முழு பாசத்தையும் அவளுக்கே கொட்டி கொடுங்க...



யாழினியும் அவள் அம்மாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்..

அம்மா கிளாஸ் மானிட்டரா இருக்கறது ரொம்ப போர் அம்மா…

ஏன்டா அப்படி சொல்ற?

இல்லை பேசறவங்களை சொல்லும் போது பிரண்ட்ஸ் கோச்சிக்கறாங்க.. பேரை சொல்லலைன்னா… டீச்சர் கோச்சிங்கராங்க…



மிஸ் சொன்னாங்க.. யாழினி யூ ஆர் நாட் பிட் பார் கிளாஸ் மானிட்டரிங்கன்னு சொன்னாங்க..

நீ என்ன சொன்ன யாழினி…?

ஆன்ட்டி… நான் கிளாஸ் மானிட்டரிங் சரியா பண்ணலைன்னா.. என்னை அதுல போடாதிங்கன்னு சொன்னேன்..

இல்லைடா அப்படி சொல்லக்கூடாதுடா.. இன்னும் சரியா செய்ய டிரை பண்ணறேன்னு சொல்லனும் யாழினி என்றாள்..

வேணாம்மா… இதுக்கு எல்லாம் நான் புருப் செஞ்சி நல்ல பேர் எடுக்க வேணாம் என்றாள்..

யாழினி அம்மாவுக்கு கொஞ்சம் குடிக்க தண்ணி எடுத்துக்கிட்டு வான்னு சொல்லி யாழினி போனதும் மனைவி என் பக்கம் திரும்பினாள்..

எல்லாம் அப்பன் புத்தி..

எந்த மயிரான் குடுக்கற ஐஎஸ்ஓ 9001 சர்ட்டிபிகேட்டும் எனக்கு வேணாம்ன்னு சொல்ற அதே அப்பன் புத்தி அப்படியே அவகிட்டயும் இருக்கு…

பகவானே இது எங்க போய் முடியுமோ தெரியலையே என்றாள் என் மனைவி

நான்தான் எப்படியான ரியாக்ஷன் கொடுப்பது என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்தேன்..

ஏதாவது நல்ல ரியாக்ஷக்ஷன் இருந்தால் வரவேற்கபடுகின்றது.

======
திருவான்மியூர் ஆர்டிஓ பீச்சில் நான் யாழினி, மனைவி… தோழி, தோழியின் 12 ஆம் வகுப்பு படிக்கும் மகள் என்று அனைவரும் பேசிக்கொண்டு இருந்தோம்..

யாழினி மணலில்வீடு கட்டிக்கொண்டு இருந்தால்… சரங்கபாதை அமைத்தாள்… மணலை கெட்டி பண்ண கடல் நீரை எடுத்து வந்து மணலில் மிக்ஸ் செய்து சாணி போல ரவுண்ட் ரவுண்ட் ஆக தட்டிக்கொண்டு இருந்தாள்..

அவள் முழுக்க முழுக்க மணல் விளையாட்டின் மேல் மிக கவனமாக இருந்தாள்…

தோழியின் மகள் என்னோடு நிறைய பேசிக்கொண்டு இருந்தாள்… அங்கிள் இந்த பக்கம் திரும்புங்க…. செம டயார்டா இருக்கு என்று என்னை திருப்பி என் மடியில் படுத்துக்கொண்டாள்…

யாழினி எழுந்தாள்… எங்கள் இருவரையும் பார்த்தாள்.. யாழினி அவள் அம்மாவையும் தீர்க்கமாக பார்த்து விட்டு சொன்னாள்…

கோவமாக… அப்பா அப்படியே அக்காவை தட்டி தூங்க வைங்க.. பாட்டு பாடுங்க… அப்படியே முழு பாசத்தையும் அவளுக்கே கொட்டி கொடுங்க.. என்று கோவத்தோடு அங்கலாய்த்தாள்…

கோவமாக முஞ்சை எல்லாம் தூக்கி வைத்துக்கொள்ளவில்லை.. முகத்துக்கு நேராக அந்த பொசசிவ்நஸ்சை வெளிப்படுத்திய விதம் எனக்கு பிடித்து இருந்தது.

நான் மனைவி பக்கம் திரும்பினேன் தீர்க்கமாக பார்த்தேன்.

களுக் என்று சிரிப்போடு முகத்தை திருப்பிக்கொண்டாள்… அதுக்கு அர்த்தம் என்ன வென்றாள்.. இது அப்படியே அம்மா புத்தி.. அவ்வளவு பொசசிவ்.. என்று அவள் அம்மா பொருமியது போல நான் பொருமவில்லை.

யாழினி சொல்லிட்டா.. இவ சொல்லமாட்டா.. அதான் வித்தியாசம்…

====

யாழினி இந்த துணியை இப்படி மடிச்சி இப்படி அடுக்கனும்…

எனக்கு வரலைம்மா…

வரலைன்னு சொன்னா எப்படி? யாழினி டிரை பண்ணு…

அம்மா எனக்கு வரலை… உனக்கு நல்லா வருதில்லை..

நீயே செய் என்று துணி மடிக்கும் வேலையை அவள் அம்மா தலையில் கட்டிவிட்டு நடந்து செல்லும் யாழினியை என்ன சொல்லி துணியை மடிக்க சொல்வது என்ற தெரியமால் என் மனைவி பேந்த பேந்த விழித்துக்கொண்டு இருந்தாள்.

#யாழினிஅட்ராசிட்டி #yazhiniatrocities

ஜாக்கிசேகர்
05/07/2018

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner