என் முதல் சிறுகதை , ஒரு உண்மை காதல் கதை...
கதையின் கதாபாத்திரங்கள் தேவைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு எழுதி இருக்கின்றேன்,அது ஒரு பெண் வாழ்க்கை சம்பந்த பட்டது என்பதால்....
உலகின் மிகப்பெரிய பாவம்
ராஜகோபால் ரங்கநாதன் தெருவில் நடந்து போனால் அவ்வளவு கூட்டத்தில் அவனை கடந்து போகும் பெண்களில் ஒரு 15 பேராவது இவன் நம் காதலன் ஆனால்,இவன் நம் வருங்கால கணவன் ஆனால், என்று பாரதிராஜாபடம் போல் ஃபரீஸ் ஆகி, பலவாறு யோசித்து அந்த இடம் விட்டு நகர்வார்கள், இந்த உலகத்தில் அவனால் மட்டுமே கள்ளமில்லாமல் சிரிக்க முடியும். ராஜு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். தினமும் பத்து நண்பர்களுடன், சத்யம் ,மாயஜால் தியேட்டர்களுக்கு காரில் சென்று படம் பார்க்கும் அளவுக்கு மாதா மாதம் சம்பாதிக்கின்றான்.
ராஜுவின் எதிர் பிளாட்டில் வசிப்பவள்தான் சித்ரா சுமாரான அழகு என்றாலும் படிப்பிலும் பொது அறிவிலும் கெட்டிக்காரி, அவளின் கலகலப்பான பேச்சு எவரையும் எளிதில் கவர்ந்து விடும் தன்மை உள்ளது,ராஜு அவளின் அறிவுக்கூர்மைக்கு கலகலப்புக்காகவே, ராஜு சித்ரா மேல் காதல் வயப்பட்டான்...
சித்ரா புறநகர் கல்லூரியில் எம்,எஸ்,சி மைக்ரோபாயாலஜீ படித்து வருகின்றாள் அவள் படிப்பில் கெட்டிக்காரி, அவளின் கனவு அவளது துறையில் பெரியவிஞ்ஞானியாக வர வேண்டும் என்பதுதான்...
ராஜுபெற்றோரும் சித்ரா பெற்றோரும் எதிர் எதிர் வீடு என்பதால் நண்பர்கள், அதனால் அவளோடு பழகும் வாய்ப்பு அவனுக்கு அதிகம் கிடைத்தது.
ராஜகோபால் சிறுவயதில் இருந்தே அதிக புத்தகங்கள் படித்து வளர்ந்ததால் இந்த காதல் கத்தி்ரிக்காய் எல்லாம் நம்மை தாக்காது என்று கம்பீரமாக நகர் வலம் வந்தான், காதல்வயப்பட்ட நண்பர்களை பரிகாசம் செய்தான். காதல் என்பது கண்ணம்மா பேட்டை சூடுகாடுகிட்ட இருக்கிற ஆலமரத்துக்கு கீழே பீடி வளிச்சிக்குனு இருக்கறவனுக்குதான் காதல் வரும் என்ற ராஜகோபல் எண்ணத்தை தவிட பொடி ஆக்கிவிட்டாள், சித்ரா. சித்ராவின் அறிவுக்கூர்மை அவள்மேல் அவனை காதல் கொள்ள செய்தது.
வாயில் பிரஷ்உடன் யோசிப்பது,பத்து நிமித்தில் கழிவறை விட்டு வெளியே வர வேண்டியவன் ஒருமணிநேரம் கழித்து யோசித்துக்கொண்டே வெளி வருவது, காதல்பாடல் வரிகளின் போதைக்கு அடிமையாவது,மியுசிக் சேனல்களுக்கு,
“ ஐ லவ் சித்ரா,அவள் என் மனைவி ”என்று எஸ் எம் எஸ் செய்து காசை கரியாக்குவது,விக்கெண்ட் பார்ட்டியில் எல்லாரும் முழு போதையில் இருக்க, இவன் மட்டும் ரசிக்க தக்க போதையில் கற்பனையில் சித்ரா அயன் பண்ணி போட்டு வந்த சுடிதாரை ஈவு இரக்கம் இல்லாமல் கசக்கி அனுப்புவது என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் தற்போது காதல் போதையில் செய்யும் எல்லா வேலைகளையும் செய்தான்.
ராஜகோபால் மனதில் இருக்கும் காதலை இதயம் முரளி போல்சித்ராவிடம் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. அதற்கு காரணம் சித்ரா வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்? பிளாட்டி்ல் சித்ரா சட்டென வடிவேலு போல் சீன் போட்டு பாத்துட்டான் பாத்துட்டான் என்று கூச்சல்போட வெண்ணிற ஆடை மூர்த்தி போல் தான் பதறக்கூடாது என்பதாலேயே தன் காதலை ராஜகோபால் மனதுள் புதைத்து வைத்தான் , நாடளுமன்றத்தில் தேர்தலில் ஏழு இடத்திலும் அடிவாங்கிய பிரபல கட்சி போல மனதுக்குள் தினம் தினம் அழுதுக்கொண்டான்.
சித்ரா எப்போதும் போல் கலகலப்பாக பழகினாள் பைக்கில் உட்காரும் போது இயல்பாய் மார்பு உரசி உட்கார்ந்தாள், ராஜகோபாலுக்கு காதல் தீயோடு காமத்தீயும் பற்றி எரிந்தது.
அந்த வாரக்கடைசியில் நண்பர்களிடம் சத்தியம் செய்தான் கல்யாணம் பண்ணா சித்ராவைதான் கல்யாணம் பண்ணுவேன் என்று....
சில மாதங்களில் கழித்து கல்யாண பத்திரிக்கையோடு ராஜு வந்தான் பெண்பெயர் இடத்தில் சித்ரா பெயர் இல்லை, அதிர்ந்து காரணம் கேட்ட போது..
மூனுமாசத்துக்கு முன்ன அவகிட்ட என் காதலை சொல்லபோனேன், உன் எதிர்காலம்பற்றி கேள்வி கேட்ட போது அவ சொன்ன,
எல்லாரு மாதிரியும் கல்யாணம், புள்ளகுட்டி, மளிகைசாமான் என்று என்னால் வாழ முடியாது, எனக்கு மைக்ரோபயாலாஜீயில் அடுத்து பிஹெச்டி பண்ணனும்,ஸ்காலர்ஷிப் கிடைச்சி ஸ்டேட்ஸ் போய் , பெரிய சயிண்டிஸ்ட் ஆகனும். கீரின் கார்டு கிடைச்சி அங்கேயே செட்டில் ஆகாம என்தாய் நாட்டுக்கு வந்து என் மக்களுக்காக உழைக்கனும் என்று சொன்னாள் என்று சொன்னேன்.
நண்பர்கள் கேட்டார்கள் அப்ப நீ பட்ட வலி, வேதனை, அவ மேல வச்சிருந்த உயிருக்குயிரான காதல் என்று எதையுமே அவகிட்டசொல்லலையா??? என்று சட்டை பிடித்து கேள்வி கேட்டார்கள்
நான் நிதானமாக உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான் என்றேன்.
அன்புடன்/ஜாக்கிசேகர்
உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா தமிழ்மணத்திலியும் தமிளிஷ்லியும் ஓட்டு போடுங்க தலைவா..
Labels:
சிறுகதை
Subscribe to:
Post Comments (Atom)
சிறந்த, யதார்த்தமான கதை. நல்ல முடிவு.
ReplyDeleteஸ்ரீ....
நன்றி ஸ்ரீ ஊர் நாட்டுல இருக்கிங்களா?
ReplyDeleteமிகவும் யதார்த்தமான கதை. இது ஆண்களுக்கும் பொருந்தும் தான் உண்டு தன் இலட்சியம் உண்டு என இருந்த எத்தனையோ இளைஞர்கள் காதலில் விழுந்து அனைத்தையும் தொலைத்ததைப் பார்த்திருக்கின்றேன்( ஒரு சில தப்பிப் பிழைத்தவர்கள் உண்டு காதலிலும் வெற்றி இலட்சியத்திலும் வெற்றி என).
ReplyDelete//நாடளுமன்றத்தில் தேர்தலில் எழு இடத்திலும் அடிவாங்கிய பிரபல கட்சி போல மனதுக்குள் தினம் தினம் அழுதுக்கொண்டான்.//
ரசித்து சிரிக்க வைத்த வரிகள்.
கதைக் கரு நல்லா இருக்கு ஜாக்கி.
ReplyDeleteசரி, இப்போ டீச்சர் வேலையும் பார்க்கணும் நான்.
தவறாக நினைத்துக்கொள்ளமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்......
ராஜகோபல் = ராஜகோபால்
காதல் கத்தி்ரிக்கை = காதல் கத்தி்ரிக்காய்
பற்றி எறிந்தது = பற்றி எரிந்தது
இவு இரக்கம் = ஈவு இரக்கம்
அதற்க்கு காரணம் = அதற்கு காரணம்
விக்கென்ட் = வீக்கெண்ட்
கழிவரை விட்டு = கழிவறை விட்டு
எண்ணால் வாழ= என்னால் வாழ
தேர்தலில் எழு இடத்திலும் = தேர்தலில் ஏழு இடத்திலும்
ஸ்காலர்ஷீப் = ஷிப்
இப்போதைக்கு இது போதும். சந்திப்பிழைகள் வேற நிறைய இருக்கு.
எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் பேப்பரைக் கொண்டுவாங்க:-))))
ஆமாம், ரங்கநாதன் தெருவிலே இருக்கும் கூட்டத்துக்கும் இடிக்கும் இடையில் ராஜூ முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியுமா?
வேற தெரு ஒன்னு சொல்லுங்க.
கடைசி வரி ரொம்ப டச்சிங்கா இருக்கு
ReplyDeleteஅண்ணே கருத்து சொல்லட்டுமா? கதை நல்லா இருக்கு.
ReplyDeleteப்ரசன்ட் டீச்சர் எல்லாத்தையும் சரி பண்ணிட்டேன் நீங்க பேப்பரை பாருங்க...எல்லோராலும் இது போல் உரிமை எடுத்து சொல்லவோ அல்லது செய்யவோ முடியாது..இப்போது நீங்கள் என் மனதில் ஒரு படி மேலே போய் ஜம்மென்று குஷனில் உட்கார்ந்து விட்டீர்கள்.
ReplyDeleteஎன் மனைவியோடு கூட்டமுள்ள ரங்கநாதன் தெரு போய் அவள் பேசும் பேச்சகளை கேட்காமல் பெண்களை பார்த்து சைட் அடித்து கையில் கிள்ளுவாங்கி வலித்த அனுபவங்கள் நிறைய...
மிக்க நன்றி வந்திய தேவன் ரசித்து பாராட்டியமைக்கு
ReplyDeleteஅன்புடன்
ஜாக்கி
கடைசி வரி ரொம்ப டச்சிங்கா இருக்கு//
ReplyDeleteநன்றி தேனீ சுந்தர்
அண்ணே கருத்து சொல்லட்டுமா? கதை நல்லா இருக்கு.//
ReplyDeleteநன்றி நைனா
nice story.
ReplyDeleteடச்சிங்கா இருக்கு
ReplyDeleteநல்லாருக்கு
:}
நன்றி மங்களுர் சிவா வருகைக்கும் பாராட்டுக்கும்
ReplyDeleteடச்சிங்கா இருக்கு
ReplyDeleteநல்லாருக்கு
:}//
நன்றி பிஸ்கோத்துபயல்
வெகு சாதாரணமாக சென்ற கதை, கடைசி பகுதியில் தனித்துவம் பெற்றது. நிறைய சிறுகதைகளை வாசித்தல் மேலும் செம்மைப்படுத்தும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கதைக் கரு நல்லா இருக்கு ஜாக்கி.
ReplyDeleteஆனா, இரண்டு பேரு பேசிக் கொள்ளும் போது, அதை தெளிவாக double quotes உடன் சொன்னால் நன்றாக புரியும்.
உதாரணம்:
நண்பர்கள் கேட்டார்கள் அப்ப நீ பட்ட வலி, வேதனை, அவ மேல வச்சிருந்த உயிருக்குயிரான காதல் என்று எதையுமே அவகிட்டசொல்லலையா??? என்று சட்டை பிடித்து கேள்வி கேட்டார்கள்
இதில் இருமுறை "கேட்டார்கள்" என்பதை நீக்கி,
நண்பர்கள் எனது சட்டையை பிடித்து, "அப்ப நீ பட்ட வலி, வேதனை, அவ மேல வச்சிருந்த உயிருக்குயிரான காதல் என்று எதையுமே அவகிட்டசொல்லலையா", என்று கேட்டார்கள், என்று எழுதியிருக்கலாம்.
இது உங்க முதல் கதைன்னு சொல்றீங்க, அதனால ஒகே :-)
நானும் இப்போ தான் புதுசா கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிருக்கேன், நேரம் இருந்தா நம்ம பக்கம் வந்துட்டு போங்க. :-)
நல்லா கருத்து ஜாக்கி சேகர்.
ReplyDeleteஇன்னும் தொடர்ந்து கலக்குங்கள்
\\நான் நிதானமாக உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான் என்றேன்.\\
ReplyDeleteமிக அருமையான வார்த்தைகள்
"உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக கதை எழுதும் மனதை குழப்புவதுதான்"
ReplyDeleteஇப்படிக்கு,
கதை கிடைக்காமல் கடுப்பாவோர் சங்கம்
முதல் கதையா நம்ப முடியவில்லை அத்துனை அழகு
ReplyDeleteநீர்க்குமிழி படத்த பாத்தமாதறி இருக்கு -:)
ReplyDelete(கொசுறு செய்தி : கே.பாலச்சந்தரின் முதல் படம்)
-பித்தன்
//உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான் //
ReplyDeleteஇந்த மேட்டர் சோக்காகிது -:)
நல்ல கருத்து
-பித்தன்
நன்றாக இருந்தது .. மிக நன்றாக இருந்தது .. ரசித்தேன் ..
ReplyDeleteஆமாம் யார் அந்த நல்லவன் ???
நாடளுமன்றத்தில் தேர்தலில் ஏழு இடத்திலும் அடிவாங்கிய பிரபல கட்சி போல மனதுக்குள் தினம் தினம் அழுதுக்கொண்டான்....
ReplyDeletenachu nu iruku....
true story also gud..
நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்! ;)
ReplyDelete