அப்புறம் என்ன மயித்துக்குடா காசு வாங்கறிங்க-????
சில இடங்களில் சுத்தமாக லாஜிக் என்பது இருக்கவே இருக்காது, அப்படி லாஜிக் சுத்தமாக இல்லாத விஷயத்தை உங்ககிட்ட நான் பகிர்ந்துக்கிறேன்...
பல லட்சக்கணக்கான மக்கள் வந்து போற இடம் கோயம்பேடு பேருந்து நிலையம்..
உதாரணத்துக்கு மாம்பலத்தில் இருந்து புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேர் கோயம்புத்தூர் போறாங்கன்னு வச்சுக்குங்க...அங்க ரெண்டு நாள் தங்கிட்டு வராங்கன்னு வச்சுக்குங்க அல்லது மிட்நைட்ல வந்து கோயம்பேடு இறங்கினா ரொம்ப ஈசியா இருக்கறது டூவீலர் எடுத்து வந்து கோயம்பேடு பஸ்ஸாண்டுல போட்டுட்டு ஊருக்கு போறதுதான் சிக்கனமான வழி....
இல்லன்னா மாம்பலத்தில் இருந்து கோயம்பேடுக்கு வருவதற்க்கு ஆட்டோவுக்கு 150 ரூபாயும் சப்போஸ் மிட்நைட் வந்து இறங்கிட்டா 200 ரூபாயும் ஆட்டோக்காரன்கிட்ட தெண்டம் அழனும். அதனால பொதுவா கோயம்பேடு பார்க்கிங் ஸ்டேண்டுல டூவலர் போட்டுட்டு ஊருக்கு போறதுதான் புத்திசாலிதனம்..
ஊருக்கு போயிட்டு
4 நாளைக்கு கழிச்சி வந்ததாக்கூட வெறும் 40ரூபாய்தான் பார்க்கிங் சார்ஜ்ஆகும். இப்ப பிரச்சனை பார்க்கிங் சார்ஜ் கட்டணத்தை பத்திதான். நேத்துதான் எதெச்சையா பார்க்கிங்ல கொடுத்த சிலிப்பை திருப்பி பார்த்தேன்.
அதாவது ஒருநாள் கட்டணம் பத்து ரூபாய்....
அதுல இருந்த மூணாவதா இருந்த நிபந்தனையை படிச்சு பார்த்துட்டு அப்படியே ஷாக்காயிட்டேன்... அதாவது ஊர்தியை நிறுத்தப்பட்ட காலத்துக்குள் வாகனத்துக்கு ஏற்படுகின்ற சேதத்திற்க்கோ அல்லது திருட்டுக்கோ நிர்வாகமோ அல்லது நிறுத்துமிட அலுவலரோ பொறுப்பு இல்லை என்று சொல்கிறது...
அப்புறம் எதுக்கு பார்க்கிங் சார்ஜ் வாங்கறிங்க? திருடிக்கிட்டு போன நாங்க பொறுப்பு இல்லைன்னு சொல்லறிங்க இல்லை , அப்புறம் எதுக்கு இங்க வண்டியை நிறுத்திட்டு காசு கொடுத்துட்டு போகனும்.... காசு கொடுக்காம ஏதாவது பொறம் போக்குல நிறுத்திட்டு போறோம்... காசு கொடுக்கறது வண்டியை எந்த சேதமும் இல்லாம பாத்துக்கறதுக்குதானே? அப்புறம் எதுக்குடா
காசு வாங்கறிங்க???
அது மட்டும் இல்லாம சென்ட்ரல் ஸ்டேசன் பார்க்கிங் சிலிப்லயும் இந்த கொடுமை கூத்துதான் நடக்குது... அது மட்டும் இல்லாம வண்டியை எடு்க்கும் போது எப்படியும் இரண்டு இண்டிகேட்டரையாவது உடைச்சி வச்சிடறானுங்க பண்ணடை பசங்க...
அப்புறம் என்ன மயித்துக்கு பார்க்கிங் காசு?
அன்புடன் அடங்காத கோபத்துடன்...
ஜாக்கிசேகர்
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
Its the same case in US Parking lots too. Click here to see parking boards in the US:
ReplyDeletehttp://img179.imageshack.us/img179/8330/parkatyourownrisksmall.png
or here
http://img179.imageshack.us/img179/9740/managementnotresponsibl.gif
The money collected as parking charges are not for providing security to your vehicle but a sort of a rent for the space where the vehicle is parked.
less tension :)
ReplyDeleteParking Fee is rent for the place where you park your vehicle and not for the security of the vehicle.
ReplyDeleteஎன்னத்த சொல்ல?
ReplyDeleteஇங்கேயும் (இந்தோனேசியா) அது போன்ற கண்டிஷன்கள் லேபிளில் போட்டிருந்தாலும் பொதுவாக எல்லா பார்க்கிங் லாட்களுக்கும் இன்சூரன்ஸ் போட்டிருப்பதால் வண்டி தொலைந்து போனால் தேய்மானம் தவிர்த்த அன்றைய மார்க்கெட் விலையை இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொடுக்கின்றன.
ReplyDeleteஉங்கள் வண்டியும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தால் பார்க்கிங் லாட் இன்சூரன்ஸ் கம்பெனியும் , வண்டியின் இன்சூரன்ஸ் கம்பெனியும் தொகையைப் பங்கிட்டுக் கொடுக்கின்றன.
அதனால் நோ ப்ராபளம். அனுபவத்தில் சொல்கிறேன்.
ஆனால் , இன்சூரன்ஸ் முறைப்பாடுகள் முற்றிலும் குழப்பகரமான இந்தியாவில் ஏதாச்சும் நல்லாத் தெரிஞ்ச ப்ரண்டு வீட்லயோ , கடையிலேயோ வண்டிய விட்டுட்டுப் போறதுதான் பாதுகாப்பு.
இல்லாட்டி பெட்ரோல் முதற்கொண்டு திருடி வித்துடுவாங்க.
திருட்டு குறைப்பதற்கு முக்கியமாக இயங்க வேண்டிய துறைகள் காவல்.(காவல்துறைக்குள்ளேயே வாகன பாதுகாப்புக்கு தனி துறை)
ReplyDeleteஇன்சூரன்ஸ் கம்பெனிகள்.
Scrap எனப்படும் காயலான் கடைக்கும் கூட தனித் தனி வாகனங்கள்,பொருட்களை விற்பதற்கான அரசாங்க அனுமதிச் சீட்டு முறை.
வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பது.
இதையெல்லாவற்றையும் விட முக்கியமானது அடுத்தவன் பொருளை திருடக்கூடாது என்கின்ற மனோபாவம்.
இதையெல்லாம் மீறும் பட்சத்தில் கடும்தண்டனை.
//உங்கள் வண்டியும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தால் பார்க்கிங் லாட் இன்சூரன்ஸ் கம்பெனியும் , வண்டியின் இன்சூரன்ஸ் கம்பெனியும் தொகையைப் பங்கிட்டுக் கொடுக்கின்றன.//
ReplyDeleteமதிபாலா கருத்து பாருங்க.நடைமுறைப் படுத்த வேண்டிய முக்கியமான ஒன்று.
எல்லா பார்க்கிங்கும் அப்படிதான்... :-(
ReplyDeleteஅது வண்டிக்காக இருக்காது. பாகங்களுக்காக மற்றும் அதில் உள்ள பொருட்களுக்காக இருக்கும்.
ReplyDeleteகூல் டவுன் சார். உங்களிடம் வாங்கும் பணம், அவர்கள் இடத்தில் நீங்கள் வண்டியை நிறுத்துவதற்கான வாடகை தான்.
ReplyDeleteபேசாம வண்டியிலேயே ஊருக்கு போயிட்டா என்ன?
ReplyDeleteநல்லா கேளுங்க சார். இத அவனுங்ககிட்ட கேக்கலையா?
ReplyDeleteஅப்புரம் எதுக்கு சார் வண்டி நம்பர் எல்லாம் எழுதிக்கிறாங்க.
ReplyDeleteஅதுதானே அதெப்படி, பர்சை வச்சி மறைக்கலாம்..
ReplyDeleteஎதுக்கு இவ்வளவு சூடாகிறீங்க. நம்ம ஊர்ல இன்னமும் “திருடு போனால்” என்பதற்க்கான இன்சூரன்ஸை யாரும் மதிப்பதில்லை(நான் உட்பட). மிக சொற்பமான தொகைக்கு கிடைக்கும் இந்த வகை இன்சூரன்ஸ் நம் எல்லோரிடமும் இருக்கும் என்கிற நம்பிக்கையில் உலகமெங்கும் பார்க்கிங்கில் “திருட்டுக்கு“ பொறுப்பேற்பதில்லை. நீங்க இப்பதான் முதன் முறையாக பார்க்கிங் டிக்கெட்டின் பின்புறத்தை பார்க்கிறீங்க போலருக்கு.
ReplyDeleteசில அவசர பண்ணாடைகளுக்கு பொறாமைப் .... இருக்கும்.வண்டி நல்லா இரு ந்தா புடிக்காது .வேணுமின்னே இடிப்பானுங்க , அதையெல்லாமா ஸ்டேண்டுக்காரன் பாக்க முடியும். எல்லா ஊருலியும் இதே பொழப்புதான் ,,,
ReplyDeleteHeading is too rude, pls change the word.
ReplyDeleteBut Guindi raiway station parking is worst than this.
இந்த மாதிரி சமயத்தில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால் பிரச்சனை வராது. என் நண்பர்கள் நான் ஊருக்குப் போகும் போதெல்லாம் எனக்கு பீருடன் சாப்பாடும் வாங்கிக்கொடுத்து பஸ் ஸ்டாண்டிலோ, ரயில் நிலயத்திலேயோ இறக்கி விடுவார்கள். வரும்போது வண்டியுடன் வந்து அழைத்துப் போவார்கள்.
ReplyDeleteநானும் என் நண்பர்கள் ஊருக்குப் போனால் அதையே செய்வேன்.
சைடிலே ஒரு குட்டிக்கதை:
இது நடந்தது நியூ யார்க்கிலே. ஒரு பெரிய பணக்காரர் வெளியூரிலிருந்து தன் காரிலேயே நியூ யார்க் நகரம் வந்தார். நியூ யார்க்கில் அவருக்கு 3 நாள் ஜோலி.
நியூ யார்க் நகரிலும் நம்ம ஊர் போல தான் இட நெருக்கடி. பார்க்கிங் சார்ஜும் எக்கச்சக்கம். 3 நாளைக்கு 300 டாலருக்கு மேல் கறந்து விடுவார்கள்.
அவரது காரோ அரை மிலியன் டாலர் மதிப்புள்ளது. அவருக்கு சாதாரண பார்க்கிங் லாட்களில் விடவும் மனசில்லை. பார்த்தார் பெரியவர். நேரே பாங்க் ஆப் அமெரிக்காவின் கிளைக்கு சென்றார். தனது காரை வைத்துக் கொண்டு அவசரமாக 5000 டாலர் கடன் தர முடியுமா என்று கேட்டார். ஒரு மாதத்திற்குள் பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விட்டு காரை எடுத்துக் கொள்வதாகக் கூறினார். பேங்கும் ஒரு மாத வட்டியாக சுமார் 25 டாலரை எடுத்துக் கொண்டு காரையும் தன் கிளை வளாகத்திலேயே பத்திரமாக வைத்துக் கொண்டது.
3 நாள் ஜோலி முடிந்ததும் 25 டாலரை வட்டியாகக் கட்டி விட்டு 275 டாலர் மிச்சம் பிடித்தார் அவர்.
ஜென்ரல் அங்கேயும் அதே பிரச்சனைதானா?நன்றி வருகைக்கு
ReplyDeleteநன்றி சர்வேசன்
ReplyDeleteதனசேகரன் நீங்கள் என்ன சொன்னாலும் காசு வாங்கிவிட்டு இப்படி சொல்லறதை ஏத்துக்கமுடியலை
ReplyDeleteநன்றி முரளி என்னத்த சொல்ல
ReplyDeleteஇங்கேயும் (இந்தோனேசியா) அது போன்ற கண்டிஷன்கள் லேபிளில் போட்டிருந்தாலும் பொதுவாக எல்லா பார்க்கிங் லாட்களுக்கும் இன்சூரன்ஸ் போட்டிருப்பதால் வண்டி தொலைந்து போனால் தேய்மானம் தவிர்த்த அன்றைய மார்க்கெட் விலையை இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொடுக்கின்றன.
ReplyDeleteஉங்கள் வண்டியும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தால் பார்க்கிங் லாட் இன்சூரன்ஸ் கம்பெனியும் , வண்டியின் இன்சூரன்ஸ் கம்பெனியும் தொகையைப் பங்கிட்டுக் கொடுக்கின்றன.
மதிபாலா தங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன் என் வண்டிக்கு பக்கவாக இன்ஸ்சுரன்ஸ் இருக்கின்றது, அதே போல் கோயம் பேடு பக்கத்தில் எந்த நண்பர் வீடும் இல்லை
இதையெல்லாவற்றையும் விட முக்கியமானது அடுத்தவன் பொருளை திருடக்கூடாது என்கின்ற மனோபாவம்.
ReplyDeleteராஜநடராஜன் இந்த வாக்கியத்துக்கே வாய்பே இல்லை சாரே
எல்லா பார்க்கிங்கும் அப்படிதான்... :-(
ReplyDeleteநன்றி சரவணகுமரன்
//உங்கள் வண்டியும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தால் பார்க்கிங் லாட் இன்சூரன்ஸ் கம்பெனியும் , வண்டியின் இன்சூரன்ஸ் கம்பெனியும் தொகையைப் பங்கிட்டுக் கொடுக்கின்றன.//
ReplyDeleteமதிபாலா கருத்து பாருங்க.நடைமுறைப் படுத்த வேண்டிய முக்கியமான ஒன்று.//
உண்மை நடராஜன்
நன்றி புகலினி
ReplyDeleteகூல் டவுன் சார். உங்களிடம் வாங்கும் பணம், அவர்கள் இடத்தில் நீங்கள் வண்டியை நிறுத்துவதற்கான வாடகை தான்.// உண்மைதான் பவுடர்
ReplyDeleteஇருப்பினும் ஒரு லாட்ஜீல் தங்குகின்றோம் நீ தங்குவதற்க்கு மட்டும் வாடகை...
பொருள் தொலைந்தாள் நான் பொறுப்பல்ல என்று சொன்னால் கோபம் வருமா வராதா?
பேசாம வண்டியிலேயே ஊருக்கு போயிட்டா என்ன?//
ReplyDeleteதண்டோரா எனக்கு தெரிஞ்சி என் சொந்த ஊர் கடலுருக்கு ஒரு 100 முறைக்கு மேல்டூவீலரில் சென்றது நானகத்தான் இருப்பேன்
நல்லா கேளுங்க சார். இத அவனுங்ககிட்ட கேக்கலையா?// பப்பு கேட்டமட்டும் மரியாதையா பதில் சொல்வானுங்களா? சொல்லுங்க
ReplyDeleteஅப்புரம் எதுக்கு சார் வண்டி நம்பர் எல்லாம் எழுதிக்கிறாங்க.//
ReplyDeleteவிஷ்னு கொஞ்சமாவது வேலை செய்யறாங்களாம்
முதன் முறையாக பார்க்கிங் டிக்கெட்டின் பின்புறத்தை பார்க்கிறீங்க போலருக்கு.//
ReplyDeleteஉண்மை செல்வக்குமார்
சில அவசர பண்ணாடைகளுக்கு பொறாமைப் .... இருக்கும்.வண்டி நல்லா இரு ந்தா புடிக்காது .வேணுமின்னே இடிப்பானுங்க , அதையெல்லாமா ஸ்டேண்டுக்காரன் பாக்க முடியும். எல்லா ஊருலியும் இதே பொழப்புதான்//
ReplyDeleteஸ்டேன்டுக்காரன் வண்டிக்கு எடம் வேனும் வண்டி அடுக்கறப்ப அவனே பதியை ஒடைச்சடறான்
Heading is too rude, pls change the word. உண்மைதான் குப்பன் கோபம் அவ்வளவுதான் வண்டிபடறபாட்டை நினைச்சா...
ReplyDeleteரங்குடு நல்ல புத்திசாலியான ஆள் அவர் வருகைக்கும் கதைக்கும்
ReplyDeleteஉங்களோடது நியாயமான கோபம்தான்.
ReplyDeleteஉங்களோடது நியாயமான கோபம்தான்.
ReplyDeleteஉங்களோடது நியாயமான கோபம்தான்.
ReplyDelete//அதுதானே அதெப்படி, பர்சை வச்சி மறைக்கலாம்..//
பத்துரூபா ரொம்ப ஜாஸ்தி தல!
ReplyDeleteஅதுக்கு ஆட்டோவுலயே போயிரலாம்!
/
ReplyDeleteகாசு கொடுக்கறது வண்டியை எந்த சேதமும் இல்லாம பாத்துக்கறதுக்குதானே? அப்புறம் எதுக்குடா
காசு வாங்கறிங்க???
அது மட்டும் இல்லாம சென்ட்ரல் ஸ்டேசன் பார்க்கிங் சிலிப்லயும் இந்த கொடுமை கூத்துதான் நடக்குது... அது மட்டும் இல்லாம வண்டியை எடு்க்கும் போது எப்படியும் இரண்டு இண்டிகேட்டரையாவது உடைச்சி வச்சிடறானுங்க பண்ணடை பசங்க...
அப்புறம் என்ன மயித்துக்கு பார்க்கிங் காசு?
/
நியாயமான கோபம். பொதுநல வழக்கு எதும் போட முடியுமானு விசாரிங்க தலைவா.
அந்த கோபத்தை என் மீதும் காட்டமாட்டேன் என்று உறுதியளித்தால் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்,
ReplyDeleteஇந்தப் பிரச்னை ஏற்கனவே நுகர்வோர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது.
நீங்கள் செலுத்தும் கட்டணமானது, வண்டியை பாதுகாப்பதற்கு அல்ல. மாறாக தங்களது வண்டியினை நிறுத்துவதற்கு பொது இடத்தினை பயன்படுத்திக் கொள்கிறீர்களே...அந்த வாடகை கட்டணம். அவ்வளவுதான்.
பாதுகாப்பு உங்கள் பொறுப்பு. உங்களால் செய்ய முடிந்தது, வண்டிக்கு தகுந்த காப்பீடு செய்வதுதான்.
குறுகிய கால காப்பீடுடன் கூடிய வாகன நிறுத்தம் அமைக்க மாநகராட்சிக்கு யோசனை கூறலாம். ஆனால், நிறுத்துதல் கட்டணம் அதிகரிக்கும். அதுதான் ஏற்கனவே வண்டிக்கு திருட்டுக்கான காப்பீடு உள்ளதே, ஏன் தனியாக இங்கு? என்று அப்பொழுது யாராவது கேள்வி எழுப்புவார்கள்...
எனவே இனி கோபப்படுமுன்னர் நிதானமாக யோசித்து பின்னர் கோபப்படவும் :-)
உங்களோடது நியாயமான கோபம்தான்.
ReplyDelete//அதுதானே அதெப்படி, பர்சை வச்சி மறைக்கலாம்..//
ஷாஜி அது வேற கடும் கோபம்....
பத்துரூபா ரொம்ப ஜாஸ்தி தல!
ReplyDeleteஅதுக்கு ஆட்டோவுலயே போயிரலாம்!//
உண்மைதான் ஆனா மிட் நைட்ல வந்து இறங்கும் போது ஆட்டோக்காரன் கேட்கும் தொகை மூச்சடைக்க வைக்கும் வால்...
நியாயமான கோபம். பொதுநல வழக்கு எதும் போட முடியுமானு விசாரிங்க தலைவா.//
ReplyDeleteமங்களுர் வழக்கு போடறதக்கு வக்கு இருந்தா ஏன் பிளாக் எழுதிக்கிட்டு...
அதுதானே அதெப்படி, பர்சை வச்சி மறைக்கலாம்..//
ReplyDeleteநன்றி தங்கள் வருகைக்கு
எனவே இனி கோபப்படுமுன்னர் நிதானமாக யோசித்து பின்னர் கோபப்படவும் :-)//
ReplyDeleteபிரபு சார் இந்த பதிவை எழுதினதுக்கு அப்புறம்தான் எனக்கு பல உண்மைகள் புரிஞ்சிது அது மட்டும் இல்லாம எல்லா ஊர்லயும் இதே கூத்துதான் தலைவரே..
உங்கமேல கோபம் எதுக்கு பட போறேன்
ReplyDeleteதன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009
நானும் கவினித்துள்ளேன்... என்ன செய்ய பெரிய அதிர்ச்சி தான்...
ReplyDeleteதட் இஸ் தமிழர் பண்பாடு
ReplyDeleteகொல்லை அடிப்பது எங்களுக்கும் எங்களை ஆளுகின்ற தலைவர்களுக்கும்
ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று .
இஷ்டமிருந்தால் வண்டியை வுடு
இல்லாட்டி நடையை கட்டு .
ரொம்ப வாய் தொறந்தே திரும்ப வரும்போது வண்டியில் போகமுடியாது .ஆம்புலேன்சில்தான் போகணும் .
புரிஞ்சதா
ரெளத்திரம் பழகு
ReplyDelete