கடைக்குட்டிசிங்கம் திரைவிமர்சனம் #KadaikuttySingam Movie Review




#கடைக்குட்டிசிங்கம்
#KadaikuttySingam Movie Review

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுபவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை தவறாமல்  கண்டிப்பாக எழுதுவார்கள்.. அடித்து  துவைத்து காயப்பபோட்ட அரத பழசான கதை என்று... ஆனால் பிரசன்டேஷன் என்று  ஒன்று இருக்கின்றது அல்லவா?

 ஒரு நல்லவனை கெட்டவனாகவும் ஒரு கெட்டவனை நல்லவனாகவும் உருமாற்றும் சக்தி திரைக்கதைக்கு உண்டு அதனை சரிவர கற்று தேர்ந்வர்களே சினிமா உலகில் மூன்று படத்துக்கு மேல் இன்னமும் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றார்கள்.



 அது என்ன மூன்று படம் என்றுதானே கேட்கின்றீர்கள்..? நிறைய டைரக்டர்கள்  முதல்  படத்தை முக்கி முக்கி  கொடுத்து விடுவார்கள்... அடுத்த படம் ஏதோ பரவாயில்லை என்று இருக்கும்.. மூன்றாவது படம் மொக்கையாக இருக்கும் அதன்பின் அவர் திரையிலுகில்  முதல் படத்தை மட்டும்  நினைவில் கொண்டு நினைவு கூறும் இயக்குனர்கள் பட்டியல் தமிழ் சினிமாவில் பெரியது...

இயக்குனர் பாண்டிராஜ் தொடர்ந்து திரையுலகில்  பயணிப்பதன் அர்த்தம் உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்..


  சத்யராஜ் ஊரில் பெரிய தலைகட்டு நான்கு பெண் குழந்தைகள்.. கடைசியாக கடைக்குட்டியாக பிறந்த பையன் கார்த்தி அதனால் கடைக்குட்டி சிங்கம் நான்கு அக்கா என்பதால் பெரிய குடும்பம் தாய் மாமன் கார்த்தி தான் அரவனைத்து செல்கின்றார்.. அப்பா  சத்தியராஜூக்கு  எல்லோரும் சந்தோஷமாக நின்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது  ஆசை.. அந்த அல்ப ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே இந்ததிரைப்படத்தின் கதை..

கார்த்தி செமையா கிராமத்து வேடத்தில் பொருந்துகின்றார்... பருத்தி வீரன் எபெக்ட் ஆனால் அண்ணன் சூர்யா இந்த வேட்த்தில் போட்டு இருந்தால்  செட் ஆகி  இருக்கமாட்டார்... காரணம் ஐயம் வாட்ச் மெக்கானிக் என்று சொன்னால்தான் அவரை ரசிப்பார்கள்.

 சாயிஷா பொம்மைக்கு தாவணி கட்டி அலைய விட்டது போல இருக்கின்றார்... கோவிலில் காதலை சொல்லும்  இடம் அருமை.

நம்புங்கள் இந்த திரைப்படத்தில் சூரியின் காமெடி எடுபட்டு இருக்கின்றது..
முக்கியமாக கார்த்தி பேசும் போது டேய்  நிறைய பேசினா வீட்டுக்கு ரெய்டு வந்துடும்.. ஆன்டி இண்டியன்னு சொல்லிடுவாங்க என்று சொல்லும் இடங்களில்   தியேட்டர்களில் கைதட்டல்  காதை பிளக்கின்றது..

அதே போல சொந்தத்துல  மட்டும் பொண்ணு எடுக்காதிங்க என்று சூரி சொல்லும் காட்சியில் தியேட்டர் அதகளமாகின்றது... அத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருப்பான்கள் போல..

 படத்தின் பெரிய பலம் டயலாக்குகள்  அசத்தி இருக்கின்றார் பாண்டிராஜ்

இத்தனை  கேரக்டர்களை குழப்பம் இல்லாமல் முதல் பதினைந்து நிமிடத்தில்  அறிமுகப்படுத்தி வைத்ததில் இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் எடிட்டர் ரூபனின்  திறமை தெரிகின்றது.

இமானின் பின்னனி இசையும்...  இரண்டு பாடல்களும் ரசிக்கும் ரகம்.. வேல்சாமியின் ஒளிப்பதிவில் முதல் ரேக்ளா ரேஸ் மற்றும் சாயிஷா கார்த்தி இன்டீரியர் சாங் நன்றாக இருந்தது..

 படத்தில் நெகிழ்ச்சியான காட்சி என்று பார்த்தால்.. காய்கறி மூட்டையோடு  நிற்கும்  பாட்டிக்கு பேருந்தை நிறுத்தி அவள் பக்க   நியாயத்தை புரிய வைத்தல் கொஞ்சம்  சினிமா தனமாக இருந்தாலும் பஸ் முதலாளிகளுக்கு உறைக்கும் காட்சி.

கல்நெஞ்சையும் கரையவைக்கும் காட்சி என்று பார்த்தால் அது கிளைமாக்ஸ்  கோவில் சீன்   அழதாவர்கள் கூட நெகிழ்ச்சியாக அழுது விடுவார்கள் எல்லா ஆர்டிஸ்ட்டும் போட்டி போட்டு ஸ்கோர் செய்த  செம சீன்.  சண்டை காட்சிகள்  மற்றும் வில்லன் காட்சிகள் அந்த அளவுக்கு ஈர்க்கவில்லை அதே  நேரத்தில் சத்யராஜூம் ஒன்னும் பெரிதாக மனதில் நிற்கவில்லை..

பானுப்பிரியா சான்சே இல்லை பின்னி  இருக்கின்றார்... மவுனிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு  திரையில்... யுவரானியா அது... கடந்த கால நினைவுகளில் ஏய் அச்சு வெல்லமே ஏய் அச்சு வெல்லமே  பாடலில்  கிறங்கி கிடந்தநாட்கள் நினைவுக்கு வருகின்றது...
 படத்திற்கு திருஷ்ட்டி பொட்டு சூர்யா வரும் சீன்தான். செட்டே ஆகலை

குடும்பபடம் பார்த்து ரொம்ப நாள் ஆகின்றது என்ற குறையை தீர்க்கின்றது  இந்த படம் ... இந்த படத்துக்கு  பேமிலி ஆடியன்ஸ் நிச்சயம் வருவார்கள்.. காரணம் அந்த அளவுக்கு நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் படத்தின் காட்சிகள்  கொடுக்கின்றது...

சென்னை மற்றும் மெட்ரோ நகரங்களில் வேண்டுமானால்  படத்தை பற்றி அருமை சுமார்  என்ற இருவேறு கருத்துகள் உலா வரும்... ஆனால் பி அண்டு சி சென்டர்களில்இந்த கடைக்குட்டி சிங்கத்தை கொஞ்சுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.. படம் எனக்கு பிடித்து  இருக்கின்றது.. படம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

ஜாக்கிசினிமாஸ் ரேட்டிங்

3.25/5




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner