புதுமையை புகுத்திக்கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை


வீடியோ கோச் அரசு பேருந்துகளில் பயனம் செய்யும் தென்மாவட்டத்து மக்கள் இந்தக்கொடுமையை நன்கு அறிந்து இருப்பார்கள், சில நேரங்களில் தூக்கம் வராது அவர்கள் போடும் படத்தை பார்த்தே தொலைத்து தீர வேண்டிய கட்டாயம்...

இப்படித்தான் நான் ஒரு முறை மதுரை செல்ல நேர்ந்த போது ராமராஜன் சேது அபிதா நடித்த பெயர் நினைவில் நிற்க்க மறுத்த படத்தை போட்டார்கள் நானும் சகித்து பார்த்து தொலைத்தேன், மதுரை இறங்கி சின்னதாக ஒரு இன்டர்வியு எடுத்து அன்று மாலை அதே பேருந்தில் சென்னை திரும்ப இரவும் அதே படம் என்நிலை நினைத்து நொந்து சாப்பிட நிறுத்திய இடத்தில் ஒரு குவாட்டர் வாங்கி தண்ணீர் கலக்காமல் கோபத்துடன் அடித்து சுருண்டு படுத்தேன்...

நல்ல படத்தை போட்டு கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஊர் வந்து தொலைக்க சட்டென டிவி பொட்டியை ஆப் செய்து சில கண்டக்டர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததோடு அல்லாமல் சத்தியம் தியேட்டர் ஆப்பரேட்டர் போல் நக்கல் பார்வை வேறு பார்ப்பார்கள்...

சில மாதங்களுக்கு முன்பு புதுவையில் இருந்து சென்னை கிழக்கு கடற்க்ரை சாலையில் பயணம் செய்து கொண்டு இருந்த போது வீடியோவில் தொடர்ந்து எம்ஜீஆர் பாடல்கள் ஓடிக்கொண்டு இருந்தது.

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என்று பாடி உடன் நடித்த பெண்ணை படுக்கையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை அனைத்தையும் ஒரு அருவி பக்கத்தில் உதட்டு சுழிப்புடன் முன்னாள் முதல்வர் எம்ஜியார் செய்து கொண்டு இருந்தார்..

நான் டிரைவரிடம் சென்றேன் யார் இந்த பாடலை போட்டது? என்றேன்.
நான்தான் எனக்கு தலைவர் பாடல்னா ரொம்ப பிடிக்கும் என்றார் . டூட்டி முடிஞ்சு உங்க வீட்ல போய் உங்க பொண்டாட்டி புள்ளைங்களோட பாருங்க உங்களை வேணாங்களை, எங்க பொறுமையை ஏன் சோதிக்கி்றீர்கள் என்றேன் பாட்டு மாற்றப்பட்டு வீடியோவில் காக்க காக்க சூர்யா வந்தார்...


இப்போது இது போன்ற தொல்லைகளுக்கு எல்லாம் தீர்வாய்இப்போது ஒரு புதிய முறையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது
அதாவது ஒரு கம்யூட்டர் பிளாட் மானிட்டர் ஒன்று டிவி பெட்டிக்கு பதில் வைத்து உள்ளார்கள் அதோடு ஒரு சின்ன சீப்பியூவையும் பொறுத்தி உள்ளார்கள்...

கண்டக்டர் டிக்கெட் கொடுத்து விட்டு சுவிட்சை போட்டால் போதும் கம்யூட்டர் ஆனாகி வின்டோஸ் எழுத்துக்கள் திரையை ஆக்கிரமித்து படம் ஓடுகின்றன இதில் சிறப்பு அம்சம் யாதெனில் திரைப்படம் ஏதும் ஒளிபரப்பாமல் ஏதாவது ஒரு படத்தில் இருந்து இரண்டு காமெடி காட்சிகள் இரண்டு பாடல்கள் என்று ஓடு்கின்றது. நடு நடுவில் விளம்பரங்கள் என்று வருகின்றது. இதன் மூலமும் போக்குவரத்து கழகத்துக்கு அதிக வருமானம் கிடைக்கும்..


சோதனை ஒளிபரப்பாக இப்போது அனைத்து தமிழ்நாடு அரசு வீடியோ கோச் நெடுந்தூர பேருந்துகளிலும் காமெடிக்காட்சிகள் ஓடுகின்றன . இதன் சிறப்பு மானிட்டர் என்பதால் ஒளிஒலி துல்லியமாக இருக்கின்றது...அதே போல் போக்கு வரத்து தலமையகத்தில் ஏற்கெனவே பதியப்பட்ட படங்கள்தான் பேருந்தில் ஓடும் இதனால் புதிய படங்கள் திருட்டு வீடியோவாக அரசு பேருந்துகளில் ஓடாது...


கண்டெக்டர் டிரைவர் விறுப்பு வெறுப்பு இல்லாமல் காட்சிகள் ஓடுகின்றன வாழ்த்துக்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை

ஒரு சின்ன விண்ணப்பம்

பேருந்துகளில் உள்ள பயணிகள் சீட்கவர் எல்லாம் அழுக்கு ஏறி மட்டமாக வாந்தி வருவது போல் உள்ளது அதே போல் மூட்டை பூச்சிகள் கூட ஒரு சில பேருந்துகளில் உயிரை எடுக்கின்றன...

எப்போதும் புதுமைக்கு முதல் குரல் கொடுக்கும் தமிழக போக்குவரத்து துறை இது போன்ற அடிப்படைவசதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

அன்புடன்/ஜாக்கிசேகர்

26 comments:

  1. பதிவ படிச்சு ஓட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  2. நன்றி அப்பாவு தமிழா தங்கள் வேகத்துக்கு நன்றி

    ReplyDelete
  3. SETCல மூட்டைப்பூச்சி கடி ரொம்ப அதிகம்.

    ReplyDelete
  4. என்னை ஜனா படத்தை ஆறு முறை பார்க்க வைத்தவர்கள் அவர்கள்.

    நல்ல பதிவு. சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்

    ReplyDelete
  5. //நல்ல படத்தை போட்டு கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஊர் வந்து தொலைக்க சட்டென டிவி பொட்டியை ஆப் செய்து சில கண்டக்டர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததோடு //

    ஹா ஹா ஹா இது உங்களுக்குமா ..

    //எப்போதும் புதுமைக்கு முதல் குரல் கொடுக்கும் தமிழக போக்குவரத்து துறை //

    !!!!

    ReplyDelete
  6. SETCல மூட்டைப்பூச்சி கடி ரொம்ப அதிகம்.

    yes sir i face that problem...

    ReplyDelete
  7. என்னை ஜனா படத்தை ஆறு முறை பார்க்க வைத்தவர்கள் அவர்கள்\\

    koduma thalaiva

    ReplyDelete
  8. //என்னை ஜனா படத்தை ஆறு முறை பார்க்க வைத்தவர்கள் அவர்கள்.//

    உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.. தல படத்துலையே மகா மொக்கை

    ReplyDelete
  9. /*கார்த்திகைப் பாண்டியன் said...
    //என்னை ஜனா படத்தை ஆறு முறை பார்க்க வைத்தவர்கள் அவர்கள்.//

    உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.. தல படத்துலையே மகா மொக்கை*/

    நீயா பேசியது.... ?????

    எங்க தங்க தலைவி, வருங்கால முதல்வர் சினேகா படத்தை கொச்சை படுத்திய மூவரையும் கண்டிக்கிறேன்.

    ஆமா... தலே படத்திலே இதுமட்டும் தான் மகாமொக்கை என்றால்? "ராஜா", "ராஜா" என்று ஒரு படம் வந்துச்சே அதை என்னன்னு சொல்றது?

    ReplyDelete
  10. //நல்ல படத்தை போட்டு கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஊர் வந்து தொலைக்க சட்டென டிவி பொட்டியை ஆப் செய்து சில கண்டக்டர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததோடு //

    Same blood.

    ReplyDelete
  11. கடைசி வரை, ராமராசன் பட பேரு என்னன்னு நீங்க சொல்லவே இல்லையே ?

    ReplyDelete
  12. //

    எப்போதும் புதுமைக்கு முதல் குரல் கொடுக்கும் தமிழக போக்குவரத்து துறை

    //

    ஐயா சாமி உங்க புதுமையத்தான் பாத்தோமே... கழக ஆட்சியில் எதையும் விட்டு வைக்க மறுக்கிறீர்களே...

    மற்றபடி பயண அனுபவங்களில் உங்களின் பஞ்ச் நையாண்டி வசனங்களும், திரைக்கதையும் அருமை...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  13. ரொம்ப நல்ல பதிவு...--//

    நன்றி தீப்பெட்டி தொடர் பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  14. //நல்ல படத்தை போட்டு கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஊர் வந்து தொலைக்க சட்டென டிவி பொட்டியை ஆப் செய்து சில கண்டக்டர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததோடு //

    ஹா ஹா ஹா இது உங்களுக்குமா ..//

    கிரி சேம் பிளட் . நன்றி தொடர் வருகைக்கு

    ReplyDelete
  15. நெலம மாறுனா நல்லதுதாண்ணே..//

    நன்றி கார்த்திகை பாண்டியன்

    ReplyDelete
  16. எங்க தங்க தலைவி, வருங்கால முதல்வர் சினேகா படத்தை கொச்சை படுத்திய மூவரையும் கண்டிக்கிறேன்.

    ஆமா... தலே படத்திலே இதுமட்டும் தான் மகாமொக்கை என்றால்? "ராஜா", "ராஜா" என்று ஒரு படம் வந்துச்சே அதை என்னன்னு சொல்றது?//

    நைனா கும்மியடிச்சாச்சா?

    ReplyDelete
  17. //நல்ல படத்தை போட்டு கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஊர் வந்து தொலைக்க சட்டென டிவி பொட்டியை ஆப் செய்து சில கண்டக்டர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததோடு //

    Same blood. பட்டாம்பூச்சி ஒத்துக்கிறேன் சேம் பிளட்னு ஒத்துக்கிறேன்

    ReplyDelete
  18. கடைசி வரை, ராமராசன் பட பேரு என்னன்னு நீங்க சொல்லவே இல்லையே ?// படம் பேரு தெரியலை சுந்தர்

    ReplyDelete
  19. ஐயா சாமி உங்க புதுமையத்தான் பாத்தோமே... கழக ஆட்சியில் எதையும் விட்டு வைக்க மறுக்கிறீர்களே...
    மாற்றம் என்பது மட்டும் மாறாதது நித்யன்

    ReplyDelete
  20. மற்றபடி பயண அனுபவங்களில் உங்களின் பஞ்ச் நையாண்டி வசனங்களும், திரைக்கதையும் அருமை...

    அன்பு நித்யன்//

    நன்றி நித்யன் எங்க போயிட்டிங்க??? இவ்வளவு நாளா? கொடநாட்ல ஏதாவது வேலையா?

    ReplyDelete
  21. நல்லவேளை இன்னும் இந்த கொடுமை எல்லாம் அனுபவிக்கலை.

    ReplyDelete
  22. அவங்க போடுற படத்தை விட...பஸ்ஸில் இருக்கும் அந்த 'Dolby Digital' சவுண்ட் சிஸ்டம் தான் பயண அனுபவத்தை 'மிக இனிமை'யாக்கும். :)

    ReplyDelete
  23. நல்லவேளை இன்னும் இந்த கொடுமை எல்லாம் அனுபவிக்கலை.-

    கடவுள் உங்களை ஆசிர்வாதிக்கட்டும்

    ReplyDelete
  24. அவங்க போடுற படத்தை விட...பஸ்ஸில் இருக்கும் அந்த 'Dolby Digital' சவுண்ட் சிஸ்டம் தான் பயண அனுபவத்தை 'மிக இனிமை'யாக்கும். :)//

    ஏன் மூக்கன் சார் நக்கல் எல்லாம் விடறிங்க எந்த அரசு பஸ்ல 5.1 சவுன்ட் இருக்கு

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner