சென்னை காசி தியேட்டர்ல புது படம் போட்டா... ஜெயா டிவி வரை டிராபிக் தேவுடு காக்கும்..
சட்டுன்னு தரை பாலத்தை புடுச்சி ஜபர்கான் பேட் பக்கமா போயி சைதாட்பேட்டை இல்லை அசோக் நகர் போயிடுலாம்...
அதே போல இந்த பக்கம் இந்திராதியேட்டர் உள்ள இருந்து வருகின்றவர்கள் தரைபாலத்து வழியா மெயின் பாலத்து வழியா பூந்து புதியதலைமுறை பக்கமா கிண்டி போயிடலாம்...
அந்த அளவுக்கு அந்த தரைப்பாலம் பெருமளவு பீக் அவர்ல இருசக்ர வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை...
எவ்வளவு மழை வந்தாலும் சென்னைக்கு வெள்ளம் வந்தாலும் பாலம் மூழ்கி போகுமே தவிர ஒரு நாளும் காசி தியேட்டர் வாசல் பக்கம் கால் வச்சி படுத்ததில்லை...
இப்ப அந்த காசி தியேட்டர் தரைபாலத்தை இடிக்கறாங்க... காரணம் 2015 பெருவெள்ளத்துவ நகரின் உள்ளே தண்ணி போக பெரும் காரணம் அந்த தரைப்பாலம்தானாம்..
சென்னையில எவ்வளவு பெரிய வெள்ளைமயிறு வந்தாலும் உதயம் தியேட்டர்வரை வெள்ளம் வந்து அசோக்நகர்ல கிரவுன்ட் புலோர்ல ஒரு அடிக்கு தண்ணி நின்னது இல்லை..
சென்னையில் பெரு மழையை சமாளிக்க அந்த பக்கம் கூவம் இந்த பக்கம் அடையாறு சிறந்தவடிகால இருந்து இருக்கு...
ஆனா செம்பரம்பாக்கத்தை திறக்க உத்தரவு கிடைக்காத காரணத்தால் சேத்து வச்சி ஒரே நாள் நைட்டுல திறந்து பல லட்சம் பேரை நடுத்தெருவுல நிறுத்திச்சி மக்களுக்காகவே வாழ்ந்தேன் சொல்லிக்கிட்டு திரிஞ்ச ஒரு அக்யூஸ்ட்
ஆனா சும்மா சொல்லக்கூடாது அந்த கதறலை நேர்ல பார்த்தவன்... நான் ஆவனமா பதிஞ்சி இருக்கேன்.. அந்த சாபம்... இரண்டே வருஷம்... செம்பரம்பாக்கம் திறக்க உத்தரவு கொடுக்க காக்க வச்ச இரண்டு பேர்ல ஒன்று கால்கள் இழந்து 913 கோடி சொத்தை ஆனாதைய விட்டு செத்து போச்சி.. மற்றது ஜெயில்ல..
அடை மழை பெய்தாலும் செம்பரம்பாக்கம் டேம் உடைந்து விடும் சூழலில் ஒரே நாள் இரவில் திறந்து விட்ட நீரே சென்னை வெள்ளத்துக்கு காரணம்ன்னு இங்க இருக்கற டிவிக்கள் வேனும்னா.. உண்மையை மறைக்கலாம் நேஷனல் ஜியாகிராபியில் உண்மையான காரணத்னை பதிவு செஞ்சி இருக்காங்க...
அதனாலதான் காசி தியேட்டர் பக்கம் தண்ணி இரண்டு பக்கமும் போச்சி... கிண்டி தொழிற்பேட்டையும் இந்த பக்கம் அசோக்நகர் கேகேநகர் வெள்ளத்தில் மூழ்கியது... அதே நேரத்தில் ரோட்டில் இருந்து ஐந்தடி உயர மேட்ரோ ரயில் சிமென்ட் டிவைடரும் ஒரு காரணம்...
ஆனா இன்னைக்கு காசி தியேட்டர் தரைபாலத்தை இடிக்கறாங்க... அதுக்குகாரணம் வெள்ள நீராம்...செம்பரம்பாக்கம் சொன்னா... சொத்து குவிப்பு வழக்கின் முதுல் குற்றவாளிக்கு மேலும் கெட்ட பேர் ஏற்பட்டு விடும் அல்லவா...? அதனால நீதியை நிலைநாட்ட தரைப்பாலம் பணால்..
எப்பயுமே நம்ம ஊர்ல பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்தான்...
அதுல லேட்டஸ்ட் பலிகடா... காசி தியேட்டர் அடையாறு தரைப்பாலம்..
ஜாக்கிசேகர்
16/11/2018
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....EVER YOURS..
.
0 comments:
Post a Comment