Seema Raja Tamil movie review by #Jackiesekar | #Seemaraja #சீமராஜா




விடியற்காலை ஐந்து மணி படத்துக்கு சினிமா ரசிகன் காலை  மூன்று மணிக்கே எழுந்து திரைப்படத்துக்கு வர வேண்டும்… காலை ஐந்து மணிக்கு  காசி தியேட்டர் வாசவில்  ஜெ  ஜெ என்று கூட்டம்… எத்தனை நாளைக்குதான் இந்த ஜெ  ஜெ … விடியற்காலை ஐந்து மணிக்கு காசி தியேட்டர் வாசலில் கருணாநிதி  பேச்சை கேட்க கூடிய கூட்டம் போல அவ்வளவு கூட்டம்… ஜிஎஸ்ட்டி சாலையில் டிராபிக்…  எல்லாம் மீறி காசி தியேட்டர் வாசலை மிதித்தால் ஐந்து மணி ஷோ கேன்சல் என்கின்றார்கள்.

சமீபகாலமாக  வெளியாகும் திரைப்படங்கள்  விடியற்காலை ஷோ  கேன்சல்  செய்து ரசிகர்களை அலைய வைப்பது  என்பது தமிழ் சினிமாவின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை என்பேன்…



ரைட் காசி  டாக்கீஸ் தியேட்டர் இந்த படத்தை பார்த்தேன்… சீமராஜா  திரைப்படத்தின் கதை என்ன…?

சிவகார்த்திகேயன் சின்னராஜா பெரியராஜா அவரு அப்பா  நெப்போலியன்.. அவர்களுடைய ராஜ வம்சத்துக்கு பிரச்சனை வர.. சின்ன ராஜாவான சீமராஜா எப்படி மீட்டு எடுக்கின்றார் என்பதே இந்த திரைப்படத்தின் கதை.
சிவகார்த்திகேயன்..ராஜாவாகவும் விடலையாகவும் சமந்தாவோடு  காதல் காட்சிகளிலும் சக்கை போடு போடுகின்றார்.. சூரியோடு நிறைய காட்சிகளில் கிச்சி கிச்சி மூட்டுகின்றார்கள்.

சமந்தா ரியாக்ஷன்  சான்சே இல்லை…  பள்ளி ஆண்டு விழாவில் கொடுக்கும் ரியாக்ஷன் மற்றும் ராமர் வேஷம் போட்டுகொண்டு வரும் காட்சிகளில்  சமந்தா கொடுக்கும் ரியாக்ஷனுக்கு  சீமராஜா ஜில்லாவையே எழுதி வைக்கலாம்…

லால் அதிகம் கத்தாமல் நடித்து இருக்கின்றார்… அவர் கத்த வேண்டிய காட்சிகளில் சிம்ரன் கத்தி எரிச்சலை ஏற்படுத்துகின்றார்.
  சூரியின் சிறுத்தை காமெடியும் டா டா காமெடியும் தியேட்டரில் சிரிப்பு சத்தத்தை வரவைக்கின்றன…

 பிரேமுக்கு பிரேம் 150 பேர் இருக்கின்றார்கள்.. நிறைய செலவு செய்து எடுத்து இருக்கின்றார்கள்.. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு அசத்தல் ரகம்… முக்கியமாக ராஜா போர்ஷன் அசத்தல்..   இமானின் பாடல்களில் மூன்று  பாடல்கள் கேட்கும் ரகம் அதே நேரத்தில் நடனங்களில் முக்கியமாக சந்தை நடனங்களில்  சிங்கிள் டேக் டிரை செய்து இருக்கின்றார்கள்..
வருத்தப்படாதவாலிபர் சங்கம் ரஜினிமுருகன் அளவுக்கு லைட் மூவி இது  இல்லை என்றாலும் ராஜா கதையில் புனைவைசேர்த்து உழைப்பை கொட்டி  பிரேமுக்கு பிரேம் உழைத்து இருக்கின்றார்கள்…

படம்  கொஞ்சம் லென்தி இந்த படத்துக்கு ஐந்துக்கு 2,75 கொடுக்கலாம் ஆனாலும் பிஆன்டு சியில் சீமராஜாவுக்கு  கண்டிப்பாக வரவேற்புஇருக்கும் காரணத்தால்  ஐந்து மூன்று  மதிபெண் கொடுத்து டைம்பாஸ் கேட்டகிரியில் ஜாக்கிசினிமாஸ் பரிந்துரைக்கின்றது…


ஜாக்கிசேகர்
ஜாக்கிசினிமாஸ்,




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner