10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ...



அப்படி இப்படின்னு ஓடிடுச்சி பத்து வருஷம்….
கல்யாணம் பண்ணி பத்து வருஷம் கம்ளீட் பண்ணிட்டோம். காதலித்து காத்திருந்த வருடங்கள் பத்து எல்லாம் சேர்த்து 20 வருஷம்…




சித்திரம் பேசுதடி படத்துல முதன் முதலா பாவனா கண்ணுக்கு நரேன் பொறுக்கியாதான் தெரிவான்… அது போலத்தான் நான் அவ கண்ணுக்கு தெரிஞ்சேன்… அப்படிபட்ட பொறிக்கி கூட கல்யாணம் பண்ணி பத்து வருஷம் ஓட்டினது பெரிய விஷயம்தான்…

அதே நேரத்துல ஒன்னு சொல்லனும் அந்த படத்துல " இடம் பொருள் பார்த்து" ஒரு பாட்டு ஒன்னு வரும்....

அதுல ஒரு வரி வரும்..

=============

என்னை போல எவரும் உன்னை

காதலிக்க முடியாது

முடியும் என்றல் கூட அவனை (அவளை)

காதலிக்க முடியாது

======

இரண்டு பேருமே அப்படித்தான்.

சின்ன வயசுல இருந்து எனக்கு ஒரு ஏக்கம்… வீட்டுல நான்தான் பெரிய பையன் என்பதால் எனக்கு ஒரு அக்காவோ அல்லது அண்ணனோ இருந்து இருக்கலாமோன்னு நான் நினைக்காத நாளே இல்லை… ஆனா அவ கூட பழகுன இந்த 20 வருடத்துல எனக்கு அப்படி ஒரு தாட் வந்ததே இல்லை.. காரணம் அப்படி ஒரு எண்ணம் எனக்கு வராத அளவுக்கு அப்படி பார்த்துக்கிட்டா.

நான் தனியா வளர்ந்த காட்டு மரம் போல . சரி தப்பு சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை.. அப்படி சொல்லிக்கொடுக்க வந்தது எல்லாம் மொக்கை மோகனாகவே இருந்தார்கள்… நானே விழுந்து அடிபட்டு மிதிபட்டு அசிங்கப்பட்டு கத்துக்கிட்ட விஷயம்… அதனாலயோ என்னவோ யார் சொல்ற பேச்சையும் கேட்கவேமாட்டேன்..

புத்திக்கு என்ன படுதோ அதைததான் செஞ்சி இருக்கேன்… சில நேரத்துல எடுத்த முடிவு தப்பா போய் இருக்கு… எந்த மயிரான் சொன்னதையும் நாம் கேட்கலை.. அதனால ஒரு நிறைவு இருந்து இருக்கு.
நான் எடுத்த முடிவு.. ஐ யம் த ரெஸ்பான்சிபில்ன்னு தப்போ சரியோ நின்னு இருக்கேன்...

இன்னைக்கு வரைக்கும் அப்படித்தான்… நான் செய்யற எந்த விஷயத்துலயும் மூக்கை நுழைச்சி ஐடியா மணியா மாறி அவ என்னைக்கும் அட்வைஸ் பண்ணதே இல்லை… நானும் அப்படித்தான்…

இந்த பத்து வருஷம் ரெண்டு பேருக்குமே ஒத்துக்கொள்ளாத விஷயம் நிறைய இருக்கும் பேசி தீர்த்து இருக்கோம்.. ங்கோத்தா ஒரு நாளும் மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டு மோட்டுவாளையை
ஒரு நாளும் பார்த்தது இல்லை.. உதாரணத்துக்கு யாழினியை மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து மான்டசரி பள்ளிக்கு மாற்றியதுல எனக்கு விருப்பம் இல்லை.. ஆனா அதுல அவ உறுதியா இருந்தா… இப்ப அந்த முடிவு எவ்வளவு நல்ல முடிவு என்பதை இப்போது உணர்கிறேன்…

இது போல சொல்லிக்கிட்டே போகலாம்…

அம்மா செத்து போச்சி… அப்பா படுத்த படுக்கையானார்…. அம்மா பக்கமோ அப்பா பக்கமோ பெரிசா வீட்டுல எடுத்துக்கட்டி செய்யவோ… கல்யாணத்துல வேட்டி மடிச்சிக்கட்டி சாம்பார் வாளி தூக்கவோ யாரும் இல்லை என்பதோடு எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் செஞ்சி வைக்க யார் இருக்காங்கன்னு யோசிச்சி பார்த்தா … யாருமே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

பத்தாவது வருஷம் ஆயிடுச்சி.. கல்யாண நாளுக்கு 15 ஆயிரத்துல நல்ல மொபைல் அவளுக்கு வாங்கி கொடுக்கலாம்ன்னு இருந்தேன்… அவ சொன்னா.. எனக்கு வேண்டாங்க… செமி வாஷிங் மெஷின் வாங்கி கொடுங்க என்று சொல்லி விட்டாள்... காரணம் கல்யாணத்தின் போது வாங்கிய வாஷிங் மெஷின் மற்றும் பிரிட்ஜ் அப்புறம் ஏசி எல்லாம் பத்து வருஷம் ஆகி விட்டது என்று பறை சாற்றுகின்றன..

இன்று நள்ளிரவு 12 மணிக்கு பத்தாம் வருட திருமணநாள் வாழ்த்துகள் என்று வாழ்த்தி விட்டு… எனக்கு தெரியாமல் ஆயிரம் ரெண்டாயிரம் என்று அவள் சேர்த்து வைத்து இரண்டு பவுனில் எனக்கு செயின் வாங்கி என் கழுத்தில் போட்டு அழகு பார்த்தாள்…

எப்படி பட்ட சண்டையாக இருந்தாலும் இரவு பத்து மணிக்குள் அதற்கு முடிவு கொண்டு வந்தாலே வீட்டில் பாதி பிரச்சனை போய் விடும் என்பதில் நாங்கள் மிக தெளிவாக இருக்கின்றோம்..

லாங் டிரைவ் நிறைய பேச்சுகள் வாழ்க்கையை மேலும் அழகாக்குகின்றது...

பத்து வருட திருமண நாளை முன்னிட்டு என்னவள் என்னை பற்றி ஒரு பத்தி தமிழில் எழுதி இருந்தாள்… தமிழில் எனக்காக மெனக்கெட்டு எழுதியது ஆச்சர்யமாக இருந்தது

அந்த வாழ்த்து இதோ…

ஆயிற்று 10 வருடங்கள்... கமு (கல்யாணத்திற்கு முன்) இன்னும் ஒரு 10 வருடம்...
வருடங்களாய் கரையாமல்.. நினைவுகள் பசுமையாய் நெஞ்சில்..
யதார்த்தமாய் கழிந்த வாழ்க்கை,
யாழினி நீ தர, அர்த்தமுள்ளதாகியது...
இத்தருணத்தில் வேண்டுவதெல்லாம்...
வா என்னவனே நாம் கை கோர்த்து,
வரும் வருடங்களை மேலும் அழகாக்கலாம்...
Happy anniversary 💑 Jackie Sekar


வேறு என்ன… வருடா வருடம் உங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டி…

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
19/10/2018



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

28 comments:

  1. திருமணநாள் வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  2. Vazhththukkal Jackie Sir, Innum pala paththu varudangalai kadakka!

    ReplyDelete
  3. Congratulations MR and MRS Jackie Sekar ! !

    ReplyDelete
  4. அழகான அன்பான மனைவி.,யாழினி இருக்க உங்களுக்கு என்ன கவலை..என்றும் மகிழ்வோடு இணைந்திருக்க வாழ்த்துகிறேன் அண்ணா.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டுகள்

    ReplyDelete
  6. அழகான, அர்த்தமுள்ள வாழ்க்கை தொடரட்டும்.

    ReplyDelete

  7. My dear Bother
    Many more Happy returns of the Day

    ReplyDelete
  8. Wish you a happy wedding anniversary day.
    "Endrum Nalamudan Vazhka."

    ReplyDelete
  9. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்... உடன்படாத கருத்துக்கள் பல இருந்தாலும் நீங்கள் இப்படித்தான் என ஏற்றுக்கொண்டதால் தொடர்ந்து உங்களை தொடர முடிகிறது.. பல்லாண்டு வாழ்க..

    ReplyDelete
  10. Sir Best Wishes Sir
    The poem is good
    Congrats

    ReplyDelete
  11. இனிய மணநாள் வாழ்த்துகள் ஜாக்கி சேகர்

    ReplyDelete
  12. வாழிய வாழிய பல்லாண்டு.. வளமுடன் வாழ்கவே

    ReplyDelete
  13. வாழிய வாழிய பல்லாண்டு.. வளமுடன் வாழ்கவே

    ReplyDelete
  14. வாழிய வாழிய பல்லாண்டு.. வளமுடன் வாழ்கவே

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. God bless ur family jackie
    Have all wealth and health for ur family jackie

    ReplyDelete
  18. God bless ur family jackie
    Have all wealth and health for ur family jackie

    ReplyDelete
  19. Wishes and long happy healthy wealthy life

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner