பூமராங் சினிமா விமர்சனம் - #Boomerang Tamil Movie Review By #JackieSekar


Life is a boomerang.... இந்த ஒற்றை வரியை நாயகன் பேச அதற்காக ஒரு படம் எடுத்து இருக்கிறார் இயக்குனர் ஆர் கண்ணன்...

திடீரென்று தமிழ் சினிமா இயக்குனர்கள் விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் இயற்கை உரம் வேளாண்மை போன்ற பல விஷயங்களில் ஒரு சேர கவனத்தை குவித்து வருவது பாராட்ட வேண்டிய அதேவேளையில் நிறைய whatsapp வாந்திகளும் இதுபோன்ற திரைப்படங்களில் இடம் பெறுகின்றன...நேரடியாக விவசாயம் வேளாண் தொழில் என்று களம் இறங்கி ஜல்லி அடிக்காமல் அதர்வாவை வைத்துக் கொண்டு... ஹாங்காங் இயக்குனர் ஜான் ஹூ இயக்கிய பேஸ் ஆப்.. தெலுங்கு எவடு விஜய் நடித்த கத்தி என்று ஊறுகாயாக தொட்டுக் கொண்டு இருக்கிறார்கள்...

அதர்வா அவருக்கு கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்..

முதல் பாதி வள வள என்று சென்றாலும் இரண்டாம் பாதி சமகால அரசியலை ஆர்ஜே பாலாஜி பகடி செய்வதால் படம் கொஞ்சமாக தயாரிப்பாளருக்கு பூமாரங்க் ஆகாமல் தப்பித்து விடுகிறது...

சுந்தர் சி அளவுக்கு மேகா ஆனந்தை ஆர் கண்ணன் உபயோகப்படுத்தவில்லை.... இந்தப் பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று திரு திரு என பல காட்சிகளில் முறிப்பது தெரிகிறது.... சில காட்சிகள் அவருக்காக வேண்டுமென்றே திணித்தது போல உள்ளது...

முதல் பாதியில் சதீஷ் இரண்டாம் பாதியில் பாலாஜி படத்தின் கலகலப்புக்கு உதவி செய்கிறார்கள்...

முகமாற்று அறுவை சிகிச்சை என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம் எவ்வளவு யோசிக்க வேண்டும் பழைய கதைகள் எவ்வளவு அலச வேண்டும்... அப்படியெல்லாம் இல்லாமல் முகமூடி போல முகத்தை மாற்றிக்கொள்வது படத்தின் பெரிய லாஜிக் மிஸ்டேக்...

படத்தில் காமெடி நடிகர் சதீஷ் சொல்வார் ஏன்டா ஒரு ஹெல்மெட் வாங்கினால் கூட பத்து வட்டி போட்டு பார்க்கிறான் நீ என்னடான்னா ஒரு மொகத்தை விசாரிக்காமல் மாத்தி இருக்க.... என்று சொல்லுவார் அதுதான் படம் பார்க்கின்றவர்கள் அனைவரின் கேள்வியும்...

இசையமைப்பாளர் அர்ஜுன் ரெட்டி புகழ் ராதன் மிக சிறப்பான பின்னணி இசை வழங்கியிருந்தாலும் முதல் பாடல் பாடிய பாபு சாஷி அச்சு அசல் ரகுமான் குரலில் அசத்துகின்றார்.

இயக்குனர் கண்ணன் முதல் பாதியில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த திரைப்படம் இன்னும் சிறப்பான திரைப்படமாக வந்திருக்கும்..

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
#பூமராங்
#Boomerang Tamil Movie Review By #JackieSekar

#Atharvaa #RKannan #MegaAkash #IndhujaRavichandran #Sathish #RJBalaji #SuhasiniManiratnam #BoomerangMovie #BoomerangMovieReview #BoomerangPublicReview
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner