ஊட்டி மலை ரயில் ஒரு பார்வை, ஊட்டி ரயில் டிரைவரின் சோகம்???பாரம்பரிய ஊட்டி மலைரயிலில் பயணம் செய்வது என்பது மிகவும் கொடுத்து வைத்த விஷயம் என்று அனைவரும் சொல்லுவார்கள் நான் ஊட்டிக்கு பல முறை சென்றாலும் மலை ரயில் பயணம் இது வரை சாத்தியப்பபட்டதில்லை. அதற்க்கு காரணம் அதற்க்கு முன்பே ரிசர்வ் செய்ய வேண்டும் என்பதால் அது நடுத்தர குடும்பமான எனக்கு சாத்தியம் இல்லாத விடயம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து பஸ் ஏறினால் மட்டுமே என் பயணம் சாத்தியப்படுவதாக அர்த்தம் அது வரை அந்த பிளான் ஜெயலலிதா ஈழ ஆதரவு போல் தெளிவில்லாமல் இருக்கும். இந்த முறை நான் குடும்பத்துடன் ஊட்டியில் இருந்ததால் அது சாத்தியப்பட்டது .

“சார் ரிசர்வ் இல்லாத ஓப்பன் டிக்கெட் கிடைக்கும் ஒரு 50 டிக்கெட் வரை கவுன்டர்ல கொடுப்பாங்க”

நீங்க வரிசையில நில்லுங்க உங்க லக் கிடைச்சாலும் கிடைக்கும் என்ற அந்த ஊர் ஆட்டோ டிரைவர் சொல்ல என் லக்கை சோதித்தேன் லக்கில் டிக்கெட் கிடைத்து . ஊட்டி டூ குன்னுர் டிக்கெட் எடுத்தோம் ஒரு டிக்கெட் விலை வெறும் 3 ரூபாய் மட்டுமே இதில் கொடுமை என்ன வென்றால் பிளாட்பார்ம் டிக்கெட் அதே மூன்று ரூபாய்தான்...

நான் எப்போதுமே எந்த ஊர் சென்றாலும்அந்த ஊரின் ஆட்டோ டிரைவ்ர் பொதுஜனம் போன்றவர்களிடம் எனக்கு எழும் சந்தேகங்களை தயங்காமல் கேட்பேன்.அப்போதும் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளி வரும்.

எல்லோரும் ரயிலில் ஏற முண்டியடித்து கொண்டு இருக்கும் போது நான் ரயில் டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன், ஏனென்றால் மக்கள் எல்லோரும் மிக ஆவலாக பயணம் செய்ய இருக்கும் ரயிலை ஓட்டும் டிரைவரிடன் மன நிலை எப்படி இருக்கும் என்று பேச்சுக்கொடுத்தேன் , அவரிடம் பேச வேறு காரணமும் உண்டு . நான் பள்ளியில் படித்த போது பெரியவர்களாக மாறியதும் என்ன வேலைக்கு போவிர்கள் என்ற அரத பழசான கிராமத்து கேள்வியை எங்கள் முன் ஆசிரியர் கேட்ட போது நான் தயங்காமல் சொன்ன வேலை ரயில் என்ஜீன் டிரைவர் ஆக வேண்டும் என்பதுதான். அது என் கனா, வாழ்வின் மிகப்பெரிய லட்சியம் ஆனால் கால ஓட்டத்தில் அந்த லட்சியம் கரைந்தோடி விட்டது.

ஊட்டி ரயில் டிரைவர் சோகம் இங்கே...
உலகத்துல கொடுமையான வேலைன்னா அது இந்த மலை ரயிலை ஓட்டறதுதான் இப்ப நான் குன்னுர் போறேன் திரும்ப சரியான நேரத்துக்கு திரும்ப வருவன்னு சொல்ல முடியாது, சில நேரத்துல நிறைய மழை பேஞ்சு பாறை டிராக்ல சரிஞ்சு கிடைக்கலாம்,


இதோ இந்த பயோ என்ஜீன் திடிர்னு மக்கார் பண்ணலாம், திடிர்னு கூட்டமா காட்டு விலங்குகள் டிராக்கை வழிமறிச்சு நகராம நிக்கும், அதனால இந்த வேலை ரொம்ப கொடுமையானது சார் அது மட்டும் இல்லாது எல்லா பயணிகளின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் இவங்களை எல்லாம் கொண்டு போய் பத்திரமாய் சேர்க்கும் வரை எனக்கு டென்ஷன்தான் என்று, பீலிங்கை என்னிடத்தில் கொட்டினார். பெயர் போட்டோ வெளியயிடக்கூடாது என்ற கன்டிஷன் வேறு...

எல்லாவற்றையும் விட கொடுமை எந்த ஸ்டேசன்லியும் வண்டியை நிறுத்திட்டு ஒன்னுக்கு கூட போக முடியலை. வியாசர்பாடி சென்டரல் ஸ்டேசன்ல ஒரு கேனை வண்டியை கடத்தி போய் இடிச்சாலும் இடிச்சான், எங்கலை வண்டியை வீட்டு டீக்கூட குடிக்க போக கூடாதுன்னு சொல்லறாங்க.. இவ்வளவு ஏன் வண்டியை விட்டு எறங்கவே கூடாதுன்னு சொல்லறாங்க...
நீங்க சொல்லுங்க குளிர்ல அடிக்கடி உச்சா வேற வந்து தொலையுது, எங்களுக்கு என்ஜீன்ல டாய்லட்டா கட்டி கொடுத்து இருக்காங்க? நியாமான கேள்வி பதில் பேசாமல் அவர் பரிதாப முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன். இதைதான் எங்க ஊர்ல தென்னை மரத்துல தேள் கொட்டனா, பனமரத்துல நெறிக்கட்ம்னு சொல்லுவாங்க... ரயிலை கடத்துனது சென்னைசென்ட்ரல்ல அது ஊட்டி டிரைவர் ஃபரியா உச்சா போறதை தடுக்குது இது தான் நியுட்டன் முன்றாவது விதியா????

நமக்கு ஒரு எண்ணம் எப்போதும் இருக்கும் பிரபல நடிகை அல்லது நடிகரை பார்க்க நாம் முன்டியடித்து கொண்டு இருப்போம் ஆனால் அவர் அவரின் கார் டிரைவரிடம் சகஜமாக தோளில் கை போட்டு பேசுவார், ச்சே அந்த டிரைவர் எவ்வளவு சந்தோசமா? இருப்பார்னு நாம நினைச்ச அது முட்டாள்தனம்தான். பிரபல நடிகை அல்லது நடிகர் கொடுக்கிற ஓத்தாம்பட்டு அவனுக்குதான் தெரியும். அதுபோல்தான் ஊட்டி ரயிர் என்ஜீன் டிரைவர் நிலையும்.

ரயில் நிலையத்தில் வரிசையில் நிற்க்க வைத்தார்கள் அதனால் நிறைய பேரின் கைக்குட்டைக்கும், ஹென்ட் பேகுக்கும் அவசியம் இல்லாமல் போனது. ரயில் வந்தது. கூட்டம் நின்ற கொண்டு பயணித்தது. குகை வரும் போது விளக்கு எறிந்து பெட்டி இருட்டாகி பின்பு குகைவிட்டு வெளிச்சம் வந்த போது ரயி்லில் குழந்தைகளின் சத்தம் காதை பிளந்தது.

எனக்கு அப்படி ஒன்றும் ஊட்டி மலை ரயில் ஈர்க்க வில்லை. ஒரு வேளை பன்னிரன்டு வயதில் ஊட்டி ரயிலில் ஏறி இருக்க வேண்டுமோ?????

18 comments:

 1. //பெயர் போட்டோ வெளியயிடக்கூடாது என்ற கன்டிஷன் வேறு...//

  அதான் ஊட்டி ரயில் டிரைவர்'ன்னு சொல்லிட்டீங்களே...

  ReplyDelete
 2. இப்ப்தெல்லாம் இம்மாதிரி கவனிக்கபடாத நபர்களை பற்றி பேசுவது தான் ஃபேஷன்!

  அதுக்கு இன்னோரு பெயர் தான் பின்நவீனத்துவம்!

  ReplyDelete
 3. //நான் எப்போதுமே எந்த ஊர் சென்றாலும்அந்த ஊரின் ஆட்டோ டிரைவ்ர் பொதுஜனம் போன்றவர்களிடம் எனக்கு எழும் சந்தேகங்களை தயங்காமல் கேட்பேன்.அப்போதும் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளி வரும்.//

  நான் கூட

  ReplyDelete
 4. சம்மர்ல ஜாலியா ஒரு தேனிலவு டிரிப் அடிச்சிட்டு வந்திருக்கீரு...

  ஊட்டி ரயிலனுபவம் நன்றாகவிருக்குமென்று கேள்விப் பட்டிருக்கேன். எல்லா அனுபவத்துக்கும் மனசுதான் காரணம் ஜாக்கி.

  அன்பு நித்யன்

  ReplyDelete
 5. //பெயர் போட்டோ வெளியயிடக்கூடாது என்ற கன்டிஷன் வேறு...//

  அதான் ஊட்டி ரயில் டிரைவர்'ன்னு சொல்லிட்டீங்களே...--//

  இன்னோரு தகவலும் சொல்லறேன் அவர் செங்கல்பட்டு காரர் பொண்ணு எடுத்தது ஊட்டியில அதனால அங்க செட்டில் ஆயிட்டாரு...

  ReplyDelete
 6. இப்ப்தெல்லாம் இம்மாதிரி கவனிக்கபடாத நபர்களை பற்றி பேசுவது தான் ஃபேஷன்!

  அதுக்கு இன்னோரு பெயர் தான் பின்நவீனத்துவம்!//

  பின்நவீனத்துவத்தை இளகுவாக புரிய வைத்து வால்பையனுக்கு என் நன்றிகள்

  ReplyDelete
 7. /நான் எப்போதுமே எந்த ஊர் சென்றாலும்அந்த ஊரின் ஆட்டோ டிரைவ்ர் பொதுஜனம் போன்றவர்களிடம் எனக்கு எழும் சந்தேகங்களை தயங்காமல் கேட்பேன்.அப்போதும் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளி வரும்.//

  நல்ல விசயம் கிரி தொடர்ந்து செய்யுங்கள்

  ReplyDelete
 8. சம்மர்ல ஜாலியா ஒரு தேனிலவு டிரிப் அடிச்சிட்டு வந்திருக்கீரு...

  ஊட்டி ரயிலனுபவம் நன்றாகவிருக்குமென்று கேள்விப் பட்டிருக்கேன். எல்லா அனுபவத்துக்கும் மனசுதான் காரணம் ஜாக்கி. //

  வயிதெரிச்சல கிளப்பாதைய்யா,,ரூம் கெடக்காம ஒரே கட்டில்ல 4 பேர்...

  ReplyDelete
 9. ஊட்டி ரயிலனுபவம் நன்றாகவிருக்குமென்று கேள்விப் பட்டிருக்கேன். எல்லா அனுபவத்துக்கும் மனசுதான் காரணம் ஜாக்கி. //

  அதாவது இதைவி்ட சுவாரஸ்யத்தை மனது பார்த்து விட்டது அல்லது எதிர்பார்க்கிறது என்று அர்த்தம்

  ReplyDelete
 10. //பின்நவீனத்துவத்தை இளகுவாக புரிய வைத்து வால்பையனுக்கு என் நன்றிகள் //

  சினிமாவை எடுத்து கொள்ளலாம்!
  அக்காலங்களில் ராஜா காலத்து கதை வரும், அதில் பெரும்பாலும் ராஜா தான் நாயகனாக இருப்பார், அல்லது முக்கிய பொறுப்பில் இருக்கும் யாராவது,
  சாதரண பொதுமக்களை மையமாக கொண்டு யாராவது படம் எடுப்பார்களா!

  இப்படி மாற்றி யோசிக்கவும் தான்!
  சர்ரியலிசம், கியூபிசம், டாடாயிசம் போன்றவைகள் தோன்றி அனைத்தும் சேர்ந்து பின்நவீனம் ஆயிற்று!

  ReplyDelete
 11. உண்மை வால் பையன்
  எங்கோ படித்தது

  எல்லா காவியங்களிலும் அரசன் வருவான் சண்டை போட்டு செத்து மடிந்த அப்பாவி சிப்பாய்களின் கதி என்பது போல் ஒரு கவிதையை சமீபத்தில் படித்தேன் நன்றி

  ReplyDelete
 12. இன்னா.... ஜாக்கி IInd ..?????

  ReplyDelete
 13. நன்றி மங்களுர் சிவா, வண்ணத்து பூச்சி

  ReplyDelete
 14. அட ஏங்க நீங்க வேற . ஏதோ பத்திரமா ஏறுன ரயில உட்டு எறங்காம‌
  வந்து சேர்ந்திங்களே !அத நினைச்சு சந்தோசப்படுங்க.

  அடிக்கடி எங்க ஊருப்பேப்பரல ஊட்டி மலைரயில் பாதியில் நின்றது.பயணிகள்
  அவதி.

  நடுக்காட்டில் கொட்டும் மலையில் ஊட்டிமலை ரயில் நிலக்கரி இல்லாமல்
  நின்றது.

  கல்லாறு ஸ்டெஷனில் தண்ணீரை யானைகள் குடித்ததால் மலை ரயில்
  தண்ணீர் இல்லாமல் இரண்டு மணி நேரம் நின்றது.

  இப்படி மாட்டாம வந்தீங்களே. அதுவே சந்தோஷமான விஷ்யந்தான் !

  நம்ம கோயமுத்தூர்காரங்க யாராச்சும் இருந்தா கேளுங்க.அப்பத்தான்
  உண்மையென்னனு விளங்கும்.

  ReplyDelete
 15. நம்ம கோயமுத்தூர்காரங்க யாராச்சும் இருந்தா கேளுங்க.அப்பத்தான்
  உண்மையென்னனு விளங்கும்.//

  நானும் கேள்வி பட்டு இருக்கிறேன். நன்றி குமார் உங்கள் விரிவான பதிலுரைக்கு....

  ReplyDelete
 16. ஊட்டு - குன்னூர் டிரிப்புல எந்த சுவாரசியமும் இருக்காது,டீசல் இஞ்சின் வேற,

  குன்னூர் - மேட்டுப்பாளயம் ரூட் தான் நல்லாயிருக்கும், பழைய ஸ்டீம் இஞ்சின், ஐந்தாறு டனல், அற்புதமான பள்ளத்தாக்கு, சிறு சிறு அருவிகள்னு அற்புதமா இருக்கும். அப்புறம் ஊட்டி மேட்டுப்பாளையம், இரண்டாம் வகுப்பு ரிசெர்வேசன் டீக்கட் அறுபது ருபாயோ என்னவோ தான்,என்ன சிசன் சமயத்தில் ஒரு மாதம் முன்பாகவே முன்பதிவு செய்யனும்

  ReplyDelete
 17. ஊட்டு - குன்னூர் டிரிப்புல எந்த சுவாரசியமும் இருக்காது,டீசல் இஞ்சின் வேற,//

  நன்றி பிளிச்சிங் பவுடர் தகவலுக்கம் பி்ன்னுட்டத்துக்கும் என் நன்றிகள்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner