#சத்ரு வழக்கமான... காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போலீஸ் கதைதான்..
இந்த மாதிரி கதையெல்லாம் நிறைய பார்த்து விட்டோம் என்று நினைத்து உட்கார்ந்தால்... முதல் பாதியில் காட்சிகளையும் வசனங்களையும் கோர்த்த விதத்தில் கவனம் இருக்கிறார் புதுமுக இயக்குனர் நவீன்.
வில்லன் கேரக்டர் செய்த பிரபாகரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்..
முக்கியமாக மதில் மேல் ஏற முடியாமல் போலீஸ் சுற்றி வளைக்கும் போது தப்பிக்க எடுக்கும் முயற்சியில் அந்தப் பையன் நன்றாக நடித்து இருக்கின்றார்...
கடத்தப்பட்ட குழந்தையின் தகப்பனாக டிவி சீரியலில் நடிக்கும் அவரும் நன்றாக நடித்திருக்கின்றார்...
ஆனால் இரண்டாம் பாதியில் தன் பக்கம் அதிக இழப்புகளை சந்திக்கின்றார் நாயகன் .. முதல் பாதியில் திரைக்கதையில் கவனம் ஈர்த்த இயக்குநர் இரண்டாம் பாதியில் இங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்று குழம்பி இருப்பது தெரிகிறது...
போலீஸ் என்பவர் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்து புல்லட்டில் வருவது மட்டும் அவர் வேலை அல்ல... தன் மீது நம்பிக்கை வைப்பவர்களின் உயிருக்கும் அவரை உத்தரவாதம்... இரண்டாம் பாதியில் சந்துரு அந்த விஷயத்தில் கோட்டை விட்டு விடுகின்றார்...
சிருஷ்டி டாங்கே போன் பேச மட்டும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்...
மகேஷ் முத்துசாமியின் இயல்பான ஒளிப்பதிவும் சிங்கிள் ஷாட்டுகளும்... முக்கியமாக மழையில் தடம் கண்டுபிடித்து அதில் ஓடும் ஓட்டத்திற்கு ரொம்ப நன்றாக லைட்டிங் செய்து இருக்கின்றார்..
1990களில் வெள்ளைக்காரர் என்றால்.. தமிழ் சினிமாவில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் அடிக்கடி வருவார்... சினிமாவை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் நன்றாக தெரியும் ... ரொம்ப நாட்களாக அவரை சினிமாவில் நான் பார்க்கவில்லை இந்த படத்தில் மருத்துவமனையில் நீலிமா ராணி போனில் பேசும்போது பக்கத்தில் அவர் அமர்ந்திருக்கின்றார்... அது அவர்தான் என்று எண்ணுகிறேன்..
தன் நண்பன் என்கவுண்டர் செய்யப்படடான் என்பதற்காக... தன் கனவு எதிர்காலம் எல்லாவற்றையும் ஒருவன் இழப்பான என்ன ???
ஆனால் படத்தின் முதல் பாதி மிக அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்... புதுமுக இயக்குனர் நவீன் அடுத்த படத்தில் இன்னும் மிளிர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது...
ஜாக்கி சேகர்.
#Sathru Tamil Movie Review By #JackieSekar
#Kathir #SrushtiDange #Ponvannan #NeelimaRani #SujaVarunee #SathruMovie #SathruMovieReview #SathruReview
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment