேல் இருக்கும் கோவில் தரிசனத்தின் மேல்தான் எனக்கு ஆவல் அதிகமாக இருந்தது. அங்கு என்ன சாமி இருக்கின்றது என்று இப்போது கேட்டாலும் தெரியாது?
கோவிலில் இருந்து கூடஜாதிரி மலைக்கு போக ஜீப் மட்டுமே போகும் ஒரு ஆளுக்கு 175 ரூபாய் என்றார்கள். காரெல்லாம் போகாது என்றார்கள். நாங்கள் தனியாக ஜீப்பை வாடகைக்கு அமர்த்தி் சென்றோம்.
20 கிலோமீட்டர் வரை ஒரு சாதாரன மலைப்பதையாகவே இருந்து அதன் பிறகு ரோடு இல்லை அடுத்த 20 கீலோமீட்டருக்கு ,வெறும் பாறைகளின் மேல் ஜீப்பை ஓட்டுகின்றார்கள்.. வயதானவர்கள் அழைத்து போனால் பாதி வழியில் மோட்சம் போக வேண்டியதுதான்.
இவ்வளவு ஏன் அதிக வரதட்சனை கேட்டு சண்டித்தனம் பண்னும் மாப்பிள்ளைகளை கோவிலுக்கு வேண்டுத்ல் என்று அழைத்து வந்து பெண்டு நிமித்தலாம்.
மேலே போவதற்க்குள் வாந்தி நிச்சயம். வளைந்த செல்லும் பாறை பாதைகளில் அங்கு ஜீப் ஓட்டும் டிரைவர்கள் மிக அநாயாசமாக வண்டி ஓட்டுகின்றார்கள். ரொடு இல்லாத பாறைகளின் மேல் ஜீப்பை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஏற்றுகின்றார்கள்.
நான் மட்டும் அந்த ஜீப்பாக இருந்து இருந்தால் டிரைவர் மூஞ்சியில் காரி துப்பி போடாங் கோத்தா என்று திட்டி இருப்பேன். 40 கிலோமீட்டருக்கு 175 ரூபாய் ஒருவருக்கு என்ற போதே என்க்கு பொறி தட்டியது.
நிச்சயமாக பைக்கில் அங்கு போக முடியாது ஸ்கார்பியோ கார் போகும் ஆனால் வண்டி கலகலத்துவிடும். மாலை மேலே இரண்டு கோவில்கள் இரக்கின்றன அங்கே போகவும் ரொடு கிடையாது செங்குத்தான மலை பாதையில் தடவி தடவிதான் ஏற வேண்டும்..
திரும்ப ஜீப்பில் கிழே வந்தால் எவெரஸ்ட் போன அலுப்பு உங்களிடம் குடி கொண்டு இருக்கும். அதே போல் வரும் போது வாந்தி நிச்சயம்.மூகாம்பிகை சேவித்து விட்டு கூடாதிரி போன அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். பதிவர்களில் சட்டேன போய் அந்த பயணத்தை அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு தெரிந்து மங்களுர் சிவாவுக்கு மட்டுமே உண்டு அங்கிருந்து கொல்லூர் கோவில் 2அரை மணிநேர பயணம்...
ஒரு கரடு முரடான2 மணி நேர காட்டு பயணத்துக்குஅன்மிக போர்வையில் தயாராகுங்கள் .
அன்புடன் /ஜாக்கிசேகர்
Labels:
பயணஅனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
//நல்ல வேளை அந்த பெண்ணின் அப்பா எனக்கு முன்னால் வந்து நின்றுநான் முழு ஈடுப்பாட்டுடன் கவனம் சிதறாமல் சாமி கும்பிட வழி செய்தார்.//
ReplyDelete:)
வர வர ஒரே ரவுண்டிங்லயே இருக்கற மாதிரி இருக்கு... ஊட்டி போறாராமாம்? கோயிலுக்கு போறாராமாம்...?
ReplyDeleteஅடுத்த டிரிப் எங்க?
ஆல் த பெஸ்ட்
நித்யன்
சுத்துங்க.. சுத்துங்க..
ReplyDeleteஎவ்வளவு முடியுமோ சுத்துங்க!
எங்க சார்பா வாழ்த்துக்கள்
(நற..நற)
மங்களூர் வந்துட்டு ஒரு போன்கூட செய்யாம போனதுக்கு செம கடுப்புலதான் இருக்கேன்.
ReplyDeleteகொல்லூர் பலதடவை பைக்ல போன அனுபவம் இருக்கு.
ReplyDeleteகுடசாத்ரி ஜீப்ல ஒரு தடவை போயிருக்கேன். மனைவியை இனிமேதான் அழைச்சிட்டு போகனும்
:))))))))
கோவில்களில் ஆண்களுக்கு அரைநிர்வாணத்தில்தான் தெய்வ தரிசனம்கிறது கேரளா கர்னாடகா கோவில்களில் எதும் புதுசு இல்லையே!
ReplyDelete:)))
அந்த கவர்ச்சி படத்துக்கு மேலே உங்க படம், ஏன்ய்யா, ஏன் இந்த அலும்பு
ReplyDeleteஇதுலே ஜாக்கியை டச்சு பண்ணுனது இருக்கு ஆனா ஜாக்கி டச்சு மிஸ்ஸிங்.
ReplyDelete//மாமியாரின் நெடுநாள் ஆசையை பூர்த்தி செய்ய//
ReplyDelete//சண்டித்தனம் பண்னும் மாப்பிள்ளைகளை கோவிலுக்கு வேண்டுத்ல் என்று அழைத்து வந்து பெண்டு நிமித்தலாம்//
அப்டின்ன உங்களை பெண்டு எடுக்கத்தான் வேண்டுதலா??
இதே மாதிரி வெள்ளியங்கிரி மலைக்கும் ஒருக்கா போயிட்டு
ReplyDeleteவாங்க .
7 மலை ஏறணும். ஏறிட்டு வந்துட்டு அப்புறம் எழுதுங்க.
//நல்ல வேளை அந்த பெண்ணின் அப்பா எனக்கு முன்னால் வந்து நின்றுநான் முழு ஈடுப்பாட்டுடன் கவனம் சிதறாமல் சாமி கும்பிட வழி செய்தார்.//
ReplyDelete:)
நன்றி டாக்டர் புருனோ
வர வர ஒரே ரவுண்டிங்லயே இருக்கற மாதிரி இருக்கு... ஊட்டி போறாராமாம்? கோயிலுக்கு போறாராமாம்...?
ReplyDeleteஅடுத்த டிரிப் எங்க?
ஆல் த பெஸ்ட்
நித்யன்//
அடுத்த டிரிப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. வாழ்த்துக்கு நன்றி
சுத்துங்க.. சுத்துங்க..
ReplyDeleteஎவ்வளவு முடியுமோ சுத்துங்க!
எங்க சார்பா வாழ்த்துக்கள்
(நற..நற)//
நன்றி கலையரசன்
மங்களூர் வந்துட்டு ஒரு போன்கூட செய்யாம போனதுக்கு செம கடுப்புலதான் இருக்கேன்.//
ReplyDeleteஎன் போன் டஸ்ப்ளே போயிடுச்சி நான் என்ன செய்ய???
கொல்லூர் பலதடவை பைக்ல போன அனுபவம் இருக்கு.
ReplyDeleteகுடசாத்ரி ஜீப்ல ஒரு தடவை போயிருக்கேன். மனைவியை இனிமேதான் அழைச்சிட்டு போகனும்
:))))))))//
மனைவி ஏதாவது லொள்ளு பண்ணா ஓக்கேவா?
கோவில்களில் ஆண்களுக்கு அரைநிர்வாணத்தில்தான் தெய்வ தரிசனம்கிறது கேரளா கர்னாடகா கோவில்களில் எதும் புதுசு இல்லையே!
ReplyDelete:)))//
நமக்கு இது புதுசு சாமி
அந்த கவர்ச்சி படத்துக்கு மேலே உங்க படம், ஏன்ய்யா, ஏன் இந்த அலும்பு//
ReplyDeleteநீ இப்படி வயிறு புகையறதுக்குதான் அக்னி
இதுலே ஜாக்கியை டச்சு பண்ணுனது இருக்கு ஆனா ஜாக்கி டச்சு மிஸ்ஸிங்.//
ReplyDeleteஎன்ன பன்னறது குடும்ப கதை எழுதும் போது கொஞ்சம் அடக்கிதான் வாசிக்கனும் பிரிஞ்சிதா?
//மாமியாரின் நெடுநாள் ஆசையை பூர்த்தி செய்ய//
ReplyDelete//சண்டித்தனம் பண்னும் மாப்பிள்ளைகளை கோவிலுக்கு வேண்டுத்ல் என்று அழைத்து வந்து பெண்டு நிமித்தலாம்//
அப்டின்ன உங்களை பெண்டு எடுக்கத்தான் வேண்டுதலா?//
சுந்தர், என் திருமணம் காதல் திருமணம் பைசா வரதட்சனை வாங்காத திருமணம்
இதே மாதிரி வெள்ளியங்கிரி மலைக்கும் ஒருக்கா போயிட்டு
ReplyDeleteவாங்க .
7 மலை ஏறணும். ஏறிட்டு வந்துட்டு அப்புறம் எழுதுங்க/
கேள்வி பட்டு இருக்கேன் குமார் நிச்சயம் எழுதுறேன்
ஐயகோ., நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்., மன்னிக்கவும்
ReplyDelete"பாதையில் தடவி தடவிதான் ஏற வேண்டும்.."
ReplyDelete:-))))))))))))
antha touch illaamal ethaiyum ezhutha mudiyaathaa?
ReplyDeleteneengal nadamaadum rajineesh saamiyaar
பாதையில் தடவி தடவிதான் ஏற வேண்டும்.."
ReplyDelete:-))))))))))))/
நன்றி புதுவை சிவா நான் பாதையை சொன்னேன்
antha touch illaamal ethaiyum ezhutha mudiyaathaa?
ReplyDeleteneengal nadamaadum rajineesh saamiyaar//
அந்த டச் இல்லாம எழுதின அது ஜாக்கியோட ஒரிஜினல் இல்லைன்னு அர்த்தம் என்பார்வையில்
ஜாக்கி நீங்க இப்ப போனதுக்காக சந்தோசப்படுங்க ., இதே2008 ல மங்களூருல இருந்து கோவில் வாசப்படி வரைக்கும் ஒரே டஞ்சன் ரோடு தான்.... ஆனா நல்ல கோவில்.... பாடகர் ஜேசுதாஸ் பிறந்த நாளுக்கு அங்கதான் இருப்பார் நான் ஒரு முறை பார்த்திருக்கேன்..கொடசாதிரி மலைல புலி எல்லாம் இருக்கு.. மழை சீசன்ல ஒன்னுக்கு அடிக்க ஒதுங்கிராதிங்க அதையும் மீறி ஒதுங்குனா அப்புறம் நீங்க கொட்டை எடுத்த புலி ஆயிடுவீங்க..........
ReplyDeleteவாழ்த்துக்களுடன்.,
வாகைபிரபு.