வடசென்னை வயதுக்கு வந்தவர்களுக்கானது.. இந்த படமும் அந்த விமர்சன பதிவும்…
கேங்ஸ் ஆப் வசிப்பூர்தான் இந்திய சினிமாவின் கேங்ஸ்டர் திரைப்படங்களின் உச்சம் என்று எண்ணி இருந்தேன்… இல்லை என்கிறது வடசென்னை
ஒரு பிரேம் வச்சா அதுல எப்படியும் முப்பது நாப்பது பேர் இருக்காங்க… அதே நேரத்துல பீரியட் பிலிம்வேற… அப்ப நிறைய பணம் தேவையாய் இருந்து இருக்கும்… ஆனா அசத்தி இருக்காங்க.
தனுஷ் பின்னு இருக்கார் மனுஷன்… ஐஸ்வர்யா கூட தவுலத் காட்டுற சீன்ல இருந்து ஹார்பர்ல மச்சான் கூட போடுற கத்தி சண்டை ஜெயில்ல படுதாவுக்கு உள்ள காட்டுற முக பாவம்ன்னு அசத்தி இருக்கார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் சட்டை பட்டன் தெரிக்க விட்டு அசத்தி இருக்காங்க… படம் பார்க்கறவங்களுக்கு அப்ப தெரிக்கிற மனசை புடிச்சு வைக்கறது ரொம்ப கஷ்டம்… முட்டாக்கூதி என்று அதிரடியாக பேசி இன்னும் டரியல் ஆக்குகின்றார்.
எல்லாறையும் விட அமீருக்கு மச்சம் இருக்கும்.. இல்லைன்னா ஆன்ட்ரியாவோட படுக்கையில ஒரே ஒரு இன்ஸ்கர்ட்டை ஒப்புக்கு கட்டிக்கிட்டு மேல ஒன்னும் போடாம படுத்து இருக்கற காட்சியை பார்க்கும் போது பார்க்கற நமக்கேஅமீர் மீது பொறாமை வருகின்றது… அமீர் நெருங்கிய நண்பர்கள் எதிரிகள் ஒரு கேஸ் பீர்பாட்டிலை அடித்து எரிச்சலை தனித்துக்கொள்வார்கள்.
ஆனால் ஆண்ட்ரியா.. அந்த கூலிங் கிளாஸ் பிரோவில் இருந்து எடுத்து வரும் காட்சி சிங்கிள்டேக்…
தே போல அமீர் அந்த ஹோட்டல் சீன் சிங்கிள் டேக் டிரை செய்து இருக்கின்றார்கள்.
சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர், ராதாரவி எல்லாரும் அசத்தி இருக்காங்க..
சந்தோஷ் நாரயணன் மியூசிக் திரைப்படத்துக்கு ஒரு லைவ்லிநஸ் கொடுக்குது.. பின்னனி இசையும் மிரட்டல்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு.. படம் பார்க்கற பீலிங்க தராம காசிமேட்டு மீனவர் குப்பத்தில் வாழும் அனுபவத்தை கொடுப்பதுதான் செமை…
படம் ஆரம்பிக்கும் போது… ஒத்தா ஒரு எழவும் புரியாம இருக்கும்… உதாரணத்துக்கு கேம் ஆப் துரோன் கதை ஆரம்பிக்கும் போது ஒரு எழவு மயிறும் புரியாது…. ஆனா ஒரு நாலாஞ்சு எபிசோட் பார்த்து முடிச்சது.. கரண்ட் கம்பியை தொட்டது போல பரபரன்னு கதை போகும் அப்படித்தான் இருக்கு வடசென்னையும்… முதல் பாகம்தான் முடிஞ்சி இருக்கும் ஆனாலும் நிறைவாய்.. வெயிட்டிங் பார் செக்ன்ட் பார்ட்…
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment