தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி....



தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட போது அதன் முடிவுகள் யாரும் எதிர்பாபராத வண்ணம் இருந்தது என்பதே உண்மையிலும் உண்மை.திமுக கூட்டனி17 அல்லது 20 சீ்ட்டுகளில் ஜெயிக்கும் என்ற நிலை மாறி அது 28ல் ஜெயித்த போது எல்லோரையும் புருவம் உயர வைத்து விட்டது.

இலங்கை பிரச்சனையையும் நம் நாட்டு தேர்தலையும் பெருவாரியான மக்கள் போட்டுக்குழப்பி்கொள்ளவில்லை.அல்லது ஈழத்தின் பால் திடிர் அன்பும் பாசம் வைத்த கட்சிகளை மக்கள் புறக்கனித்து விட்டார்கள் என்பதே உண்மை.

பணம் தேர்தலில் விளையாடியதுஎன்கிறார்கள். எந்த தேர்தலில் பணம் விளையாடவில்லை? இந்த தேர்தலில் விளையாடி விட்டதாக கூக்குரல் இடுகின்றீர்கள் அப்படியே பணம் விளையாடினாலும் அது குப்பத்து மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. அப்படி கொடுத்தாலும் அங்கே போய் மாற்றி போட்டு வரும் மக்களை நான் அறிவேன். என் வீட்டு பக்கத்தில் அதிமுக,திமுக இரண்டு பேரும் பணம் கொடுக்க ரெண்டையும் வாங்ககி வைத்துக்கொண்டு ஓட்டு போட்டார்கள்.


எந்த தேர்தலிலும் இல்லாது இந்த தேர்தலில் இளைஞர் கூட்டம் பெரும் அளவில் வாக்கு அளித்தது. அது கூட இந்த நிலைப்பட்டை எடுக்கவைத்திருக்கும்.

மாறன் சகோதரர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பை தீர்த்துக்கொண்டதும் கூட இந்த தேர்தலில் திமுகாவுக்கு சாதகம் எனலாம்.


சீமான்,தாமரை,பாரதிராஜா போன்றவர்களின் ஆவேச பேச்சு, ஜெவின் தனி ஈழம், ராமதாசின் தைலாபுர பிரஸ்மீட்,வைகோ போன்றவர்களின் எழுச்சியான பேச்சு இவைகளையும் மீறி இந்த வெற்றி என்கிற போது யோசிக்க வேண்டிய விஷயம்.

அரசு உழியர்கள்மற்றும் சிறுபாண்மையர் ஓட்டுக்கள் அபபடியே திமுகாவுக்கு வந்து விட்டது.

அதே போல் பாமக அடிக்கடி கூட்டனி மாறுவதை இந்த முறை மக்கள் ரசிக்கவில்லை,

ஜெயலலிதா ஹெலிகாப்ட்ரில் வந்து பிரசாரம் செய்வதையும் தேர்தலுக்கு முன்பு மட்டும் வந்து தமிழகம் முழுவதும் காட்சி கொடுப்பதையும் அல்லது பிரசாரத்தில் எழுதி வைத்து படித்து பிரசாரம் செய்வதையும் மக்கள் ரசிக்கவில்லை.

விஜயகாந் கூட்டனி பற்றி இனி அவர் யோசிக்கவேண்டும்.

வைகோ எப்போது அதிமுகழகத்தில் இனைந்தாரோ அப்போதே மக்கள் மன்றத்தில் அவருக்கு செல்வாக்கு சரிந்து விட்டது.

தற்போது ஈழத்தை கையில் வைத்து பிரச்சாரம் செய்த பாமக, மக்கள் தொலைக்காட்சியில் சீமான் பேச்சும் ஈழ மக்கள் பிரச்சனைகளும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆனால் அது ஒரு இடத்தில் கூட வரவில்லை. வெளிப்படையாக ஆயுதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்று மக்களுக்கு தெரிந்தும் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.

மக்களுக்கு ஈழத்தின் வேதனைகள் புரிந்தாலும் இந்தியா ஒரு அளவுக்கு மேல் இலங்கையில் தலையிட முடியாது என்று நினைத்தார்களா? அல்லது இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை என்ற அலட்சியமா? அல்லது நான் என் குடும்பம் தமிழகத்தில் சொளக்கியமாக இருக்கின்றோம் யார் எக்கேடு கெட்டு போனால் எனக்கு என்ன என்ற மனோபாவமா? ஒன்றுமே புரியவில்லை.

வைகோ தோல்வி அதிர்ச்சியை கொடுக்கின்றது. நல்ல பேச்சாளர், நல்ல மனிதரும் கூட ஆனால் எல்லாம் விழளுக்கு இறைத்த நீராயிற்று...

எல்லா தேர்தலிலும் நாங்கள்தான். நாங்கள் நிற்க்கும் கூட்டனிதான் வெற்றிக்கூட்டனி என்று தலைகனத்தோடு சொன்னவர்கள். கிராமத்தை மையமாக வைத்து அரசியல் நடத்தும் லாலுவும்ம் ராமதாசும் இந்த தேர்தலில் மரணஅடி வாங்கினார்கள் என்பதே உண்மை.

அன்புடன்/ஜாக்கிசேகர்

10 comments:

  1. ரொம்ப சிம்பில் ஜாக்கி ஈழ பிரச்சனையை மக்கள் புரிந்துக்கொள்ள தொடங்கிவிட்டார்கள்

    ReplyDelete
  2. ஆமாம் அக்னி... ஈழ பிரச்சனையை மக்கள் புரிந்துதான் கொண்டுவிட்டார்கள். அப்பாடி இப்போதாவது புரிந்ததே..

    ReplyDelete
  3. ஜாக்கி.. தமிழக தேர்தல் முடிவுகள் நான் கண்டிப்பாக எதிர் பார்த்ததுதான்..

    மே 16 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 27 ம் தேதி சொன்னது..



    தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:

    http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html

    ReplyDelete
  4. //மாறன் சகோதரர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பை தீர்த்துக்கொண்டதும் கூட இந்த தேர்தலில் திமுகாவுக்கு சாதகம் எனலாம்.//

    ///எல்லா தேர்தலிலும் நாங்கள்தான். நாங்கள் நிற்க்கும் கூட்டனிதான் வெற்றிக்கூட்டனி என்று தலைகனத்தோடு சொன்னவர்கள். கிராமத்தை மையமாக வைத்து அரசியல் நடத்தும் லாலுவும்ம் ராமதாசும் இந்த தேர்தலில் மரணஅடி வாங்கினார்கள் என்பதே உண்மை.//





    நல்ல அலசல் !

    ReplyDelete
  5. //கிராமத்தை மையமாக வைத்து அரசியல் நடத்தும் லாலுவும்ம் ராமதாசும் இந்த தேர்தலில் மரணஅடி வாங்கினார்கள் என்பதே உண்மை.//

    100% உண்மை.பாஸ்வானையும் இந்த லிஸ்டில சேக்கலாம்


    //எழுதி வைத்து படித்து பிரசாரம் செய்வதையும் மக்கள் ரசிக்கவில்லை//

    சரி அப்படியே எழுதி வச்சே படிக்கட்டுமே... அநேகமாக அனைத்து தொகுதிகளுக்கும் ஒரு ஐந்து காகிதம் தான். ஒரே பேச்சு தான். இப்படி இருந்துமே அவங்களால சரியா பேச முடியல. குறிப்பாக காஞ்சிபுர பிரச்சார கூட்டத்தில பேச தொடங்கினப்போ... மேடையில் இருந்தவர்கள் எல்லாரையும் கட்சி வாரியாக அவர்களே!அவர்களே! சொல்லிட்டு இருந்தாங்க அம்மா. அப்போ அடிச்ச காத்தில 2 காகிதம் பறந்திடிச்சு. கூடியிருந்த பொதுமக்களே, ரத்தத்தின் ரத்தங்களே, கழக பாசறை கண்மணிகளே எல்லாம் அந்த பறந்து போன காகிதத்தில இருந்திருக்கு போல;அம்மா அத விட்டுட்டாங்க. உடனே ஆளுங்கட்சி சரி இல்ல அப்பிடி இப்பிடி நு குறை சொல்ல தொடங்கிட்டாங்க. இவங்க இப்பிடி பேசினா அப்புறம் எப்பிடி ஓட்டு விழும்? கூடியிருக்கிற மக்களை கூடவா சொல்றதுக்கு காகிதம் வேணும். அப்புறம் பக்கத்தில இருந்த பாதுகாவலர் பறந்து போன காகிதம் கொண்டு வந்ததும் கழக கண்மணிகளே அப்படிங்கிறாங்க... என்ன கொடும?

    ReplyDelete
  6. அமைதியாக, ஆனால் அழுத்தமாக இருக்குது பதிவு!
    என் மனதில் இருந்த எண்ணங்கள்
    உங்கள் வார்தைகளில்...

    (இனி நா என்னத எழுதறது?)

    ReplyDelete
  7. dhiruttu thanama munnerum kalagam DMK vin vetri than ithu. Sivagangai la nadantha konjam nenachu paarunga

    naveen chawla + sonia + kalaingar kootani than intha election.

    makkalukk ithu therium. ymathunavanga othukka maatanga. viraivil ithu veliyil varum .

    ReplyDelete
  8. //வைகோ தோல்வி அதிர்ச்சியை கொடுக்கின்றது. நல்ல பேச்சாளர், நல்ல மனிதரும் கூட ஆனால் எல்லாம் விழளுக்கு இறைத்த நீராயிற்று...//

    ம்ம்ம்ம்ம்ம்ஹும்...... என்ன சொல்ல.... பாவம் அவர விட்ருங்க

    ReplyDelete
  9. நான் என் குடும்பம் தமிழகத்தில் சொளக்கியமாக இருக்கின்றோம் யார் எக்கேடு கெட்டு போனால் எனக்கு என்ன என்ற மனோபாவமா?

    unmai

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner