சென்னையில் யாரிடமும் வழி கேட்காதீர்கள்..

முன்பெல்லாம் மேற்க்கு மாம்பலத்தில் வந்து ஆரிய கவுடா ரோட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கணபதி தெரு ஏது என்ற கேட்டால்? கடைவிட்டு வெளி வந்து,

“ இப்படி நேரா போனா இந்தியன் பேங்க் வரும், அதற்க்கு பக்கத்தில் இருக்கும் ரைட் எடுத்துங்கினா அதுதான் கணபதி தெரு என்ற சொல்லூவார்கள்.

அதே போல் இப்போதும் கிராமங்களில் வழி கேட்டால்அற்புதமாக வழி சொல்லுவார்கள். போகும் இடத்துக்கு 4 வழி இருந்தாலும் அதில் எந்த வழி சிறந்தது என்றும் ரோடு எந்த தடத்தில் மிக அற்புதமாக இருக்கும் என்று ஒன்றுக்கு மூன்று பேர் சேர்ந்து டிஸ்கஸ் செய்து சொல்லூவார்கள்...


பொதுவாக நாம் இரண்டு விஷயத்துக்கு வழி கேட்போம்.ஒன்று அவசரத்துக்கு ஏடிஎம் எங்கே இருக்கின்றது மற்றொன்று குடும்பத்துடன் செல்லும் போது கல்யாண மண்டபத்துக்கு, அல்லது தெரு பேர், என்று வழி கேட்போம் இன்னும் பல விஷயங்களுக்கு கேட்டாலும் இந்த மூன்று விஷயங்கள் பிரதான இடத்தை பிடித்து இருக்கும்.

ஒரு பூக்கார பெண்மணியிடம், அண்ணாநகர் திருமங்கலத்தில் பாலாஜி மண்டபத்துக்கு வழி கேட்க அது முகப்பேர் வரை வழிகாட்டி என் மனைவியுடன் அலைய வைத்தது , அது பக்கத்து தெருவில் இருக்கும் மண்டபம்.

இரண்டாவதுஅவசரத்துக்கு ஏடிஎம் கேட்டால் எதாவது ஒரு வழியை காட்டி அனுப்பிவிடுவார்கள், அடித்து பிடித்து போய் பார்த்தால் அங்கு மாட்டு தொழுவம்தான் இருந்தது.

அது மட்டும இல்லாது தெரியாது என்ற சொல்ல ஏனோ அவர்கள் விரும்பவில்லை, தெரியாது என்பதை தெரியாது என்று தானே சொல்லவேண்டும். தெரிந்தவன் போல் காட்டிக்கொள்வதில் என்ன சுகமோ.. தெரியாது என்று சொன்னால் எப்படி இவர்களுக்கு கௌரவக் குரைச்சல் வரும் என தெரியவில்லை.

இந்த மனோபாவம் எப்படி இவர்களுக்கு வந்தது என்று தெரியவில்லை. அதனால் சென்னை வரும் அன்பர்களே தயவு செய்து சரியான லேண்ட் மார்க்கை அறிந்து வரவும், அல்லது பார்க்க போகிறவரின் கைபேசி எண்ணை கையில் வைத்துக்கொள்ளவும். சென்னையில் வழி கேட்டு செல்லும் இடத்தை ஒருவருக்கு இரண்டு பேரை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

இந்த அனுபவங்கள் மட்டுமே அல்ல இந்த பதிவை எழுத இன்னும் பல அனுபவங்கள் எனக்கு. நீங்கள் குடும்பத்தோடு போகும் போது இப்படி அலையக்கூடாது என்பதே இந்த பதிவின் நோக்கம்.
சென்னையில் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை கொஞ்சம் நல்லவர்களும் உண்டு.

நான் இப்போதெல்லாம் 4 பேரிடம் வழி கேட்டு உறுதிபடுத்திக்கொண்டே செல்கிறேன்.

அன்புடன்/ஜாக்கிசேகர்

(குறிப்பு)
உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றால் தமிழ்மணத்திலும் தமிளிஷ்லிம் ஜனநாயக கடமை ஆற்ற மறவாதீர்

23 comments:

 1. நிறைய அனுபவம் போல. சூப்பர் பதிவு. கலக்குங்க.

  ஸ்ரீ....

  ReplyDelete
 2. யோவ் எங்கய்யா இருக்கிற போஸ்ட் போட்ட அடுத்த செகன்ட் ஆஜர் கொடுக்கற

  ReplyDelete
 3. அண்ணாத்த! மேட்டரு வாஸ்தவமான மேட்டரு தான். ஆனா நீங்க வழி கேட்ட ஆளும் சரியான ஆளா பாத்து கேட்டு இருக்கனும்.

  பொதுவாக அந்த ஏரியாவில் இருக்கும் ஆட்டோ நிறுத்தத்தில் போய் வழி கேட்டு பாருங்கள் சரியாக சொல்லி விடுவார்கள். அந்த ஏரியாவில் வந்து போகும் ஆட்டோ அல்ல? அந்த ஏரியாவில் இருக்கும் ஆட்டோ நிறுத்தத்தில் இருக்கும் ஆட்டோ ஒட்டுனர்கள். சரியான வழியாகவும் இருக்கும். சுலபமான வழியாகவும் இருக்கும். முயற்சித்து பாருங்களேன்

  ReplyDelete
 4. /ஆனா நீங்க வழி கேட்ட ஆளும் சரியான ஆளா பாத்து கேட்டு இருக்கனும்.
  //

  இது தான் கரகெட் நண்பா நல்லவங்களும் கெட்டவங்களும் கலந்தது நம் நாடு என்ன செய்ய

  ReplyDelete
 5. சரி நீங்க இதுக்கு எப்படி வழி சொல்றீங்கன்னு பார்க்குறேன்....

  ஆமா உங்க பதிவை விட்டு நான் எப்படி தொலைஞ்சி போறது?

  ReplyDelete
 6. இது நடக்குறதுதாங்க!!!!

  ந(ர)கத்தில் இதெல்லாம் சகஜமப்பா!!!

  ReplyDelete
 7. ஜனநாயகக் கடமையை நா ஆற்றிட்டேன்.. நீங்க எங்கடைக்கி வந்து மொய் வெச்சுட்டுப் போங்க!!

  ReplyDelete
 8. சென்னையில் எனக்கு இதை போல (அதிகமா) நேர்ந்தது இல்லை..

  நான் விலாசம் கேட்பது சைக்கிள் ரிக்ஷா மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் அங்கே இருக்கும் பங்க் கடைகள்.

  அதுவும் இல்லாமல் ஒரு சிலரை பார்த்தால் இவர்கள் சரியா சொல்வார்கள் என்று தோன்றும் அவர்களை ;-)

  ReplyDelete
 9. நீங்க பதிவுல கலாய்க்கிறீங்கல்ல அது தெரிஞ்சிதான் உங்களை அந்த பூக்கார அம்மா கலாய்ச்சிருக்கு போல

  :))))))))))))))

  ஒருவருக்கு இருவரிடம் கேட்டுக்கொண்டால் நல்லதுதான்.

  ReplyDelete
 10. //நான் இப்போதெல்லாம் 4 பேரிடம் வழி கேட்டு உறுதிபடுத்திக்கொண்டே செல்கிறேன்.

  இப்படி ஒரு முறை செய்து ஆளாளுக்கு ஒவ்வொரு வழி சொல்லி என்னை அலையவைத்தது தனிக் கதை.
  இப்போதெல்லாம், வீடு விட்டு கிளம்பும் முன்னரே, google maps ஒரு முறை பார்த்துவிட்டுச் செல்வது வாடிக்கையாகி விட்டது.

  ReplyDelete
 11. சென்னையில் ஆட்டோக்காரர்களிடம் வழிகேட்பதே சாலச்சிறந்தது!

  ReplyDelete
 12. உண்மைதான் பாஸ்..

  நானும் நிறைய அனுபவப்பட்டிருக்கிறேன்..

  லக்கி சொன்ன மாதிரி ஆட்டோ டிரைவர் கிட்ட கேட்கிறதுதான் பெஸ்ட்..

  ReplyDelete
 13. நான் வழி கேட்பது தெருவிலே இருக்கும் இஸ்திரிவாலாக்களிடம். இவர்களிடம் கேட்டால் வீட்டுக்காரர்களின் bio data வையே கொடுப்பார்கள்

  ReplyDelete
 14. வீட்ல ரொம்ப ப்ரீ போலிருக்கு..

  போஸ்ட்டா அடிச்சுக் கிளப்புற ராசா..

  ம்.. எல்லாருமே வேணும்னே சொல்ல மாட்டாங்க.. ஏதாவது ஒரு புரியாமை இருக்கணும்..

  இதுக்காக நாலு பேர்கிட்ட கேட்டு உறுதிப்படுத்திக்கிறது நல்லதுதான்..

  ReplyDelete
 15. பொதுவாக அந்த ஏரியாவில் இருக்கும் ஆட்டோ நிறுத்தத்தில் போய் வழி கேட்டு பாருங்கள் சரியாக சொல்லி விடுவார்கள். அந்த ஏரியாவில் வந்து போகும் ஆட்டோ அல்ல? அந்த ஏரியாவில் இருக்கும் ஆட்டோ நிறுத்தத்தில் இருக்கும் ஆட்டோ ஒட்டுனர்கள். சரியான வழியாகவும் இருக்கும். சுலபமான வழியாகவும் இருக்கும். முயற்சித்து பாருங்களேன்//

  பதிவு ஆட்டோ அயன் காரன் இல்லாத இடம்னா என்ன செய்ய வேண்டம் என்பதை எழுதி இருக்கின்றேன்

  ReplyDelete
 16. இது தான் கரகெட் நண்பா நல்லவங்களும் கெட்டவங்களும் கலந்தது நம் நாடு என்ன செய்ய//

  உண்மைதான் சுரேஷ்

  ReplyDelete
 17. சரி நீங்க இதுக்கு எப்படி வழி சொல்றீங்கன்னு பார்க்குறேன்....

  ஆமா உங்க பதிவை விட்டு நான் எப்படி தொலைஞ்சி போறது?//
  சத்தியமா இதுக்குவழி என்னால சொல்லவே முடியாது

  ReplyDelete
 18. இது நடக்குறதுதாங்க!!!!

  ந(ர)கத்தில் இதெல்லாம் சகஜமப்பா!!!//

  உண்மை கடைக்குட்டி

  ReplyDelete
 19. நான் விலாசம் கேட்பது சைக்கிள் ரிக்ஷா மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் அங்கே இருக்கும் பங்க் கடைகள்.

  அதுவும் இல்லாமல் ஒரு சிலரை பார்த்தால் இவர்கள் சரியா சொல்வார்கள் என்று தோன்றும் அவர்களை ;-)//

  நன்றி கிரி

  ReplyDelete
 20. நன்றி தீப்பெட்டி ,லக்கி, கறுப்பி,டுருத், பூவன்னன் உண்மை தமிழன்.

  ReplyDelete
 21. சென்னைக்கு சென்ற புதிதில் எனது ஆப்ஷன்கள் (இப்பொழுதும் பல இடங்களுக்கு வழி தெரியாது)

  1. தொலைபேசியில் சென்னை நண்பர்களை அழைத்து வழி கேட்பது

  2. அருகில் யாராவது ட்ராஃபிக் கான்ஸ்டபிள் இருந்தால் அவரிடம்

  3. ஆட்டோ டிரைவர்

  ReplyDelete
 22. கல்யாணத்துக்கு போனா முன்னாடியே மண்டபம் எங்க இருக்குன்னு விசாரிச்சு வச்சுக்கணும். தப்பு நம்ம மேல வச்சுக்கிட்டு கண்டவங்கள குறை சொல்ல கூடாது...

  ஒரு படத்துக்கு போகனும்னா மட்டும் முன்னாடியே டிக்கெட் புக் பண்றோம்ல அது மாதிரிதான் இதுவும்...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner