something is better than nothing என்று சொல்லுவார்கள் அதாவது எதவுமே செய்யாமல் வெட்டியாக இருப்பதை விட எதையாவது செய்யுங்கள் என்பதே மேலுள்ள ஆங்கில வாக்கியத்தின் தமிழாக்கம். ஒன்னு வீரப்பன் போல மாறு இல்லை அப்துல்கலாம் போல மாறு அல்லது எதாவது செய் ஆனால் ஏதும் செய்யாமல் இருக்காதே...
இதுவரை நான் கலந்து கொண்டது வரை பதிவர் சந்திப்பு கும்மி, அரசியல், போட்டோ ,மெரினா லைட்ஹவுஸ் டீக்கடை,நீங்கதான் ஜாக்கியா? என்ற வினாவுடனான முகங்கள்,சிகரேட், டீ, மானிக்சந்த், உலக சினிமாக்கள், இடஒதுக்கிடு, பிராமனதுவேஷம்,ஜெயலலிதா, கருணாநிதி அரசியல் நிலைப்பாடு போன்றைவைகளோடு பொதுவாக இதுவரை நான் கலந்து கொண்ட பதிவர் சந்திப்புகள் நடந்து முடிந்து இருக்கின்றன.. கவனிக்கவும் நான் கலந்த கொண்ட...
ஆனால் இந்த சந்திப்பு சற்றே வித்யாசமாக இருந்தது, பதிவர் சந்திப்பு ஆரம்பித்து 15 நிமிடத்தில் உத்தி பிரிந்து சின்ன சின்ன குழுவாக மாறி மெரினா டீக்கடை சென்று கலைந்து போகும் அந்த வகையில் இந்த பதிவர்சந்திப்பை பாராட்டலாம்.
வந்த 50 பேரும் எங்கும் நகரவில்லை மூன்று மணிநேரம் கூட்டம் கலையாமல் அமைதி காத்தது...
நல்ல பச்சை பேக்குரவுண்டுடன் மைக் செட் எல்லாம் அமைத்து கொடுத்து, நடுவில் காரசேவ், காபி,ஸ்விட் மற்றும் இலவச புத்தகங்க்ளை யும் கொடுத்து அதற்க்கு மேல் கிழக்கு பதிப்பக மொட்டைமாடியை கொடுத்த பத்ரி சாருக்கு என் நன்றிகள்.
குழந்தைகளிடம் எப்படி பெரியவர்கள் நடந்து கொள்வது, அதுவும் 9 வயதிலிருந்து 13வயது அதாவது அவள் பருவம் எய்துவது வரை அவளை சில கயவர்களிடம் எப்படி காப்பது என்று கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்குக்கு டாக்டர் ஷாலினி மறறும் டாக்டர் ருத்ரன் தலமை தாங்கி வாசகர்கள் ஐயப்பாட்டையும் ஆழ்ந்த கருத்துக்களையும் சகித்து ஏற்று பதிலலித்தனர். பெண்பதிவர்களா? அல்லது வாசகர்களா என்று தெரியவில்லை, முதன் முறையாக 33பர்சென்ட் இடத்தை அடைத்து கொண்டு இருந்தனர்.
பொதுவாக எந்த பிரச்சனையையும் குழந்தைகளுக்கு கதைகள் முலமாவே சொல்ல வேண்டும் என்று இருவரும் சொன்னார்கள். பொதுவாக இருவரின் அளுமையும் எனக்கு பிடித்து இருந்தது. ஒரு நண்பன் போலே இருவரும் உரையாடினார்கள்.
எந்த இடத்திலும் தான் என்று அகந்தை கிஞ்சித்தும் எட்டிப்பார்க்கவில்லை உதாரணமாக டாக்டர் ஷாலினி 15 நிமடம் பேசிய கருத்துதனக்கு ஏற்புடையதல்ல என்ற பதிவர் பைத்தியக்காரன் மறுதலித்தார் , டாக்டர் ஷாலினி ரொம்ப கூலாக டென்ஷனாகாமல் பரவாயில்லை சார் நீ்ங்க கண்டுபிடித்து விட்டீர்களே என்று அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..கிஞ்சித்துத் தன் கருத்து சரியென்று வாதாடவில்லை.
பல பதிவர்க்ளின் கேள்விகள் சிறுபிள்ளைதனமாக இருந்தாலும் அது அவர் அவர் கருத்தாக எடுத்துக்கொன்டேன். மற்றபடி இந்த சந்திப்பு மிகுந்த மன மகிழ்வை தந்தது.
நான் புகைப்படம எடுக்கும் போது என் வலைதளத்தில் ஓப்பன் செய்ய முடியவில்லை என்றும் அதில் வைரஸ் இருப்பதாகவும் அது என் தமிள் எச்டிஎம்மளை எடுத்து விட சொன்னார்கள். எடத்து விட்டேன் அப்படி ஏதாவது பிரச்சனை என்றால் dtsphotography@gmail.com என்ற எனது வலை முகவரியில் தயவு செய்து தெரிவிக்கவும்.
டெக்னிக்கல் விஷயங்களை என்க்கு எப்போதும் போதிப்பவர்கள் நட்டு போல்டும் அக்னி பார்வையும்தான்.
அதிஷா வந்த பதிவர்களிடம் பெயர் மற்றும் இமெயிலை டோண்டு சார் போல எழுதி வாங்கி கொண்டு இருந்தார். சந்திப்பில் நடந்த கேள்விபதில்கள் சாரம்சம் ஒரு வரி விடாமல் தெரிய
Good touch, bad touch
நம்ம பதிவர் டொண்டு சார் விடிய விடிய கண்விழித்து எழுதிய பதிவை படித்த பயன் பெறவும். தண்டோராவை தனியாக படம் எடுத்து அவர் ஆசையையும் கேபிள் ஆசையையும் நிறைவேற்றினேன்.
பொதுவாக பெண்கள் இருந்ததால் நான் படம் எடுக்க தவிர்த்தேன் அப்புறம் செறங்கு சொறிஞ்ச கையும் கேமரா பிடிச்ச கையும் சும்மா இருக்குமா? அப்புறம் பர பரன்னு நம்ம வேலையை காட்டிட்டேன்.
சரி முக்கிய சில போட்டோ எடுத்துட்டமே என்று கேமராவை உள்ளே வைத்தால் சால்வை போர்த்துவதை படம் எடுக்க லக்கி கேட்டுக்கொண்டார் படம் எடுத்துதேன், பெயர் போடவில்லை அதற்க்கு நேரம் இல்லை, பெயர் போட்டர்ல் எல்லா பெயரையும் போட வேண்டும். அடுத்த முறை பதிவர் சந்திப்புக்கு இது போல் என் கேமராவை எடுத்து போய் பெயரோடு படம் போடுகிறேன்...
விழா முடிவில் ருத்ரன் சார் சொன்னார் உங்களை எல்லாம் வலைதளத்தில் பார்ப்பதை விட உங்களை உணர்வு பூர்வமாய் நேரில் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சொன்னார்... அந்தத கூற்றில் இருந்த உண்மையை என் மணம் அசைப்போட்டபடி என் வாகனத்தை எடுத்து பெருங்களத்துரில் அவள் அத்தை வீட்டில் மொக்கை போட்டுக்கொண்டு இருந்த என் மனைவியை அழைத்து வர கிளம்பினேன்.
அன்புடன் /ஜாக்கிசேகர்
கேபிளார் எப்பவுமே ஹெட்போனோடயே காட்சி தருகிறார்..!
ReplyDeleteகேபிள் ஒரு வியாபாபர காந்தம் அதான் எப்பவும் ஹெட் செட்டோடு இருக்கார். வியாபார காந்தம் என்றால் பிசினஸ் மேக்னெட் என்று பொருள்
ReplyDeleteநன்றி டக்ளஸ்
படங்களுடன் மிக அருமையான தொகுப்பு..
ReplyDeleteஇதனை முன்னிற்று நடத்திய அனைத்து பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்..
அருமையான பதிவிற்கு வாழ்த்துக்கள்
பதிவுக்கும் படங்களுக்கு நன்றி ஜாக்கி.
ReplyDeleteஇனி எல்லாம் சுகமே!!!
நன்றி துளசி கோபால் உங்களை போன்ற வெளிநாட்டு வாழ் மக்களுக்காகவே
ReplyDeleteபுகைப்படம் எடுத்து பதிவிடுகிறேன்
நன்றி தங்கள் வருகைக்கு
படங்களுடன் மிக அருமையான தொகுப்பு..
ReplyDeleteஇதனை முன்னிற்று நடத்திய அனைத்து பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்..-//
நன்றி கண்ணன் தங்கள் பாராட்டுக்கும்
அருமையாய் படங்கள் போட்ட அண்ணன் ஜாக்கி சேகருக்கும் 37வது வட்டம் சார்பாக இந்த பொன்னாடையை ....:)
ReplyDeleteநன்றாக தொகுத்துள்ளீர்கள்.நன்றி.
ReplyDeleteவெளியூர் சென்று விட்டு இன்று தான் திரும்பினேன்.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
குட். கேமராவுடன் சென்றதற்கு... இன்னும் கிளிக்கியிருக்கலாம்.
தல் உங்க புகைபட சேவை தோடர்ந்து வேண்டும்
ReplyDeleteதிறமையாளர்களை எல்லாம் ஒன்றாக சந்திததில் மகிழ்ச்சி !
ReplyDeleteபெருங்களத்தூர் போகறதுக்கு முன்னாடி நடந்ததை ஏன்யா எழுதல?
ReplyDeleteஅருமையாய் படங்கள் போட்ட அண்ணன் ஜாக்கி சேகருக்கும் 37வது வட்டம் சார்பாக இந்த பொன்னாடையை ....:)-//
ReplyDeleteபோடுங்க தலைவரே நன்றி
நன்றாக தொகுத்துள்ளீர்கள்.நன்றி.//
ReplyDeleteநன்றி பிரேம் ஜி தங்கள் வருகைக்கு
வெளியூர் சென்று விட்டு இன்று தான் திரும்பினேன்.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
குட். கேமராவுடன் சென்றதற்கு... இன்னும் கிளிக்கியிருக்கலாம்.
கிளக் பண்ணதென்னமோ நிறையதான் ஆனா அப்லோட் பண்ணறதுக்ககுள்ள தாவு தீர்ந்திடுச்சி
தல் உங்க புகைபட சேவை தோடர்ந்து வேண்டும்
ReplyDeleteகண்டிப்பாப சிந்தாமணி தங்கள் ஆசிர்வாதங்களுடன்
Ellam sari thaan photos ellam nalla irukku.... but enna phesuninga nu sonna innum nalla irunthirukkumae.....
ReplyDeleteபடங்கள் சூப்பர் சார்.. அந்த வெளிச்சத்தில் இந்த க்ளாரிட்டியை நான் எதிர்பார்க்கவில்லை
ReplyDeleteதமிழ் வலைப்பதிவுலகின் பாலுமகேந்திரா வாழ்க :-)
ReplyDelete//பொதுவாக பெண்கள் இருந்ததால் நான் படம் எடுக்க தவிர்த்தேன் //
ReplyDeleteஇதுதான் ஜாக்கி! :-)
பாராட்டுக்கு நன்றி இவன் கோபி டோண்டு சாரின் சு்ட்டியை கொடுத்து இருக்கிறேன் வாசிக்கவும்
ReplyDeleteதிறமையாளர்களை எல்லாம் ஒன்றாக சந்திததில் மகிழ்ச்சி !//
ReplyDeleteநன்றி பிஸ்கோத்து பயல்
பெருங்களத்தூர் போகறதுக்கு முன்னாடி நடந்ததை ஏன்யா எழுதல?//
ReplyDeleteபொண்டாட்டிக்கிட்ட மாட்டிவிடலாம்னு முடிவு செய்துட்டியா?
படங்கள் சூப்பர் சார்.. அந்த வெளிச்சத்தில் இந்த க்ளாரிட்டியை நான் எதிர்பார்க்கவில்லை//
ReplyDeleteஅக்னி லேடிஸ் இருந்தகாரணத்தால நான் ஆங்கிள் சரியா வைக்கல.. படங்கள் நல்லா வந்ததுன்னா அது என் தொழில் நன்றி அக்னி
தமிழ் வலைப்பதிவுலகின் பாலுமகேந்திரா வாழ்க :-)//
ReplyDeleteஇப்படி வெயில்ல ஐசை வச்ச டப்புன்னு ஜலதோஷம் புடிச்சுடும்பா? நன்றி லக்கி
//பொதுவாக பெண்கள் இருந்ததால் நான் படம் எடுக்க தவிர்த்தேன் //
ReplyDeleteஇதுதான் ஜாக்கி! :-)
நன்றி லக்கி
நேற்று மாலை நிகழ்ச்சியில், ஷாலினி பேசிவிட்டபின் நான் பலவற்றை மீண்டும் கூற வேண்டாமே என்றுதான் குறைத்துக்கொண்டேன்..
ReplyDeleteவருங்காலத்தில் நான் வரநேரும்போது விரிவாகவே பேசலாம்..
என்னைத் தனியே சந்திக்க..(பிரச்சினைகளுக்காக அல்ல) பலர் விருப்பம் தெரிவித்ததால்..மாதத்தில் ஒரு நாள் இதற்காக என் வீட்டில் நேரமும் இடமும் ஒதுக்குவது குறித்து யோசிக்கிறேன்..
நிகழ்ச்சி நடந்ததற்கு பாராட்டுக்கள்
நீங்கள் சொல்லிய கூற்று உண்மை அதனை என்னால் உணர முடிந்தது, இக்கமும் நாம் விரிவாக பேச வேண்டும் , இப்படி பேசும் போதுதான் பல விடயங்களில் தெளிவை பெற முடிகின்றது. குறைவாக பேசினாலும் தடம் புரளாது பேசினீர்கள் நன்றி, கேமாரா நான் எடுத்து போட்டோ எடுக்கும் போது நீங்கள் பேசி உட்கார்ந்து விட்டீர்கள் அதனால்தான் மூக்கிள் கை வைத்து இருக்கும் போட்டோ போட்டு விட்டேன் மன்னிக்கவும்
ReplyDeleteஅன்புடன்
ஜாக்கிசேகர்
//என்னைத் தனியே சந்திக்க..(பிரச்சினைகளுக்காக அல்ல) பலர் விருப்பம் தெரிவித்ததால்.//
ReplyDelete:) :) :) :)
உங்களின் தமிழ் ஆளுமை அபாரம் சார்
உறையாற்ற அல்ல உரையாட என்ற சொற்தொட்ரை படித்து பல நிமிடங்கள் வியந்து மகிழ்ந்தேன். அதே போல் இங்கும்
:)
நன்றி டாக்டர். நிறைய நாள் எதிர்பார்த்து கடைசியில் வர முடியாமல் போனது மிகவும் வருத்தமே..
ReplyDeleteவெளியூர் சென்று திரும்பி வர டிக்கெட் கிடைக்காமல் போனது.
விரைவில் நேரமும் இடமும் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.
நன்றி.
சூர்யா
சென்னை.
தண்டோரா said...
ReplyDelete//பெருங்களத்தூர் போகறதுக்கு முன்னாடி நடந்ததை ஏன்யா எழுதல?//
ஏன்யா எழுதல?
தண்டாரோ, கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
ஏதாவது ஒரு சந்தர்பத்தில் எனக்கும் இதில் கலரும் வாய்பு கிடைக்கும் .
ReplyDeleteநல்லாருக்கு உங்க பதிவு படங்களுடன்!
ReplyDeleteநன்றி!
படங்களுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி ஜாக்கி, என் கோரிக்கையை ஏற்று என் படத்தை வெளியிட்டதற்கு.
ReplyDeleteநான்,புதுகை அப்துல்லா,அதிஷாவுடன்
இருக்கும் படம் சூப்பரப்பு...
ஹஸன் ராஜா.
ஆஹா! எங்க சிங்கை சிங்கம் கோவி கண்ணன் இருக்காரு ;-))
ReplyDeleteநன்றாக தொகுத்துள்ளீர்கள்.நன்றி.
ReplyDeleteநல்லாருக்கு உங்க பதிவு படங்களுடன்! நன்றி!
ReplyDeleteஏதாவது ஒரு சந்தர்பத்தில் எனக்கும் இதில் கலரும் வாய்பு கிடைக்கும் .//
ReplyDeleteநிச்சயமாக மலர் அது ஒரு சுகானுபவம்
நன்றி வண்ணத்தூபூச்சி புருனோ
ReplyDeleteநன்றி வால்பையன் , சந்தன முல்லை, ராஜா
ReplyDeleteநல்ல தொகுப்பு தல
ReplyDeleteபடிக்க சுவராஸ்யமாயிருந்தது
நல்ல தொகுப்பு தல
ReplyDeleteபடிக்க சுவராஸ்யமாயிருந்தது//
நன்றி அபு பஸ்சர் நன்றி தங்கள் வாழ்த்துக்கு
படங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணே.
ReplyDeleteநன்றி எஸ்க்கே தங்கள் பாராட்டுக்கு
ReplyDeleteநல்ல தொகுப்பு அண்ணே.. தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி :-)
ReplyDeleteநன்றி உழவன் காலம் சிறிது கடந்தாலும் அலட்சியம் காட்டாமல் நன்றி தெரிவித்தமைக்கு என் நன்றிகள் நண்பா..
ReplyDeleteஅண்ணே முடிஞ்சா படங்களை எனக்கு ஒரிஜினல் சைஸ்'இல மெயிலில் அனுப்ப முடியுமா.
ReplyDeletemy mail id : friends.sk@gmail.com
புகைப்படங்களுக்கும், நிகழ்ச்சி பற்றிய தொகுப்பிற்கும் நன்றி ஜாக்கி சேகர்.
ReplyDeletemay i know who is dondu in the photos ..?
ReplyDelete