இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு விஜய் சேதுபதி இயக்குனர் கோகுல் ஒன்று சேர்ந்து இருக்கும் படம் என்பதால் எப்படியும் காமெடி ஜானரில் கால் பதித்து இருப்பபார்கள் என்பதை உணர முடிந்தது..
கண்டக்டர் விஜய்சேதுபதிக்கு ஒரு பிளாஸ்பேக்.. விஜய்சேதுபதி அப்பா சென்னையில் ஒரு தியேட்டர் நடத்தி நஷ்டப்பட்டு அதை ஒரு செட்டியார்கிட்ட வித்துட்டார்... அந்த தியேட்டரை எப்படி விஜய் சேதுபதி மீட்டார் என்பதே ஜுங்கா படத்தின் கதை.
காமெடியில் செமையாக விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு பின்னி இருக்கின்றார்கள்.. முக்கியமாக இரண்டு பேர் அசத்தி இருக்காங்க.. ராதராவி காட்பாதர் போல வேஷம்... அதே போல சரண்யா சன்சே இல்லை... இன்னா ஸ்லாங் பின்னிட்டாங்க.. அதுவும் அந்த பிளாஷ்பேக்கை சொல்லும் போது... வாய்... அந்த பாட்டியும் செமையா அசத்தி இருந்தாங்க..
மடோனா செபஸ்டின் ஒரு பாடலுக்கு வந்தாலும் கொள்ளை அழகு .. மிளிரும் ஒரு அழகை இந்த பசங்க சத்யராஜ் கூட மீம்ல மிக்ஸ் பண்ண சில நேரத்து ஷாட்டுல அந்த முகத்தோட கம்பேர் பண்ண வச்சிட்டானுங்க...
சாயிஷா என்ன உடம்புயா... ரப்பர் மாறி வளையுது... தொப்பைன்னா கிலோ என்ன விலை என்று கேட்கும் உடல்வாகு... அழகு மிளிரும் ஆட்டம் வாவ்... ரகம்தான்...
இரண்டாம் பாதியில் சேசிங் காட்சிகள் கொஞ்சம் படுத்தி எடுத்தாலும்... ஓவரலாக படம் கமெடி எண்டர்டெயின்மென்ட்.
முக்கியமாக சுரேஷ்மேனன் கார்பரேட் சார்பாக பேச.... விஜய்சேதுபதி ஆக்ரோஷமாக அதற்கு செம லாஜிக்காக பதில் சொல்லும் காட்சிகள் வாவ் ரகம்..
போகிற போக்கில் சத்தியம் தியேட்டர் பார்ப்கான் கொள்ளைகளை முக்கியமாக மல்ட்டி பிளக்ஸ் கொள்ளைகளை சுட்டிகாட்ட விஜய் சேதுபதியால் மட்டுமே முடியும்.. காரணம் அவர் மக்களின் செல்வன் அல்லவா...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.
0 comments:
Post a Comment