கிராமத்து பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுக்கக்கூடிய திரைப்படம் இது
ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் தமிழுக்கு புதிதல்ல உதாரணத்திற்கு வெண்ணிலா கபடிக்குழு கில்லி ஜீவா இப்படி நிறைய திரைப்படங்கள சொல்லலாம் ..
சக்தே இந்தியா பார்த்துட்டு ரொம்ப நெகிழ்ந்து இருந்தேன் ஆனா டென்சில் வாஷிங்டன் நடித்த remember of titans படத்தை பார்த்ததும் வெறுத்துப் போய்விட்டேன் ஏன்னா chakடே இந்தியா திரைப்படத்தில் வரும் நிறைய காட்சிகள் ரிமெம்பர் ஆப் டைட்டன்ஸ் திரைப்படத்தில் வரக்கூடிய காட்சிகள் .... அந்த அளவுக்கு சுட்டு காட்சிகளை வைத்திருந்தார்கள்..
தங்கல், சுல்தான் மாதிரி நிறைய இந்தி படங்கள் ...ஸ்போர்ட்ஸ் படங்கள பார்க்கும் பொழுது நிறைய காட்சிகள் அது நினைவுபடுத்தும்
உதாரணத்துக்கு ஏழ்மை, உதாசீனம், தேர்வுக் குழுவில் அரசியல், இது எல்லாமே ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் வரக்கூடிய அடி நாதமான காட்சிகள்..
பட் இந்த கனா திரைப்படத்தில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் சாமர்த்தியமாக விவசாயத்தையும் கிரிக்கெட்டையும் ஒரு புள்ளியில் இணைத்து இருக்கின்றார் ...
அதே நேரத்தில் உமன் கிரிக்கெட்டர் என்றால் நம்ப வேண்டும்... அந்த அளவுக்கு ஆர்டிஸ்ட் performance இருக்க வேண்டும் ... அந்த நம்பிக்கையை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரேமுக்கு பிரேம் சாதித்து இருக்கின்றார்..
திரைப்படத்தில் நிறைய காட்சிகள் கண்களில் நீர் கோர்க்க வைத்தாலும் கடைசி 20 நிமிடம் ஜமாய்த்து இருக்கின்றார்கள் மிக முக்கியமாக ஐஸ்வர்யா இந்த பேங்க்ல தான் எங்க அப்பா கடன் வாங்கினார் என்று சொல்லும்போது கண்களில் கண்ணீர் பெருகுவதை யாராலும் தடுக்க முடியாது...
சத்தியராஜ் பேசும் பெண் சுதந்திரமும் பின்னணியில் இருக்கும் பெரியாரும் அசத்தல்....
கடைசி 40 நிமிடங்கள் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் கோச்சாக நடித்து இருக்கின்றார் அவர் ஷாருக்கானை நினைவுபடுத்த அல்லது ஒப்புமை படுத்துவதை மனதால் தடுத்து நிறுத்த முடியவில்லை..
கேள்விகள் நிறைய இருந்தாலும் முதல் பாதியில் மனதை தொடக்கூடிய காட்சிகள் குறைவு என்றாலும் பிற்பாதியில் மனதிற்கு நெகிழ்வான காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம்
கனா கனவுகளை விடாமல் அடம்பிடித்து தூரத்துப் அவர்களுக்கானது
கனா நெகிழ்ச்சியாக பெண் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய ஒரு படம்
என்றும் அன்புடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment