ஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம்...


சில அனுபவங்கள் கோடி கோடியாய் கொட்டிக்கொடு்த்தாலும் எவருக்கும் கிடைக்காது. அது போன்ற அனுபவம் இது.
இயக்குநர் பாக்கியராஜ் அடிக்கடி சொல்லுவார் சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்டுத்தி் பாக்குறதுதான். அப்படி ஒரு ஏழைக்குடும்பம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த கதையை இப்போது பார்ப்போம்.

பத்து வருடங்களுக்கு முன்பு என்று மிகச்சரியாக ஆரம்பிக்காவிட்டாலும் ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு விகடன் டெலிவிஸ்டாஸ் பேரைச்சொல்லவா என்ற நெடுந்தொடர் தயாரித்து அது சன் டிவியில் சக்கை போடு போட்டது, உங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும் என்று எண்ணுகிறேன், அது ஒரு திகில் தொடர். அந்த தொடரை இயக்கியது ஒளிப்பதிவாளர் ps. தரன் அவர்கள். நாசர் படத்தின் ஆஸ்தான கேமாராமேன்.


தமிழகத்தின் எல்லா இடத்திலும் சின்ன சின்ன பசங்கள் எல்லாம் அந்த தொடரில் வரும் டயலாக்கை பேசி காட்டுவார்கள். “பேரைச்சொல்லவா” என்று சற்றே இழுத்து பயமுறுத்துவது போல் பேசுவார்கள். அந்த அளவுக்கு அந்த சீரிய்ல் சக்கை போடு போட்டகாலம் அது. அந்த சீரியலின் 100 எப்பி்சோட் என்று நினைக்கிறேன், அப்போது விகடன் குழுமம் ஒரு பரிசு போட்டி அறிவித்தது. அதாவது அந்த தொடரில் கேள்விபதில் போட்டி வைத்து வெற்றிபெரும் அதிஷ்டசாலி நேயருக்கு125 பவுன் தங்க நகைகள் கொடுப்பதாக திட்டம்.

தமிழகம் முழுவதும் சொக்கா சொக்கா என்று மக்கள் ஆர்வமாக பங்கெடுத்தார்கள், தமிழகம் முழுவதும் லட்சக்கனக்கான கடிதங்கள் விகடன் அலுவலகத்தில் வந்து குவிந்தன.

நான் அப்போது சென்னை சரவண வீடியோ சென்டரில் கேமரா அசிஸ்டென்டாக வேலைபார்த்து வந்தேன். சீரியல் கதாநாயகி ஈஸ்வரிராவ் மற்றும் சில பிரபலங்கள்(யார் யார் என்று சரியாக நினைவில் இல்லை) முன்னிலையில் குலுக்கள் முறையில் மதல் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த 125 பவுன் பரிசு போட்டியில் சரியான விடைஎழுதிய அதிஷ்டசாலி வால்பாறையை சேர்ந்த ஒரு பெண். இதை முதலில் வீடியோவாக எடுத்து அதனை அடுத்த வாரம் ஒளிபரப்பும் எப்பிசோட்டில் சீரியல் முடியும் போது ஒளிபரப்ப முடிவு செய்யபட்டது.

அந்த வால் பாறை பெண் வெற்றி பெற்ற தகவல் எவர் மூலமும் வெளியில் கசியாமல் வைத்தார்கள். வரும் வாராம் வெள்ளிக்கிழமை இரவு 8,30லிருந்து9மணிக்குள் போட்டி முடிவுகள் அறிவிக்கப்டும். அந்த 125 பவுன் வெற்றிபெற்ற செய்தியை அறிவிச்சதும் அந்த வீட்டில் ஒரு சந்தோஷ கூச்சல் ஒரு படப்டப்பு ஏற்படும் அந்த படபடப்பை அந்த நேரத்தில் அங்கு இருந்தால்? அந்த அனுபவத்தை வீடியோவாக எடுத்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனைக்கு விகடன் குழுமம் செயல்வடிவம் கொடுத்தது.

கேமாராமேன் மற்றும் இயக்குநர் தரன் சார், போட்டோகிராபர் ராஜசேகர் என்ற நினைக்கின்றேன் ,நான் அப்புறம் கேமரா எக்கியூப்மென்ட் உடன் விகடன் மவுன் ரோடு ஆபிசில் இருந்து கிளம்பினோம், சிறு வயதில் இருந்து நான் விரும்பி வாசித்த அந்த பிரபல பத்திரிக்கையின் அலுவலகத்தை அப்போதுதான் நேரில் பார்த்தேன். இந்திரா காந்தி ஹேர்ஸ்டைலில் வந்த ஒரு பெண்மணி எங்கள் பயணத்துக்கு ஆல்தபெஸ்ட் சொன்னார். அவர் பெயர் சுபாவோ அல்லது சுபஸ்ரீயா சரியாக நினைவு இல்லை கொஞ்சம் தடித்து காணப்பட்டார். பத்து வருடத்துக்கு மேல் ஆவதால் நினைவுகள் மங்கி அவுட் ஆப்போகசில் தெரிகின்றன.

நாங்கள் வால்பாறை போகும் போதே மங்கி பால்ஸ் போன்றவற்றில் காரை நிறுத்தி என்ஜாய் செய்து விட்டு சென்றோம், வால்பாறைக்கு அதுதான் எனது முதல் பயணம் என்பதால் அது எனக்கு கூடுதல் மகிழ்வை கொடுத்தது எனலாம். நாங்கள் வால் பாறை சென்று லாட்ஜீல் ரூம் எடுத்து தங்கினோம் நான் கேமரா பேட்டரி எடுத்து சார்ஜ் எல்லாம் போட்டுரெடியாக வைத்து இருந்தேன். சப்போஸ் கேமராவில் எதாவது பிரச்சனை என்றால் டோட்டல் புரோகிராமும் சொதப்பி விடலாம் என்பதால் எல்லாரையும் விட எனக்கு பக்கு பக்கு என்றது.

நாங்கள் முதலில் அந்த பெண் விலாசத்தை தேடிப்போனோம்.எனென்றால் இரவில் அந்த மலை பள்ளத்தாக்கில் எங்கு போய் தேடுவது.மாலை 5 மணி வாக்கில் அந்த பகுதியில் அந்த பெண்ணின் தகப்பன் பெயரை சொல்லி விசாரித்த போது அவர் பக்கத்தில் இருக்கும் டீ எஸ்டேட்டில்கூலித்தொழிலாளியாக வேலைபார்ப்பதாக சொன்னார்கள். இயக்குநர் தரன் சொன்னார் நல்ல வேளை இந்த 125 பவுன் ஒரு ஏழைக்குடும்பத்துக்கு சென்று சேர்வது குறித்து அவர் மகி்ழ்வதாக சொன்னார் நாங்கள் அந்த மகிழ்வில் பங்கெடுத்தோம்.

சிறிய நகரம் என்பதால் விசாரனையை ரொம்ப ரகசியமாக நடத்தினோம் கிராமத்தில் எட்டு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பெயர் தெரிந்து வைத்து இருப்பார்கள். அதில் விசாரிப்பவரே கூட அவரது சொந்தமாக இருந்தால் எதற்க்கு வந்து இருக்கின்றீர்கள்?,ஏன் தேடுகின்றீர்கள்?, என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டால் குட்டு உடைந்து விடும் என்பதால் மேம்போக்காகவே விசாரித்தோம். அதே போல் நாங்கள் வந்த காரை அரை கிலோமீட்டருக்கு முன்னே நிறுத்தி நடந்து வந்து விசாரித்தோம்.

மாலை 5 மணிக்கே குளிர் வாட்ட தொடங்கி விட்டது ரோட்ல் ஆள் ஆரவாரமே இல்லை. அப்படியும் ஒருவர் கேட்டார் ஊருக்கு புதுசா? இங்க நிக்காதிங்க, முள்ளம் பன்றி, காட்டுயானை போன்றவை எப்ப வேனா வரும் அதனால ஜாக்கிரதை என்று எச்சரிக்க, கொஞ்ச நேரத்திற்க்கு முன் குளிர் போக்க குடித்த டீ வயிற்றில் கலக்கி குதியாட்டம் போட்டது.

காரில் கேமராவோடு இரவு ஏழு மணிவாக்கில் அதே பகுதியில் வெயிட் செய்தோம். யானை வந்தால் கார் பறக்க வேண்டும் என்று எற்க்கனவே டிரைவரிடம் சொல்லி இருந்தோம். ஊர் அமானுஷ்ய அமைதியாக இருந்தது.

இரவு எட்டரை மணியை உறுதி செய்து மெல்ல அந்த பள்ளதாக்கில் பயணப்ட்டோம் சின்னதாக குடிலை போன்று எழு எட்டு வீடுகள் இருந்தன எல்லோர் வீட்டிலும் பேரை சொல்லவா சீரியல் ஓடிக்கொண்டு இருந்தது எட்டு ஐம்பத்து அஞ்சுக்கு பரிசு பெற்றவர் விவரம் அறிவிப்பார்கள். அதற்க்குள் நாங்கள் கேமராவோடு ரெடியாக இருக்க வேண்டும்.

பக்கத்து வீட்டுகாரர் கதவை தட்டி அவரிடம் விவரம் சொல்லி சென்னையில் இருந்து வந்து இருப்பதாகவும் ஒரு பத்து நிமிடத்திற்க்கு ஒரு இன்டர் வியுவுக்காக லைட் போடுவதற்க்கு மின்சாரம் தேவை என்பதை விளக்கினோம். அவர்கள் ஏற்றக்கொண்டர்கள். நாங்கள் எட்டு ஐம்பத்தி ஐந்தாவது நிமிடத்திற்க்காக நகம் கடித்து வெயிட் செய்தோம்.

அந்த நொடி வந்தது சென்னையில் பரிசு பெற்ற பெயரை அறிவித்த வீடியோ சன்டிவியில் ஒளிபரப்பானது. நாங்கள் அந்த பெண் வீட்டின் கதவருகில் வெயிட் செய்தோம், எனக்கு படபடப்பில் உள்ளங்கை வேர்த்தது, அந்த பெண் பெயர் அறிவித்ததும் வீட்டில் ஒரே மகிழ்ச்சி ஆராவாரம் அடுத்த நொடி கதவை தட்டி உள்ளே போனால் நீங்கள் யார் இந்த இரவு நேரத்தில் என் வீட்டில் என்ற கேள்வி குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் முகத்திலும் தொங்கி நின்றது.

நாங்கள் ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வருகின்றோம் என்று சொல்லி இந்த 125 பவுன் கிடைத்ததை வைத்து நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்று வினவ?அவர்கள் தங்கள் மரிழ்ச்சியின் ஊடே தங்கள் எதிர்கால லட்சியங்களை சொன்னார்கள். அந்த குடும்பத்தில் அந்த லட்சியங்கள் இப்போது நிறைவேறியதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த பரிசு பெற்ற பெண் அந்த குடும்பத்தின் பெரிய பெண் அந்தவீட்டில் அந்த பெற்றோருக்கு மூன்று பெண்கள்.அந்த பெரியபெண் அங்கு இல்லை. அந்த பெண் கோவையில் ஒரு பிரபல மருத்துவமனையில் பணி புரிகின்றாள் அவள்தான் போட்டிக்கு கடிதம் எழுதி போட்டு இருப்பாள் என்று சொல்ல நாங்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களை இன்டர்வியூ எடுத்து அந்த குடும்பத்தினரிடம் விடை பெற்று மறுநாள் கோவை வந்து அந்த பிரபல மருத்துவமனையில் அந்த பெண்ணை சந்தித்து இன்டர்விஹயு எடுத்து சென்னை வந்து சேர்ந்தோம். அந்த பெண் அடைந்த மகிழ்ச்சியை, வார்த்தைகளில் விவரிக்க முடியாது.விகடன் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் கலந்து பெரிய ஆளாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பத்தாவது படித்த என்னை எப்படி அவர்களால் எடுத்து கொள்ள முடியும். இருப்பினும் இந்த அனுபவம் எனக்கு ஒரு செய்தியை எப்படி சேகரிக்கலாம் என்ற செயல் முறை பாடமாக எனக்கு இது அமைந்தது என்றால் அது மிகையில்லை.

அதன் பிறகு பேரைச்சொல்லவா அடுத்த எப்பிசோட்டில் நாங்கள் வால்பாறையில் எடுத்த மகிழ்வு கணங்கள் சன்டிவியில் ஒளிபரப்பட்டது. அதே வாரம் ஆனந்தவிகடனில் நாங்கள் கஷ்டப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அப்போதைய சின்ன ஆனந்த விகடனில் ஒரு பக்க அளவில் வந்ததாக நினைவு. அது எனக்கு அதிர்ச்சியும் கூட....

வாழ்வில் பல அனுபவங்கள் எனக்கு இருந்தாலும் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இது....


அன்புடன்/ஜாக்கிசேகர்
குறிப்பு)
உங்களுக்கு நான் எழுதியது பிடித்து இருந்தால் தமிழ்மணத்திலும் தமிளிஷ்லிம் ஓட்டு போடவும் பின்னுட்டம் இடவும் மறவாதீர்

38 comments:

 1. அருமையான பதிவு. இதையே நீங்கள் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பலாம்.

  ஸ்ரீ....

  ReplyDelete
 2. ஜாக்கி,

  நல்லதொரு அனுபவ பகிர்வு. மேலதிக தகவலுக்காக -

  'பேரைச் சொல்ல வா' - ரா.கி. ரங்கராஜன் எழுதிய 'ஆவி ராஜ்ஜியம்' நாவல்.

  //இந்திரா காந்தி ஹேர்ஸ்டைலில் வந்த ஒரு பெண்மணி எங்கள் பயணத்துக்கு ஆல்தபெஸ்ட் சொன்னார். அவர் பெயர் சுபாவோ...//

  சுபா வெங்கட். ஆனந்த விகடன், ஜூனியர் விகடனில் பொறுப்பாசிரியராக இருந்துவிட்டு, கவுதம், திருப்பதிசாமி ஆகியோருடன் இணைந்து வீடியோ பத்திரிகையை நடத்திவிட்டு மின்பிம்பங்களுக்கு சென்றவர். அங்கிருந்து ராடன், பின் பிரமிட் சாய்மீராவுக்கு சென்றவர், இப்போது மீண்டும் ராடனில் கிரியேடிவ் ஹெட்டாக இருக்கிறார்.

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  ReplyDelete
 3. அருமையான பதிவு, கொஞ்சம் டிரை பன்னுங்க.. அந்தணன் மாதிரி எழுதிடுவீங்க!

  ReplyDelete
 4. வணக்கம் ஜாக்கி
  உங்கள் மலரும் நினைவுகள் சிறப்பாக இருந்தது வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. பதிவு ரொம்பவே அருமை.

  ரசிச்சேன் .

  அந்தப் பொண்ணும் குடும்பமும் நல்லா இருக்கட்டும்.


  கொசுவத்தி ஏத்துனா எப்படி நல்ல விஷயங்கள் எல்லாம் வெளியிலே வருது பாருங்களேன்!!!

  ReplyDelete
 6. move like a streem.excellent flow.way of expression make u like ra.ki.like that.try for short stories.all the best.
  flora

  ReplyDelete
 7. நல்லா எழுதியிருக்கீங்க!! உங்க கூடவே பயணம் செய்ய வைக்குது உங்க நடை!! வாழ்த்துகள்!!

  ReplyDelete
 8. சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்டுத்தி் பாக்குறதுதான்--
  நேர்த்தியான நடை ... பாராட்டுக்கள்

  ReplyDelete
 9. அருமையான பதிவு. இதையே நீங்கள் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பலாம்.

  நன்றி ஸ்ரீ

  ReplyDelete
 10. சுபா வெங்கட். ஆனந்த விகடன், ஜூனியர் விகடனில் பொறுப்பாசிரியராக இருந்துவிட்டு, கவுதம், திருப்பதிசாமி ஆகியோருடன் இணைந்து வீடியோ பத்திரிகையை நடத்திவிட்டு மின்பிம்பங்களுக்கு சென்றவர். அங்கிருந்து ராடன், பின் பிரமிட் சாய்மீராவுக்கு சென்றவர், இப்போது மீண்டும் ராடனில் கிரியேடிவ் ஹெட்டாக இருக்கிறார்.///


  மிக விரைவாய் விரிவாய் விளக்கியதற்க்கு பாராட்டுக்ள் பைத்தியக்காரன்

  ReplyDelete
 11. அருமையான பதிவு, கொஞ்சம் டிரை பன்னுங்க.. அந்தணன் மாதிரி எழுதிடுவீங்க!//

  நன்றி கலை எழுதிடுவோம்

  ReplyDelete
 12. வணக்கம் ஜாக்கி
  உங்கள் மலரும் நினைவுகள் சிறப்பாக இருந்தது வாழ்த்துகள்.//
  நன்றி சிவா பாராட்டுக்கு

  ReplyDelete
 13. பதிவு ரொம்பவே அருமை.

  ரசிச்சேன் .

  அந்தப் பொண்ணும் குடும்பமும் நல்லா இருக்கட்டும்.


  கொசுவத்தி ஏத்துனா எப்படி நல்ல விஷயங்கள் எல்லாம் வெளியிலே வருது பாருங்களேன்!!!//

  நன்றி துளசி மேடம் தொடர் வாசிப்புக்கும் பாராட்டுக்கும்

  ReplyDelete
 14. move like a streem.excellent flow.way of expression make u like ra.ki.like that.try for short stories.all the best.
  flora//

  நன்றி ப்ளோரா தங்கள் தொடர் வாசிப்புக்கு மனம் திறந்த பாராட்டுதலுக்கும்

  ReplyDelete
 15. நல்லா எழுதியிருக்கீங்க!! உங்க கூடவே பயணம் செய்ய வைக்குது உங்க நடை!! வாழ்த்துகள்!!//

  நன்றி செந்தில் வேலன் தங்கள் பாராட்டுக்கு

  ReplyDelete
 16. சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்டுத்தி் பாக்குறதுதான்--
  நேர்த்தியான நடை ... பாராட்டுக்கள்//

  நன்றி மந்திரன் தங்கள் பாராட்டுக்கும் வாசிப்புக்கும்

  ReplyDelete
 17. //போட்டோகிராபர் ராஜசேகர் என்ற நினைக்கின்றேன்//

  ஆளு கொஞ்சம் ஒருதலைராகம் சங்கர் மாதிரி இருந்தாரா? அஜால்குஜாலாக பேசினார் என்றால் அவர் ராஜசேகரேதான்.


  //கவுதம், திருப்பதிசாமி ஆகியோருடன் இணைந்து வீடியோ பத்திரிகையை நடத்திவிட்டு //

  இது புது தகவல்.

  அந்த வீடியோ பத்திரிகை பெயர் சொல்லமுடியுமா?

  ReplyDelete
 18. அருமையான இனிமையான அனுபவம்!!
  அன்புடன் அருணா

  ReplyDelete
 19. கட்டுரை அருமை ..

  ReplyDelete
 20. [[இந்திரா காந்தி ஹேர்ஸ்டைலில் வந்த ஒரு பெண்மணி எங்கள் பயணத்துக்கு ஆல்தபெஸ்ட் சொன்னார்.]]

  சந்தேகமே இல்லை ஜாக்கி..

  இது கண்டிப்பா எங்க "ஆத்தாதான்..!"

  ReplyDelete
 21. ஆளு கொஞ்சம் ஒருதலைராகம் சங்கர் மாதிரி இருந்தாரா? அஜால்குஜாலாக பேசினார் என்றால் அவர் ராஜசேகரேதான்.--//

  லக்கி அவரேதான்

  ReplyDelete
 22. அருமையான இனிமையான அனுபவம்!!
  அன்புடன் அருணா//

  நன்றி அருனா

  ReplyDelete
 23. [[இந்திரா காந்தி ஹேர்ஸ்டைலில் வந்த ஒரு பெண்மணி எங்கள் பயணத்துக்கு ஆல்தபெஸ்ட் சொன்னார்.]]

  சந்தேகமே இல்லை ஜாக்கி..

  இது கண்டிப்பா எங்க "ஆத்தாதான்..!"//

  சொரத்துல ஆத்தா ஞாபகம் படுத்தி எடுக்குது போல

  நன்றி உண்மைதமிழன்

  ReplyDelete
 24. நன்றி ராஜராஜன்

  ReplyDelete
 25. ஜாக்கி பாஸ்!
  நான் உங்களையும் மாட்டி விட்ருக்கேன்...
  சீக்கிரம் பதிலை ரெடி பண்ணவும்!

  எதுக்கா? அப்படியே நம்ம பக்கம் வாங்க...
  எதுக்குன்னு தெரிஞ்சுகுங்க..
  http://kalakalkalai.blogspot.com/2009/05/blog-post_28.html

  ReplyDelete
 26. நல்லா எழுதியிருக்கீங்க..நேர்த்தியான நடை..

  ReplyDelete
 27. அன்பின் ஜாக்கி,

  சரவணா வீடியோ நிலையம் தொழிற்கல்வியை முழுமையாக படிக்காத, ஆனால் கற்றுகொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பல்கலை கழகமாக விளங்கியது.

  அங்கு ஆரம்பகாலத்தில் சிரமப்பட்டு தொழில் கற்றுகொண்டு இன்று நல்ல நிலையில் உள்ள பலரை நான் அறிவேன் (நீங்கள் உட்பட)

  நான், சென்னையில், பிராட்காஸ்ட் எகியூப்மெண்ட் இந்தியா (ஸோனி நிறுவனத்தின் டீலர்) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த கால கட்டங்களில்(93-99) பலமுறை அங்கு வந்துள்ளேன்.

  பெரியவர் கனேசன்,சேகர்,மிக்ஸிங் கண்ணன் போன்றவர்களுடன் பழகியிருக்கிறேன்

  அன்புடன்
  அரவிந்தன்
  பெங்களூர்

  ReplyDelete
 28. சிவராமன் சார்

  நீங்க ஒரு நடமாடும் என்சைக்லோபீடியா !!!

  ReplyDelete
 29. ஜாக்கி சேகர் சுவாராசியமாக எழுதி இருக்கிறீர்கள்

  ReplyDelete
 30. ஜாக்கி பாஸ்!
  நான் உங்களையும் மாட்டி விட்ருக்கேன்...
  சீக்கிரம் பதிலை ரெடி பண்ணவும்!

  எதுக்கா? அப்படியே நம்ம பக்கம் வாங்க...
  எதுக்குன்னு தெரிஞ்சுகுங்க..
  http://kalakalkalai.blogspot.com/2009/05/blog-post_28.html-//


  கண்டிப்பா எழுதறேன் கலை

  ReplyDelete
 31. நல்லா எழுதியிருக்கீங்க..நேர்த்தியான நடை..///

  நன்றி டிவி ராதாகிருஷ்ணன் உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு

  ReplyDelete
 32. நான், சென்னையில், பிராட்காஸ்ட் எகியூப்மெண்ட் இந்தியா (ஸோனி நிறுவனத்தின் டீலர்) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த கால கட்டங்களில்(93-99) பலமுறை அங்கு வந்துள்ளேன்.//

  அரவிந்தன் அங்கு நிறைய முறை கேமரா தூக்கிகொண்டு வந்து இருக்கிறேன்.

  உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம் என்னுள் நன்றி,

  ReplyDelete
 33. சிவராமன் சார்

  நீங்க ஒரு நடமாடும் என்சைக்லோபீடியா !!!//

  உண்மைதான் புருனோ

  ReplyDelete
 34. ஜாக்கி சேகர் சுவாராசியமாக எழுதி இருக்கிறீர்கள்//

  நன்றி கிரி தங்கள் பாராட்டுக்கு

  ReplyDelete
 35. வால்பாறைக்கு ஒரு ட்ரிப் அடிச்ச மாதிரி இருக்கு. நல்ல அருமையா எழுதியிருக்கீங்க!

  ReplyDelete
 36. அருமை அருமை அருமை !!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner