தேர்தல் ஆனையத்திற்க்கு யார் புத்தி சொல்வது????
நேற்று இந்தியாவில் கடைசிகட்ட தேர்தல் நடந்தது முடிந்தது. புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை தேர்தல் கமிஷன் எடுத்து இருந்தது. நல்ல விஷயம் போட்டோ இல்லாமல் யார் வந்தாலும் அதனை கண்டு பிடிக்கவும் கள்ள ஓட்டை தடுக்கவும், இந்த திட்டத்துக்கு ஈடு இனையில்லை.
கள்ள ஓட்டை தடுப்பதற்க்காக இந்த நடவடிக்கையை நான் ஆதரிக்கின்றேன், இல்லை என்றால் காலையில் யாராவது நமது ஓட்டை போட்டு விட்டு செல்ல பதினோரு மணிக்கு நாம் போகும் போது நம் ஓட்டை வேறு யாரோ, போட்டு வி்ட்டு போய் இருப்தாக சொல்லுவார்கள் அதனால் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை சிறந்ததுதான்.
ஆனால் அந்த புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை சரியாக தேர்தல் ஆனையம் வழங்கியதா? என்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள், இந்த திட்டம் நல்ல திட்டம்தான் ஆனால் இது நகர்புற மக்களை மட்டுமே கருத்தில் கொண்ட வந்த நடைமுறையாகும்.
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்து அதற்க்கு கடைசி தேதி அறிவித்தது எல்லாம் சரி, அனால் இது குப்பத்து மக்களையும் பாமர மக்களையும் சென்று அடைந்ததா? எனறால் இல்லை, எங்காவது இலவசசேலை கொடுக்கின்றார்கள் என்றால் காட்டு தீ போல் பரவும் விஷயம் இது போன்ற விஷயங்களுக்கு பரவுவதில்லை.
நேற்று வாக்களிக்க வந்த பல தலைகாய்ந்த பொது மக்கள் திருப்பி அனுப்பட்டனர், பலருக்கு இப்படி ஒரு அறிவிப்பு வந்தது தெரியவில்லை அப்படி வந்தாலும் நாளைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து மறந்து போனவர்களும் நிறைய பேர். எல்லாம் அன்னாடங்காச்சிகள், மாம்பலம் அண்ணாநகரில் இருப்பவன் தினமும் பேப்பர் பார்பான் டிவியில் நியுஸ் பார்ப்பான் நம்மாளு டிவியில் கோலங்கள்தவிர ஏதும் பார்பதில்லை....
நாங்கள் அறிவித்து விட்டோம் அவர்கள் கேட்கவில்லை என்றுபொத்தம் பொதுவாக சொல்லி எம் மக்களை கை கழுவி விட முடியாது, தெரு தெருவாக விழுப்புரத்தில் ஜாக்கெட் துணி விற்ற எனது பாட்டி, என் அம்மாவை படிக்க வைத்ததால் அவள் படிப்பின் மேன்மை தெரிந்ததால் நான் படித்தேன் வெளியுலகுக்கு வந்தேன் அனால் இன்னும் எத்தனை எத்தனை குடுங்பங்கள் இன்னும் அடிமட்டத்தில் இருக்கின்றன தெரியுமா?
இன்று டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்து விட்டது ஒரு 100 மொபைல் அடையாள அட்டை வழங்கும் வாகனங்கள் ரெடி செய்து ஒரு நாளைக்கு ஒரு ஏரியா என்று சனிக்கிழமைகளில் ஞாயிற்று கிழமைகளில் கொடுத்து இரு்ந்தாலே தமிழகம் முழவதும் ஏன் இந்தியா முழுவதும் கொடுத்து இருக்கலாமே... அப்படி அதிக செலவு பிடிக்கும் என்று தோன்றினால் அந்த திட்டத்தை கை விடுங்கள், வாக்காள அடையாள அட்டை வைத்திருக்கும் படித்தவன் எவனும் அதிக அளவில் ஓட்டு போட வரவில்லை என்பதே உண்மை...
நாம் வளர்ந்து வரும் நாடு... வளர்ந்த நாடு அல்ல என்பதை தேர்தல் ஆனையம் கருத்ில் கொள்ள வேண்டும் . அதே போல் எல்லா விஷயத்துக்கும் அலட்சியம் நம் மக்களிடம் கூடி கொண்டு இருக்கும் இல்லையென்றால் இலங்கையில் நம் இன மக்கள் கொத்து கொத்தாக செத்து மடியும் போது டிவியில் திருடா திருடி பார்க்க முடியுமா?
கணக்கு எடுப்பவர்கள் கொஞ்சம் வேலை செய்பவர்களாக போட வேண்டும் யாரு வீ்ட்டு எழவோ பாய போட்டு அழுவோ என்பது போல் வேலை செய்கின்றார்கள், பெயர்களில் தவறு, வீட்டு விலாசங்களில் தவறு, பக்கத்து வீட்டுகாரார் பெயரை கணவர் பெயராக போட்டு லேமினேஷன் வேறு போட்டு கொடுத்த கொடுமை.
(அதன் பிறகு அந்த அக்காவை தண்ணி பிடிக்கும் இடத்தில் எல்லாம் காமெடி யென்ற பெயரில் அவளை போட்டு கலாய்த்து விட்டார்கள்)
எவ்வளவோ தவறுகள் இந்த தவறுகளை எல்லாம் சரி செய்து விட்டு 99 சதவிகதம் மிகச்சரியாக புகைப்பட அடையாள அட்டை வழங்கி விட்டு மக்களை வீரமாய் நெருக்குங்கள்... அதை விட்டு அப்பாவிகளை அலைகழிக்காதீர்கள்..
என் மனைவி இது வரை ஓட்ட போட்டதில்லை திருமணம் முடிந்து முதல் வேலையாக ஜனநாயக கடமையாற்ற புகைப்படம் எடுத்து இனைத்தேன். மூன்ற மாதங்களுக்கு முன்பு என் ஹவுஸ் ஓனர் அதீத பண ஆசையால் வீடு மாற நேரிட்டது.
சரி ஓட்டு போட போகலாம் என்று போனேன் கணவன் என் பெயர் இருக்கின்றது என்மனைவி பெயர் பக்கத்தில் வீடு ஷீப்ட் என்று எழுதி இருந்தது. கணக்கு எடுத்த சோமாறி என்னை அதே வீட்டிலையும் என் பொண்டாட்டியை வேற விட்டுக்கும் அனுப்பி வச்சி இருக்கான், இரண்டு பேர் பேரையும் ஹவுஸ்ஷீப்டட் லீஸ்ட்ல வச்சி இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்...
தேர்தல் ஆனையத்தின் மேல் எரிச்சல் அடைந்தது நடிகர் கமல் மட்டும் அல்ல என் மனைவியும்தான்....
இதுதான் தேர்தல் அனையத்தின் லட்சனம்
அன்புடன்/ஜாக்கிசேகர்
Labels:
கண்டனம்
Subscribe to:
Post Comments (Atom)
தலைவா பதிவ காணோமே?
ReplyDeleteதலைப்பே தான் பதிவா?
மிஸ்டர் முரளி... நீங்க ரொம்ப அவசர படுறீங்க.
ReplyDeleteநேத்து என்னன்னா பெருசா ஆவளைங்குறீங்க. பொறுங்க மிஸ்டர் முரளி. உங்களோட ஆர்வம் எனக்கு கண்ணை கட்டுது.
அப்புறம் ஜாக்கி அண்ணே. நீங்க சொல்லி இருக்கிறது மிக நல்ல விசயம்.நன்றி.
சின்ன பிரச்சனை சரி செய்யப்பட்டு வி்ட்டது நன்றி முரளி
ReplyDeleteநேத்து என்னன்னா பெருசா ஆவளைங்குறீங்க. பொறுங்க மிஸ்டர் முரளி. உங்களோட ஆர்வம் எனக்கு கண்ணை கட்டுது.
ReplyDeleteஅப்புறம் ஜாக்கி அண்ணே. நீங்க சொல்லி இருக்கிறது மிக நல்ல விசயம்.நன்றி.
நன்றி நைனா தொடர்ந்து என் பதிவை படித்து வருவதற்க்காக
பதிவு நன்று!
ReplyDeleteபதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com
ஜாக்கி!தேர்தல் ஆணையம் கணினிப்படுத்துவதால் துவக்கத்தில் சில சங்கடங்கள் நிகழவே செய்யும்.எவ்வளவு பெரிய டாட்டாபேஸ் செய்ய வேண்டியிருக்குது.குறைகள் வரும் தேர்தல்களில் மாறும் என நம்புவோம்.
ReplyDeleteஇங்கே குவைத்தில் Civil ID card ன்னு தீப்பெட்டி சைஸ்ல ஒரு Unique number,பெயர்,விலாசம்,ரத்த குருப்,பிறந்த தேதி,அட்டை காலாவதியாகும் தேதி இவ்வளவுதானுங்க Database.இந்த யூனிக் நம்பர வச்சுகிட்டு வங்கி ,வாகனம் வாங்குதல்,மாற்றம்,விற்றல் மின்சாரத்துறை,காவல்துறை,அங்காடிகளில் கடன் என்று அனைத்துக்கும் இந்த அட்டை அவசியம்.எந்த வேலை முடிந்தாலும் லேமினேசன் செய்யப்பட்ட அட்டையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்று விடலாம்.
இப்படியான ஒரு திட்டமிடுவதில் நாம் ஏன் தாமதப்படுகிறோம்?இதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பது இன்னும் விளங்காத விசயம்.அத்வானி பிரதமர் கனவில் இருக்கிறார்.நாற்காலி தந்தால் நான் இந்த முறையை செய்வேன்னு சொன்னதாக கேள்வி.பார்க்கலாம் தேர்தல் கலாட்டாக்கள் யாருக்கு சாதமாகப் போகிறதென்று.
//மூன்ற மாதங்களுக்கு முன்பு என் ஹவுஸ் ஓனர் அதீத பண ஆசையால் வீடு மாற நேரிட்டது.//
ReplyDeleteஎனது முந்தைய பின்னோட்டத்தில் யூனிக் எண் மட்டுமே பிரதானம்.விலாசம் என்பது சம்பந்தமில்லாதது.விலாசம் எப்பவும் மாறலாம்.மாறினால் மீண்டும் தெரிவித்து விலாசம் புதுப்பிக்கலாம்.ரயில்வே துறை கூட கணினி மயமாக்கப்படும் போது தேர்தல் கணினி மயமாக்கலும் சாத்தியமே.இணைய தள ஓட்டு முறை பிரச்சினைகளை இன்னும் எளிதாக்கும்.
ஹாய் சேகர்
ReplyDeleteஅது தேர்தல் ஆணையம் , ஆனையம் அல்ல.
அப்புறம் என்ன ரெண்டு நாளா ஒரே மனைவி புராணம்? புதிதாக உங்கள் பிளாகை படிக்க ஆரம்பித்து இருக்காங்களா?
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA
பதிவு நன்று!
ReplyDeleteபதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com-//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கு மிக்க நன்றி
இப்படியான ஒரு திட்டமிடுவதில் நாம் ஏன் தாமதப்படுகிறோம்?இதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பது இன்னும் விளங்காத விசயம்.அத்வானி பிரதமர் கனவில் இருக்கிறார்.நாற்காலி தந்தால் நான் இந்த முறையை செய்வேன்னு சொன்னதாக கேள்வி.பார்க்கலாம் தேர்தல் கலாட்டாக்கள் யாருக்கு சாதமாகப் போகிறதென்று//
ReplyDeleteஒரு சின்ன நாட்டில் இது சாத்தியப்படும் போது நம் நாட்டில் ஏன் சாத்தியப்படவில்லை என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் அது கூடிய விரைவில் நடக்கும் நன்றி ராஜநடராஜன்
ஹாய் சேகர்
ReplyDeleteஅது தேர்தல் ஆணையம் , ஆனையம் அல்ல.
அப்புறம் என்ன ரெண்டு நாளா ஒரே மனைவி புராணம்? புதிதாக உங்கள் பிளாகை படிக்க ஆரம்பித்து இருக்காங்களா?
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA//
ஹாய் ஸ்ரீராம் நலமா? பிழையை சுட்டிக் காட்டியதுக்கு மிக்க நன்றி
இதே பிரச்சனையால நேற்று நான் ஓட்டு போட முடியல!
ReplyDelete@ ஜாக்கி,
ReplyDeleteபதிவு முழுவதும் ரொம்ப சூடா எழுதி இருக்கீங்களே? பட்ட பாடு ரொம்ப அதிகமா !!! ஓகே , ஜோக்ஸ் போதும். பிரச்சினைக்கு வருவோம்.
// இங்கே குவைத்தில் Civil ID card ன்னு தீப்பெட்டி சைஸ்ல ஒரு Unique number,பெயர்,விலாசம்,ரத்த குருப்,பிறந்த தேதி,அட்டை காலாவதியாகும் தேதி இவ்வளவுதானுங்க Database. //
இதை விட பெட்டரான ஒன்றை சில வருடங்களுக்கு முன்னமேயே வடிவமைத்து அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அனுப்பி வைத்து விட்டோம். 05/24/06 அன்று அவரது அலுவலகத்திலிருந்து பதிலும் வந்தது. அது இங்கே ..... http://tech.groups.yahoo.com/group/Indian_Techies_Zone/message/154 அதனுடைய சாம்பிள் இங்கே. http://www.iibc.in/itws/contact_rvfe.htm ஆனால் இதை அரசியல் வியாதிகள் வர விட மாட்டார்கள். காரணம் அனைவருக்குமே தெரியும். வந்தால் அவர்களால் கொள்ளையடிக்க இயலாது. MNIC ஒரு சில இடங்களில் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் kanaiyazhi-one போல அழகானது அல்ல.
// ஒரு சின்ன நாட்டில் இது சாத்தியப்படும் போது நம் நாட்டில் ஏன் சாத்தியப்படவில்லை என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் அது கூடிய விரைவில் நடக்கும் நன்றி ராஜநடராஜன் //
நம்மை விட பெரிய மக்கள் தொகையுள்ள சீனாவில் இது நடைமுறைக்கு வந்து பல காலம் ஆகிவிட்டது.
/
ReplyDeleteகணக்கு எடுத்த சோமாறி என்னை அதே வீட்டிலையும் என் பொண்டாட்டியை வேற விட்டுக்கும் அனுப்பி வச்சி இருக்கான்,
/
jai ho
ஐயோ..
ReplyDeleteதி.மு.க. கூட்டணிக்கு ஒரு ஓட்டு போச்சா..?
தேர்தல் ஆணையத்தின் இந்த சதி வேலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்..