எச்சரிக்கை இப்ப ஊட்டிக்கு போகாதிங்க....


எல்லா நகரத்து சாலைகளும் ரோம் நகரத்தை நோக்கி செல்கின்றன என்பது போல் 3 நாள் சேர்ந்தாற் போல் லீவு விட்டால் எல்லா வாகனங்களும் கொடைக்கானல் மற்றம் ஊட்டி மலைபதையை நோக்கி செல்கின்றன என்பது புது மொழி....

மே1ம் தேதி வெள்ளிக்கிழமை வர அதன் அடுத்த இரு தினங்களும்சனி ஞாயிறு என்று தொடர்ந்து விடுமுறை நாளாக வர தமிழகத்தில் உள்ள எல்லோருடைய வீட்டிலு்ம் பெட்டிக்கட்டிக்கொண்டு புறப்படும் இடம் ஊட்டி அல்லது கொடைக்காணல்தான் அல்லது வேற ஏதாவது மலைவாசத்தலம்.

என் நண்பிக்கு மே1 அன்று திருமணம் என் திருமணத்துக்கு புயல் மழையில் வந்தவள் என்பதாலும் மிக நெருங்கிய நண்பி என்பதாலும் நான் மனைவியுடன் ஊட்டி சென்றோம் 4 நாட்கள் டேரோ போட்டோம்...

பணம் பெருத்தவர்கள் மட்டும் இந்த மாதிரிகோடை விடுமுறையில் ஊட்டிக்கு செல்லலாம். பட்ஜெட் பேமிலி கோடைக்கால ஊட்டிக்கு போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்... நடுத்தர குடும்பத்தினர் ஊட்டி செல்வதை தவிற்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
எனென்றால் 750 ரூபாய் பெறுமானம் கொண்ட ரூம் வாடகை 2500 ரூபாய்க்கு ஏறி இருக்கின்றது.. அது மட்டும் இல்லாது எல்லா விலைகளும் உயர்ந்து இருக்கின்றன...

காரை பார்க் செய்து பொட்டானிக்கார்டன் போவதற்க்குள் தாவு தீர்ந்து விடுகின்றது... சட்டென டிராபிக் ஜாம் வேறு ஆகி அது கிளியர் ஆவதற்க்குள் நம் மூளை நரம்புகள் வெடித்து விட போட்டி போடுகின்றன...

காரணம் எல்லோரும்டிராபிக்கில் ஒரே சைடில் வெயிட் செய்து கொண்டு இருக்கும் போது பெரிய புடுங்கி மாதிரி காரை முன்னாடி எடுத்துக்குனு போன ஆப்போசிட்ல வர்றவன் இவன் அம்மாவை தேவிடியான்னு கத்தறான்.


எல்லா இடத்திலும் குப்பைமலை போல் குவிந்து கிடக்கின்றன... முக்கியமாக வாட்டர் பாட்டில் மற்றும் பெப்சி மிரான்டா பாட்டில்கள் குப்பை எங்கும் இறைந்து கிடக்கின்றன...
இரண்டு நிமிடத்தில் சேரிங் கிராஸ் வர வேண்டியதூரத்தை ஒன்வே என்று சொல்லி பதினைந்து நிமிட மாக்குகின்றார்கள்... அங்கும் நல்ல வெயில் தான்.ஊட்டியி்லும் கழுத்து வியர்வை பிசுபிசுக்கின்றது, என்ன வாகனத்தில் போகும் போது நன்பகல் பண்ணிரண்டுக்கு குளிர் காற்று முகத்தில் அடித்து தமிழக தேர்தல் பற்றி குசாலம் விசாரிக்கின்றது...

குடும்பத்துடன் செல்பவர்கள் ஆப் சீசன் என்று அழைக்கப்படும் டிசம்பர் மாதத்தில் செல்ல வேண்டுகிறேன்... ஒரு குரோம் பேட்டை குடும்பம் நடு இரவில் வந்து 10 பேருடன் வந்திறங்கி ரூம் கிடைக்காமல் தவித்து, கம்பளி கூட கொடுக்காமல் 4500 ரூபாய் வாங்கி ரூம் கொடுத்து தாலி அறுத்த கொடுமையும் நடந்தது.

ஊட்டி ஆட்டோகாரர்களை கம்பேர் செய்யும் போது சென்னை ஆட்டோக்காரர்கள் தெய்வத்தின்ட தெய்வம்...

ஆகவே நண்பர்களே புதிதாய் திருமணம் ஆனவர்களே இதனால் அறியப்படும் நீதியாதெனில் ஊர் ஓடும் போது நீயும் ஓடு என்ற பழமொழிக்கு ஆப்போசிட்டாக ஊர்ல பல பேர் ஊட்டிக்கு போகும் போது நீ போகாதே என்பதுதான் புது மொழி ...

ஊட்டி பற்றிய பதிவு புராணங்கள் வரும் பதிவுகளில்....

அன்புடன்/ஜாக்கிசேகர்

9 comments:

 1. என்ன செய்ய தல!
  அவுங்க இந்த சீசன்ல தான் காசு பாக்குறாங்க!

  ReplyDelete
 2. என்ன செய்ய தல!
  அவுங்க இந்த சீசன்ல தான் காசு பாக்குறாங்க!

  ReplyDelete
 3. /
  ஊட்டி ஆட்டோகாரர்களை கம்பேர் செய்யும் போது சென்னை ஆட்டோக்காரர்கள் தெய்வத்தின்ட தெய்வம்...
  /

  அட கொடுமையே அவ்ளோ மோசமா ஊட்டி??

  ReplyDelete
 4. ஊட்டியில் தங்க விழைவது தான் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் செய்யும் தவறு.

  குன்னூர், கோத்தகிரி தங்குவதற்கு மிக ஏற்ற இடம். பெரும்பாலான பார்க்க வேண்டிய இடங்கள் இதைச்சுற்றியே இருக்கின்றது.

  1,2,3 கோத்தகிரியில் தான் இருந்தேன் :) 10 பேர் தங்கக்கூடிய வீடே 1200 - 1500 வாடகை தான். அடுத்த முறை வரும் போது சொல்லுங்க.

  ReplyDelete
 5. என்ன செய்ய தல!
  அவுங்க இந்த சீசன்ல தான் காசு பாக்குறாங்க!//
  உண்மைதான் வால் அதுக்ககா மனிதாபிமானத்தை விட்டு காசு பாக்கிறது ரொம்ப ஓவர் இல்லை

  ReplyDelete
 6. அட கொடுமையே அவ்ளோ மோசமா ஊட்டி??//

  உண்மை மங்களுர் சிவா...

  ReplyDelete
 7. குன்னூர், கோத்தகிரி தங்குவதற்கு மிக ஏற்ற இடம். பெரும்பாலான பார்க்க வேண்டிய இடங்கள் இதைச்சுற்றியே இருக்கின்றது.

  1,2,3 கோத்தகிரியில் தான் இருந்தேன் :) 10 பேர் தங்கக்கூடிய வீடே 1200 - 1500 வாடகை தான். அடுத்த முறை வரும் போது சொல்லுங்க.//

  வெயிலான் நீங்க சொல்லறது 100க்கு 100 உண்மைதான்.. நிச்சயமாக வரும் போது சொல்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நான் இன்று ஊட்டிக்கு சுற்றுலா வருகிறோம் எட்டு நபர்கள் தங்குவதற்கான இடம் வேண்டும்
   9787686636

   Delete
 8. சூப்பர் தல அதுவும் தெய்வத்தின்ட தெய்வம்... ரொம்ப சூப்பர்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner