பூமராங் சினிமா விமர்சனம் - #Boomerang Tamil Movie Review By #JackieSekar


Life is a boomerang.... இந்த ஒற்றை வரியை நாயகன் பேச அதற்காக ஒரு படம் எடுத்து இருக்கிறார் இயக்குனர் ஆர் கண்ணன்...

திடீரென்று தமிழ் சினிமா இயக்குனர்கள் விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் இயற்கை உரம் வேளாண்மை போன்ற பல விஷயங்களில் ஒரு சேர கவனத்தை குவித்து வருவது பாராட்ட வேண்டிய அதேவேளையில் நிறைய whatsapp வாந்திகளும் இதுபோன்ற திரைப்படங்களில் இடம் பெறுகின்றன...


சத்ரு திரைவிமர்சனம் #Sathru Tamil Movie Review By #JackieSekar



#சத்ரு வழக்கமான... காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போலீஸ் கதைதான்..

இந்த மாதிரி கதையெல்லாம் நிறைய பார்த்து விட்டோம் என்று நினைத்து உட்கார்ந்தால்... முதல் பாதியில் காட்சிகளையும் வசனங்களையும் கோர்த்த விதத்தில் கவனம் இருக்கிறார் புதுமுக இயக்குனர் நவீன்.

வில்லன் கேரக்டர் செய்த பிரபாகரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்..


#Kanaa #Kana Tamil movie review by Jackiesekar | #Kanaareview #கனா #திரைவிமர்சனம்



கிராமத்து பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுக்கக்கூடிய திரைப்படம் இது

ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் தமிழுக்கு புதிதல்ல உதாரணத்திற்கு வெண்ணிலா கபடிக்குழு கில்லி ஜீவா இப்படி நிறைய திரைப்படங்கள சொல்லலாம் ..


#Seethakaathi Movie Review By Jackiesekar சீதக்காதி திரைவிமர்சனம்.


சீதக்காதி திரைப்படத்தில் ஆரம்பத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ஔரங்கசீப் நாடகம் சிங்கிள் டேக் 15 நிமிடம்… இந்தி திரை அனுபவம் தமிழ் ரசிகனுக்கு புது அனுபவம்…
விஜய்சேதுபதி பேட்டிகளில் சொன்னது போல படத்தில் முதல் 40 நிமிடம் வருகின்றார்… ஆனாலும் படம் நெடுகிலும் அவர் சொன்னது போல வந்துக்கொண்டு இருக்கின்றார்…



2.0 Movie review in Tamil by Jackiesekar | 2.0 சினிமா விமர்சனம்



2.0 நிச்சயம் குழந்தைகளோடு 3டி எக்சிபீரியன்சில் நிச்சயம் ரசிக்கலாம்...

நம்ம தமிழ்நாட்டுக்கு இருக்கற ஒரே சூப்பர் அரா சிட்டிதான்... நமக்கு ஏதாவது சயின்ஸ்ஸபிக்ஷ்ன் மூலமா ஆபத்து வந்த காப்பாத்த அவரை விட்டா ஆளே இல்லை...

படத்தின் கதை சூப்பர் ஹீரோக்கள் கதைதான் அடிப்படை.... நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு...
சூப்பர் ஹீரோ படத்துல வாஜிக் பார்த்தா வேலைக்கு ஆகாது..

சென்னை வெள்ளத்துக்கு காரணம் காசி தியேட்டர் தரைப்பாலமா ?






சென்னை காசி தியேட்டர்ல  புது படம் போட்டா... ஜெயா டிவி வரை டிராபிக்  தேவுடு காக்கும்..

  சட்டுன்னு தரை பாலத்தை புடுச்சி ஜபர்கான்  பேட் பக்கமா போயி சைதாட்பேட்டை இல்லை அசோக் நகர் போயிடுலாம்... 

அதே போல இந்த பக்கம்  இந்திராதியேட்டர் உள்ள இருந்து வருகின்றவர்கள்  தரைபாலத்து வழியா   மெயின் பாலத்து வழியா  பூந்து புதியதலைமுறை பக்கமா  கிண்டி போயிடலாம்...

அந்த அளவுக்கு  அந்த தரைப்பாலம் பெருமளவு பீக் அவர்ல  இருசக்ர வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை...


என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..




ஆம் பீனிக்ஸ் மாலில் 350க்கு மேற்ப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் 118 குழந்தைகளோடு நானும் மேடையேறினேன்.

பாட்டுக்கும் எனக்கு ஏணி வச்சாலும் எட்டாத தூரம் … பாட்டின் வரியெல்லாவற்றறையும் தப்பு தப்பாக என்பதை விட எனக்கு பிடித்த வரிகளை பொருத்து பாடுவேன்..


10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...



அப்படி இப்படின்னு ஓடிடுச்சி பத்து வருஷம்….
கல்யாணம் பண்ணி பத்து வருஷம் கம்ளீட் பண்ணிட்டோம். காதலித்து காத்திருந்த வருடங்கள் பத்து எல்லாம் சேர்த்து 20 வருஷம்…



வடசென்னை சினிமா விமர்சனம் | #VADACHENNAI #TamilMoviereview by #Jackieseka



வடசென்னை வயதுக்கு வந்தவர்களுக்கானது.. இந்த படமும் அந்த  விமர்சன  பதிவும்…

கேங்ஸ் ஆப் வசிப்பூர்தான்    இந்திய சினிமாவின் கேங்ஸ்டர் திரைப்படங்களின் உச்சம் என்று  எண்ணி இருந்தேன்…   இல்லை என்கிறது வடசென்னை


105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2



105 நாட்கள்…
காணாமல் போய் இருந்தேன்…

ஆம் சோசியல் மீடியாவில் லைக் ஷேர் கமென்ட்  எதுவும் அதிக அளவில்  செய்யவில்லை..  அதில்நண்பர்களுக்கு   கோபம் கூட இருக்கலாம்…

105 நாள் பிக் பாஸ் ரிவியூவ் விடாமல்  செய்தேன்… அதுவும்  பத்து நிமிடம் எல்லாம் இல்லை..  குறைந்தது ஒரு மணிநேரம்…

முதலில் இதை நான்  ஏன் செய்கிறேன் என்று கேள்விகள்தான் அதிகம்..
என்னை  பொருத்தவரை…
 அங்கே நடமாடும் மனிதர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் மனிதர்களின்  எண்ண வோட்டத்தை நான் படிக்க   இந்த ரிவியூவை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டேன்…

Seema Raja Tamil movie review by #Jackiesekar | #Seemaraja #சீமராஜா




விடியற்காலை ஐந்து மணி படத்துக்கு சினிமா ரசிகன் காலை  மூன்று மணிக்கே எழுந்து திரைப்படத்துக்கு வர வேண்டும்… காலை ஐந்து மணிக்கு  காசி தியேட்டர் வாசவில்  ஜெ  ஜெ என்று கூட்டம்… எத்தனை நாளைக்குதான் இந்த ஜெ  ஜெ … விடியற்காலை ஐந்து மணிக்கு காசி தியேட்டர் வாசலில் கருணாநிதி  பேச்சை கேட்க கூடிய கூட்டம் போல அவ்வளவு கூட்டம்… ஜிஎஸ்ட்டி சாலையில் டிராபிக்…  எல்லாம் மீறி காசி தியேட்டர் வாசலை மிதித்தால் ஐந்து மணி ஷோ கேன்சல் என்கின்றார்கள்.

சமீபகாலமாக  வெளியாகும் திரைப்படங்கள்  விடியற்காலை ஷோ  கேன்சல்  செய்து ரசிகர்களை அலைய வைப்பது  என்பது தமிழ் சினிமாவின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை என்பேன்…


வாழ்த்துகள் தம்பியண்ணன் அப்துல்லா.




அன்பின் தம்பி அப்துல்லாவுக்கு.....

வணக்கம் வாழிய நலம்....



இந்த கடிதத்தை அன்புள்ள தமிழ் பதிவுலகின் மல்லுவேட்டி மைனருக்கு,

என்றே ஆரம்பிக்க வேண்டும்....

நான் இந்த வலையுலகத்துக்கு வந்த போது என் பதிவுகளுக்கு புதுகை அப்துல்லா என்ற பெயிரில் நிறைய பின்னுட்டங்கள்.. யார் இவர் என்று பார்த்து இருக்கின்றேன்....


Kolamavu Kokila Tamil movie review by Jackiesekar | #KolamavuKokila #COCO






பெரிய ஆர்டிஸ்ட் வேல்யூ எல்லாம் இல்லை...
நயன்தாரா மட்டுமே பிரபலமானவர்... அப்புறம் போகிபாபு... அவ்வளவுதான்...


Ghajinikanth - Movie Review By Jackie sekar | Arya, Sayyeshaa | கஜினிகாந்த் திரைவிமர்சனம்





2015 தெலுங்கில் நானி நடிப்பில்  வெளியான பல்லே பல்லே மகாதேவோய் திரைப்படத்தின்  அபிஷியல் ரிமேக்தான்  கஜினிகாந்த்

 இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார்   இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்  இது..

#Junga Review By Jackiesekar #VijaySethupathi #Sayyeshaa, #MadonnaSebastian



இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு விஜய் சேதுபதி இயக்குனர்  கோகுல் ஒன்று  சேர்ந்து இருக்கும் படம் என்பதால்  எப்படியும் காமெடி ஜானரில்  கால் பதித்து இருப்பபார்கள் என்பதை உணர முடிந்தது..

கண்டக்டர் விஜய்சேதுபதிக்கு ஒரு பிளாஸ்பேக்.. விஜய்சேதுபதி அப்பா  சென்னையில் ஒரு தியேட்டர்  நடத்தி நஷ்டப்பட்டு அதை ஒரு செட்டியார்கிட்ட வித்துட்டார்... அந்த தியேட்டரை எப்படி விஜய் சேதுபதி மீட்டார் என்பதே ஜுங்கா படத்தின் கதை.


சந்தேகமே இல்ல... நீ ஜாக்கி பொண்ணுதான்.. இவ்வளவு டீடெயில் சொல்லுறியே....!!!


அம்மா...

சொல்லுடி...

பாட்டு கிளாஸ்ல... புதுசா ஒரு ஆண்ட்டி வந்தாங்க.... அவங்களுக்கு ஒரு பொண்ணு... ஒரு பையன்...
ஆண்ட்டி லூஸ் ஹேர் விட்டு இருந்தாங்க... கருப்பு சுடிதார்.. முன்னாடி பக்கம் டிசைன் வேற போட்டு இருந்துச்சி...

சந்தேகமே இல்ல... நீ ஜாக்கி பொண்ணுதான்.. இவ்வளவு டீடெயில் சொல்லுறியே....!!!


சூரி என்கிற சுரேஷ்குமார்




கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது...

எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில்  இருக்கும் ராமகிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில்தான்  எட்டாம வகுப்பு வரை...

 சென்ட் ஜோசப் கம்மியம் பேட்டை  பள்ளியில்  9ஜி வகுப்புல் நான் சேர்ந்து ஒரு வருடம் பெயில் வேறு ...

அப்பதான் சூரி எனக்கு பழக்கம்..


கடைக்குட்டிசிங்கம் திரைவிமர்சனம் #KadaikuttySingam Movie Review




#கடைக்குட்டிசிங்கம்
#KadaikuttySingam Movie Review

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுபவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை தவறாமல்  கண்டிப்பாக எழுதுவார்கள்.. அடித்து  துவைத்து காயப்பபோட்ட அரத பழசான கதை என்று... ஆனால் பிரசன்டேஷன் என்று  ஒன்று இருக்கின்றது அல்லவா?

 ஒரு நல்லவனை கெட்டவனாகவும் ஒரு கெட்டவனை நல்லவனாகவும் உருமாற்றும் சக்தி திரைக்கதைக்கு உண்டு அதனை சரிவர கற்று தேர்ந்வர்களே சினிமா உலகில் மூன்று படத்துக்கு மேல் இன்னமும் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றார்கள்.


#தமிழ்படம்2 #TamizhPadam2 Review By Jackiesekar


#தமிழ்படம்2 #TamizhPadam2

தமிழின் முதல்  ஸ்பூவ் திரைப்படம் தமிழ் திரைப்படம் என்ற அடைமொழியோடு வந்த திரைப்படம் இது..  இதற்குமுன் வந்த படங்கள்
இலைமறை காய்மறையாக கலாய்த்தாலும் நாங்கள் கலாய்க்கவே  வருகின்றோம் என்று வந்த திரைப்படம்இது.


முழு பாசத்தையும் அவளுக்கே கொட்டி கொடுங்க...



யாழினியும் அவள் அம்மாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்..

அம்மா கிளாஸ் மானிட்டரா இருக்கறது ரொம்ப போர் அம்மா…

ஏன்டா அப்படி சொல்ற?

இல்லை பேசறவங்களை சொல்லும் போது பிரண்ட்ஸ் கோச்சிக்கறாங்க.. பேரை சொல்லலைன்னா… டீச்சர் கோச்சிங்கராங்க…


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner