#தமிழ்படம்2 #TamizhPadam2 Review By Jackiesekar


#தமிழ்படம்2 #TamizhPadam2

தமிழின் முதல்  ஸ்பூவ் திரைப்படம் தமிழ் திரைப்படம் என்ற அடைமொழியோடு வந்த திரைப்படம் இது..  இதற்குமுன் வந்த படங்கள்
இலைமறை காய்மறையாக கலாய்த்தாலும் நாங்கள் கலாய்க்கவே  வருகின்றோம் என்று வந்த திரைப்படம்இது. இரண்டாவது படம் என்று  எடுத்த  அந்த படம் கடைசி வரை வராமலே போக... இயக்குனர் அமுதுனுக்கு இந்த  தமிழ்படம் 2 இரண்டாவது படமாக மாறிபோனது பெருத்த முரண்...

 படம் எப்படி இருக்கின்றது என்றால்..?  நிறைய படம் பார்த்து இருந்தால் இந்த திரைப்படத்தை நீங்கள் செம ஜாலியாக ரசிக்கலாம்..

 சமகால அரசியல் மீம்கள் என்று எல்லா விஷயத்தை கலாய்க்க  எடுத்துக்கொண்டதும் மிக முக்கியமாக கதையின் போக்கில் இந்த திரைப்படம் அவைகளை  பேசுவதால் யாரும் என்னைதான் கலாய்க்கின்றார்கள் என்று சொல்ல  முடியாத அளவுக்கு  காட்சிகளை அமைத்து  இருக்கின்றார்கள்.. சசிக்கலா  சமாதியில் சத்தியம் செய்வதில் இருந்து கமலையும் கவுதம் மேனன் படங்களை அதிகம் கலாய்ப்பது வரை பிரித்து மேய்ந்து இருக்கின்றார்கள்.

 ஆங்கில படங்களையும் விட்டு வைக்க வில்லை..  ஸ்பீட், அனிபால் லெக்சர், பாராஸ்ட் கம்ப் போன்ற படங்களையும் கலாய்த்து இருக்கின்றார்கள்.

நாயகி ஐஸ்வர்யாமேனனை எனக்கு ரொம்ப  பிடித்து இருக்கின்றது..

 படம் முதல் பதினைந்து நிமிஷம் தியேட்டர் அதிர்கிறது..  அப்புறம் அமைதியாகிறது.. அவ்வப்போது கிக்கே புக்கே என்று சிரிக்கிறது..

 இடைவேளைக்கு பிறகு பாகுபலி 24  தேவர் மகன் என்று பயணிக்க தியேட்டர் அதிர்கிறது...

ஒரே ஒரு ஸ்பாய்லர்..  விடிவியில் சிம்பு  திரிஷாவைப்பார்த்து சந்தோஷத்தில் எகிறி குதிப்பது போல சிவா எகிறி குதிக்க பேன்ட் கிழிந்து அதன் பின் வரும்  வசனம்.. டபுள் மீனிங்கின் உச்சம்...

மேலும்..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner